FTC Forum

தமிழ்ப் பூங்கா => கதைகள் => Topic started by: ChuMMa on May 13, 2017, 06:15:56 PM

Title: #கல்லறை_ஈரம்
Post by: ChuMMa on May 13, 2017, 06:15:56 PM
#கல்லறை_ஈரம்

மரண படுக்கையில் இருக்கும் ஒரு பெண் தன் கணவனிடம் கேட்கிறாள்... நான் மரணித்தப் பிறகு நீங்கள் எத்தனை நாட்கள் கழித்து இரண்டாவது திருமணம் செய்துகொள்வீர்கள்?" அதை கேட்க

 கணவன் கண் கலங்கியப்படி அழுதுகொண்டே சொல்கிறான்... "உன் கல்லறையின் ஈரம் காயும் வரை!" என்று...

மாதங்கள் பல செல்ல அவன் மனைவி திடீரென இறந்துவிடுகிறாள்... மனைவிக்கு செய்யவேண்டிய எல்லா சடங்கு காரியமும் செய்து அவளை புதைத்த இடத்தில் களி மண்ணால் அழகிய கல்லறை கட்டி விட்டு வீடு திரும்புகிறான்...

தினமும் தன் மனைவியின் கல்லறையை வந்து பார்க்கிறான், கல்லறையின் ஈரம் காயவே இல்லை! ஆறு மாதங்கள் ஓடிப்போன நிலையில் தன் மனைவியின் கல்லறையை மறுபடியும் வந்து பார்க்கிறான், இன்னும் கல்லறையின் ஈரம் காயவே இல்லை!

என்ன இது விந்தை! ஆறுமாத காலம் ஆகியும் இன்னும் கல்லறையின் ஈரம் காயவே இல்லையே! என யோசித்தவன் ஒருவேளை அவள் பேயாக மாறிவிட்டாளோ! என்றெல்லாம் சிந்திக்க ஆரம்பித்தான், இப்படியே ஒரு வருடம் ஓடியது.

ஒருநாள் தன் மனைவியின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அன்று அவள் கல்லறைக்கு செல்கிறான்,
ஒரு வருட காலம் ஆகியும் அவன் மனைவியின் கல்லறை ஈரம் காயவே இல்லை! ஏதோ இப்போது கட்டிய மண் கல்லறை போல ஈரமாக இருப்பதை கண்டவன் தன் மனைவி தன் மீது வைத்த பாசத்தை நினைத்து தனது மார்பில் அடித்துக்கொண்டு வாய்விட்டு கதறி அழுகிறான்.

அப்போது ஒரு குடம் தண்ணீரோடு இறந்த அவன் மனைவியின் சகோதரன் வருகிறான்... "நீ இங்கு என்ன செய்கிறாய்! குடத்தில் எதற்காக தண்ணீர்.,.!" என்று கேட்கையில் ...

"என் சகோதரி அதாவது உன் மனைவி! அவள் இறக்கும் ஒரு மணி நேரத்திற்கு முன்பு அண்ணா தினமும் காலையிலும் மாலையிலும் என் சமாதியில் தண்ணீர் ஊற்றி அதை ஈரமாக்கிவிடு" என்று கூறி சத்தியம் வாங்கிக்கொண்டாளப்பா!" என கூறி சத்தமாக அழுகிறான்.

(இறந்தும் என்ன ஒரு வில்லத்தனம்.?)⁠⁠⁠⁠
Title: Re: #கல்லறை_ஈரம்
Post by: SarithaN on May 13, 2017, 08:11:27 PM
வணக்கம் சும்மா சகோ

நல்லா எழுதி இருக்கின்றீர்கள்
கதை
படித்தேன் கனத்த மனதோடு

இறப்பின் வலியிலும்
சிரிக்க வைத்த விந்தை

மிக மிக தெளிவா கதை சொல்கிறீர்கள்

வாழ்த்துக்கள் சகோதரா
நன்றி