Special Category > ஜோதிடம்

2015 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்

<< < (2/3) > >>

Maran:

தனுசு - 2015 ஆங்கில புத்தாண்டு பலன்கள்

பிரச்னையென வந்து விட்டால் சட்டம் பேசுபவர்களே! உங்களுடைய ராசிக்கு 2-வது வீட்டில் புதன், சுக்ரன், செவ்வாய் ஆகிய கிரகங்கள் நிற்கும் நேரத்தில் இந்த 2015ம் ஆண்டு பிறப்பதால் எல்லா வகையிலும் நீங்கள் முன்னேறுவீர்கள். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். சிக்கல்கள், பிரச்னைகளின் ஆணிவேரைக் கண்டறிந்து அதைத் தீர்ப்பீர்கள். இதமானப் பேச்சால் முக்கிய காரியங்களை முடிப்பீர்கள். பணவரவு பலவகையிலும் உண்டு ஆனால் செலவினங்களும் கட்டுக்கடங்காமல் போகும். ஷேர் மூலமாகவும் பணம் வரும். வழக்குகள் பேசி தீர்க்க வழி வகை கிடைக்கும். மனஇறுக்கங்கள் குறையும். வீட்டில் கூடுதல் தளம் அமைப்பீர்கள். சமையலறையை நவீனமாக்குவீர்கள். குழந்தை பாக்யம் கிடைக்கும்.
 
      உங்களுடைய ராசிக்கு 5-ம் வீட்டில் சந்திரன் நின்றுக் கொண்டிருக்கும் போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். உறவினர், நண்பர்களுடன் இருந்த உரசல் போக்கு நீங்கும். புதிய பாதையில் பயணிப்பீர்கள். ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் பேசுபவர்கள் அறிமுகமாவார்கள். அயல்நாட்டிலிருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். உங்களுடைய ராசிநாதன் குரு 8வது வீட்டில் மறைந்துக் கிடக்கும் போது இந்த 2015-ம் ஆண்டு பிறப்பதால் அலைச்சல், செலவுகள் இருந்துக் கொண்டேயிருக்கும். மகளுக்கு நல்ல நிறுவனத்தில் வேலைக் கிடைக்கும். மகனுக்கும் நல்ல வாழ்க்கைத் துணை அமையும்.
 
பிள்ளைகளால் மனவருத்தங்கள் வந்துப் போகும். ஆனால் ஜீலை மாதம் முதல் உங்கள் ராசிநாதன் குரு 9ம் வீட்டில் வந்தமர்வதால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டு. பணவரவும் அதிகரிக்கும். எதிர்பார்த்து ஏமாந்துப் போன தொகை கைக்கு வரும். பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு மாறும். அவர்கள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். புதிய முயற்சிகள் பலிதமாகும். ஏழரைச் சனி தொடங்கியிருப்பதால் மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம்.
 
பணம், நகை வாங்கித் தருவதில் குறுக்கே நிற்க வேண்டாம். ஆனால் நட்பு வட்டம் விரிவடையும். பெரிய அந்தஸ்தில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். ஆரோக்யத்தில் அக்கறை காட்டுங்கள். லேசாக முதுகு வலி, மூட்டு வலி வரும். சொமானக் கோளாறு, மலச்சிக்கல்களும் வரக்கூடும். புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். கவனக்குறைவாலும் சிலவற்றை இழந்துவிடாதீர்கள். பழைய மின்னணு, மின்சார சாதனங்களை விற்று விட்டு புதிதாக வாங்குவீர்கள். வாகன வசதி உண்டாகும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும்.
 
      உங்களுடைய ராசிக்கு 4-ம் வீட்டில் கேது நிற்கும் போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் தாயாரின் உடல் நிலை பாதிக்கும். வாகனம் அடிக்கடி பழுதாகும். வீட்டில் குடி நீர் குழாய், கழிவு நீர் குழாய் அடைப்பு வந்து நீங்கும். கேஸ் சிலிண்டருக்கு பயன்படுத்தும் டியூப் பழுதாகியிருந்தால் உடனே மாற்றுங்கள். எண்ணெய் பதார்த்தங்கள் செய்துக் கொண்டிருக்கும் போது அலைப்பேசியை பயன்படுத்த வேண்டாம். உங்களைப் பற்றிய விமர்சனங்கள் அதிகமாகும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் உண்டு. கமிஷன், புரோக்கரேஜ், ஸ்டேஷனரி வகைகளால் லாபம் வரும். புதிய வாடிக்கையாளர்கள் வருவார்கள். பழைய வாடிக்கையாளர்களும் தேடி வருவார்கள். ஜீலை மாதத்திலிருந்து புகழ் பெற்ற மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். ஏற்றுமதி, இறக்குமதி, உணவு வகைகளாலும் ஆதாயமடைவீர்கள். புதிய பங்குதாரர்களை சேர்ப்பீர்கள்.
 
பழைய பங்குதாரர்களுடன் இருந்த மோதல்கள் ஜீலை மாதம் முதல் குறையும். உத்யோகத்தில் உங்களுடைய கடின உழைப்பை உயரதிகாரி புரிந்துக் கொள்வார். மூத்த அதிகாரிகள் உறுதுணையாக இருப்பார்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். ஜீலை மாதம் முதல் உங்கள் ராசிக்கு 9-ம் வீட்டில் குரு வந்தமர்வதால் புது வேலைக் கிடைக்கும். எதிர்ப்புகளும் நீங்கும். ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் சம்பள பாக்கி கைக்கு வரும். புது பொறுப்புகள் தேடி வரும். அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்திலும் வேலைக் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.
 
