Author Topic: இலங்கையின் வரலாறு  (Read 13545 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: இலங்கையின் வரலாறு
« Reply #15 on: April 11, 2012, 01:43:34 AM »
குலோத்துங்க சிங்கையாரியன் 1256-1279

குலோத்துங்க சிங்கையாரியன்



குலோத்துங்க சிங்கையாரியன் யாழ்ப்பாணத்து ஆரியச் சக்கரவர்த்தி அரச வம்சத்தின் மூன்றாவது அரசனாவான். இவன் கி.பி 1256 ஆம் ஆண்டு முதல் 1279 ஆம் ஆண்டு வரை 23 ஆண்டுகாலம் யாழ்ப்பாணத்தை ஆட்சி செய்தான் என்று செ. இராசநாயகம் கணித்துள்ளார். இவன் குலசேகர சிங்கையாரியனின் மகனும், கூழங்கைச் சக்கரவர்த்தி என அழைக்கப்பட்ட முதல் ஆரியச் சக்கரவர்த்தியின் பேரனும் ஆவான்.

 

இவனும் தன் முன்னோரைப் போலவே வேளாண்மை வளர்ச்சிக்கான நடவடிக்கைகளை எடுத்ததாக யாழ்ப்பாண வைபவமாலை கூறுகிறது. தரிசு நிலங்களைத் திருத்தி வேளாண்மைக்கு ஏற்ற நிலங்களாக இவன் மாற்றியதாக இந் நூல் கூறுகிறது. இவனுடைய 23 ஆண்டு ஆட்சிக் காலம் அமைதிக் காலமாக விளங்கியதாகவும் கூறப்படுகின்றது.

 

இவனைத் தொடர்ந்து இவனது மகனான விக்கிரம சிங்கையாரியன் ஆட்சிப் பொறுப்பை ஏற்றான்.


                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: இலங்கையின் வரலாறு
« Reply #16 on: April 11, 2012, 01:44:56 AM »
விக்கிரம சிங்கையாரியன் 1279-1302

விக்கிரம சிங்கையாரியன்



விக்கிரம சிங்கையாரியன் யாழ்ப்பாணத்தை ஆட்சி செய்த ஆரியச்சக்கரவர்த்திகள் வம்சத்தைச் சேர்ந்த ஒரு அரசனாவான். இவ் வம்சத்தின் நான்காவது அரசனான இவன் கி.பி 1279 ஆம் ஆண்டிலிருந்து 1302 ஆம் ஆண்டு வரையான 23 ஆண்டுகள் யாழ்ப்பாண இராச்சியத்தை ஆண்டதாக செ. இராசநாயகம் கணிப்பிட்டுள்ளார்.

 

இவன் காலம் உள்நாட்டுக் குழப்பங்கள் மிகுந்த காலமாக இருந்தது. அக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த புத்த சமயத்தவரான சிங்களவருக்கும், இந்துத் தமிழருக்கும் கலகம் மூண்டது. இரண்டு தமிழர் சிங்களவரால் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து சிங்களவர் தலைவனுக்கும் வேறு 17 பேருக்கும் விக்கிரம சிங்கையாரியன் மரண தண்டனை விதித்ததாகவும் மேலும் பலரைச் சிறையில் அடைத்ததாகவும் யாழ்ப்பாண வைபவமாலை மூலம் அறியக் கிடைக்கின்றது. இதனால் பெருமளவு சிங்கள மக்கள் யாழ்ப்பாணத்தை விட்டு நீங்கினர். எனினும் விக்கிரம சிங்கையாரியன் இறக்கும் வரை அவனுக்குச் சிங்களவர்களால் தொல்லைகள் இருந்தே வந்தன.

 

விக்கிரம சிங்கையாரியனைத் தொடர்ந்து அவனது மகன், வரோதய சிங்கையாரியன் யாழ்ப்பாண அரசனாக முடு சூட்டிக் கொண்டான்.

