Author Topic: ஒருவருக்கு குறிப்பிட்ட தசை, புக்தி நடக்கும் போது கைரேகையில் மாற்றம் ஏற்படுமா?  (Read 2586 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்

பொதுவாக ஒருவரது ஜாதகத்தில் குரு பகவான் ஆட்சி/உச்சம் பெற்ற நிலையிலோ அல்லது திரிகோணத்திலோ இருக்க, அந்த ஜாதகருக்கு குரு தசை நடக்கும் காலத்தில் ஆள்காட்டி விரலுக்கு கீழ் உள்ள குரு மேடு மற்ற மேடுகளைக் காட்டிலும் உயர்ந்து காணப்படும்.

நல்ல அறிகுறிகளான சூலம், நேர்கோடு, நட்சத்திரக் குறி ஆகியவை குரு மேட்டில் உருவாகலாம். இதனை வைத்து அவர்கள் வாழ்வில் ஏற்படப் போகும் ஏற்றத்தை உணரலாம்.

என்னிடம் வரும் சில ஜாதகர்கள், குறிப்பிட்ட தசை துவங்கிய பின்னரும் வாழ்வில் பெரிதாக மாற்றம் ஏற்படவில்லை எனக் கூறுவர். அவர்களின் கைரேகையை ஆராய்ந்தால் குறிப்பிட்ட மேடு அவ்வளவு சிறப்பாக இல்லை என்பதை அனுபவ ரீதியாக உணர்ந்தேன்.

இதற்கு காரணம், அவரின் ஜாதகத்தில் குறிப்பிட்ட யோக தசை நடக்கும் போது, சம்பந்தப்பட்ட கிரகத்தின் பரல்கள் (அஷ்டவர்க்க பரல்கள்) குறைந்து காணப்படும். அந்த வகையில் கை ரேகையும், ஜோதிடமும் பின்னிப் பிணைந்தவை என்பதில் சந்தேகம் கிடையாது.

பிறக்கும் போது கையில் இருக்கும் 3 அல்லது 4 அடிப்படை ரேகைகள் எப்போதும் இருக்கும். ஆனால், அதன் பின்னர் வளரும் பருவத்தில் உருவாகும் ரேகைகளுக்கு வலிமை அதிகம். எனவே, அவற்றைக் கொண்டு சம்பந்தப்பட்டவரின் வாழ்வில் ஏற்படப் போகும் மாற்றங்களைக் கண்டறிய முடியும்.

எனவே, தசா புக்திக்கு தகுந்தாற் போல் கையில் உள்ள ரேகைகள், மேடுகளில் மாற்றங்கள் ஏற்படும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.