      மாணவ-மாணவிகளே! மந்தம், மறதி வந்து நீங்கும். வகுப்பறையில் வீண் அரட்டைப் பேச்சை தவிர்ப்பது நல்லது. ஏழரைச் சனி தொடங்கியிருப்பதால் கூடாப்பழக்கமுள்ளவர்களின் நட்பை தவிர்க்கப்பாருங்கள். பெற்றோருக்கு தெரியாமல் எதையும் செய்துக் கொண்டிருக்க வேண்டாம். சமூக அறிவியல், கணிதப் பாடத்தில் அதிக கவனம் செலுத்துங்கள். கன்னிப் பெண்களே! மனக்குழப்பங்கள் நீங்கும். தெளிவாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். நல்லவர்களின் நட்பு கிடைக்கும். புது வேலைக்கு முயற்சி செய்தீர்களே! நல்ல பதில் வரும். ஜீலை மாதத்திலிருந்து திருமணம் கூடி வரும். உங்கள் ரசனைக் கேற்ப நல்ல வரனும் அமையும். இந்தப் புத்தாண்டு தொடக்கத்தில் செலவுகளையும், அலைச்சலையும் தந்தாலும் ஜீலை மாதம் முதல் உற்சாகத்தையும், புதிய திட்டங்களை நிறைவேற்றும் சக்தியையும் தரும்.

Maran:

சிம்மம் - 2015 ஆங்கில புத்தாண்டு பலன்கள்

பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் மீறாதவர்களே! உங்களுடைய ராசிக்கு 9ஆவது ராசியில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் ஓரளவு பணவரவு உண்டு. செலவுகள் கட்டுக்கடங்காமல் போனாலும் அதற்கேற்ப வருமானம் இருக்கும். தன்னம்பிக்கை அதிகமாகும். எதிர்ப்புகளும் குறையும். நல்லவர்களின் நட்பு கிடைக்கும். தந்தையார் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார். தந்தைவழி சொத்துக்கள் கைக்கு வரும். வீடு வாங்குவதற்கு குறைந்த வட்டியில் கடன் கிடைக்கும்.  உங்களுடைய ராசிக்கு 12-ல் குரு நிற்கும் போது இந்தாண்டு பிறப்பதால் தூக்கம் குறையும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். எதிர்பாராத செலவுகளால் அவ்வப்போது திணறுவீர்கள்.
 
உறவினர், நண்பர்கள் உங்களுடைய நிலைமையைப் புரிந்துக் கொள்ளாமல் உங்களுக்கு அவ்வப்போது அன்புத்தொல்லை தருவார்கள். கண் பார்வையை பரிசோதித்துக் கொள்வது நல்லது. பல் வலி, முதுகு வலி வந்துப் போகும். வாயுப் பதார்த்தங்களையும், கொழுப்புச் சத்துள்ள உணவுகளையும் தவிர்க்கப்பாருங்கள். ஜீலை மாதத்திலிருந்து உங்கள் ராசிக்குள் குரு நுழைவதால் ஆரோக்யம் குறையும். வேலைச்சுமையும் அதிகமாகும். சில நேரங்களில் அலுத்துக் கொள்வீர்கள். வருங்காலம் பற்றிய கவலைகள் வந்துப் போகும். சிலரை நினைத்து ஆதங்கப்பட்டுக் கொள்வீர்கள். 

இந்தாண்டு முழுக்க சனி 4-ம் வீட்டில் தொடர்வதால் கோபம் அதிகரிக்கும். நல்லவர்களின் நட்பை இழந்துவிடாதீர்கள். மற்றவர்கள் உங்களை தரக்குறைவாகப் பேசினாலும் நீங்கள் அதற்கு பதிலடித் தராமல் இருப்பது நல்லது. பழையப் பிரச்னைகளை சிலர் கிளறுவார்கள்.
 
வழக்கால் நிம்மதி குறையும். சில நேரங்களில் சாட்சிக்காரரை விட சண்டைக்காரரே மேல் என்பதை உணருவீர்கள். சின்ன சின்ன பிரச்னைகளையெல்லாம் பேசி முடிக்கப்பாருங்கள். ஈகோ பிரச்னையால் நீதிமன்றம் செல்ல வேண்டாம். தாயாரின் உடல் நிலை பாதிக்கும். வாகனம் அடிக்கடி செலவு வைக்கும். அலைப்பேசியில் பேசிக் கொண்டு வாகனத்தை இயக்காதீர்கள். சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும். நெருங்கிய உறவினர்களால் இருந்தாலும் இடைவெளி விட்டு பழகுவது நல்லது.
உங்கள் ராசிநாதன் சூரியன் 5-ம் வீட்டில் நிற்கும் போது இந்தாண்டு பிறப்பதால் பிள்ளைகளை அவர்கள் போக்கிலேயே விட்டுப் பிடிப்பது நல்லது. ஆனால் பாவ கிரகங்களின் பார்வை சூரியன் மீது படாததால் பிள்ளைகளுக்கு அயல்நாட்டு வாய்ப்புகள் வரும்.
 
இந்தப் புத்தாண்டு பிறக்கும் போது சுக்ரன் 6-ல் மறைந்திருப்பதால் கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள், பிரிவுகள் வரக்கூடும். வீண் சந்தேகத்தாலும், சிலரின் நட்பாலும் உங்களுக்குள் பிரிவுகள் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். சின்ன சின்ன பிரச்னைகளையெல்லாம் ஒன்று சேர்த்து வெடித்து சிதற வேண்டாம். மனம் விட்டு பேசி உடனுக்குடன் தீர்த்துக் கொள்வது நல்லது. திடீரென்று அறிமுகமாகுபவர்களை வீட்டிற்கு அழைத்து வராதீர்கள். புதியவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். பொறுமையாக இருந்து செயல்படுவது நல்லது. ஓட்டுநர் உரிமம், வண்டிக்கு இன்சூரன்சையெல்லாம் புதுப்பிக்க தவறாதீர்கள்.
 
சில நேரங்களில் அபராதத் தொகை கட்ட வேண்டி வரும். மனைவியின் விருப்பமில்லாமல் மனைவிக்கு பிடிக்காதவர்களிடம் பேசிக் கொண்டிருக்க வேண்டாம். உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டில் செவ்வாய் நிற்கும் போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் வீடு, மனை விற்பது, வாங்குவது நல்ல விதத்தில் முடிவடையும். சொத்து பிரச்னைக்கு சுமூக தீர்வு காண்பீர்கள். சகோதரங்கள் பக்கபலமாக இருப்பார்கள். இந்தாண்டு முழுக்க ராகு 2-ம் வீட்டில் தொடர்வதால் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கப்பாருங்கள். அவ்வப்போது உணர்ச்சிவசப்படுவீர்கள்.
 
சிலருக்கு நல்லது சொல்லப் போய் பொல்லாப்பாக முடிய வாய்ப்பிருக்கிறது. வெளிவட்டாரத்தில் யாரையும் விமர்சிக்க வேண்டாம். காலில் அடிப்பட வாய்ப்பிருக்கிறது. கேதுவும் இந்தாண்டு முழுக்க 8-வது வீட்டிலேயே நீடிப்பதால் கனவுத் தொல்லை அதிகமாகும். பணம் வாங்கித் தருவது, திருமண விஷயத்தில் குறுக்கே நிற்க வேண்டாம். குடும்ப அந்தரங்க விஷயங்கள், கொடுக்கல், வாங்கல் விஷயங்களையெல்லாம் வெளியாட்களிடம் சொல்லிக் கொள்ளாதீர்கள்.
 
வியாபாரத்தில் சந்தை நிலவரத்தை அறிந்து முதலீடு செய்யுங்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பின்மையால் லாபம் குறையும். ரசாயனம், மருந்து, ரியல் எஸ்டேட் மூலமாக பணம் வரும். பெரிய அளவில் கடன் வாங்கி வியாபாரத்தை விரிவுப்படுத்த வேண்டாம். கூட்டுத் தொழிலையும் தவிர்க்கப்பாருங்கள். இதற்கு முன் கூட்டுத் தொழில் செய்பவர்கள் பங்குதாரர்களை அனுசரித்துப் போவது நல்லது. உத்யோகத்தில் அதிகாரிகளை அரவணைத்துப் போங்கள். சக ஊழியர்களையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். முக்கிய ஆவணங்களை கவனமாக கையாளுங்கள். முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும் போது மூத்த அதிகாரிகளை அல்லது ஓய்வு பெற்ற அதிகாரிகளை கலந்தாலோசிப்பது நல்லது. விரும்பத்தகாத இடமாற்றம் இருக்கும். நேரம் காலம் பார்க்காமல் உழைக்க வேண்டி வரும்.
 
மாணவ-மாணவிகளே! உங்கள் கவனத்தை சிதற விடாதீர்கள். படிப்பில் மட்டும் கவனம் செலுத்துங்கள். தவறான பழக்க வழக்க முள்ளவர்களின் நட்பை தவிர்ப்பது நல்லது. கணிதம், ஆங்கிலப் பாடங்களில் அதிக அக்கறை காட்டுங்கள். கன்னிப் பெண்களே! கோபத்தை குறையுங்கள். எல்லோரும் நல்லவர்கள் என்று நினைத்து ஏமாறாதீர்கள். உயர்கல்வியில் போராடி வெற்றி பெறுவீர்கள். காதலுக்கும், நட்புக்கும் உள்ள வித்யாசத்தை நீங்கள் உணர்ந்துக் கொள்வது நல்லது. திருமணம் தள்ளிப் போய் முடிவடையும். இந்த 2015ம் ஆண்டு உங்களுக்கு ஆரோக்ய குறைவையும், மனநிம்மதியற்றப் போக்கையும், பணத்தட்டுப்பாட்டையும் தந்தாலும் தெய்வ நம்பிக்கையாலும், விடாமுயற்சியாலும், அனுபவ அறிவாலும் ஓரளவு முன்னேற வைக்கும்.