                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: இலங்கையின் வரலாறு
« Reply #17 on: April 11, 2012, 01:45:48 AM »
வரோதய சிங்கையாரியன் 1302-1325

வரோதய சிங்கையாரியன்





வரோதய சிங்கையாரியன் யாழ்ப்பாணத்தை ஆண்ட ஆரியச் சக்கரவர்த்திகள் வம்சத்தைச் சேர்ந்த ஒரு அரசனாவான். புத்திக் கூர்மை உடையவனாயிருந்த இவன் கி.பி 1302 ஆம் ஆண்டுக்கும் 1325 ஆம் ஆண்டுக்கும் இடையில் யாழ்ப்பாணத்தை ஆண்டிருக்கக் கூடும் எனக் கூறப்படுகின்றது. இவன் விக்கிரம சிங்கையாரியனின் மகனாவான். தனது தந்தையின் ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற இனக் கலவரங்களுக்கான அடிப்படைகளைக் கண்டறிந்து உரிய நடவடிக்கைகளை எடுத்ததன் மூலம் நாட்டில் அமைதியை இவன் நிலை நிறுத்தியதாக யாழ்ப்பாண வைபவமாலை கூறுகிறது.

 

இவனைத் தொடர்ந்து இவனது மகன் மார்த்தாண்ட சிங்கையாரியன் அரசனானான்.
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: இலங்கையின் வரலாறு
« Reply #18 on: April 11, 2012, 01:47:17 AM »
மார்த்தாண்ட சிங்கையாரியன் 1325-1348

மார்த்தாண்ட சிங்கையாரியன்



யாழ்ப்பாணத்து ஆரியச் சக்கரவர்த்திகள் வம்சத்தைச் சேர்ந்தவனான மார்த்தாண்ட சிங்கையாரியன் கி.பி 1325 முதல் 1348 வரையான காலப்பகுதியை அண்டி யாழ்ப்பாணத்தை ஆட்சி செய்தான். இவன் முடி சூட்டிக் கொண்டபோது நாட்டில் அமைதி நிலவியது எனினும் இடைக் காலத்தில், யாழ்ப்பாண அரசின் பெருநிலப் பகுதியின் பகுதிகளில் அதிகாரம் செலுத்திவந்த வன்னியர் கலகம் செய்யலாயினர். இக் கலகங்களை மார்த்தாண்டன் இலகுவாக அடக்கினான்.

 

நாட்டில் கல்வி, வேளாண்மை ஆகிய துறைகளின் வளர்ச்சிக்காக நடவடிக்கைகளில் ஈடுபட்ட இவன் இரக்க குணம் கொண்டவனாக விளங்கினான். இவன் சுகவீனமுற்றுக் காலமானபோது நாட்டின் எல்லாத் தரப்பு மக்களும் இவனது இழப்புக்காக வர்ந்தினர்.

இவனை அடுத்து இவன் மகன் குணபூஷண சிங்கையாரியன் அரசனானான்
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: இலங்கையின் வரலாறு
« Reply #19 on: April 11, 2012, 01:48:02 AM »
குணபூஷண சிங்கையாரியன் 1348-1371

குணபூஷண சிங்கையாரியன்



குணபூஷண சிங்கையாரியன் யாழ்ப்பாணத்தை ஆண்ட ஆரியச் சக்கரவர்த்திகள் வம்ச அரசர்களுள் ஒருவன். இவன், நாட்டு மக்களின் பேரன்பைப் பெற்று விளங்கிய மார்த்தாண்ட சிங்கையாரியனின் மகனாவான். நாட்டைக் கல்வி மற்றும் தொழில் துறைகளில் வளர்ச்சியடையச் செய்ததன் மூலம், தனது தந்தையிலும் அதிகமாக, இவன் மக்களுடைய ஆதரவைப் பெற்றிருந்தான். உறுதியுடனும் நடுநிலைமையாகவும் ஆட்சி செலுத்திய இவன் முதிர்ந்த வயது வரை ஆட்சியில் இருந்தான். முதுமையின் இயலாமை காரணமாக இறக்கும் முன்னரே ஆட்சிப் பொறுப்பைத் தனது மகனான வீரோதய சிங்கையாரியனிடம் ஒப்படைத்தான்.
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: இலங்கையின் வரலாறு
« Reply #20 on: April 11, 2012, 01:49:50 AM »
வீரோதய சிங்கையாரியன் 1371-1394

வீரோதய சிங்கையாரியன்




வீரோதய சிங்கையாரியன் 14 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் யாழ்ப்பாணத்தை ஆண்ட அரசனாவான். இவன் ஆரியச் சக்கரவர்த்திகள் வம்சத்தைச் சேர்ந்தவன். இவனது ஆட்சிக்காலம் கி.பி 1371 முதல் 1394 வரையாகும் என செ. இராசநாயகமும், 1344 முத 1380 வரையாகும் என சுவாமி ஞானப்பிரகாசரும் கருதுகின்றனர்.

