FTC Forum

தமிழ்ப் பூங்கா => வாழ்வியல் கருவூலங்கள் ( நூல் ) => Topic started by: Anu on March 22, 2012, 02:00:47 PM

Title: 64 சிவ வடிவங்கள்
Post by: Anu on March 22, 2012, 02:00:47 PM
1.லிங்கமூர்த்தி

லிங்கம் விளக்கம்: நம்முடைய புராணங்களும், வேதங்களும் பரசிவத்தை கீழ்கண்டவாறு விவரிக்கின்றது. மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்புலன்களும் இல்லாதது. மனம்,சொல்,செயல் இவற்றிற்க்கு மேல் வேறொரு <உயர்வான நிலை இல்லை எனுமளவிற்கு உயர்ந்தது. உருவமற்றது. ஆகவே இன்னதென நம்மால் சுட்டிக்காட்ட இயலாதது. அதுவே அனைத்துமானது, பற்பல குணாதிசயங்களைக் கொண்டது. நிறமில்லாதது, அழிவென்பதே இல்லாதது, ஈரேழு உலகங்களும் தோன்ற, அழிய காரணமாயிருப்பது, இதுதான் எனக் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய நிலையை நமக்கு கொடுக்காதது. இத்தகைய நம் அனைவரையும் இயக்க வைக்கும் சக்தியை நாம் பரமசிவம் என்றால் எல்லோரும் அறிந்தது என பொருள் படும்.

மேற்சொன்னவாறு  ஐம்புலனில்லாத எட்டாத நிலையைக் கொண்ட, இதற்கு மேல் வேறொரு உயர்ந்த நிலையினை சுட்டிக்காட்ட முடியாத, உலகம் தோன்ற, அழிய காரணமான இதனை உருவம் உள்ளது, அதாவது சகளம் என்றும், உருவமற்றது  அதாவது  நிட்களம் என்றும் பிரிக்கலாம். மேற்ச்சொன்ன சகலநிட்கள நிலையையே நாம் லிங்கம் என்போம்.  லிங்கம் சிவரூபம் அதாவது மேலேயுள்ளது. அது பொருந்தியிருக்கும் பீடம் சக்தி வடிவமாகும். பொதுவாக லிங்கத்தை ஞான சக்தியின் மறுவடிவமாக கொள்ளலாம். இத்தகைய ஞான சக்தியின் மறுவடிவமான லிங்க உருவமே சிவபெருமானின் உடலாகும்.  லிங்கம் மூவகைப்படும் . அவ்வியக்தம், வியக்தம், வியக்தாவியக்கம். இதில் கை, முகம் வெளிப்படாமல் இருப்பது அவ்வியக்தம், வெளிப்படுவது வியக்தம். அருவுருவத் திருமேனியுடையது வியக்தாவியக்தம். சிவலிங்கத்தின் உருண்டையாக இருக்கும் பகுதி ருத்ரபாகம் என்றழைக்கப்படும். பீடத்தின் கீழாக உள்ள நான்கு மூலையும்   பிரம்ம பாகம் என்றழைக்கப்படும். பீடத்தில் லிங்கம் பொருந்தியுள்ள எட்டு மூலையும் திருமால் பாகம் என்றழைக்கப்படும். ருத்ரபாகம் ஆணாகவும், திருமால் பாகம் பெண்ணாகவும் பிரமபாகம் பேடு  எனவும் குறிக்கப்படும்.

கன்ம சாதாக்கியம் என்பதற்கேற்ப லிங்கத்தின் நடுவே சதாசிவனும், மேற்கே ஈசனும், வடக்கே பிரம்மனும், தெற்கே திருமாலும், கிழக்கே  ஈசனும் அமைந்திருக்கின்றனர். இத்தகைய சிறப்பு பெற்ற லிங்கத்தைப் பற்றி மகாலிங்க தலம் எனும் சிறப்புப் பெற்ற ஊர் மயிலாடுதுறை  அருகே உள்ள இடைமருதூர்  ஆகும். இங்கு சிவபெருமான் தானே லிங்கம் அமைத்து, தானே பூஜித்து, பூஜைக்குறிய வழிமுறைகளை வகுத்தும் தந்துள்ளார். இங்கு காவிரி நதி  வில்வத்தால் சிவனைப் பூஜித்தாள். நம்மிடமுள்ள  மும்மலங்களை   அகற்றும்  வல்லமையுடையவர் இவர்.  பிரமஹத்தி    தோஷ பரிகார தலமாகும்.  வில்வார்ச்சனையும், தயிர் அன்ன நைவேத்தியமும் செய்தால் மூளை, மனம் சம்மந்தப்பட்டவை தீரும். அக உடல் தூய்மையடையும். இறைவன் பெயர் மகாலிங்கேஸ்வரர்.  இறைவி பெயர் பெருநலமுலையம்மையார் என்பதாகும்.
 
