FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது => Topic started by: Forum on July 01, 2019, 10:55:05 AM

Title: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 223
Post by: Forum on July 01, 2019, 10:55:05 AM
ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 223
இந்த களத்தின்இந்த  நிழல் படம்  FTC Team  சார்பாக   வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

(http://friendstamilchat.org/newfiles/0Latest/OU/223.jpg)
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 223
Post by: Mr.BeaN on July 01, 2019, 12:19:22 PM
பரந்து விரிந்த கடல்பரப்பை
பகட்டாய் சுமக்கும் மணல்பரப்பில்
பந்து ஒன்றை மட்டை கொண்டு 
பாங்கோடு அடித்து மகிழ்கின்றாரே

சுட்டெரிக்கும் சூரியனும.
சுகமாய் வீசும் இளம் காற்றும்
எல்லாம் எமக்கொன்றே என்று
தம்மில் ஏந்தி பொழுதை கழிக்கின்றாரே

காலை மாலை பேதமில்லை
கடிவாளங்கள் ஏதுமில்லை
இளவம் பஞ்சாய் மணலும் இருக்க
இன்பம் சேர்த்தே இருக்கின்றாரே


குயிலின் கூவல் செவி விழவில்லை
மயிலின் நடனம் மனம் தொடவில்லை
மகிழ்ச்சி என்றும் மனதை பொறுத்தே
என்றே சிறாரும் கற்பிக்கின்றாரோ??

    நட்புடன்   உங்கள்   பீன்....
[/b][/color][/size]
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 223
Post by: KuYiL on July 01, 2019, 12:57:43 PM
இன்று அடிக்கும் என் பந்து ஒரு நாள் கடல் தாண்டும் !

புதிதாய்           முளைத்த
ஆசை              அரும்பு !

ஒரு பந்து           பதினோரு பேர்
சுற்றிலும்            மனித கடல்
அன்றைய             செய்தி தாள்
தலைப்பு               செய்தியாய்
எப்போதும்            இடம் பிடிக்கும்
மட்டைபந்து           விளையாட்டு
அந்த காலத்து         கோலிக்குண்டு
கில்லியும்               தாண்டா இந்த
மட்டபந்து னு          மூக்கு கண்ணாடி
துடைச்சு பாக்குற     தாத்தா
எப்போதும்              எரிந்து விழும்
அம்மாகூட              ஆசையாய்
கேட்பாள்                என்னடா
இன்னிக்கு              டோனி helicopter six ஆஹா
கல்யாணநாளுக்கு     லீவு போடாத அப்பா
cricket match        அன்னிக்கு officekku
suffering from       fever than ...
beautytips             பாக்குற அக்கா
viraat koli              வந்தா மட்டும்
mask போட்ட           face ஓட
வந்து                      பாக்குற கிரிக்கெட்
இந்தியா                  பாக்கிஸ்தான்  over அ
war  அ                   பாக்குற   அண்ணா
இன்னிக்கும்               நாங்க தாண்டா
ஜெயிப்போன்னு           வெடி வாங்கி
அன்னிக்கு மட்டும்       5star வாங்கி
கொடுக்கிற              மாமா
இந்தியா                  win பண்ணுச்சுனா
treata                    homework
கொடுக்காத             வாத்தியார்
வாடா நாம               friend னு
பேசிசிரிக்கிற            பக்கத்துக்கு  benchபையன்
எப்படி                     ஒரு பந்து பதினோரு பேர்
உலகத்தையே           மறக்க    அடிக்குறாங்களே
பசியோ                   தூக்கமோ
பஞ்சா                     போயிடுதே
என்ன                     தாண்டா இருக்கு
அந்த                     game la
அடிச்சுதான்            பாக்குறேன்டா!
38 inch bat           எல்லாம் வேண்டாம்
இந்த பிளாஸ்டிக்      bat போதும்
என் first               innings தொடங்க
Oval London        Pitch
எல்லாம்                எனக்கு வேண்டாம்
Merina beach      தாண்டா எனக்கு Pitchu.
உலகமே              கொண்டாடுற
கிரிக்கெட்டு          நாளைக்கு
என்னை               கொண்டாடுற
நாள் வரும்டா.....

