Author Topic: இ‌ந்‌தி‌ரிய‌ங்களை இய‌க்குவது எது?  (Read 2693 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
சமீபத்தில் படித்தேன், இந்திரியங்களை வெள்ளி இயக்குகிறது. துக்கம், நரம்பு, தசை, மரணம் ஆகியவற்றை சனி தீர்மானிக்கிறது என்று பார்த்தேன். இது எந்த அளவிற்கு உண்மை? எப்படி?

ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்: விந்தணுக்கள் இருக்கிறதல்லவா, சுக்கிலம். சுக்கிலத்திற்கு சுக்ரன்தான். இந்த சுக்கிலத்தோட வீரியத்தை நிர்ணயிப்பது சுக்ரன் கையில்தான் இருக்கிறது. ஆனால், கருவுறத் தகுதியில்லாத ஆண்களெல்லாம் உண்டு. அதனை நாம் ஜாதகத்தில் கண்டுபிடிக்கலாம். ஆனால், அதை சுக்ரனை மட்டுமே பிரதானமாக வைத்துச் சொல்லிவிட முடியாது. செவ்வாய் மஜ்ஜைக்குரிய கிரகம். எலும்பு மஜ்ஜைகளில் இருந்துதான் ரத்த அணுக்கள் உருவாகிறது. 10 சொட்டு ரத்தம் சேர்ந்துதான் ஒரு விந்தணு உருவாகிறது என்பது ஒரு கணக்கு. எனவே, ரத்தத்தினுடைய அணுக்கள் எல்லாம் விகிதாச்சாரப்படி விந்தணு உருவானால், அந்த விந்தணுவிற்கு எல்லா விதத்திலும் கருவுறும் தன்மை இருக்கிறது.

பிரதானமாக பார்த்தால் செவ்வாய். ஏனென்றால், செவ்வாய்தான் ரத்தம் எப்படி இருக்கும், வீரியம் உண்டா என்பதையெல்லாம் நிர்ணயிக்கும். ஆண்களுக்கான எழுச்சி இதையெல்லாம் செவ்வாயை வைத்துத் தெரிந்துகொள்ளலாம். அதற்கடுத்துதான் சுக்ரன் வருகிறார். இந்த சுக்ரன்தான் விந்தணுக்களுடைய நிறம், அதனுடைய தன்மை, பிறகு அதனுடைய வேகம் - வேகமாகப் போய் கரு முட்டையுடன் மோதி கலக்க வேண்டும் - இந்தப் பகுதியை சுக்ரன் எடுத்துக் கொள்கிறார். விந்தணுவினுடைய உருவாக்கம் செவ்வாய். விந்தணுவினுடைய செயல்பாடு சுக்ரன். எனவே விந்தணுவினுடைய பங்களிப்பில் செவ்வாய், சுக்ரனுடைய பங்களிப்பு அதிமாக உள்ளது. சுக்ரன் ஸ்லோகிதம் கலப்பது இதெல்லாம் சுக்ரன்தான்.

நரம்பெல்லா‌ம் சனி பகவான்தான். ஏனென்றால் சனி வலுவாக இருந்தால்தான் பக்கவாதமெல்லாம் வராமல் இருக்கும். சனி கெட்டுப் போயிருந்தால் பக்கவாதம், மூளைக் காய்ச்சல், சனி கெட்டிருந்து குரு பார்த்தாரென்றால் இடது கையைத் தாக்கும். மூளை வேறு விதத்தில் செயல்படுவதை நாம் பார்க்கிறோம்.