Author Topic: இன்றைய ராசி பலன்கள் - 06/10/2013 (6th Oct)  (Read 1966 times)

Offline kanmani

இன்றைய ராசி பலன்கள் - 06/10/2013


மேஷம்: சவாலான வேலைகளையும் சர்வ சாதாரணமாக முடிப்பீர்கள். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். விலை உயர்ந்தப் பொருட்களை வாங்குவீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.


ரிஷபம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர், நண்பர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் பொங்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.

மிதுனம்: குடும்பத்தின் வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர் கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துக் கொள்வீர்கள். வியாபார ரீதியாக சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.


கடகம்: பிரச்னைகளின் ஆணிவேரை கண்டறிவீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். தாயாருடன் வீண் விவாதங்கள் வந்துப் போகும். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். திடீர் பயணங்கள் உண்டு. வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். பழைய நினைவுகளில் மூழ்கும் நாள்.


சிம்மம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். சொத்துப் பிரச்னைக்கு சுமூக தீர்வு காண்பீர்கள். அதிகார பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். சொந்த-பந்தங்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.


கன்னி: கடந்த 2 நாட்களாக இருந்த அலைச்சல், டென்ஷன், கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். தோற்றப் பொலிவுக் கூடும். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். மனசாட்சிப்படி செயல்படும் நாள்.


துலாம்: ராசிக்குள் சந்திரன் நுழைவதால் அநாவசிய பேச்சை தவிர்ப்பது நல்லது. கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகம் வந்து விலகும். நன்றி மறந்த சிலரை நினைத்து வருத்தமடைவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் தொந்தரவுகளை விட்டுப் பிடிப்பது நல்லது. முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.

விருச்சிகம்: சிறிய வேலை களையும் அலைந்து முடிக்க வேண்டி வரும். உறவினர், நண்பர்களுடன் விரிசல்கள் வரகூடும். பழைய கடனை தீர்க்க முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் மோதல்கள் வேண்டாமே. தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.



தனுசு: நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்களால் பயனடைவீர்.பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய்வீர்கள். நம்பிக்கைக்குரியவரை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப் பீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையா ளரை கவர சலுகை அறிவிப்பீர்கள். பெருந் தன்மையுடன் நடந்து கொள்ளும் நாள்.


மகரம்: சொன்ன சொல்லைக் காப்பாற்ற துடிப்புடன் செயல்படுவீர்கள். பிள்ளை களால் மகிழ்ச்சி தங்கும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். மனைவிவழியில் ஆதரவுக் கிட்டும். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். சாதித்துக் காட்டும் நாள்.


கும்பம்: கடந்த 2 நாட்களாக கணவன்&மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். சிலர் உங்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.



மீனம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் ஒரே நாளில் முக்கியமான 4,5 வேலைகளைபார்க்க வேண்டி வரும். யதார்த்த மாக நீங்கள் பேசுவதை கூட தவறாகப் புரிந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் மற்றவர்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.