FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: thamilan on December 14, 2017, 06:52:28 PM

Title: நீ விரும்பிய படியெல்லாம் .........
Post by: thamilan on December 14, 2017, 06:52:28 PM
எனது காதலை
ஒரு குழந்தையாகவோ பொம்மையாகவோ
மாற்றத் தெரிந்திருந்தால்
எவ்வளவு நன்றாய் இருந்திருக்கும்
பார்த்ததும் அள்ளிக் கொஞ்சுவாயே

உனக்கான எனது காத்திருப்பை
ஒரு ரயிலாகவோ பேருந்தாகவோ
மாற்றத் தெரிந்திருந்தால்
எவ்வளவு நன்றாய் இருந்திருக்கும்
தெரிய வந்ததும் ஏறிப் பயணித்திருப்பாய்

எனது பிரியத்தை
ஒரு கடிகாரமாகவோ மோதிரமாகவோ
மாற்றத் தெரிந்திருந்தால்
எவ்வளவு நன்றாய் இருந்திருக்கும்
உனக்கு பிடித்திருந்தால் எடுத்து அணிந்துகொள்வாய்

எனது காதல் கடிதங்களை
வேலை விண்ணப்பமாகவோ மெமோவாகவோ
மாற்றத் தெரிந்திருந்தால்
எவ்வளவு நன்றாய் இருந்திருக்கும்
கொடுத்ததும் ஏற்றுக்கொள்வாய்

எனது ஆன்மாவை
முறுக்காகவோ  அல்வாவாகவோ
மாற்றத் தெரிந்திருந்தால்
எவ்வளவு நன்றாய் இருந்திருக்கும்
உனக்குப் பிடித்த பொழுதெல்லாம்
எடுத்து சாப்பிடுவாய்!!!!!       
Title: Re: நீ விரும்பிய படியெல்லாம் .........
Post by: MaSha on December 14, 2017, 07:44:56 PM
Thamilannnnnnnnn
Enakku ippo murukku nyaabagam vanthurichi... murukku saapidnaum pola irukee!!

Kavithai balla iruku... orutharukku ertha pola koncham nammalai maatrikondale life nalla irukum la ;-)
Title: Re: நீ விரும்பிய படியெல்லாம் .........
Post by: SweeTie on December 15, 2017, 01:02:11 AM
இந்த காதலனின்  ஆசைக்கு அளவில்லாமல் போய்விட்டது.
சிறப்பு ....