Author Topic: முன்னோர்களின் அமைதியான வாழ்க்கை!  (Read 2798 times)

Offline Yousuf

[ நம் முன்னோர்கள் மருத்துவ வசதிகள் வளராத காலத்திலேயே, ஆரோக்கியமான வாழ்க்கை முறையில் வாழ்ந்தனர். உடலும் உள்ளமும் இசைவோடு இயங்கியது.

பொருள் அளவில் சாதாரண நிலையில் இருந்தனர். அவர்களுடைய வாழ்க்கையில் நிம்மதி இருந்தது. அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையில் ஒரு அர்த்தம் இருந்தது. மொத்தத்தில் அவர்கள் அர்த்தமுள்ள வாழ்க்கையை ஆனந்தமாக வாழ்ந்தனர்.

ஆனால், இந்த நூற்றாண்டு மனிதன், விஞ்ஞான முன்னேற்றம் அடைந்த உலகில் வாழும் மனிதன் இன்பம் மற்றும் துன்பம் என்ற இரண்டு நிலையிலேயே சிக்கித் தவிக்கிறான். அமைதி மற்றும் பேரின்ப நிலை காற்றோடு பறந்துவிட்டது.]


தனி மனிதன் ஒரு நாளை நான்கு வகைளில் தான் செலவு செய்யலாம்.

1. இன்பம். 2. துன்பம. 3. அமைதி 4. பேரின்பம்

இந்த உலகில் வாழ்ந்தவர்களில் பெரும்பாலும் அனுபவித்தது, இந்த 4 நிலைகளில் முதல் இரண்டு நிலைகளை மட்டும்தான்.

இந்த உலகில் வாழ்ந்துகொண்டிருக்கும் சாதாரண மனிதன் அனுபவித்துக் கொண்டு இருப்பது இன்பமோ அல்லது துன்பமோ என்ற நிலைகளைத்தான்.

சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த நம் முன்னோர்களில் பலர், வாழ்வின் பெரும்பகுதி அமைதி மற்றும் பேரின்ப நிலையில் தன் வாழ்நாளைக் கழித்தனர்.

நம் முன்னோர்கள் கிராமங்களில் வாழ்ந்து, விவசாயம் செய்து, சிறுகக் கட்டி பெருக வாழ்ந்தார்கள்.

நம் முன்னோர்கள் மருத்துவ வசதிகள் வளராத காலத்திலேயே, ஆரோக்கியமான வாழ்க்கை முறையில் வாழ்ந்தனர். உடலும் உள்ளமும் இசைவோடு இயங்கியது. மொத்தத்தில் அவர்கள் அர்த்தமுள்ள வாழ்க்கையை ஆனந்தமாக வாழ்ந்தனர்.

ஆனால், இந்த நூற்றாண்டு மனிதன், விஞ்ஞான முன்னேற்றம் அடைந்த உலகில் வாழும் மனிதன் இன்பம் மற்றும் துன்பம் என்ற இரண்டு நிலையிலேயே சிக்கித் தவிக்கிறான். அமைதி மற்றும் பேரின்ப நிலை காற்றோடு பறந்துவிட்டது.

மனிதன் உடல் ஆரோக்கியத்தைக் கெடுத்துக் கொண்டு வாழ்க்கையின் முதல் பாதியில் பணம் சம்பாதிக்கிறான். பிறகு வாழ்க்கையின் அடுத்த பாதியில் சம்பாதித்த அனைத்தையும் உடல் ஆரோக்கியத்தைத திரும்பப்பெற செலவு செய்கிறான்.

நவநாகரீக மனிதன் செல்வத்தை சேர்க்கும் ஒரே குறிக்கோளோடு உடல் ஆரோக்கியதை, மன ஆரோக்கியத்தை, ஆன்ம ஆரோக்கியதை ஒவ்வொரு நாளும் தொலைத்துக் கொண்டுருக்கிறான். என்ன மடமை !

நம் முன்னோர்களின் அர்த்தமான வாழ்க்கை:

நம் முன்னோர்கள் அமைதி மற்றும் ஆனந்தத்திற்க்கு வெளியில் தேடாமல், தனக்குள்ளேயே தேடினார்கள்.

நம் முன்னோர்கள், இன்பம் மற்றும் துன்பம் என்ற சாதாரண மனநிலையைத் தாண்டி அமைதி நிலையை தினம் தினம் அடைந்தனர். மேலும், அமைதியிலேயே மனதை நிறுத்தி அந்த பேரின்ப நிலையில் திளைத்து, அர்த்தமுள்ள் வாழ்க்கை வாழ்ந்தனர்.

சற்று சிந்தித்துப் பார்த்தால் தெளிவாகப் புரியும், நம் முன்னோர்கள், எப்படி உண்மையான வாழ்க்கையை வாழ்ந்தனர் என்று.

