Author Topic: வரம்  (Read 471 times)

Offline ChuMMa

வரம்
« on: March 02, 2017, 12:36:28 PM »
ஒரு ஊர்ல குப்புசாமின்னு ஒருத்தன் இருந்தானாம். 👨🏻

அவனுக்கு சாவே வரக்கூடாதுன்னு ரொம்ப காலமா கடவுளை வேண்டி தவம் இருந்தானாம். 🙏🏽

ஒரு நாள் கடவுள் நேர்ல வந்து “பக்தா என்ன வரம் வேண்டும் கேள்” அப்படின்னு கேட்டாராம். 😐

குப்புசாமியும் ரொம்ப நேரம் யோசிச்சுட்டு “கடவுளே, எனக்கு எப்பவும் சாவே வரக்கூடாது”னு கேட்டானாம். 🤔😊

கடவுள் கொஞ்ச நேரம் யோசிச்சுட்டு “இது இயலாத காரியம். இருந்தாலும் நீ புரிந்த கடும் தவத்திற்காக நீ வேண்டிய படி நடக்கட்டும்!"னு சொல்லிட்டு கடவுள் மறைஞ்சுட்டாராம். 👼🏻🌪

குப்புசாமிக்கோ தல கால் புரியல. சந்தோஷத்துல துள்ளிக் குதிச்சு வீட்டுக்குப் போய்ட்டு இருந்தானாம். 🏃🏻🤑

வழியில பெரியவர் ஒருத்தர் குப்புசாமிகிட்ட வந்து “உம் பேரு என்னப்பா?"னு கேட்டாராம். 👴🏻

அதுக்கு குப்புசாமி “குப்புமி”னு சொன்னானாம். தப்பா சொல்லிட்டமேனு திரும்பவும் சொல்ல, மறுபடியும் "குப்புமி"னு சொன்னானாம். எத்தன தடவ சொன்னாலும், "குப்புமி"னு தான் அவன் வாய்ல வந்துச்சாம்! 😳😔
.
.
.
.
.
.
.
.
.
.
பாவம் கடைசி வரைக்கும் அவனுக்கு "சா”வே வரலையாம்! 😆

இதையெல்லாம் மறஞ்சிருந்து பாத்துட்டு இருந்த கடவுள் சொன்னாராம்..... 👼🏻

"வரம் கேக்குற உனக்கே இத்தன அதப்புனா, குடுக்குற எனக்கு எவ்ளோ இருக்கும்!"

En meethaana ungal thedal naan yaar endru ariyum varai mattume..


"Ideas are funny little things
They won't work unless we do".