Maran:

மகரம் - 2015 ஆங்கில புத்தாண்டு பலன்கள்

நெருக்கடி நேரத்திலும் அடுத்தவர்களிடம் உதவி கேட்க தயங்குபவர்களே! உங்கள் ராசிநாதன் சனிபகவான் லாப வீட்டில் இந்தாண்டு பிறப்பதால் தைரியம் பிறக்கும். குழப்ப நிலையிலிருந்து விடுபடுவீர்கள். முக்கிய முடிவுகளெல்லாம் எடுப்பீர்கள். வீடு, வாகனம் வாங்குவீர்கள். புதிய வாகனமும் அமையும். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். உங்களுடைய தைரிய ஸ்தானத்தில் கேது நிற்பதால் இந்த 2015-ம் ஆண்டில் பெரிய பதவிகள் தேடி வரும். பிரபலங்கள் பாராட்டும்படி நடந்துக் கொள்வீர்கள். விலை உயர்ந்த மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். கோபம் குறையும். சாதுர்யமாகப் பேசி பல காரியங்களையும் முடிப்பீர்கள்.
      உங்களின் யோகாதிபதியான சுக்ரன் உங்கள் ராசியிலேயே அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் வருடத்தின் தொடக்கமே உங்களுக்கு பரபரப்பாக இருக்கும். புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். புது வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். சிலர் புது வீடு கட்டி கோலாகலமாக கிரகப் பிரவேசம் செய்வீர்கள். வங்கிக் கடன் உதவியும் கிட்டும். பூர்வீக சொத்து கைக்கு வரும். பெற்றோருடன் இருந்த மனத்தாங்கல் நீங்கும். உங்களின் பாக்யாதிபதியான புதனும், சுக்ரனுடன் சேர்ந்து அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்தாண்டு பிறப்பதால் தந்தை வழி சொத்துகள் கைக்கு வரும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும். அயல்நாட்டிலிருப்பவர்களால் ஆதாயம் உண்டு. உங்களுடைய ராசியிலேயே செவ்வாய் அமர்ந்திருக்கும் போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் உடல் உஷ்ணம் அதிகமாகும். வேலைச்சுமையும் கூடும். தூக்கம் குறையும். சகோதர வகையில் ஆரோக்யமான விவாதங்களும், செலவுகளும் இருக்கும்.
      ஜூன் மாதம் வரை உங்கள் ராசியை குரு பார்த்துக் கொண்டிருப்பதால் குழந்தை பாக்யம் உண்டு. நீண்ட நாட்களாக தள்ளிப் போன திருமணம் சீரும், சிறப்புமாக நடைபெறும். மகனுக்கு உயர்கல்வி நீங்கள் எதிர்பார்த்த கல்வி பிரிவில், விரும்பிய நிறுவனத்தில் அமையும். அவருக்கு நல்ல வாழ்க்கைத் துணையும் அமையும். மகளுக்கும் நல்ல வரன் அமையும். பிள்ளைகளால் சமூகத்தில் அந்தஸ்து ஒருபடி உயரும். ஜீலை மாதம் முதல் குரு உங்கள் ராசிக்கு 8-ல் மறைவதால் அலைச்சல் அதிகரிக்கும். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். உத்யோகம் அல்லது உயர்கல்வியின் பொருட்டு பிள்ளைகள் உங்களை விட்டு பிரிவார்கள். எவ்வளவு பணம் வந்தாலும் செலவுகள் இருக்கும். நயமாகப் பேசுபவர்களை நம்பி குடும்ப விஷயங்களையோ, சொந்த விஷயங்களையோ பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். திடீர் பயணங்கள் உண்டு. ஆன்மிக பயணங்களும் சென்று வருவீர்கள். நீண்ட நாட்களாக செல்ல வேண்டுமென்று நினைத்திருந்த அயல்நாட்டு பயணமும் உண்டு. அண்டை மாநிலப் புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். உங்களுடைய ராசிக்கு 12-ல் வீட்டில் சூரியன் மறைந்திருக்கும் நேரத்தில் இந்தாண்டு பிறப்பதால் திட்டமிட்ட காரியங்கள் கொஞ்சம் தடைப்பட்டு முடிவடையும். குறிப்பாக அரசு காரியங்கள் தள்ளிப் போய் முடியும். அரசியல்வாதிகளுடன் கவனமாகப் பழகுங்கள்.
      ராகு 9-ம் வீட்டில் நிற்பதால் தந்தையாரின் ஆரோக்யத்தில் அக்கறை காட்டுங்கள். அவசர முடிவுகள் வேண்டாம். சில நேரங்களில் சேமிப்புகள் கரையும். பின்னர் பணவரவு உண்டாகும். சொத்து வாங்குவது, நகைகள் வாங்குவது பொருட்டு சேமிப்புகளையெல்லாம் நீங்கள் முதலில் இழக்க நேரிடும். நகை அல்லது நிலம், சொத்தில் முதலீடு செய்வீர்கள். வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும். முக்கிய கோப்புகளை கவனமாக கையாளுங்கள்.
      வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். ஆட்டோ மொபைல், எலக்ட்ரானிக்ஸ், ஹோட்டல், தங்கும் விடுதி, கன்ஸ்டக்ஷன், ரியல் எஸ்டேட் வகைகளால் லாபம் அதிகரிக்கும். விளம்பர யுக்திகளை கையாண்டு உங்களுடைய நிறுவனத்தை பிரபலமாக்குவீர்கள். போட்டிகளையும் தாண்டி லாபம் ஈட்டுவீர்கள். பங்குதாரர்கள் பணிந்துப் போவார்கள். வேலையாட்கள் மதிப்பார்கள். ஆனால் ஜீலை மாதம் முதல் குரு 8-ல் சென்று மறைவதால் அதுமுதல் போட்டிகள் அதிகமாகும். அவ்வப்போது பணப்பற்றாக்குறை வந்தாலும் சாமர்த்தியமாக சமாளித்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் மகிழ்ச்சி உண்டு. உயரதிகாரிகள் உங்களுடைய புது முயற்சிகளை ஆதரிப்பார்கள். சக ஊழியர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். சிலருக்கு வேறு நல்ல வாய்ப்புகளும் கூடி வரும். வெளிமாநிலம், வெளிநாட்டு தொடர்புகளும் கிடைக்கும். வெளிநாட்டு தொடர்புடைய நிறுவனங்களிலும் வேலைக் கிடைக்கும். சம்பள பாக்கியும் கைக்கு வரும். ஜீலை மாதத்திலிருந்து குரு 8-ல் மறைவதால் வேலைச்சுமை அதிகமாகும். மூத்த அதிகாரிகளைப் பற்றி சக ஊழியர்கள் மத்தியில் விமர்சிக்க வேண்டாம். சங்கம், இயக்கம் இவற்றில் பெரிய பதவிகள் தேடி வரும். எதிர்பார்த்த இடமாற்றம் ஜீன் மாதத்திற்குள் கிடைக்கும். சம்பள பாக்கியும் கைக்கு வந்து சேரும்.
      மாணவ-மாணவிகளே! அதிக மதிப்பெண் பெறுவீர்கள். சக மாணவர்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும். நீங்கள் நினைத்த கல்வி நிறுவனத்தில் எதிர்பார்த்த கல்விப் பிரிவில் சேருவீர்கள். வகுப்பாசிரியரின் பாரட்டைப் பெறுவீர்கள்.
 
