Author Topic: இன்னொரு புதிய காதல்  (Read 197 times)

Offline NiYa

  • Hero Member
  • *
  • Posts: 506
  • Total likes: 980
  • Karma: +1/-0
  • Gender: Male
  • உணர்வுகள் உணரப்படுவதுதான்.. உணர்த்தப்படுவது இல்லை.
இன்னொரு புதிய காதல்
« on: December 06, 2023, 10:10:08 AM »
மீண்டும் ஒரு புதிய காதல்
அத்தனை சுலபமானதில்லை...

புதிய சத்தியங்கள் செய்ய வேண்டும்
வைத்து தீர்த்த செல்லப்பெயர்களுக்கு பதிலாக
மீண்டும் ஒரு செல்ல பெயர் தேட வேண்டும்

புதிதாக இவர்களோடு கேட்டு மகிழ மீண்டுமொரு
புதிய பிடித்த பாடலை கண்டுபிடிக்க வேண்டும்

உனக்கு என்னவெல்லாம் பிடிக்கும் என கேட்டு
மீண்டும் மனப்பாடம் செய்ய வேண்டும்

அவனின் நினைவு
துரத்தாத
புதிதான ஓட்டல்களையும்
தியேட்டர்களையும்
தேடி கண்டுபிடித்து செல்ல வேண்டும்

முத்தமிடும் போது
என்  நினைவில் யார் இருக்கிறார்  என பதற வேண்டும்

என் கணக்கில் இது நான்   கேட்கும்
157 வது பொய்
ஆனால்
இந்த காதலுக்கு இதுதான் முதல் பொய்யென
பொய் கணக்கு எழுத
கற்றுக்கொள்ள வேண்டும்

பெயரை மாற்றி அழைத்து விடாமல்
இதழ்களை கட்டுப்படுத்த வேண்டும்
புதிதாக பேனா வாங்கும் போது
கிறுக்கிப் பார்க்கும் பெயரினை மாற்ற வேண்டும்

புதிய வகை பரிசு பொருட்களை
தேட வேண்டும்
நண்பர்களுக்கு
மீண்டும் ஒருவரை 
அறிமுகம் செய்யும் போது
சிரிப்பு வராமல் அடக்கிக் கொள்ள
பழக வேண்டும்

பைக்கில் செல்லும் போது
திடீரென பழைய நினைவுகள் வந்தால்
மறைத்து சமாளிக்க
தெரிந்துக்கொள்ள வேண்டும்

இந்த காதலுக்கு
ஆயுட்காலம் எத்தனை நாளோ என
தினந்தினம் அதீதமாய் சிந்தனையில் உழல வேண்டும்...

இத்தனையையும் செய்து புதிய
காதலை
தேடிக்கொள்வது
அத்தனை சுலபமா என்ன??


எந்த காதல்
அத்தனை நினைவுகளை
புதியதாய் மாற்றி கொடுக்கவல்லதோ...

அல்லது
மீண்டும் பிறந்து
புதிய உலகத்தில்
வாழ்வது போன்ற
ஒரு உணர்வை கொடுக்க வல்லதோ..
அந்த காதலை கண்டுபிடியுங்கள்

இல்லை என்றால்
காத்திருங்கள் ❤
ஆனால் ஒருபோதும்
நம் காதலை குழப்பும்
ஒரு காதல் மட்டும் வேண்டாம்!



Offline Mr.BeaN

  • Full Member
  • *
  • Posts: 180
  • Total likes: 549
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நான் நானே நிகர் ஏதுமில்லை..
Re: இன்னொரு புதிய காதல்
« Reply #1 on: December 06, 2023, 11:10:01 AM »
உங்கள் தலைப்பு எனக்கு தோன்றிய வரிகள்..

வழி இன்றி என் காதல்
வலி தந்து போகையிலே
மதிகெட்டு நானும் தான்
கலங்கி போய் நிக்கையில

காலம் கடந்துருச்சு
என் காதல் தோத்திறுச்சு
என்றெல்லாம் புலம்பலுடன்
என் நாளை கடத்தி வந்தேன்

பெத்தவங்க சொன்ன சொல்ல
மறுக்க முடியாம
காதலிச்ச பொண்ண விட்டு
இன்னொருத்தி கை புடிச்சேன்

கொஞ்ச நாளு காதல் வலி
நெஞ்சுக்குள்ள இருந்தாலும்
மனைவியென மருந்தாக
இன்னொருத்தி வந்தாலே

பாசம் காட்டி எம்மணச
பக்குவமா மாத்திபுட்டா
பலவருஷ காதலையும்
சில நாளில் மறக்க வச்சா

மதில்மேல் பூனையென
நானும் தான் நிக்கவில்லை
மனைவி எனும் மகராசி
பாசத்த மறுக்கவில்லை

அப்படியே நாளும் போக
எம்மனசு மாறிடுச்சு
பழைய வழியெல்லாம்
இப்போதான் ஆறிடுச்சு

கட்டுன மனைவி என் மேல்
காட்டின பாசத்துல
இப்பத்தான் எனக்குள்ள
புது காதல் பொறந்திடுச்சு

எல்லோரின் வாழ்க்கையிலும்
ஒரு காதல் வந்திருக்கும்
எப்படியும் பல பேர்க்கு
முதல் காதல் தோத்திருக்கும்

அப்படி ஆச்சுன்னா
கவலை படா வேணாமே
அதை விட சிறப்பாக
புது காதல் தான் பிறக்கும்






intha post sutathu ila en manasai thottathu..... bean

Offline Ishaa

  • Hero Member
  • *
  • Posts: 525
  • Total likes: 809
  • Karma: +0/-0
  • Faber est suae quisque fortunae
Re: இன்னொரு புதிய காதல்
« Reply #2 on: December 06, 2023, 03:16:51 PM »
இல்லை என்றால்
காத்திருங்கள் ❤
ஆனால் ஒருபோதும்
நம் காதலை குழப்பும்
ஒரு காதல் மட்டும் வேண்டாம்!

Enakku piditha varigal sis. ❤️
Muthal kathalil thorthu pona ella manathukkul varum sinthanaigalai ungal kavithaiyil azhaga eluthi irukinga.
Kandippa innum oru murai kathalil vizhuvathu miga kadinam sis.
Kaathu irupathey nallathoru mudivu.
Oru varusham. Irandhu varusham ... vazhnaal thorum kaathu irupathey thappu ille unmai kathalukku.

Innum niraiya kavithai pathivu seiyunga sis. ❤️
« Last Edit: December 06, 2023, 03:18:48 PM by Ishaa »

Offline NiYa

  • Hero Member
  • *
  • Posts: 506
  • Total likes: 980
  • Karma: +1/-0
  • Gender: Male
  • உணர்வுகள் உணரப்படுவதுதான்.. உணர்த்தப்படுவது இல்லை.
Re: இன்னொரு புதிய காதல்
« Reply #3 on: December 08, 2023, 01:21:07 PM »
nanri sakothari

Offline joker

  • Hero Member
  • *
  • Posts: 910
  • Total likes: 2952
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
Re: இன்னொரு புதிய காதல்
« Reply #4 on: December 08, 2023, 04:31:41 PM »
ஒரு காதலுக்குள்
இவ்ளோ இருக்கா?

இதுல இன்னொருமுறை
காதல் ?

ஷப்பா சாமி படிக்கும்போதே தல சுத்துதே  :D :D

நல்ல கவிதை தொடர்ந்து எழுதுங்கள்  :)

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "