Author Topic: ~ சமையலறையில் மருத்துவம்!! --- கை மருந்துகள் ~  (Read 315 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218365
  • Total likes: 23061
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
சமையலறையில் மருத்துவம்!! --- கை மருந்துகள்


நம் சமையலறையில் நாம் அன்றாடம் சமையலுக்கு உபயோகிக்கும் எத்தனையோ பொருள்கள் மருத்துவ நன்மைகளை அதிகமாய்த் தரக்கூடியவை.
நமக்கு அவ்வப்போது ஏற்படும் சிறு சிறு உபாதைகளுக்கு, உடனேயே மருத்துவரிடம் செல்லாமல் நமக்கு நாமே கை வைத்தியம் செய்து கொள்ள‌க்கூடிய மருத்துவ முறைகள் ஏராளமாய் வெந்தயம், ஏலம், மிளகு, எள், சீரகம், உளுந்து போன்ற பொருள்களில் கொட்டிக்கிடக்கின்றன. அவற்றில் சில  இங்கே!

அரிசித்திப்பிலியும் 10 சீரகமும் பொடித்து தேனில் கலந்து கொடுத்தால் தொடர் விக்கல் சரியாகும்.



உஷ்ணத்தால் வரும் வயிற்றுப்போக்குக்கு சாதம் வடித்த கஞ்சியில் வெந்தயத்தைப்போட்டு குடித்தால் உடனேயே வயிற்றுப்போக்கு சரியாகி விடும்.

சளியினால் தலைகனம் வரும்போது:



7,8 கிராம்பை சந்தனக்கல்லில் மையாக அரைத்து நெற்றியில் பற்று போட்டால் பலன் கிடைக்கும்.



முருங்கைப்பூவை பொரியல், சூப் என்று செய்து சாப்பிட்டு வந்தால் வாயுத்தொல்லை நீங்கும்.

நாலைந்து செம்பருத்திப்பூக்களை 2 கப் நீரில் போட்டு கொதிக்க வைத்து அதன் சாறை காலையும் மாலையும் பருகி வந்தால் இதய சம்பந்தமான பிணிகள் அத்தனையும் நீங்கும்.



வாசனைப்பொருள்களின் அரசி என்ற‌ழைக்கப்படும் ஏலக்காய் பல மருத்துவ குணங்கள் கொண்டது. இதில் எளிதில் ஆவியாகக்கூடிய பல எண்ணெய்கள் இருப்பதால் இதன் ம‌ருத்துவ குணங்கள் அதிகம்.

ஜலதோஷத்தால் மூக்கடைப்பு ஏற்பட்டு அவதிப்படும் குழந்தைகளுக்கு 4 ஏலக்காய்களை நெருப்பிலிட்டு அந்தப் புகையை முகரச்செய்தால் மூக்கடைப்பு பிரச்சினை உடனே சரியாகும்.

டீ தயாரிக்கும்போது டீத்தூளுடன் நிறைய ஏலக்காய்கள் சேர்த்து த‌யாரிக்கும் தேனீர் மன அழுத்தத்தைக்கூட சரியாக்குகிறது.  4 ஏலக்காய்களையும் சிறு துண்டு சுக்கையும் நீர் விட்டு அரைத்து தண்ணீர் கலந்து பருகினால் தொண்டைக்கட்டு, வறட்டு இருமல் சரியாகும்! நெஞ்செரிச்சலும் வாயுத்தொல்லையும் இருக்கும்போது, சில ஏலக்காய்களை மென்று தின்றால் வாயு பிரிந்து நெஞ்செரிச்சல் குறைகிறது.

தொண்டை கட்டி பேச குரல் எழும்பாதபோது, மஞ்சள், தேன், சுண்ணாம்பு மூன்றையும் குழைத்து தொண்டையிலும் கால் பெருவிரலிலும் தடவவும்.



எலுமிச்சம் பழத்தை பிழிந்து சாறெடுத்து, அதில் தேன் கலந்து பருகி வந்தால் கல்லீரல் பலப்படும்.



விடாத விக்கல் ஏற்படும்போது ஒரு ஸ்பூன் சர்க்கரையை விழுங்கவும். சீனி கரையாது உடனேயே விழுங்கி விட வேண்டும். உள்ளே மணலாய் செல்லும் சர்க்கரை தொண்டையிலுள்ள நுண்ணிய நரம்பு முனைகளை வருடி, முக்கியமாக விக்கல் தொடரக்காரணமான ஃப்ரிபினிக் என்னும் நரம்பை அமைதிப்படுத்தி, விக்கலை நிறுத்தி விடுகிறது.