      கன்னிப் பெண்களே! உங்களுக்கு எல்லா வகையிலும் இந்தப் புத்தாண்டு மகிழ்ச்சியை தருவதாக இருக்கும். காதலும் இனிக்கும். உயர்கல்வியிலும் முன்னேறுவீர்கள். வேலையும் கிடைக்கும். உங்கள் ரசனைக் கேற்ப வரனும் அமையும். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும்.ஆகமொத்தம் இந்த 2015-ம் ஆண்டு அனைத்து வகைகளிலும் உங்களுக்கு முன்னேற்றத்தையும், முற்பகுதியில் உங்களுக்கு அதிரடி வளர்ச்சியையும், பிற்பகுதியில் உங்களுக்கு அலைச்சலுடன் ஆதாயங்களையும் தரக்கூடியதாக இருக்கும்.

Maran:

துலாம் - 2015 ஆங்கில புத்தாண்டு பலன்கள்

கறைபடியாத களங்கமற்ற மனசு கொண்டவர்களே! உங்களுடைய ராசிக்கு 7-வது வீட்டில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் மறைந்துக் கிடந்த திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். மனைவி உங்களைப் புரிந்துக் கொள்ள ஆரம்பிப்பார். உங்களுடைய கடின உழைப்பையும், வெள்ளை மனதையும் இனிமேல் மனைவி புரிந்துக் கொள்வார். உங்களுடைய ராசியை சந்திரன் பார்த்துக் கொண்டேயிருப்பதால் அலர்ஜி, இன்பென்ஷனிலிருந்து விடுபடுவீர்கள். பல நேரங்களில் சோர்வாகவும், களைப்பாகவும் காணப்பட்டீர்களே! அந்த நிலை மாறும். இனி உற்சாகம் பிறக்கும். தைரியமும் கூடும். சவாலான காரியங்களைக் கூட எடுத்து செய்வீர்கள்.
 
உங்கள் ராசிநாதன் சுக்ரன் 4-ம் வீட்டில் அமர்ந்திருப்பதுடன், உங்கள் பாக்யாதிபதியான புதனும் 4-ல் நிற்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் மனதில் ஒரு தெளிவு பிறக்கும். நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். தடைப்பட்ட காரியங்கள் நல்ல விதத்தில் முடிவடையும். எதிர்பார்த்த பணமும் கைக்கு வரும். கைமாற்றாக வாங்கி விட்டு திருப்பித் தர முடியாமல் திணறினீர்களே! அந்த தொகைகளையும் தந்து உங்களுடைய கௌரவத்தை காப்பாற்றிக் கொள்வீர்கள்.

பிரபலங்கள் அறிமுகமாவார்கள். நட்பு வட்டம் விரிவடையும். உள்மனதில் இருந்து வந்த குழப்பங்களும், தாழ்வுமனப்பான்மையும் நீங்கும். ஜீன் மாதம் வரை உங்களுடைய ராசிக்கு 10-ம் வீட்டிலேயே குரு நிற்பதால் அதுவரை சிறுசிறு அவமானங்களும், மன உளைச்சல்களும், எதிர்காலம் பற்றிய பயமும் இருக்கும். உங்களைப் பற்றி அவ்வப்போது நீங்கள் தாழ்த்திக் கொள்வீர்கள். சிலர் உங்களை குறைத்து மதிப்பிடுவார்கள். செலவுகளும் அதிகமாகும். தவிர்க்க முடியாத பயணங்களாலும் உடல் நிலை பாதிக்கும்.

