Author Topic: சோயா காய்கறி புலாவ் தயாரிக்கலாமா?  (Read 1216 times)

Offline RemO

காய்கறி மற்றும் சோயா சேர்த்து தயாரிக்கப்படும் புலாவ் குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவருக்கும் ஏற்ற சத்தான உணவு. இதனை எளிதில் தயாரிக்கலாம். ஊட்டச்சத்துநிறைந்த இந்த உணவினை வளரும் குழந்தைகளுக்கு தரலாம் என உணவியல் வல்லுநர்கள் அனைவரும் பரிந்துரைக்கின்றனர்.

தேவையான பொருட்கள்
பாசுமதி அரிசி - 2 கப்,
சோயா உருண்டைகள் - அரை கப்,
நறுக்கிய வெங்காயம் - கால் கப்,
இஞ்சி - பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
சீரகம் - அரை டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன்,
கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன்,
தயிர் - அரை கப்,
எண்ணெய், நெய் - தலா 2 டேபிள் ஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.

சோயா காய்கறி புலாவ் செய்முறை :

பாஸ்மதி அரிசியைக் கழுவி, இரண்டரை டம்ளர் தண்ணீர் சேர்த்து கால் மணி நேரம் ஊற வைக்கவும். சோயாவைக் கொதிக்கும் நீரில் 5 நிமிடம் போட்டு, குளிர்ந்த நீரில் நன்றாக அலசி பிழிந்து வைக்கவும். அடுப்பில் குக்கரை வைத்து நெய், எண்ணெய் விட்டு, காய்ந்ததும் சீரகம் தாளித்து வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். அதனுடன் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கவேண்டும். மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு, சோயா உருண்டைகள், தயிர் சேர்க்கவும்.

இந்த கலவையுடன் ஊற வைத்த அரிசியை தண்ணீருடன் சேர்த்துக் கிளறி, குக்கரை மூடி, ஒரு விசில் வந்ததும் 2 நிமிடம் 'சிம்’மில் வைத்து இறக்கவும். சத்தான சுவையான சோயா காய்கறி புலாவ் ரெடி. இதற்கு சைடிஸ் ஆக தயிர் வெங்காயம் ரைத்தா சேர்த்து பரிமாறலாம்.