Author Topic: ~ சில எண்ணெய்களின் மருத்துவ குணங்கள் :- ~  (Read 247 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218365
  • Total likes: 23061
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
சில எண்ணெய்களின் மருத்துவ குணங்கள் :-




எள்ளில் இருந்து எடுக்கப்படும் நல்லெண்ணை உணவுப் பொருளாகவும், மருந்து பொரு ளாகவும், வெளிப்பூச்சாகவும் பயன்படுத்தப்படுகிறது. எளிதாக சருமத்துக்குள் ஊடு ருவக்கூடியது. இதனால் சருமம் மிருதுவாகவும், போஷாக்குடனும் திகழும். மேலும் சரு மத்தின் ஈரப்பதத்தை சமப்படுத்தி, உடல் வெப்பத்தை தணிக்கிறது. ரத்தத்தில் கொலஸ்ட் ராலைக் குறைக்கிறது. ட்ரை ஸ்கின் கொண்டவர்கள் அடிக்கடி தேய்த்து குளிப்பது நல் லது.

பழங்குடியினரால் பழங்காலத்தில் இருந்தே பயன்படுத்தப்பட்டு வரும் எண்ணை... நீலகிரித் தைலம். காயங்களில் பாக்டீரியாக்களால் ஏற்படும் சீழ்வடிதலைத் தடுக்கும். உடலில் வெப்பம் அதிகரிப்பதால் ஏற்படும் மார்பு சளி, கோழை சம்பந்தப்பட்ட நோய்களைத் தீர்க்கும். தலைவலி, ஜலதோஷம் போன்றவற்றை நீக்கும்.

விளக்கெண்ணையை சருமத்தின் மீது பூசினால் உடல் குளிர்ச்சி ஏற்படும். தலைக்கு தடவும்போது கேசத் துவாரங்களை ஊடுருவிச் சென்று கேச வளர்ச்சியை ஊக்கு விக்கிறது. கண்களின் ரப்பைகள், புருவ முடிகள் வளரவும், கண்களுக்கு குளிர்ச்சிïட்டி தூக்கத்தை வரவழைக்கும் ஆற்றல் கொண்டது. உடல், கண், மூக்கு, காது, வாய் ஆகியவற்றில் உண்டாகிற எரிச்சலை நீக்கும்.

தேங்காய் எண்ணையை கருஞ்சீரகத்துடன் அரைத்து உடம்பில் தேய்த்துக் குளித்தால் தோல் நோய்கள் தீரும். கேசத்திற்கு ஊட்டமும், வளர்ச்சியும், குளிர்ச்சியும் கொடுக்கிறது. சருமத்தை மென்மையாக்கும். சமையலில் தேங்காய் எண்ணையை சேர்ப்பதால் நமது உட லுக்கு ஆரோக்கியம் அதிகரிக்கும்.

உடலுக்கு வனப்பும், ஆரோக்கியமும் அளிக்கக் கூடியது பாதாம் எண்ணை. அனைத்து வைட்டமின் சத்துக்களும், குறிப்பாக தோலுக்கு அழகூட்டும் வைட்டமின் `இ' சத்தும் இதில் அதிகமாக காணப்படுகின்றன. பாதாம் எண்ணையை பெண்கள் தங்கள் உடல் மீது தேய்த்து வர சீக்கிரமே தோலின் பளபளப்பு அதிகரிக்கும்.

ஆலிவ் எண்ணை சருமத்திற்கு வெண்மையும், கேசத்துக்கு போஷாக்கும் அளிக்கிறது. இதில் வைட்டமின் ஏ மற்றும் சி முதலான ஊட்டச்சத்துகளும், தாதுப் பொருட்களும் அடங்கியுள்ளன. அதனால்தான் பழங்காலத்தில் கிரேக்கர்களும், ரோமானியர்களும் ஆலிவ் கனியை உண்டதுடன், ஊறுகாயாகவும் பயன்படுத்தினர். ஆலிவ் எண்ணையை அதிகமாக சேர்த்துக் கொண்டனர்.

நிறமும், மணமும் அற்ற திரவம் கிளிசரின். சருமத்தின் ஈரப்பதத்தையும், தளர்ச்சியும் கொடுக்கக் கூடியது. கை, கால்களுக்கு மிருதுவான தன்மையை அளிக்கக் கூடியது. காய்கறிகளில் இருந்து தயாரிக்கப்படும் கிளிசரின் சினிமா, தொலைக் காட்சிகளில் வரும் அழுகை காட்சிகளுக்கு அதிகமாக பயன்படுத்தப் படுகிறது.

கோக்கோ எனும் தாவரத்தின் விதைகளிலிருந்து எடுக்கப்படும் வெண்ணை போன்ற கொழுப்புச் சத்துள்ள பொருளே கோக்கோ பட்டர். இது சருமத்திற்கு ஊட்டமளிக்கிறது.புரதச்சத்து, கார்போஹைட்ரேட் மற்றும் தாதுப் பொருட்கள் மிகுந்திருப்பதால் சரு மத்திற்கான மாஸ்க் தயாரிப்பில் சேர்க்கப்படுகிறது.

வேப்ப எண்ணை சிறந்த கிருமி நாசினி. தோல் தொடர்பாக ஏற்படும் பிரச்சினைகள், தொற்று நோய்களை நீக்கும் ஆற்றல் கொண்டது. வாரம் ஒரு முறை வேப்ப ணீஎண்ணையை அளவோடு தலைக்கு தேய்த்து குளித்தால் உடல் குளிர்ச்சி அடையும். குழந்தைகளுக்கும் வேப்ப எண்ணை மிகவும் நல்லது.

கடுகு எண்ணை சருமத்திற்கு வனப்பை அதிகரிக்கும். அதனால்தான் அழகூட்டும் சோப்புகளில் கடுகு எண்ணை சேர்க்கப்படுகிறது. உணவிலும் சேர்த்துக் கொண்டால் இளமை கூடும். தோல் மற்றும் தோலுக்கு அடுத்துள்ள சதைப் பிடிப்புகளிலும் கடுகு எண்ணை ஒரு நிவாரணியாக பயன்படுகிறது.