அரசுக் காரியங்களில் அலட்சியம் வேண்டாம். அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளில் உடனுக்குடன் செலுத்துங்கள். சொத்து வரியை மறவாமல் செலுத்துங்கள். உங்கள் சொத்து சம்பந்தப்பட்ட பத்திரங்கள், ஆவணங்களையெல்லாம் பாதுகாப்பாக எடுத்து வையுங்கள். புறநகர் பகுதியில் வீட்டு மனை, காலி மனை வாங்கி வைத்திருப்பவர்கள் அவ்வப்போது சென்று அதை பார்த்து வருவது நல்லது. சிலர் அதை ஆக்ரமிக்கக் கூடும்.
 
ஏழரைச் சனியில் பாதச் சனி உங்களுக்கு நடைபெற்றுக் கொண்டிருப்பதால் நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும் கணவன்-மனைவிக்குள் இருக்கும் கசப்புணர்வுகளை சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். பண விஷயத்திலும் கறாராக இருங்கள். மற்றவர்களுக்காக சாட்சி கையப்பமிட வேண்டாம். பல், கண், காது வலி வந்துப் போகும். சிறுசிறு விபத்துகள் வரக்கூடும். லேசாக தலைச்சுற்றல் வரும். வாகனத்தை இயக்கும் போது அலைப்பேசியை தவிர்ப்பது நல்லது. மற்றவர்களை நம்பி பெரிய காரியங்களில் ஈடுபடாதீர்கள். 
 
இந்தாண்டு முழுக்க ராகு 12-ம் வீட்டில் நிற்பதால் தூக்கம் குறையும். திடீர் செலவுகள் வரும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகமாகும். 6-ல் கேது நிற்பதால் வழக்குகள் சாதகமாகும். எதிரிகள் அடங்குவார்கள். எதிர்ப்புகள் குறையும். பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய்ய வழி, வகைப் பிறக்கும். சமுதாயத்தில் பெரிய பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். அந்தஸ்து ஒருபடி உயரும். ஷேர் மூலமாக பணம் வரும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள்.
வியாபாரத்தில் கடையை விரிவுப்படுத்துவீர்கள். பண உதவியும் கிட்டும். பழைய பாக்கிகளை இங்கிதமாகப் பேசி வசூலிப்பீர்கள். வியாபாரம் சம்பந்தப்பட்ட வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். பங்குதாரர்களுடன் இருந்து வந்த மோதல்கள் விலகும். செல்வாக்குமிக்கவர்கள் பங்குதாரர்களாக வந்து சேருவார்கள்.

ஏற்றுமதி-இறக்குமதி, உணவு, எலக்ட்ரானிக்ஸ், கன்ஸ்டக்ஷன், ரியல் எஸ்டேட் வகைகளால் ஆதாயமடைவீர்கள். புதிய வாடிக்கையாளர்களின் வருகை அதிகரிக்கும். தொந்தரவு தந்த அனுபவமில்ல வேலையாட்களை நீக்கிவிட்டு நல்லவர்களை பணியில் அமர்த்துவீர்கள். ஜீலை மாதத்திலிருந்து பற்று வரவு உயரும். புதுக் கிளைகள் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் எவ்வளவு தான் உழைத்தாலும் நல்ல பெயர் இருக்காது. உங்களுடைய உழைப்பு மேலதிகாரியின் கவனத்திற்கு செல்லாமலேயே இருக்கும். இடையில் இருக்கும் அதிகாரிகள் உங்களை பகடைக் காயாக உருட்டுவார்கள்.

உங்களிடம் அதிக வேலை வாங்குவார்கள். ஆனால் மூத்த அதிகாரிகள் உங்களிடம் பாசமாக நடந்துக் கொள்வார்கள். ஜீன் மாதம் வரை உத்யோகஸ்தானமான 10-ம் வீட்டிலேயே குருபகவான் நிற்பதால் அதுவரை அலைச்சலும், சின்ன சின்ன அவமானங்களும், வேலை இழப்பும் ஏற்படும். தினந்தோறும் இன்றையதினம் வேலையில் நீடிப்போமோ, நீடிக்க மாட்டோமோ என்ற ஒரு கவலையும், சந்தேகமும் இருந்துக் கொண்டேயிருக்கும். ஜீலை முதல் குரு லாப வீட்டில் நுழைவதால் அதுமுதல் உத்யோகத்தில் நிம்மதி உண்டாகும். தொல்லை கொடுத்து வந்த அதிகாரி மாறுவார். எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். சம்பளமும், சலுகைகளும் கிடைக்கும்.
 