 

இவன் காலத்தில் வன்னியர்கள் சிங்களவர்களைக் கலகம் செய்யுமாறு தூண்டி விட்டனர். சிங்களவரை அடக்கிய வீரோதயன், வன்னியர்மீது படையெடுத்து அவர்களைத் தண்டித்தான்.

 

பாண்டியனுக்கு உதவி

அக் காலத்தில் தமிழகத்தில், பாண்டிநாட்டை சந்திரசேகர பாண்டியன் என்பவன் ஆண்டுவந்ததாகவும், அப்போது அந்நாட்டை எதிரிகள் தாக்கி அதனைக் கைப்பற்றிக்கொள்ள, பாண்டியன் தப்பி யாழ்ப்பாணத்துக்கு வந்ததாகவும் யாழ்ப்பாண வைபவமாலை குறிப்பிடுகின்றது. வீரோதய சிங்கையாரியன் நாட்டை இழந்த பாண்டியனுக்கு ஆதரவாகப் படைதிரட்டிச் சென்று அவனுக்குப் பாண்டிநாட்டை மீட்டுக் கொடுத்ததாகவும் அந்நூல் கூறுகிறது.

 

மேற்கூறிய நிகழ்வு தொடர்பாகத் தமிழகத்திலிருந்து சான்றுகள் எதுவும் இல்லை. எனினும், 13 ஆம் நூற்றாண்டுக் கடைசியிலும், 14 ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்திலும், பாண்டிநாட்டை ஆண்ட முதலாம் மாறவர்மன் குலசேகரனின் மக்களான வீரபாண்டியன், சுந்தர பாண்டியன் இடையேயான பூசல்கள், இது தொடர்பில் மாலிக் கபூரின் பாண்டிநாட்டுப் படையெடுப்பு என்பவற்றுடன், வைபவமாலைக் கூற்றைத் தொடர்புபடுத்திய முதலியார் இராசநாயகம், சுந்தர பாண்டியனையே வைபவமாலை சந்திரசேகர பாண்டியன் எனக் குறிப்பிட்டிருக்கக்கூடும் எனக் கருதுகிறார்.

 

வீரோதயன் மரணம்

வீரோதய சிங்கையாரியன் இளம் வயதிலேயே மரணமானான். சாப்பிட்டுவிட்டுப் படுக்கைக்குச் சென்ற இவன் இரவில் படுக்கையிலேயே மரணமானான். இதனைத் தொடர்ந்து இவன் மகனான செயவீர சிங்கையாரியன் மிக இளம் வயதிலேயே அரசனாக முடி சூட்டிக் கொண்டான்.



                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: இலங்கையின் வரலாறு
« Reply #21 on: April 11, 2012, 01:51:06 AM »
செயவீர சிங்கையாரியன் 1394-1417

செயவீர சிங்கையாரியன்






செயவீர சிங்கையாரியன் யாழ்ப்பாணத்து ஆரியச் சக்கரவர்த்திகள் வம்சத்தில் வந்த ஒரு அரசனாவான். இவனது தந்தையான வீரோதய சிங்கையாரியன் எதிர்பாராமல் மரணமானதைத் தொடர்ந்து இளம் வயதிலேயே முடி சூட்டிக் கொண்டவன் இவன்.

 

கண்டியரசனுடன் போர்

செயவீரன், தன் காலத்தில் கண்டியை ஆண்ட புவனேகபாகு என்பவனுடன் போரிட்டு அவனை வென்றதாக யாழ்ப்பாண வைபவமாலை கூறும். பின்னர் பராக்கிரமபாகு என்பவன் பாண்டியன் முன்னிலையில் திறை தருவதாக ஒப்பந்தம் செய்துகொண்டு இழந்த நாட்டைப் பெற்று ஆட்சி செய்து வந்தான். இவனும் இவனுக்குப் பின் வந்தவர்களும் செயவீரன் காலம் வரையில் திறை செலுத்தி வந்தனர் என்பது வைபவமாலையின் கூற்று.

