Author Topic: மஞ்ச கலர்ல தாலியா?: கல்யாணத்தை நிறுத்த சொன்ன மணமகள்…!  (Read 2047 times)

Offline Gotham


என்னல்லாம் கூத்து பண்றாங்க? 8) :o


நன்றி: தட்ஸ்தமிழ்.காம்
--------------------------
ஈரோடு: வரதட்சணைக்காக திருமணம் தடைபடுவது கேள்விப்பட்டிருக்கலாம். ஆனால் ஈரோடு அருகே திருமண வீட்டில் தாலிக்கயிற்றின் நிறம் மஞ்சள் நிறத்தில் இருப்பதாக காரணம் கூறி மணப்பெண் ஒருவர் திருமணத்தை நிறுத்தியுள்ளார்.

ஈரோடு பெரியவலசுவை கல்லூரி மாணவிக்கும் திருச்செங்கோடு வாலிபருக்கும் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டது. நேற்று மணநாள் என்பதால் உறவினர்கள், நண்பர்கள் என பலரும் மண்டபத்தில் குவிந்தனர். முகூர்த்த நேரம் நெருங்கியதும் மணமகன், மணமகளை மேடைக்கு அழைத்து வந்து அமர வைத்தனர். மணமகன் தாலி கட்டும் நேரத்தில் அதை மணப்பெண் தடுத்து நிறுத்தினார். இதனால் மாப்பிள்ளையும் உறவினர்களும் அதிர்ச்சியடைந்தனர்.

இதற்கு மணப்பெண் கூறிய காரணம்தான் அங்கே மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ‘தாலிக்கொடி மஞ்சள் நிறத்தில் உள்ளது. இந்த நிறம் எனக்கு ராசி இல்லை.அதனால் திருமணம் செய்ய விருப்பமில்லை' என்று கூறிவிட்டு நடையை கட்டினார். மணமகளின் பெற்றோர் மாப்பிள்ளை வீட்டாரை சமாதானம் செய்து தங்கையை திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். ஆனால் மணமகளின் தங்கையும் மறுத்துவிட்டார். உடனடியாக மற்றொரு உறவினர் பெண்ணை தேடி, திருமணம் நடந்தது.

காதலருக்காக காத்திருக்கிறேன்.
திருமணத்துக்கு மறுத்த பெண்ணிடம் ஈரோடு அனைத்து மகளிர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது தான் ஒருவரை ஒருதலைப்பட்சமாக காதலிப்பதாகவும் அவருக்காக காத்திருப்பதாகவும் கூறினார். இதனையடுத்து மகளிர் போலீசார் அந்தப் பெண்ணுக்கு அறிவுரை கூறி அவரது பெற்றோரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

மஞ்சளுக்கு பெயர் போன ஈரோடு மாவட்டத்தில் மஞ்சள் கலர் தாலி பிடிக்கவில்லை என்று கூறி மணப்பெண் திருமணத்தை நிறுத்திய சம்பவம் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.

Offline பவித்ரா

  • FTC Team
  • Hero Member
  • ***
  • Posts: 621
  • Total likes: 929
  • Karma: +0/-0
  • மாற்றம் ஒன்று தான் மாறாதது ........
இது எல்லாம் ஒரு காரணமா நெனச்சேன் அப்பவே பாவி  பொண்ணு முதலிலே சொலிருக்கலாம் இல்ல இப்போ குடும்ப  மானம் போச்சி
என்னை  எடை  போடுவதற்கு நீங்கள் தராசும் அல்ல  . நான் விலை பொருளும் அல்ல .....