மாணவ-மாணவிகளே! ஏழரைச் சனி நடைபெறுவதால் விடைகளை எழுதிப் பாருங்கள். வேதியியல், கணிதப் பாடங்களில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. சமன்பாடுகள், சூத்திரங்களையெல்லாம் அடிக்கடி சொல்லிப் பார்த்து எழுதிப் பாருங்கள். கெட்ட எண்ணங்களை தவிர்க்கப்பாருங்கள்.கன்னிப் பெண்களே! பெற்றோரை தவறாகப் புரிந்துக் கொள்ளாதீர்கள். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். உயர்கல்வியில் வெற்றி உண்டு. சிலருக்கு அரசு வேலைக் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. ஜீலை மாதம் முதல் முன்னேற்றம் உண்டு. திருமணம் கூடி வரும்.ஆகமொத்தம் இந்த 2015ம் ஆண்டு முற்பகுதி உங்களுக்கு அலைச்சலையும், எதிர்ப்புகளையும், ஏமாற்றங்களையும் தந்தாலும் ஜீலை முதல் மகிழ்ச்சியையும், பணவரவையும், நிம்மதியையும் தரக் கூடியதாக இருக்கும்.

Maran:

கன்னி - 2015 ஆங்கில புத்தாண்டு பலன்கள்

ஆர்ப்பாட்டம் இல்லாமல் அமைதியாக சாதிப்பவர்களே! 3ஆம் வீட்டில் சனிபகவான் வலுவடைந்து நிற்கும் நேரத்தில் இந்தாண்டு பிறப்பதால் மனோபலம் கூடும். முக்கிய முடிவுகளெல்லாம் தன்னிச்சையாக எடுப்பீர்கள். பெரிய பொறுப்புகளுக்கெல்லாம் தலைமை தாங்குமளவிற்கு உங்களுடைய ஆளுமைத் திறனும் அதிகரிக்கும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகளும் கூடி வரும். பொது விழாக்கள், திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதைக் கிடைக்கும். இழுபறியாக இருந்து வந்த வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வாழ்க்கைத் தரம் உயரும். நவீன வாகனம் வாங்குவீர்கள். சிலர் புதுத் தொழில் தொடங்கும் அமைப்பு உருவாகும்.
 
உங்களுடைய ராசிக்கு லாப ஸ்தானத்தில் குரு நிற்கும் போது இந்த ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பதால் தொட்ட காரியங்கள் துலங்கும். தடைகளெல்லாம் நீங்கும். எதிர்பார்ப்புகள் நல்ல விதத்தில் முடிவடையும். வீடு, மனை வாங்குவீர்கள். சிலர் புது வீடு கட்டி கிரகப் பிரவேசமும் கோலாகலமாக செய்வீர்கள். வாகன வசதியும் பெருகும். எதிர்மறை எண்ணங்கள் விலகும். அரசு காரியங்கள் நல்ல விதத்தில் முடிவடையும். பெரிய பதவிகள், பொறுப்புகள் தேடி வரும். ஷேர் மூலமாகவும் பணம் வரும். படிப்படியாக குடும்ப வருமானமும் உயரும். சிலர் உத்யோகத்தில் இருந்துக் கொண்டே பகுதி நேரமாக வியாபாரம் தொடங்க வாய்ப்பிருக்கிறது.
 
பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய்வீர்கள். சொத்துகள் வாங்குவதன் பொருட்டு புது கடன் வாங்குவீர்கள். குறைந்த வட்டிக்கு கடன் கிடைக்கும். பிள்ளைகளால் சமூகத்தில் அந்தஸ்து ஒருபடி உயரும். விலை உயர்ந்த தங்க ஆபரணங்கள் வாங்குவீர்கள். மகளுக்கு திருமணம் முடியும். மகனுக்கும் நல்ல வாழ்க்கைத் துணை அமையும். ஜீலை மாதம் முதல் குரு உங்கள் ராசிக்கு 12-வது வீட்டில் மறைவதால் அநாவசியச் செலவுகள் அதிகமாகும். எதிர்பார்த்த பணம் சற்றே தாமதமாக வந்து சேரும். பயணங்கள் உண்டு.  உங்கள் ராசியிலேயே ராகு நிற்கும் நேரத்தில் இந்தாண்டு பிறப்பதால் தூக்கம் குறையும். கனவுத் தொல்லை அதிகமாகும். சில நேரங்களில் உணர்ச்சிவசப்பட்டு பேசுவீர்கள். வீண் சந்தேகத்தால் நல்லவர்களின் நட்பை இழந்துவிடாதீர்கள்.
 
சிலர் உங்களை தவறாக பேசுவதற்கும், செயல்படுவதற்கும் தூண்டிவிடுவார்கள். அப்படிப்பட்ட தூண்டுதல்களை நீங்கள் தவிர்ப்பது நல்லது. கூடாப்பழக்க வழக்கங்கள் உங்களை தொற்ற வாய்ப்பிருக்கிறது. லாகிரி, வஸ்துக்களை தவிர்க்கப்பாருங்கள். அலர்ஜி, இன்பெக்ஷன் வரக்கூடும். அடிக்கடி சோப்பு, ஷாம்பு, பாடி ஸ்பேர, வாசனை திரவியங்களையெல்லாம் மாற்றிக் கொண்டிருக்க வேண்டாம். உங்களின் யோகாதிபதியான சுக்ரன் 5-ம் வீட்டில் அமர்ந்திருக்கும் போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் கணவன்-மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். பிரிந்திருந்தவர்கள் ஒன்று சேருவீர்கள். குழந்தை பாக்யமும் கிடைக்கும். மனைவிவழியில் சில உதவிகள் உண்டு. மனைவிக்கு வேலைக் கிடைக்கும். பிதுர்ராஜ்ய சொத்துகள் கைக்கு வந்து சேரும்.
 