 

செயவீரன் மரணம்

நீண்டகாலம் வெற்றிகரமாக ஆட்சி புரிந்த செயவீரன், காலமானபின் இவன் மகனான குணவீர சிங்கையாரியன் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டான்.
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: இலங்கையின் வரலாறு
« Reply #22 on: April 11, 2012, 01:52:51 AM »
சங்கிலி குமாரன் 1617-1620

சங்கிலி குமாரன்




யாழ்ப்பாண அரசின் கடைசி அரசன் எனப் பலராலும் குறிப்பிடப்படும் சங்கிலி குமாரன் யாழ்ப்பாணத்தை ஆண்ட கடைசி அரசனின் சிறுவனான வரிசுக்காகப் பகர ஆளுநராக இருந்தவனாவான். தொடக்க காலங்களில் யாழ்ப்பாண வரலாறு எழுதியவர்கள் இவனையும், இவனுக்கு ஏறத்தாழ ஒரு நூற்றாண்டுக்கு முன் ஆண்ட சங்கிலி என்பவனையும் ஒருவர் எனக்கருதி மயங்கினர். 18 ஆம் நூற்றாண்டில் யாழ்ப்பாண வைபவமாலை எனும் பெயரில் யாழ்ப்பாண வரலாறு எழுதிய மயில்வாகனப் புலவர் பெயர் ஒற்றுமையால் குழம்பிப் போலும், இடையில் ஆண்ட பல அரசர்களைப் பற்றிக் குறிப்பிடாமலே விட்டுவிட்டார்.

1591 ஆம் ஆண்டில் தளபதியான அந்தரே பூர்த்தாடு என்பவன் தலமையில் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய போத்துக்கேயப் படைகள் யாழ்ப்பாண அரசனைக் கொன்றுவிட்டு எதிர்மன்னசிங்கம் என்பவனை அரசனாக்கினர். எதிர்மன்னசிங்கம் இறந்தபோது அரசுக்கு வாரிசான அவனது மகன் குழந்தையாக இருந்தான். இதனால், அரசனின் மச்சினனான அரசகேசரி என்பவனைப் பகர ஆளுநராக நியமித்தனர். இதனை விரும்பாத சங்கிலி குமாரன், அரசகேசரியைக் கொல்லுவித்து நிர்வாகத்தைத் தான் ஏற்றுக் கொண்டதாகக் கூறப்படுகிறது. சங்கிலி குமாரன் தொடக்கத்திலிருந்தே போத்துக்கீசரின் நடவடிக்கைகளை எதிர்த்து வந்தான். போத்துக்கீசரிடம் தாராளமாக நடந்துகொண்ட அரசன் எதிர்மன்னசிங்கம் தனது இறுதிக்காலத்தில் பாதிரிமாரின் வற்புறுத்தலுக்கு இணங்கிக் கிறிஸ்தவ மதத்தில் சேர உடன்பட்டதாகவும், எனினும் அவர்களின் முயற்சியைச் சங்கிலி குமாரனே தொடர்ந்து முறியடித்து வந்ததாகவும், குவைறோஸ் பாதிரியார் குறிப்பிட்டுள்ளார்.

 

சங்கிலி குமாரனின் மறைவு

சங்கிலி குமாரன் அந்நியரான போர்த்துக்கேயரின் ஆட்சியை தீவிரமாக எதிர்த்தான். இதன்முடிவாக போர்த்துக்கேயர் கொழும்பில் இருந்தும், இந்தியா கோவாவில் இருந்தும் 5000 போர் வீரர்கள் கொண்ட படையணிகளை அனுப்பி யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றினர். சங்கிலி குமாரனை கைதுசெய்து கொழும்புக்கு கொண்டுச்சென்றப் போர்த்துக்கேயர், பின்னர் இந்தியா கோவாவிற்கு கொண்டுச்சென்று அங்கே 1621 ஆம் ஆண்டு தூக்கிலிட்டனர்.

 

சங்கிலி குமாரனின் பிள்ளைகள்

சங்கிலி குமாரனின் மூன்று பெண்பிள்ளைகளும் போர்த்துக்கேயரினால் கோவா கொண்டுச்செல்லப்பட்டு, போர்த்துகேய அதிகாரிகளினால் உதவியுடன் கல்வி கற்பிக்கப்பட்டுள்ளது. இவர்களுள் சங்கிலி குமாரனின் மூத்தப் பெண் பிள்ளையான போர்த்துக்கேய அரச குடும்பத்தில் திருமணம் முடித்துக்கொண்டாள். இவளின் பெயர் சொரர் மறியா டா விஸ்டாகோ (Soror Maria da Vistaco) ஆகும். இவள் 1637 ஆண்டளவில் கோவாவில் ஒரு முக்கிய அரசாங்கப் பதவியில் இருந்துள்ளதாகவும் அறியப்படுகின்றது. மேலும், இது சம்பந்தமான ஆவணம், யாழ்ப்பாண அரசனுடைய (King of Jaffna apataao (Ceylon)) மகள் இவள் எனவும் குறிப்பிடுகின்றது
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: இலங்கையின் வரலாறு
« Reply #23 on: April 11, 2012, 01:55:34 AM »
தம்பதனியா இராசதானி வம்சம்