அவர்கள் எளிமையான மற்றும் ஆடம்பரமற்ற வாழ்க்கையை வாழ்ந்தார்கள், விளைவு, அமைதியான நிறைவான வாழ்க்கை. அவர்களுடைய அருள் நோக்கிய உன்னத பயணத்தில் பொருள் வறுமை நிலவியது உண்மைதான். ஆனால், அறிவு நிறைவு அடைந்தது, விளைவு, நம முன்னோர்கள் மனதளவில் நிம்மதியாக வாழ்ந்தார்கள்.

நம் முன்னோர்கள், பொருள் அளவில் சாதாரண நிலையில் இருந்தனர். அவர்களுடைய வாழ்க்கையில் நிம்மதி இருந்தது. அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையில் ஒரு அர்த்தம் இருந்தது.

நம் முன்னோர்களின் மெஞ்ஞானப் பயணம்:

நம் முன்னோர்களின் ஞானப் பயணம், உள்ளே இருந்து வெளியே சென்றது. அதாவது, மனதின் உள்ளே இருந்து இந்த உலகத்தை நோக்கி சென்றது.

'நம் முன்னோர்கள் நமக்கு சொல்லிய உண்மை.

உன்னை உன் உடலை, மற்றும் மனதை சரியாகப் புரிந்து கொண்டால், இந்த உலகை சரியகப் புரிந்து கொள்ளலாம்.

நம்முடைய போலி வாழ்க்கை:

இன்று நம்மில் பல இளைஞர்கள், விட்டில் பூச்சியாக, விஞ்ஞான முன்னேற்றத்தின் விளைவாக உருவான பல தேவையற்ற பொருட்களுக்கு அடிமையாகி விட்டனர். விளைவு, வெளியே ஆடம்பர வாழ்க்கை மற்றும் பகட்டான வாழ்க்கை வாழ மனிதன் ஆசைப்படுகிறார்கள்.

இத்தகைய நவநாகரீக மனிதனின் ஆடம்பர வாழ்க்கையின் விளைவு, அசாதாரண் மனித வாழ்க்கையில், அசாதாரண் மனிதன், சாதரண் மனிதர்களாக வாழ்கின்றனர். விளைவு, உன்னதமான மனித வாழ்க்கை மனதளவில் வெறுமை மற்றும் போலி வாழ்க்கையில் போய் முடிகிறது.

ஆனந்தம் மற்றும் அமைதி நம்மிடம் இருப்பது தெரியாமல், அமைதியை வெளியில் தேடி, தேடி கிடைல்லாமல் நவநாகரீக மனிதன் வாழ்நாள் முழுவதையும் மன நிம்மதியின்றி வீணடிக்கின்றான்.

இன்றைய விரைவான உலகத்தில், இளைஞர்கள் பணம் சம்பாதிப்பதைப் புரிந்துகொண்டால் போரும், என்று நினைக்கிறார்கள். தன், உடலை, தன் மனதை, மருத்துவர் பார்த்துக் கொள்வார் என்ற எண்ணம் இன்றைய படித்த மேல்தட்டு வர்க்கம் மற்ரும் நடுத்தர வர்க்கத்தினரிடம் அதிகரித்து உள்ளது.

நம்முடைய விஞ்ஞான பயணம்....... போலி வாழ்க்கை:

நம் நாகரீக மனிதனின் விஞ்ஞானப் பயணம், வெளியே இருந்து உள்ளே செல்கிறது.

இன்றைய இளைஞர்கள் நினைப்பதெல்லாம "தரணியை தான் ஆண்டால், தன்னை டாக்டர் ஆள்வார்", என்பது தான். மேலும் இந்த உலகத்தை இண்டர்நெட் மூலம் புரிந்து கொண்டால், தன்னை, தன் உடல் நலத்தை மற்றும் மனநலத்தை டாக்டர் (மருத்துவர்) பார்த்துக் கொள்வார் என்ற கருத்து அவர்களிடம் நிலவுகிறது.

என்ன மடமை ?

சென்ற 20ஆம் நூற்றாண்டு வாழ்க்கை:

நம் முன்னோர்கள்........

.....மெதுவாக உணவு (Slow Food) உண்டனர்.

.....மெதுவாக செல்வம்(Slow Money)ஈட்டினர்.

.....மெதுவாக வாழ்க்கை(Slow Life)வாழ்ந்தனர்.

.....மெதுவான இறப்பு(Slow Death)நிகழ்ந்தது.

நிதானமான இளமை வேகம்...........

முதுமையில் விடை பெறு !

நோயற்ற வாழ்க்கை....... முழுமையான வாழ்க்கை !!

இளமையில் நிதான வாழ்க்கை...........முதுமையில் மரணம். இந்த அருள் நோக்கிய பயணத்தில் அறிவு, நிறைவு, ஆனால் பொருள் வறுமை என்ற நிலை நம் முன்னோர்களுக்கு இருந்தது.

இந்த 21 ஆம் நூற்றாண்டு வாழ்க்கை.............

இன்றைய விரைவான வாழ்க்கையில் மனிதர்கள்............

......வேகமான / துரித உணவு(Fast Food) உண்ணுகின்றனர்.

