Author Topic: நான் கேக்கிற கேள்விக்கு பதிலை சொல்லுங்க பார்க்கலாம்  (Read 808 times)

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.

1. யாரையாவது பிடிக்க போகும் போது வீட்டின் கதவை உடைத்துக்கொன்டு போலீஸ் போகிறதே… அதற்குபின் கதவை சரி செய்து கொடுப்பாங்களா? ???

2. எல்லா டிவி சானல்லையும் ஏன் மிமிக்கிரி ஆர்டிஸ்ட் கோட் போட்ருக்காங்க? (பெரிய கொடுமை என்னனா… ஆபிசில மேனேஜர்ஐ பார்த்தா ரோபோ சங்கர் ஞாபகம் வந்து பலமா சிரிச்சிர்றேன்…) >:(

3. டெலிபோன்ல நம்பர்கள் மேலருந்து கீழ இருக்கு…. கால்குலேடர்ல மட்டும் ஏன் கீழ்ழிருந்து மேல இருக்கு ???  ???

4. மூக்குலயும் வாயிலயும் ஒரே நேரத்தில் மூச்சு விட முடியுமா??  :-X

5. விமானத்திலேயோ இல்லை நம்ம ரேஜ்ஜுக்கு பஸ்லயோ போகும் போது பாதியில் விபத்துக்குள்ளாகி நாம் பிழைத்துக்கொண்டால், டிக்கெட் பணத்தை திருப்பி கொடுத்திருவாங்களா??   8)

6. கோழி முட்டைய முதலில் சாப்பிட்டவர் யார்?  :-X

7. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் நீதிமன்றம் சென்றால் அவர்களும் "கீதை" மேல் சத்தியம் செய்ய வேண்டுமா???  ::)

8. விளம்பரங்களில் "இலவசப்பரிசு" என்று சொல்கிறார்களே… பரிசுனாலே அது இலவசம் தாணே…. இல்லயா??  ;)

9. Numberஐ ஏன் ஆங்கிலத்தில் சுருக்கமா எழுதும் பொது No. ணு எழுதுறோம் ?? Numberல O-ங்கர எழுத்தே இல்லையே??? :(

10. ஆண்கள் சட்டை மற்றும் பேண்ட் ஏன் எப்பவும் 38, 40, 42, 44 மற்றும் 28, 30, 32, 34 என்று இருக்கிறது? ஏன் 39, 41, 43 அல்லது 29, 31, 33 என்று வருவதில்லை ?? ;) ;)

11. இந்த சேல்ஸ் ரெப்லாம் ஏன் எப்பவும் tie கட்டிறுக்காங்க….???  :-\

12. சினிமா DVDய reverseல சுத்தினா படம் reverseல ஒடுமா??  ::)

13. "அவனுக்காக நான் நாயா உழைச்சேன்னு" எல்லாரும் சொல்றானுங்களே… நாய் எண்னைக்கு வேலை செய்திருக்கு…. ஒரு ஓரமா படுத்து வால் ஆட்டிட்டு இருக்கும்… இல்லையா ???  ;D

14. கண்னு பெருசா இருக்குறவங்களுக்கு கண்னு சிறுசா இருக்குறவங்கள விட sideல அதிகமாக பார்க்க முடியுமா???  ;)

விடை தெரிஞ்சவங்க எனக்கு கொஞ்சம் சொல்லுங்க… உங்களுக்கு புண்ணியமா போகும்…


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Quote
7. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் நீதிமன்றம் சென்றால் அவர்களும் "கீதை" மேல் சத்தியம் செய்ய வேண்டுமா???


கீதை ஒரு மதம் சார்ந்த நூல் என்பதற்கு அப்பால் .... அதில் சத்தியங்கள் பல உரைக்கப் பட்டுள்ளது .... கீதையை உபதேசித்த இடம் போர்க்களம் அங்கே அர்ஜெனனுக்கு தெளிவை கொடுத்தது கிருஷ்ணரின் சத்திய போதனை..... அதனால் எதிரே நிற்ப்பவர் தான் உறவென்றும் பாராமல் சத்திய முடிவுகளை எடுத்து போரில் வெற்றி பெற்று தர்மத்தை நிலை நாட்டினான் . அது போல் சாட்சி கூண்டில் நிரப்பவரும் எதிரே நிற்பவர் உறவு தெரிந்தவர் ... இப்படி ஏதும் பார்க்காது .. உண்மை பேசி தர்மத்தை நிலை நாட்டுவதற்காகவே அந்த சத்தியம் செய்ய படுகின்றது .... கீதை மேல் சத்தியம் செய்வது சத்தியத்தின் மேல் சத்தியம் செய்வது .... அது மதத்தின் மேல் செய்யப்படும் சத்தியம் அல்ல ....