மூன்றாம் விஜயபாகு

மூன்றாம் விஜயபாகு (கி.பி. 1232 - 1236 ஆட்சிக்காலம்) தம்பதேனியாவைத் தலைநகராகக் கொண்டு இலங்கையில் ஆட்சி செய்தவன்.தமிழ் மக்கள் வாழ்ந்த வன்னிப் பிரதேசங்களுடன் ஓரளவாயினும் தொடர்புடைய இவன் ஜந்து வருடங்கள் மட்டுமே ஆட்சி புரிந்தான் என்பது குறிப்பிடத்தக்கது. மாகோன் இராஜரட்டையை ஆட்சி செய்த காலத்தில் மூன்றாம் விஜயபாகு மாயரட்டையில் உள்ள சீகள வன்னியை அடக்கி ஆட்சிபுரிந்தான் எனப் "பூஜாவலிய" கூறுகின்றது. மேலும் இவன் வன்னி அரசன் என்ற நிலையை அடைந்து மாயரட்டையில் ஆதிக்கம் செலுத்தியவன் என "சூளவம்சம்" கூறுகின்றது.
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: இலங்கையின் வரலாறு
« Reply #24 on: April 11, 2012, 01:57:27 AM »
நான்காம் விஜயபாகு 1270

நான்காம் விஜயபாகு





போசத் விஜயபாகு (கி.பி. 1271 - 1273) என அழைக்கப்பெற்ற நான்காம் விஜயபாகு தம்பதெனியாவிலிருந்து ஆட்சி புரிந்த மன்னனாவான். இவன் அனுராதபுரத்திற்குச் சென்றபோது,வன்னியர் இவனைச் சேவித்துத் திறை செலுத்தியதாகச் "சூளவம்சம்" கூறுகின்றது.மூன்று வருடங்கள் இவன் ஆட்சி புரிந்தவன் என்பது குறிப்பிடத்தக்கது.
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: இலங்கையின் வரலாறு
« Reply #25 on: April 11, 2012, 01:58:12 AM »
ஐந்தாம் விஜயபாகு 1335

ஐந்தாம் விஜயபாகு





சவுலு விஜயபாகு (கி.பி. 1335 - 1347) என்றழைக்கப்பட்ட ஜந்தாம் விஜயபாகு கம்பளையில் இருந்து ஆட்சி புரிந்தவனாவான். 13 ஆண்டுகள் ஆட்சி புரிந்த இவனது ஆட்சிக்காலம் மாகோன் காலத்திற்குப் பின் தங்கியதாகும்.


                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: இலங்கையின் வரலாறு
« Reply #26 on: April 11, 2012, 01:59:15 AM »
பொலன்னறுவை இராசதானி வம்சம்


முதலாம் விஜயபாகு

ஸ்ரீ சங்கபோதி (கி.பி.1055 - 1110 ஆட்சிக்காலம்) என்னும் பெயரைப்பெற்றிருந்த முதலாம் விஜயபாகு இலங்கை வரலாற்றில் நீண்டகால ஆட்சியைக் கொண்டிருந்தான்.தன் ஆட்சிக் காலம் முழுவதுமாகத் தமிழருக்கெதிராகப் போர் தொடுத்த இவனால் சோழ மன்னர்கள் பலர் இலங்கையிலிருந்து துரத்தப்பட்டனர் இத்தகைய காரணத்தினால் முதலாம் விஜயபாகு சிங்களவர்களால் போற்றப்பட்டான்
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: இலங்கையின் வரலாறு
« Reply #27 on: April 11, 2012, 02:00:08 AM »
விஜயபாகு II 1186

இரண்டாம் விஜயபாகு




பண்டித விஜயபாகு (கி.பி. 1186 - 1187 ஆட்சிக் காலம்) எனப்பெயர் பெற்ற இரண்டாம் விஜயபாகு பொலநறுவையைத் தலைநகராகக் கொண்டு இலங்கையை ஆட்சி செய்தவன்.