 (http://temple.dinamalar.com/)முதல் பக்கம் [/url]»  (http://temple.dinamalar.com/news.php?cat=7)64 சிவ வடிவங்கள்[/url] [/t][/l][/t]
  2.
Title: 64 சிவ வடிவங்கள்
Post by: Anu on March 22, 2012, 02:12:08 PM
2. இலிங்கோற்பவ மூர்த்தி
 
நான்முகனுக்கு  இரண்டாயிரம்  சதுர்யுகம் ஒரு நாளாக உள்ளது. ஒருமுறை நாள் கணக்கு முடிந்து உறங்க  சென்றார். உடன் தேவலோகத்தினரும் மகலோகம் சென்றனர். அப்பொழுது பெரும் கடற்பெருக்குத் தோன்றி உலக உயிர்கள் அனைத்தையும் அழித்தது. அதனால் உலகம் மறைந்து விட்டது. திருமால் ஒரு ஆலிலைமேல் சின்னஞ் சிறிய குழந்தை வடிவத்துடன்  உறங்கினார். இதனை கண்ணுற்ற  அனைவரும்  குழந்தையை ஆராதித்தனர்.    ஆராதனையைக்கேட்டு எழுந்த திருமால் பழைய உலகைத் தேடினார். அது பாதாளத்தில் இருப்பதைக் கண்டார். உடன் வராக அவதாரம் எடுத்து தனது கொம்பினால் குத்திக்கொண்டு வந்து முறைப்படி நிறுத்தினார். பின் பாற்கடலில் நித்திரையில் ஆழ்ந்தார். இதனிடையே நான்முகனுக்கு இரவு நீங்கி பகல்  ஆரம்பமானது. அனைத்து தேவ மாந்தர்களையும் ஈரேழுலகங்களையும் திரட்டி இந்திரனையும் சபை நிறுத்தி அரசாள செய்தார்.  இடையில் ஏற்பட்ட  சம்பவம் தெரியாததால் , இந்த உலக இயக்கம் தன்னாலே எனக் கர்வம் கொண்டார். தானே முழுமுதற்கடவுள் என்ற  எண்ணத்துடன்  உலகை வலம் வரும் போது பாற்கடலில் யோக நித்திரையில்  திருமால் இருப்பதைக் கண்டு  அவரிடம் சென்று நீ யார்? என வினவினார். அவரோ நான்  உனது  தந்தை என்றார், இதனால்  பெரும்  வாக்குவாதம்  இருவருக்கும் ஏற்பட்டது. அது  யார்  பெரியவர்  என்றளவில்  பெரும்  போரானது. இப் போரினால்  உலக உயிர்கள்  அனைத்தும் வாடின. உடன் நாரதர் தோன்றி நீங்களிருவருமே பெரியவர் கிடையாது. சிவபெருமானே அனைவருக்கும் பெரியவர் என்றுரைத்தார். மேலும் இனியும்    போர் தொடர்ந்தால் ஜோதிரூபமாக சிவபெருமான் தோன்றுவார் என்று கூறி மறைந்தார். இருப்பினும் விடாமல் போர் தொடர்ந்தது. சிறிது   நேரத்திற்குப் பின் பெரும் ஜோதி தோன்றியது, அதிலிருந்து அசரீரீ கேட்டது. உங்கள் இருவரில் எவர் எனது அடியையும், முடியையும்  கண்டு  வருகிறிர்களோ அவர்களே பெரியவர் என்று அசரீரீ கூறியது. உடன் நான்முகன் அன்னமாக மாறி முடியைத் தேட, திருமால் வராகமாக மாறி அடியைத் தேட இரண்டுமேக் கிடைக்கவில்லை. இருவரும் சிவனே சரணம் என்று சிவனை அடைந்தனர். மனம் வருந்தினர். உடன் இருவரும்  ஒன்றாக அங்கே ஒரு  சிவலிங்கத்தை  பிரதிஷ்டை செய்து பூஜித்தனர். உடனே சிவபெருமான் தோன்றி இருவரிடத்திலும், நான்முகன் என் வலதுபுறத்திலும், திருமால் என் இடதுபுறத்திலும் தோன்றியவர்கள் எவனே எனக்கு இருவரும் ஒன்றே என்றுக்கூறி மறைந்தார். வானுக்கும் பூமிக்குமாக நின்ற ஜோதி வடிவம் சிறிது சிறிதாக குறைந்து மலையாக மாறியது. அதுவே திருவண்ணாமலையாகும். அவர்கள் இருவரும்  வணங்கிய  சிவலிங்கமே  லிங்கோர்பவர் ஆகும்.