பாகப்பிரிவினை நல்ல விதத்தில் முடிவடையும். வீட்டில் கூடுதல் அறை அமைப்பது, கூடுதல் தளம் கட்டுவது போன்ற முயற்சிகள் பலிதமாகும். சமையலறை, படுக்கை அறையை நவீனமாக்குவீர்கள். உயர்தர மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். உங்களுக்கு அழகு, இளமைக் கூடும். எப்போதும் மலர்ந்த முகத்துடன் காணப்படுவீர்கள். உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். 5-ம் வீட்டிலேயே செவ்வாய் நிற்கும் போது இந்தாண்டு பிறப்பதால் பிள்ளைகளை அவர்கள் போக்கிலேயே விட்டுப் பிடிப்பது நல்லது. உங்களுடைய ஆலோசனைகளை அவர்கள் ஏற்றுக் கொள்வார்கள். அவர்களின் புதிய முயற்சிகளெல்லாம் வெற்றியடையும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். மகனுக்கு அயல்நாட்டில் நிரந்தர குடியிருப்பு உரிமை கிடைக்க வாய்ப்பிருக்கிறது.
 
உங்கள் ராசிக்கு 8-வது ராசியில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் தவிர்க்க முடியாத செலவுகள் அதிகமாகிக் கொண்டேப் போகும். அடிக்கடி விவாதங்களும் வரும். சிலர் உங்களை சீண்டிப் பார்ப்பார்கள். உணர்ச்சிவசப்பட்டு பேச வேண்டாம். ஆடம்பரச் செலவுகளை குறைக்கப்பாருங்கள். பெருமைக்காக செலவுகளை இழுத்துப் போட்டுக் கொள்ளாதீர்கள்.இந்தாண்டு முழுக்க கேது 7-ல் நீடிப்பதால் மனைவியுடன் சந்தேகத்தால் பிரச்னைகள் வெடிக்கும். அவருக்கு மாதவிடாய்க் கோளாறு வந்துப் போகும். மனைவிவழி உறவினர்களுடனும் நிதானமாக பேசுவது, பழகுவது நல்லது. சூரியன் சாதகமாக இருப்பதால் புகழ் பெற்ற புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள்.
 
வியாபாரத்தில் லாபம் உண்டு. 3-ம் வீட்டில் சனி நிற்பதால் தைரியமாக புது முதலீடுகள் செய்வீர்கள். பண உதவிகளும் கிடைக்கும். ஸ்டேஷனரி, கல்விக் கூடங்கள், போடிங், லாஜிங், கண்ஸ்டக்ஷன், டிரேவல் ஏஜன்சி வகைகளால் ஆதாயமடைவீர்கள். வேலையாட்கள் உங்களுக்கு முழு ஒத்துழைப்பு தருவார்கள். பங்குதாரர்கள் சில நேரங்களில் முரண்டு பிடித்தாலும் இறுதியில் உங்களுடைய கருத்துக்களை ஏற்றுக் கொள்வார்கள். வெளிநாட்டு தொடர்பான வியாபாரம் லாபம் தரும். அதாவது ஏற்றுமதி-இறக்குமதி வகைகளால் லாபம் உண்டு. மார்ச், ஏப்ரல் மாதங்களில் சிறுசிறு விபத்துகள், இழப்புகள், ஏமாற்றங்களும் வரக்கூடும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். அதிகாரிகள் பக்கபலமாக இருப்பார்கள். அவர்கள் உங்கள் ஆலோசனைகளையும் ஏற்றுக் கொள்வார்கள். சக ஊழியர்களும் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள்.
 
இயக்கம், சங்கம் இவற்றில் பெரிய பொறுப்பு, பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். எதிர்பார்த்த இடமாற்றம் கிட்டும். புது சலுகைகளும் கிடைக்கும். சம்பள பாக்கியும் கைக்கு வரும். உதவி உயர்வு உண்டு. அதிக சம்பளத்துடன் கூடிய வேறு நல்ல வாய்ப்புகளும் வரும்.மாணவ-மாணவிகளே! படிப்பிலும் முன்னேறுவீர்கள். விளையாட்டிலும் வெற்றி பெறுவீர்கள். வகுப்பாசிரியரின் அன்பும், பாராட்டும் கிடைக்கும். மாநில அளவில் அதிக மதிப்பெண் பெறுவீர்கள். கன்னிப் பெண்களே! காதல் விவகாரங்களில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும். நல்லவர்கள் அறிமுகமாவார்கள். பெற்றோரும் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். அவர்களுக்கு தகுந்தாற்போல் நீங்களும் கொஞ்சம் வளைந்து வருவீர்கள். வேலைக் கிடைக்கும். உங்கள் ரசனைக் கேற்ப நல்ல வரனும் அமையும். சிலர் அயல்நாடும் செல்வீர்கள்.இந்தப் புத்தாண்டு உங்களை சாதிக்க வைப்பதாகவும், எதிர்பாராத திடீர் யோகங்களையும் தருவதாகவும் அமையும்.

Navigation

[0] Message Index

[#] Next page

[*] Previous page

Go to full version