                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: இலங்கையின் வரலாறு
« Reply #28 on: April 11, 2012, 02:01:15 AM »
கண்டி நாயக்கர் வம்சம்


ஸ்ரீ விஜய ராஜசிங்கன்

ஸ்ரீ விஜய ராஜசிங்கன் 1739 தொடக்கம் 1747 ஆம் ஆண்டுவரை இலங்கையின் கண்டி அரசை ஆண்டவன். தென்னிந்திய மதுரை நாயக்கர் மரபில் பிறந்த இவனே கண்டி நாயக்கர் மரபை உருவாக்கியவன் ஆவான். கண்டி அரச மரபின் கடைசி அரசனான ஸ்ரீ வீர பரக்கிரம நரேந்திரசிங்கன் மதுரை நாயக்க மரபைச் சேர்ந்த பெண்கள் இருவரை மணம் புரிந்திருந்தான். இருவருக்கும் பிள்ளைகள் இல்லை. இவனது இன்னொரு மனைவி மாத்தளைப் பகுதியின் பிரபுத்துவ குடும்பத்தைச் சேர்ந்தவள். அவளுக்கு ஒரு குழந்தை பிறந்ததாயினும் இளம் வயதிலேயே இறந்துவிட்டது. அரசனுக்கு அவனது ஆசைநாயகி ஒருத்திமூலம் ஒரு மகன் இருந்தான். அவனது பிறப்புக் காரணமாக அவனுக்கு அரசுரிமை கிடையாது. எனவே கண்டியின் மரபுரிமை வழக்கின்படி தனது மூத்த அரசியின் தம்பியைத் தனது வாரிசாக அரசன் தெரிந்தெடுத்தான். இவன் தனது தமக்கையார் மணமுடித்தகாலம் முதலே கண்டி அரண்மனையிலேயே வளர்ந்தவன்.

 

1739 இல் நரேந்திரசிங்கன் காலமானான். அரசியின் தம்பி, ஸ்ரீ விஜய ராஜசிங்கன் என்னும் பெயருடன் சிம்மாசனம் ஏறினான்.இவன் ஒரு பண்பாடுள்ள அரசனாக விளங்கினான். சைவ சமயத்தைச் சேர்ந்தவனாக இருந்தபோதிலும், கண்டியின் அரச மதமாக விளங்கிய புத்த சமயத்தின் வளர்ச்சியில் பெரும் அக்கறை காட்டினான். ஆளுயரப் புத்தர் சிலைகளை படுத்த, நின்ற மற்றும் இருந்த நிலையில், நாட்டின் பல பகுதிகளிலும் உள்ள மலைக் குகைகளில் செதுக்குவித்தான்.இவனது காலத்தில் இலங்கையில் கரையோரப் பகுதிகளை ஆண்டுவந்த ஒல்லாந்தருடன், வணிகம் தொடர்பில் பல பிணக்குகள் ஏற்பட்டன. இவன் பல கிறிஸ்தவ தேவாலயங்களை இடித்தான். போத்துக்கீசர், ஒல்லாந்தர் ஆகியோருக்கு எதிராகக் கடும் நடவடிக்கைகளையும் எடுத்தான்.
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: இலங்கையின் வரலாறு
« Reply #29 on: April 11, 2012, 02:02:54 AM »
ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் (1798 - 1815)

ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன்



ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் (1780 - ஜனவரி 30, 1832) இலங்கையின் கண்டி அரசை ஆண்ட கடைசி மன்னன் ஆவான். முன்னைய அரசன் ஸ்ரீ ராஜாதி ராஜசிங்கன் பிள்ளைகள் இன்றி இறந்தபோது இவன் சிம்மாசனம் ஏறினான். இறுதியாகக் கண்டிப் போரில் 1815ல் பிரித்தானியரால் தோற்கடிக்கப்பட்ட இவன் சிறை பிடிக்கப்பட்டான்.

இவன் தமிழ் நாட்டின் நாயக்கர் வம்சத்தில் தோன்றிய ஒரு இளவரசன் ஆவான். இவனது இயற்பெயர் கண்ணுசாமி. இவன், இவனுக்கு முதலில் நாட்டை ஆண்ட ஸ்ரீ ராஜாதிராஜ சிங்கனின் மருமகன் ஆவான். முடிசூட்டலின்போது ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் என்னும் சிம்மாசனப் பெயருடன் கண்ணுசாமி முடி சூட்டப்பட்டான்.