......வேகமாக செல்வம்(Fast Money)ஈட்டுகின்றனர்.

.....வேகமாக வாழ்க்கை(Fast Life)வாழ்கின்றனர்.

.....வேகமான இறப்பு(Fast Death)நிகழ்கிறது.

இந்த பொருள் நோக்கிய பயணத்தில் மனிதனுக்கு அறிவு வறுமை அதிகமாகிறது, ஆனால் பொருள் நிறைவு கிடைக்கிறது. உண்மை அறிவை விட்டு, பொருள் அறிவை அதிகரித்துக் கொண்டு நவீன கால மனிதன் அல்லல் படுகிறான்.

நிதானமற்ற இளமை வேகம்........ இளமையில் விடைபெறு !

இளமையில் திசை தெரியாத வேகம்...... இளமையிலேயே நோய்........

முழுமையற்ற வாழ்க்கை.......... இளமையில் மரணம்.

நோயற்ற வாழ்க்கை..... இன்றைய வாழ்க்கை......

மெய்ஞானப் பயணம்.........

அமைதியை நோக்கிய உன்னத மெய்ஞானப் பயணம்

தன்னை ஆண்டால் தரணியை ஆளலாம் !

ஆடம்பரத்தை நோக்கிய, போலி விஞ்ஞானப் பயணம்

தரணியை ஆண்டால், தன்னை மருத்துவர் ஆள்வார் !!

நேற்றைய நம் முன்னோர்கள் வாழ்க்கை......

நமது முன்னோர்கள் மெதுவான, உள்நோக்கிய உயரிய சிந்தனை வாழ்க்கை (Intutive thinking) என்ற நிலையில் வாழ்க்கையை வாழ்ந்தனர். அதனால் மெதுவான இறப்பு நிகழ்ந்தது.

இன்றைய நவநாகரீக வாழ்க்கை.........

இன்றைய நவநாகரீக மனிதன், வேகமான வெளிநோக்கிய சாதாரண சிந்தனை () என்ற நிலையில் வாழ்க்கையை வாழ்கின்றனர். அதனால் வேகமான இறப்பு அல்லது இளம் வயதிலேயே இறப்பு நிகழ்கிறது.

நம்முடைய போலி வாழ்க்கை........

சராசரி மனிதன், சராசரி வாழ்நாளில்............

.......ஆடிய ஆட்டம் என்ன ?

.......பாடிய பாட்டும் என்ன ?

கூடுவிட்டுப் கூடு போனால் கூடவே வருவது என்ன ?

வாழ்நாள் முழுவதும் அலைந்து அலைந்து சம்பாதித்த பணமா?.........இல்லை, தேடித்தேடி கிடைத்த புகழா....... இல்லை...... பதவியா......... இல்லை, பட்டமா........... இல்லை!

இனிய வாழ்க்கை.......

ஒரு மனிதனின் வாழ்க்கையில் கடைசி காலத்திற்க்கு தேவை மூன்றுதான். அவைகள், உடல் அரோக்கியம், உள்ள ஆரோக்கியம் மற்றும் ஆன்மீக ஆரோக்கியம்.

இன்றைய விரிவான வாழ்க்கை முறையில், இலட்சத்தில் ஒருவருக்கு கூட அத்தகைய, உடல் ஆரோக்கியத்துடன், உள்ள ஆரோக்கியத்துடன் மற்றும் ஆன்ம ஆரோக்கியத்துடன் கூடிய பரிபூரண வாழ்க்கை கிடைப்பதே இல்லை.

அவ்வாறு மூன்று ஆரோக்கியம் அமையப்பெற்ற சிலரை நாம் பாக்கியசாலிகள் அல்லது கொடுத்துவைத்தவர்கள் என்று அழைக்கலாம்.

நவநாகரீக மனிதனுக்கு வாழ்க்கை முழுவதும் தொடர்ச்சியாக போராட்டம், அதுவும் ஒரே ஒரு போராட்டம் தான் அந்தப் போராட்டம் - நேரப் போராட்டம்.

மனிதன் ...... தேவையற்ற எண்ணங்களைத் தேவையாக்கிக் கொண்டான். விளைவு, வாழ்க்கைச் சிக்கலில் மாட்டிக் கொண்டான்.

கடைசியில், தேவையான பலப்பல எண்ணங்களை நினைக்க நேரம் இல்லாமல் முழுவதும் தத்தளிக்கிறான்.

சற்று சிந்தித்துப் பார்த்தால் பழக்கத்திற்க்கும், விளக்கத்திற்க்கும் இடையே போராடிக் கொண்டிருக்கும் இந்த உன்னத நிலை தெளிவாகப் புரியும்.

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Quote
நம் முன்னோர்கள், பொருள் அளவில் சாதாரண நிலையில் இருந்தனர். அவர்களுடைய வாழ்க்கையில் நிம்மதி இருந்தது. அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையில் ஒரு அர்த்தம்


unmaithna... ipo kaasu iruku ninmathi illai athamum illai :(
                    

Offline Yousuf

Atha thaney nanum sonnen...!