இன்றைய ராசி பலன்
நாள்: Thursday, 2 August, 2012
மேஷம்:
வேலைப்பளு குறையும். தங்களின் பெயர், புகழுக்கு இருந்த இழுக்குகள் மறைந்து எல்லோரிடையேயும் மதிப்பும், ஆதரவையும் பெறுவீர்கள். எடுக்கும் முயற்சிகளிலும் வெற்றி கிட்டும். பொதுக்காரியங்களுக்காக பயணங்கள் ஏற்படலாம்.
ரிஷபம்:
உடன் இருப்பவர்களின் ஆதரவுகளால் எந்தக்காரியத்தையும் எளிதில் செய்து முடிப்பீர்கள். மறைமுக வருவாய்கள் பெருகும். அரசியல்வாதிகள் கட்சிப்பணிகளுக்காக பயணங்களை மேற்கொள்ள நேரிடும்.
மிதுனம்:
விவசாயிகளுக்கு விளைச்சல் சிறப்பாக இருப்பதால் லாபமும் இருமடங்காக இருக்கும். காய்,கனி,பூ, போன்றவற்றாலும் லாபம் கிட்டும். புதியபூமி, மனை வாங்குவது, ஆழ்குழாய் கிணறு அமைப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவீர்கள்.
கடகம்:
பெண்களுக்கு உடல் ஆரோக்கியம் ஒரளவுக்குச் சிறப்பாகவே இருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடிவரும். எடுக்கும் முயற்சிகளிலும் வெற்றி கிட்டும், புத்திரபாக்யம் வேண்டுபவர்களுக்கு சிறப்பான பிள்ளை செல்வம் கிட்டும்.
சிம்மம்:
புதிய வாய்ப்புகள் நிறைய கிடைக்கப்பெற்றுபுதுப்புது ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். பணவரவுகளும் தாராளமாக இருப்பதால் செல்வம், செல்வாக்கு உயரும், சேமிப்பு பெருகும். பெயர், புகழ் உயரும்.
கன்னி:
மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றமான நிலையிருக்கும். சிறுசிறு தடங்கல்கள் ஏற்பட்டாலும் எதிர்பார்த்த இலக்கை அடைந்து விடுவீர்கள். அரசு வழியிலும் ஆதரவு கிட்டும். நண்பர்களால் அனுகூலம் ஏற்படும்.
துலாம்:
எதிலும் சிந்தித்துச் செயல்படுவது நல்லது, தேவையற்ற பிரச்சனைகளும், மறைமுக எதிர்ப்புகளும் உங்களின் மன நிம்மதியைக் குறைக்கும். நண்பர்களும் எதிரிகளாகச் செயல்படுவார்கள்.
விருச்சிகம்:
பணவரவுகளில் நெருக்கடிகள் ஏற்படுவதால் குடும்பத்தேவைகளை பூர்த்தி செய்ய கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைகள் உருவாகும். உடல் ஆரோக்கியத்திலும் கவனம் தேவைப்படும். மறைமுக எதிரிகளால் தொல்லைகள் அதிகரிக்கும்.
தனுசு:
உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பண வரவுகளில் இருந்து வந்த நெருக்கடிகள் குறையும். தடைப்பட்ட திருமண சுபகாரியங்களும் தடை விலகி கை கூடிவரும். எடுக்கும் முயற்சிகள் வெற்றியைத்தேடி கொடுக்கும்.
மகரம்:
பிரிந்து சென்ற உறவுகளும் தேடிவந்து ஒற்றுமை பாராட்டும்,மறைமுக எதிர்ப்புகள் குறைவதால் உங்களின் பலமும், வலிமையும் கூடும். பொன், பொருள், ஆடை-அணிகலன்களின் சேர்க்கை ஏற்படும்.குடும்பத்தில் வசதி பெருகும்.
கும்பம்:
கடன்கள் குறையும், இதனால் சாதகமான பலன்களையே அடைவீர்கள். பணவரவுகள் தாராளமான இருந்தாலும் எதிர் பாராத வீண் விரையங்களை எதிர் கொள்வீர்கள். உற்றார் உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சியினை உண்டாக்கும்.
மீனம்:
பணம் கொடுக்கல் - வாங்கலில் சரளமான நிலையிருக்கும். தொழில் -வியாபாரத்திலும் சிறப்பான லாபம் கிட்டும். தொழிலில் கூட்டாளிகளால் அடிவிருத்தியும் பெருகும். உத்தியோகஸ்தர்களுக்கு உயர்வுகள் கிடைக்கப்பெறும்.