இன்று அடிக்கும் என் பந்து ஒரு நாள் கடல் தாண்டும்





Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 223
Post by: Unique Heart on July 02, 2019, 08:29:22 PM
Cricket .  இதை  கண்டுபிடித்தது வேண்டுமானால்
இங்கிலாந்து எனும்  நாடாக இருக்கலாம்,
 ஆனால்  இதை அதிகம் விரும்புபவர்கள்
 நம் மக்களே !

சிறியவர், பெரியவர் என்ற பாகுபாடின்றி
அணைத்து சாராரையும்,
கவர்ந்ததும், இணைத்தும்
இந்த கிரிக்கெட் எனும் விளையாட்டு.

தரிசு நிலமும்,  விளையாடும் மக்களின்
வியர்வை  துளி  கண்டு
மகிழ்ச்சி  கொள்ளும்.

கிரிக்கெட் விளையாட்டினால்
மகிழ்ச்சி கொண்டது மக்கள்  மட்டுமல்ல.
அவ்விளையாட்டு  மைதானமும் தான்.

காரணம் துயரத்தில் இருந்த இடத்தையும்
துப்புறவு  பணிகொண்டு
சுத்தம் செய்ததும் இவ்விளையாட்டிற்காகவே..

நாட்டிற்காக நம் வீரர்கள் விளையாடி சேர்க்கும்
ஒவ்வொரு வெற்றியிலும்,
என் தேசமே உச்சத்தில்  நின்றது போலான மகிழ்ச்சி.


யாரென்று  தெரியாதவரையும்,
உறவாளனாய்  மாற்றியதும்
இவ்விளையாட்டு தான்.

விளையாட  எண்ணிலடங்கா விளையாட்டுக்கள் இருப்பினும்,
விளையாடுபவரையும்,  விளையாட்டை காண்போரையும்
அதிகம்  மகிழ்விப்பதும் இதுவே...

இப்படிக்கு.
உங்களனின் உறவாளனாய் தொடரும் கிரிக்கெட்......

@ MNA @

Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 223
Post by: JeGaTisH on July 03, 2019, 02:50:10 AM
பறவை போல பறந்து விரிந்த உலகில்
சிறுவன் ஒருவன் தன் கனவுகளை சுமந்து
கவலைகளாக வரும் பந்தை அடிக்கிறான் !

அச்சிறுவன் மனதில் ஏகப்பட்ட கனவுகள்
அதை அப் பறவை போல சுமந்து செல்கிறது வாழ்க்கை !

வாழ்க்கையில் உள்ள சுகம் துக்கம் கூட ஒரு பந்து போல
வாழ்க்கையின் அங்கங்களாக சுற்றியுள்ளது
அவைகளை தட்டிவிடனும் தூசுபோல !

நீ ஏறும் ஏணியில் படிகலோ பல
ஆனால் அதில் ஓன்று உன்னை சறுக்கும் !
அதையும் தாண்டிச் சென்று நீ பறிப்பதே
வெற்றி கனியாக மாறும் !

அதுபோல நீ போகும் தூரம்
வாழ்வின் எல்லையானாலும் !
நீ தட்டி பறிக்க வேண்டிய கனி
வாழ்வில் கொண்ட லட்சியத்தை !


அன்புடன்  SINGLE சிங்க குட்டி  ஜெகதீஷ் !
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 223
Post by: joker on July 03, 2019, 01:44:48 PM
இந்த நாள் எப்போ வருமோ
என்று தான் காத்திருந்தேன்

இன்று
வீட்டில் அம்மா இல்லை
விருப்பம் போல
மட்டைப்பந்து
விளையாடலாம்

யோசிக்கும்போதே
ஆனந்தம் ஒட்டிக்கொள்கிறது

பக்கத்துக்கு வீட்டிலிருக்கும்
என் நண்பனையும்
அழைத்தேன்

ஒரு அணி தேர்வு செய்து
டாஸ் போடப்பட்டது
அதிர்ஷ்டமான நாள்
நான் வென்றேன்

முதலில்
நாங்கள் விளையாடுவதாய்
தேர்வு செய்து
நானே முதலில் இறங்குவதாய்
முடிவு செய்தேன்