திருவண்ணாமலையில்   அருணாச்சலேஸ்வரர்  ஆலயத்தில் இருக்கும் லிங்கோத்பவரை வணங்கினால்  நாம் செய்த அனைத்துக் குற்றங்களும் மறைந்து விடும். இனி குற்றம் செய்யும் எண்ணம் வராது.  நமக்கு வேண்டிய அனைத்தையும்  அளிக்க  வல்லவர். இங்கு பௌர்ணமி கிரிவலம் மிக விசேஷமானது. மேலும் இவரை வணங்க சூரியகிரகணத்தால் உண்டாகும் அனைத்து  பிரச்சினைகளும்  விலகும். மேலும் வென்னிற நந்தியாவர்த்தம் மலரால் அர்ச்சனையும், சாதம் அல்லது பால் நைவேத்தியமும்  பௌர்ணமி அன்று  கொடுக்க சித்தம் தெளிவடையும் . மேலும் இங்குள்ள சிவபெருமானுக்கு குளிர்ச்சியான நல்லெண்ணையில் அபிசேகம் செய்தால் வெப்பநோய்கள் நீங்கும்.
Title: Re: 64 சிவ வடிவங்கள்
Post by: Anu on March 22, 2012, 02:19:15 PM
3. முகலிங்க மூர்த்தி

சிவலிங்கத்திற்கென தனியானதொரு கீர்த்தி உண்டு எனலாம். சிவலிங்கத்தில் முகம் இருந்தால்  நாம் அதை முகலிங்கம் என்போம். அத்தகைய   முகலிங்கம்  நான்கு வகைப்படும். அவை  ஆட்யம், அநாட்யம், சுரேட்டியம், சர்வசமம் என்பனவையாகும். இதில் ஆடயம் என்பது 1001  லிங்கமுடையது. சுரேட்டியம் என்பது 108  லிங்கமுடையது. அநாட்டிய , சுரேட்டிய லிங்கங்கள்  திருமுகங்களைப் பெறாதவையாகும்.சர்வசமம் என்பது ஐந்து முக வேதங்களைப் பெறும். ஈசானம், தத்புருடம், அகோரகம், சத்யோஜாதம், வாமம் என ஐந்தும் அடங்கும். முகலிங்கம் எதை விளக்குகிறது எனில் விளக்கும் ஒளியும் போல பிரிக்க முடியாத இறைவன் உள்ளார் என்று  விளக்குகிறது.     பிரம்ம, விஷ்ணு, ருத்ர, மகேஸ்வர, சதாசிவமே முகலிங்கம் எனப்படுகிறது. இந்த ஐவரும் ஐந்தொழில்களை  நடத்துகின்றவர். இவற்றிற்கு ஆதார சக்தியாக   உள்ளவன்  இறைவன் அவனையே நாம்  முகலிங்கத்தின்  மூலமாக  தரிசிக்க  முடியும்.

முகலிங்க மூர்த்தியை தரிசிக்க நமக்கு மூன்று இடங்கள் அமைந்துள்ளது.

1. திருவக்கரை
2. கச்சபேஸ்வரர்
3. கொட்டையூர்

இதில் திருவக்கரையில்   அமைந்துள்ள  சங்கரமௌலீஸ்வரர்  கோயிலில்  முகலிங்கமூர்த்தி  சிறப்பு பெற்றது. எப்படியெனில்  சதுரமான அடி பாகத்தின் மீது அமைந்துள்ள  வட்ட வடிவமான  ஆவுடையாரின் மேல்  மும்முகத்துடன்  மூலவர்  காட்சிக்கொடுக்கிறார். இங்குள்ள கோயில் தீர்த்தத்தில் நீராடி வில்வத்தால்  அர்ச்சிக்க  விரோதிகள் ஒழிந்து நட்பு பாராட்டுவர், இல்லையெனில் சிவனின்  கட்டளைக்குக்  கீழ்ப்படியும் வக்கிர காளியம்மன் அவர்களை  கண்டிப்பாள்.  என்று நம்பிக்கை நிலவுகிறது. மேலும் பிரதோஷ  காலங்களில்  தும்பைப் பூ  அர்ச்சனையும், சுத்த அன்னம் நைவேத்தியமும்  செய்ய நல்வாழ்வு கிட்டும் என்பது உறுதி. மேலும்  காஞ்சியிலுள்ள கச்சபேஸ்வரர் கோயிலிலும் முகலிங்கம் உள்ளது. மற்றொன்று கும்பகோணம் அருகே அமைந்துள்ள  கொட்டையூரில்  உள்ளது.  இங்குள்ள முகலிங்க மூர்த்தி மிகுந்த  சக்தி வாய்ந்தவர். அவரை சக்கரையால்  அபிஷேகம் செய்தால்  அனைத்திலும்  ஜெயம் உண்டாகும் என்பது ஐதீகம்.
Title: Re: 64 சிவ வடிவங்கள்
Post by: Anu on March 22, 2012, 02:28:54 PM
4. சதாசிவ மூர்த்தி

