Author Topic: இன்றைய ராசி பலன்கள் - 27/10/2013 (27th Oct)  (Read 1071 times)

Offline kanmani

இன்றைய ராசி பலன்கள் - 27/10/2013

மேஷம்: புதிய கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கலை தீர்ப்பீர்கள். வீடு, வாகன பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். திடீர் பயணங்கள் உண்டு. வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.


ரிஷபம்: துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர் களிடம் சொல்லி மகிழ்வீர்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியா பாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.


மிதுனம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். செலவுகளைக் குறைக்க திட்டமிடுவீர்கள். உறவினர் கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட் களை தட்டிக் கொடுத்து வேலை வாங்கு வீர்கள். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.


கடகம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் பழைய கசப்பான சம்பவங்களை பற்றி யாரிடமும் விவா திக்க வேண்டாம். உதவிக்கேட்டு உறவினர்களும் தர்மசங்கடத்திற்கு ஆளாக்குவார்கள். சிலர் உங்களிடம் நயமாகப் பேசினாலும் சொந்த விஷயங் களை பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களின் தொந்தரவு களை விட்டுப் பிடிப்பது நல்லது. திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.


சிம்மம்: குடும்பத்தினரை அனுசரித்துப் போங்கள். ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். யாரையும் பகைத்துக் கொள்ளா தீர்கள். சகோதர வகையில் மனத்தாங்கல் வரும். சாலைகளை கவனமாக கடந்துச் செல்லுங்கள். வியாபாரத்தில் பாக்கிகளை கறாராகப் பேசி வசூலிப்பீர்கள். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.


கன்னி: சின்ன சின்ன சந்தர்ப்பங்களையும், வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்வீர்கள். பெற்றோரின் ஆதரவுப் பெருகும். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். சிறப்பான நாள்.


துலாம்: சாதிக்க வேண்டு மென்ற எண்ணம் வரும். உறவினர், நண்பர்கள் உங் களுக்கு முக்கியத்துவம் தரு வார்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணம் கிடைக்கும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.


விருச்சிகம்: சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். புது முடிவுகள் எடுப்பீர்கள். பணப்புழக்கம் கணிசமாக உயரும்-. விருந்தினர் வருகை அதிகரிக்கும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். புதிய பாதை தெரியும் நாள்.


தனுசு: சந்திராஷ்டமம் நீடிப்பதால் உங்களை அறியாம லேயே ஒருவித படபடப்பு, தாழ்வுமனப்பான்மை வந்துச் செல்லும். தன்னம் பிக்கை குறையும். பிள்ளைகளிடம் கோபப்படாதீர்கள். யாரை நம்புவது என்கிற மனக்குழப்பத்திற்கு ஆளாவீர்கள். வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.


மகரம்: உங்களின் திறமை களை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் ஆதாயமடை வீர்கள். மனைவிவழியில் ஆதரவுப் பெருகும். வேற்றுமதத்தவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தில் சந்தை ரகசியங்களை தெரிந்து கொள் வீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். தன்னம் பிக்கை துளிர்விடும் நாள்.


கும்பம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப் படுவீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.


மீனம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும்-. உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். அக்கம்& பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். புதுப் பொருள் சேரும். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.