அரசுரிமைப் போட்டி

எனினும், ராஜாதி ராஜசிங்கனின் வாரிசு உரிமைக்காக அவனது அரசியின் தம்பியும் போட்டியிட்டான். உண்மையில் அவனுக்கே கூடிய உரிமை இருந்ததாகக் கருதப்படுகிறது. ஆனால், பிலிமத்தலாவை என்னும் கண்டியரசின் அதிகார் எனப்படும் முதலமைச்சன், கண்ணுச்சாமியை அரசனாக்கினான். கண்டியரசைத் தானே கவர்ந்து கொள்ளும் நோக்கிலேயே பிலிமத்தலாவை இவ்வாறு செய்ததாகவும் கருத்து நிலவுகிறது. பதவியேற்ற ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் பல சதி முயற்சிகளைச் சந்திக்க வேண்டியிருந்தது. இவனது ஆட்சிக்காலம் இலங்கை வரலாற்றின் மிகவும் குழப்பமான காலங்களில் ஒன்றாகும்.


உள்முரண்பாடுகள்
பிலிமத்தலாவையின் சதி:


இவனது காலத்தில் இலங்கையின் கரையோரப் பகுதிகளை ஒல்லாந்தரிடம் இருந்து கைப்பற்றிய பிரித்தானியர், கண்டி அரசில் தலையிடவில்லை. ஆனால், பிலிமத்தலாவையோ பிரித்தானியருடன் மறைமுகத் தொடர்புகளை வைத்துக்கொண்டு கண்டியரசனைப் பிரித்தானியருக்கு எதிராகத் தூண்டிவிடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டான். இதனால் பிரித்தானியர் கண்டியரசைக் கைப்பற்றுவதற்கான காரணம் கிடைக்கும் என அவன் கருதினான். கரையோர மாகாணங்களில் உறுதியான நிலையில் இருந்த பிரித்தானியருடன் போரில் ஈடுபடும்படி பிலிமத்தலா ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கனைத் தூண்டி விட்டான். 1803 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 22 ஆம் தேதி போர் அறிவிக்கப்பட்டது. பிரித்தானியர் எதிர்ப்புக்கள் இன்றிக் கண்டிக்குள் நுழைந்தனர். கண்டி அரசன் தப்பி ஓடினான். எனினும், அதிகார் பிரித்தானியப் படைகளைத் தோற்கடித்துக் கண்டியரசனை மீண்டும் பதவியில் அமர்த்தினான். பிலிமத்தலாவை இரண்டு முறை அரசனுக்கு எதிராகச் சதிசெய்து நாட்டைக் கவர முயன்றது கண்டுபிடிக்கப்பட்டாலும் அவன் மன்னிக்கப்பட்டான். மூன்றாவது தடவையும் அவன் பிடிபட்டபோது அவன் கொல்லப்பட்டான்.


எகலப்பொலையின் சதி

பிலிமத்தலாவைக்குப் பதிலாக அவனது மருமகனான எகலப்பொலை அதிகாராக நியமிக்கப்பட்டான். அவனும் தனது மாமனைப் போலவே அரசனுக்கு எதிராகச் செயற்பட்டுக் குழப்பங்களைத் தூண்டி விட்டான். இக்குழப்பங்கள் அடக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து எகலப்பொலை தப்பிக் கொழும்புக்கு ஓடிப் பிரித்தானியருடன் சேர்ந்து கொண்டான்.


கண்டி கைப்பற்றப்படல்

இவனது தூண்டுதலின் பேரில், பிரித்தானியர் மீண்டும் 1815 பெப்ரவரி 10 ஆம் தேதி கண்டிக்குள் நுழைந்தனர். மார்ச் 2 ஆம் திகதி கண்டி ஒப்பந்தம் என இன்று வழங்கப்படும் ஒப்பந்தத்தின் மூலம் கண்டி அரசு பிரித்தானியருக்குக் கொடுக்கப்பட்டது. பிடிபட்ட ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் தென்னிந்தியாவில் உள்ள வேலூர்க் கோட்டைக்கு அனுப்பப்பட்டான் அங்கே பிரித்தானியரால் கொடுக்கப்பட்ட சிறிதளவு பணத்தில் இரு மனைவியருடன் வாழும் நிலை ஏற்பட்டது. 1832 ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் நாள் தனது 52 ஆவது வயதில் அவன் காலமானான்