சடாமுடியிடன் காட்சியளிக்கும் இவர் ஐந்து திருமுகங்களைக் கொண்டவர் ஆவார். தலைக்கு இரண்டாக பத்துக் கைகளைக் கொண்டவர். இவறுடைய வலக்கையில் சூலமும், மழுவும், கட்வங்கமும், வாளும், பீஜா பூரகமும், வச்சிரமும், அபயமுத்திரையும் கொண்டு காட்சியளிக்கும். இடக்கையில் நாகம், பாசம், நீலோற்பலம், அங்குசம், டமருகம், வரதம், மணிமாலை, பரிவட்டம் எனக்காணப்படும். இவர் ஸ்படிக நிறத்துடன் காட்சிக்கொடுப்பவர். மேலும் தியான பூஜைக்காக சகளத்திருவுருவத்துடன் காட்சியளிப்பவர். இவரது இடைப்பாகத்தில் சதாசிவனும், மேற்கே ஈசனும், வடக்கே பிரமனும், தெற்கே திருமாலும், கிழக்கே ஈசனும்  அடங்கியுள்ளனர். இம் முர்த்திகள் ஐவரும் அடங்கியள்ள நிலையை நாம் கன்மசா தாக்கியம் என்போம். இத்தகைய பெருமைகளைக் கொண்டவர் சதாசிவ மூர்த்தியாவார். சாந்த சொருபீயான இவரே அனைத்திற்கும் காரணகர்த்தாவாவார். இந்த மூர்த்தி ஈசானம், தத்புருடம், வாமம், அகோரம், சத்யோஜாதம் முதலான ஐந்து திருமுகங்களுடன் எழுந்தருளியிருப்பவர். முனிவர் கௌசிகரின் பொருட்டு இவரது சத்யோகஜாத  முகத்திலிருந்து காமிகம், யோகசம், சிந்தியம், காரணம், அசிதம்  என்னும் ஐந்து  ஆகமங்களை அருளினார்.

காசிபமுனிவருக்காக வாமதேவ முகத்திலிருந்து தீப்தம், சூக்குமம், சகச்சிரம், அஞ்சுமான், சுப்பிரபேதம் என்ற ஆதமங்களை அருளினார். பரத்வாஜருக்காக அகோரமுகத்திலிருந்து விசயம், நீச்சுவாசம், சுவயம்புவம், ஆக்நேயம், வீரம் ஐந்து ஆகமங்களையும் அருளினார். கௌதம முனிவரின் பொருட்டு தத் புருட முகத்தினின்று ரௌரவம், மகுடம், விமலம், சந்திரஞானம்,  முகவிஷ்பம் என்ற ஐந்து ஆகமங்களையும் அருளினார். முடிவில்  அகத்தியருக்காக  ஈசான முகத்திலிருந்து புரோத்கீதம், இலளிதம், சித்தம், சந்தானம், சர்வோக்தம், பரமேச்சுவரம், கிரணம், வாதுளம் எனும் எட்டு   ஆகமங்களையும் அருளினார். இவரை தரிசிக்க  நாம் செல்ல வேண்டிய தலம் சிதம்பரமாகும். இங்குள்ள கோயில் பிரகாரத்தில் ஐந்து பீடங்கள் உள்ளன. இங்கே சதாசிவமூர்த்தி அருளிபாலிக்கிறார். இங்குள்ள சிவகங்கைத் தீர்த்தத்தால் அபிசேகம் செய்து வில்வ இலை அர்ச்சிக்க அனைத்து மூர்த்திகளையும் வணங்கிய, அர்ச்சித்த பலன் கிடைக்கும். மேலும் சோமவாரத்தில் மிளகு சீரக சாதத்தால் நைவேத்தியம் செய்ய மறுபிறவியில்லை எனும் நிலையை அடையலாம். இங்குள்ள சிவபெருமானை திருநீரால் அபிசேகம் செய்ய சகல நன்மையும் உண்டாகும்.
Title: Re: 64 சிவ வடிவங்கள்
Post by: Anu on March 22, 2012, 02:30:31 PM
5. மகா சதாசிவ மூர்த்தி