எவ்வளவு நாட்கள்
ஆயிற்று விளையாடி
இந்த அம்மா ஏனோ
என்னை விளையாடவே
விடமாட்டேன்கிறாள்

மட்டையை பிடித்து
நிற்க
எதிரணியின் பந்துவீச்சாளர்
ஓடி வருகிறார்
முதல் பந்தை எறிய

விளையாடி ரொம்ப
நாட்களாகிவிட்டதால்
கைகள் நடுங்கியது
ரன் அடிக்கமுடியவில்லை

சுற்றமும் என்னையே
பார்ப்பதாய்
உணர்ந்தேன்

ஐந்து பந்தும்
வீணடித்தேன்
கடைசி பந்து
வேகமாய் எறியபட்ட பந்து
என்னைநோக்கி வர

மட்டையை சுழற்றினேன்
பந்து மேலே சென்றது
4 ஆ 6 ஆ
இல்லை
எல்லை கோட்டை
நெருங்கும் நேரம்
பிடித்து விடுவானோ
குழப்பத்தில் இருக்க

முதுகில் "டப் " என்று
ஒரு அடி
பின்னால் திரும்பினால்
நிற்பது
என் அம்மா

" டேய் எத்தனை முறை
சொல்லிருக்கேன்
என் தொலைபேசி எடுத்து
விளையாடாதே என்று"

நீயாவது புத்திமதி சொல்லக்கூடாதா
உன் நண்பனுக்கு என்று
நண்பனுக்கும்  சேர்ந்தே கிடைத்தது
என் அம்மாவின் திட்டு

இனி எப்போ வருமோ
இது போல ஒரு நாள்
காத்திருக்கிறேன்


*****ஜோக்கர் *******

Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 223
Post by: RishiKa on July 03, 2019, 02:37:08 PM

இதுபோல் ஒரு நாளுக்காக
நான் காத்துஇருந்தேன் !

வாழ்க்கை விளையாட்டுக்கும்
மட்டை பந்து விளையாட்டுக்கும்
சம்பந்தம் உண்டு !
யுத்தத்திற்கும் விளையாட்டுக்கும்
வித்தியாசமில்லை !

ஜீவ சக்தியும் ஜட சக்தியுமாய்
இணைந்து விளையாடும் !
உயிரின் ஆதாரமாய் ..
கடவுள் ஆடும் விளையாட்டு !

வாழ்க்கையை யுத்தமே எண்ணி
ஒவ்வோரிடமும்     தர்க்கத்தை
கொண்டால் தோல்வியே
என்றும் மிஞ்சும் !


கடவுளே நம்மை விளையாட்டாய்
படைத்தது வேடிக்கை பார்க்க ...நாம்
ஏன் அதை யுத்தமாய் காண வேண்டும்?

வாருங்கள் விளையாடுவோம்
வாழ்க்கை விளையாட்டை மகிழ்ச்சியாக!

வெற்றியும் தோல்வியும்  இங்கே
சமநிலை தான் !
அதை பக்குவமாய் விளையாடினால்
என்றும் அமர் நிலைதான் !
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 223
Post by: சாக்ரடீஸ் on July 04, 2019, 10:58:48 AM
கிரிக்கெட்

மைதானங்களை பிளாட் போட்டு வித்தாச்சு
குழந்தைகளும் வீட்டுக்குள்ள  முடங்கியாச்சு
கிரிக்கெட் விளையாட்டை மொபைலிலே அடைச்சாச்சு 
அதிகாலை விளையாட்டெல்லாம் எங்கயோ போயாச்சு
ஆகமொத்தத்துல எல்லாமே நாசமா போச்சு

எதுஎப்படியோ 90's கிட்ஸ்க்கு ஒரு அழகான காலம் இருக்கு 

அது ஒரு கனா காலம்

பல்லுக்கூட  வெளக்காம
பேட்டும் கையுமா அலையுது
இதெல்லாம் எங்க உருப்புட போகுது
இது அப்பாவின் அன்புமழை

அது ஒரு கனா காலம்

உச்சி வெயிலுல
ரொம்ப நேரம் வெளையாண்டா
கருத்து போய்டுவடா செல்லக்குட்டி
அப்பறம் யாரும் பொண்ணு தரமாட்டாங்க
இது அம்மாவின் பாசமழை

