Author Topic: வாழைக்காய் மசாலா  (Read 467 times)

Offline kanmani

வாழைக்காய் மசாலா
« on: September 01, 2012, 07:38:18 PM »
தேவையான பொருட்கள் :

வாழைக்காய் - 2
வெங்காயம் - 4
தக்காளி - 3
இஞ்சிபூண்டு விழுது - 2 டீஸ்பூன்
கரம்மசாலா தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
சீரகத்தூள் - 1/2 டீஸ்பூன்
கடுகுத்தூள் - 1/2 டீஸ்பூன்
கடுகுத்தூள் - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை :

முதலில் வெங்காயம் மற்றும் தக்காளியை நன்கு பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பின் வாழைக்காயை தோல் சீவி, சற்று விரல் நீளத்திற்கு நறுக்கிக் கொள்ளவும்.

பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, பொரித்தெடுக்கும் அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் நறுக்கிய வாழைக்காயை பொன்னிறமாக பொரித்தெடுத்துக் கொள்ளவும்.

பிறகு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி, நறுக்கிய வெங்காயம் மற்றும் இஞ்சிபூண்டு விழுது சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

பின் அதில் தக்காளி சேர்த்து வதக்கி, மிளகாய் தூள், கரம்மசாலா தூள், சீரகத்தூள் சேர்த்து நன்கு வதக்கவும். சில நிமிடங்கள் கழித்து பொரித்தெடுத்த வாழைக்காயை சேர்த்து வதக்கி, தேவையான அளவு தண்ணீர் விட்டு, பச்சை வாசனை போகும் வரை நன்கு கொதிக்கவிடவும்.

குழம்பு ஓரளவு கெட்டியாகும் போது அதில் கடுகுத்தூள், கடுகுத்தூள் சேர்த்து கிளறி, சிறிது கொத்தமல்லியை நறுக்கி மேலே தூவி விடவும்.