Author Topic: !!!காலையில் விழித்தவுடன் குடிக்கும் நீரினால் அடையும் நன்மைகள்!!!  (Read 389 times)

Offline Evil

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1639
  • Total likes: 1463
  • Karma: +0/-0
  • Gender: Male
  • iam new appdinu sonna namba va poringa
!!!காலையில் விழித்தவுடன் குடிக்கும் நீரினால் அடையும் நன்மைகள்!!!

# தினமும் அதிகாலையில் துயில் எழுந்தவுடன் பல் துலக்குமுன் ஆறு குவளை (1.26 லிட்டர்) நீர் பருகுவதால், உடலின் உட்புற உறுப்புக்கள் தூய்மையாக்கப்பட்டு, கழிவுப் பொருட்கள் வெளியேற்றப்படுகின்றன. வெப்பம் குறைந்து, குளிர்ச்சி பெற்று, மலச்சிக்கல் மறைகின்றது. (இதை நம் முன்னோர்கள் 'உஷை பானம்'என்றழைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது)

# தண்ணீரைக் குடித்தபிறகு, ஒரு மணி நேரத்திற்கு காபி, டீ போன்ற பானங்களையோ,பிஸ்கட், பழம் போன்ற தின்பண்டங்களையோ சாப்பிடக் கூடாது. இது மிக மிக அவசியமானது, முக்கியமானது. இதைக் கவனத்தில் கொண்டு நடைமுறைப் படுத்த வேண்டும்.

# காலையில் தண்ணீர் குடிப்பதற்குத் தயாராகும் வகையில், முதல் நாள் இரவுச் சாப்பாட்டை முடித்த பிறகு, படுக்கைக்குச் செல்லுமுன்பு, நரம்பு மண்டலத்தைத் தூண்டக்கூடிய பானங்களையோ, பொருட்களையோ (மதுபானம் மற்றும் போதைப் பொருட்கள்) சாப்பிடக்கூடாது. இந்த நிபந்தனையும் முக்கியமானது. இரவே பல் துலக்கிக்கொள்வது நல்லது.

# தண்ணீரில் கிருமிகள் கலந்திருக்கக் கூடும் என்ற சந்தேகம் இருக்குமானால், அதை முதல் நாள் இரவே கொதிக்க வைத்து, ஆற வைத்து வடிகட்டி, பத்திரப்படுத்திக் கொள்ளலாம்.

# மருந்து, மாத்திரை, ஊசி, டாக்டர், பணச் செலவு ஆகிய எதுவுமே இல்லாமல், இம்முறைப்படி நீரைப் பருகுவதால், கீழ்க்கண்ட நோய்கள் குணமாகின்றன:-

1 தலைவலி
2 இரத்த அழுத்தம்
3 சோகை
4 கீல்வாதம்
5 பொதுவான பக்கவாதம்
6 ஊளைச்சதை
7 மூட்டுவலி
8 காதில் இரைச்சல்
9 இருதயப் படபடப்பு
10 மயக்கம்
11 இருமல்
12 ஆஸ்த்மா
13 சளி
14 காசநோய்
15 மூளைக் காய்ச்சல்
16 கல்லீரல் நோய்கள்
17 சிறுநீரகக் கோளாறுகள்
18 பித்தக் கோளாறுகள்
19 வாயுக் கோளாறுகள்
20 வயிற்றுப் பொருமல்
21 இரத்தக் கடுப்பு
22  மூலம்
23 நீரழிவு
24 கண் நோய்கள்
25 கண் சிவப்பு
26 தொண்டை சம்பந்தமான நோய்கள்

சோதனைகள் மூலமாகவும், அனுபவபூர்வமாகவும் நோய்கள் குணமாக்கப்பட்டது


உன்ன உன்ன பார்த்தேன் சும்மா தேவதை போல உன்ன பத்தி நினச்சா வருது கவிதை தன்னால