அது ஒரு கனா காலம்

இவரு பெரிய சச்சினு
நாய்க்கு பாலே புடிக்க தெரியாது
இவங்கெட்டகேட்டுக்கு 700ரூபா  பேட்டு
இந்த அப்பாவுக்கு அறிவே இல்ல
இது அக்காவின் பொறாமை பேச்சு

அது ஒரு கனா காலம்

மச்சி கைலயே பால் இருக்குடா
கேட்டா நோ பால்னு சொல்றான்
ஓவருக்கு ஆறுபால்னு சொல்றான்
ஒரே பால்ல போடுறான்
இது நண்பர்களின் மொக்கை பேச்சு

அது ஒரு கனா காலம்

கள்ளிச்செடியை வெட்டிவீசி மைதானம் உருவாக்கி
தண்ணீர் தெளித்து தளம் அமைத்து
பசியை துறந்து
வெயிலை மறந்து
கவலைகளை  தொலைத்து
மட்டையை பிடித்து பந்தை விரட்டி
விளையாடும் பொழுது
எத்தனை இன்பங்கள் கண்டு வந்திருப்போம்
மீண்டும் கிடைக்குமா அந்த பருவம்

அது ஒரு கனா காலம்

அந்தகாலமெல்லாம் 90s கிட்ஸ்களின் பொன்னான காலம்
90's கிட்ஸாக இருப்பதில் பெருமைக்கொள்வோம்

ஜாதி, மதம், மொழியால்
பிரிந்திருக்கும் நாம்
இன்றைய சமூகசூழலில்
ஒன்றாய்  இருப்பது கிரிக்கெட்டில் மட்டுமே
விளையாட்டில் எல்லாவற்றையும் மறந்து
ஒற்றுமையாய் இருப்பதுபோல்
நிஜவாழ்விலும் ஜாதிமத மொழி வேற்றுமைகளை மறந்து
ஒன்றாக வாழ்வோமாக !!
அடுத்த தலைமுறைகளுக்கு நல்லதோர்
சூழலை உருவாக்குவோமாக !!
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 223
Post by: ShaLu on July 04, 2019, 01:10:08 PM
அதிகாலை சூரிய உதயத்தில்
கையில் மட்டைபந்துடன்
கள்ளமில்லா சிறுவன்.
ஆஹா! எவ்வளவு அற்புதமான காட்சி!
இக்காலத்தில் காண்பதற்கரிய கண்கொள்ளா காட்சி!

அன்று பக்கத்துவீட்டு சிறார்களுடன்
பாடித் திரிந்தனர் பாலகர்கள்.
இன்று பக்கத்துக்கு வீட்டிலிருப்பது
பாட்டியா அல்லது பாலகனா எனக்கூடத்
தெரியாமல்  இருக்கின்றனர்.

ஓடிவிளையாடு பாப்பா
நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா
என்றான் முண்டாசுக்கவி பாரதி!
இன்று ஓடிக்கழிப்பதுமில்லை
விளையாடி கழிப்பதுமில்லை.

கையில் ஒரு கைபேசி
காலவரையின்றி அதில் விளையாட்டு
வெளியில் சென்று விளையாடுவது
விந்தையாய் போனது!

உடல் ஆற்றலும் மன ஆற்றலும் மேம்படவும்
வெற்றி தோல்வியை சமமாய்
பாவிக்கும் மனப்பக்குவம் ஏற்படவும்
விளையாட்டு இன்றியமையாதது
என்று வித்திட மறந்துவிட்டனர்
இக்காலத்து பெற்றோர்கள்.

வெறிச்சோடி கிடக்கின்றன தெருக்கள்
சுட்டெரிக்கும் சூரியன் கூட
சுடமாட்டேன்   வா  குழந்தாய் என்கிறது..
 
ஆனால்  வீட்டினுள்ளேயே கைபேசியில்
கட்டுண்டு கிடக்கின்றனர்
நம் எதிர்கால தூண்கள்.
 
இனியாவது விழித்துக்கொள்வோம்
நம் வளமான எதிர்காலத்தை காக்க!