Author Topic: ஸ்டார் ஹோட்டல் தயிர்சாதம்...  (Read 321 times)

Offline kanmani

என்னென்ன தேவை?

குழைய வேகவைத்த சாதம்-1கப்
கல் உப்பு-தேவையான அளவு
பெருங்காயம்-1டீஸ்பூன்
தயிர்-1 டம்ளர்
பால்-முக்கால் டம்ளர்
மாங்காய், காய்ந்த திராட்சை-சிறிது.
காய்ந்த நார்த்தங்காய் -சிறிது.
எண்ணெய்-தேவையான அளவு
கடுகு-தேவையான அளவு
கறிவேப்பிலை-தேவையான அளவு
கொத்தமல்லி-தேவையான அளவு
எப்படிச் செய்வது?

சாதத்தைக் குழைய வேக வச்சுக்கணும். அதை ஆற வச்சு, கல் உப்பும் பெருங்காயமும் சேர்த்து, மிக்சியில ஒரே சுத்து அடிக்கணும். அதுல 1 டம்ளர்  தயிருக்கு, முக்கால் பங்கு பால் விட்டுப் பிசையணும். மிகப் பொடியாக நறுக்கின கிளிமூக்கு மாங்காய், காய்ந்த திராட்சை, குட்டிக்குட்டியா வெட்டின  காய்ந்த நார்த்தங்காய் சேர்க்கணும். கொஞ்சம் எண்ணெயில கடுகு, கறிவேப்பிலை தாளிச்சுக் கொட்டி, கொத்தமல்லி தூவிப் பரிமாறணும். இந்த தயிர்  சாதம் எத்தனை மணி நேரமானாலும் புளிக்காது.