இவர் கைலாயத்தில் இருப்பவர். இவர் இருபத்தி ஐந்து தலைகளும், ஐம்பது கைகளையும் கொண்டவர். எனவே இவரை நாம் மகா சதாசிவ மூர்த்தி என்கிறோம். அந்த கைலையில் இவரைச் சூழ்ந்தவாறே இருபத்தி ஐந்து மூர்த்திகளும் உள்ளனர். மேலும் இவரைச் சூழ்ந்தவாறு       ருத்ரர்களும், சித்தர்களும், முனிவர்களும் உள்ளனர். அனைவருமே மகாசதாசிவ மூர்த்தியை வணங்குகின்றனர். இவரை புராணங்கள் கைலாயத்தில் உள்ளவராகச் சொல்கின்றன. மேலும் மகா கைலாயத்தில் இருந்து கொண்டு அனைத்து உயிர்களுக்கும் அருள் பாலித்து அனுக்கிரகம் செய்வதால் இவரை அனுக்கிரக மூர்த்தி என்றேக் கொள்ளுதல் வேண்டும். மேலும் இவரை இன்ன உருவம் தான் எனக் கூற முடியாது.  அனைத்தும் கலந்த திருமேனியுடையவர் என புராணங்கள் கூறுகின்றன. இவரை நாம் தரிசிக்க செல்ல வேண்டிய தலம் காஞ்சிபுரமாகும். காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள இவரை கோயிலுள் காண முடியாது. சுரகரேஸ்வரர் கோயில் விமானத்தில் சுதை சிற்பமாகத்தான் காண முடியும். மேலும் பல கோயில் விமானங்களில் தான் தரிசிக்க முடியும்.

இவரை வணங்கினால் சிவ தரிசனம் விரைவில் கைகூடும்  என்பது ஐதீகம். மேலும் கடுமையான காய்ச்சலால் அவதிப்படுபவர்கள் கருப்பஞ்சாறால் இவரை அபிசேகம் செய்தால் கடும் காய்ச்சல் நீங்கி தேகம்   ஆரோக்கியம் பெறும் என்றும் கூறப்படுகிறது.
Title: Re: 64 சிவ வடிவங்கள்
Post by: Anu on March 22, 2012, 02:33:51 PM
6. உமா மகேச மூர்த்தி

திருக்கைலையில்  பொன்னும் மணியும் சேர்ந்து அமைந்த ஆசனத்தில் சிவபெருமான் தமது தேவியுடன் எழுந்தருளியுள்ளார். சிவபெருமானே உலக உயிர்கள் அனைத்திற்கும்  தந்தையாவார். அதுபோல உமாதேவியே உலகத்திலுள்ள அனைத்து உயிர்களுக்குமே  அன்னையாக விளங்குபவள். அவர் தன்னுடைய  இறைவனாகிய  சிவபெருமானின் என்னப்படியே  அனைத்துச்  செயல்களையும்  செய்து வருகின்றார்.  பூவிலிருந்து மணத்தையும், நெருப்பிலிருந்து  புகையையும் எப்படி பிரிக்க முடியாதோ  அதுபோல் இவர் சிவத்திடம்  ஐக்கியமானவராவர். கருணையே வடிவான இவர்  ஐவகை செயல்களுக்காய் ஐவகை பேதங்களாக மாறியுள்ளார்.  முறையே

1. பராசக்தி- இவர் பரமசிவத்திலிருந்து 1001 கூறு கொண்டவர்.
2. ஆதிசக்தி - பராசக்தியில் 1001 கூறு கொண்டதாகும்.
3. இச்சா சக்தி - ஆதிசக்தியில் 1001 கூறு கொண்டதாகும்.
4. ஞானசக்தி - இச்சா சக்தியில் 1001 கூறு கொண்டதாகும்.
5. கிரியாசக்தி - ஞானசக்தியில் 1001 கூறு கொண்டதாகும்.

இதில் பராசக்தி பக்குவமடைந்த  ஆன்மாக்களை அனுக்கிரகிக்கிறவள். ஆதிசக்தி நம்மிடமுள்ள ஆணவங்களைப் போக்கி பக்குவ நிலையைக் கொசடுப்பவர். ஞானசக்தி ஞானத்தை ஊட்டி நம்மிடம் ஞானத்தை ஒளிரும் படி செய்பவர். இச்சா சக்தி  திருஷ்டித் தொழில் செய்து நம்மை  சிருஷ்டிப்பவர்.  கிரியாசக்தி  உலகப் படைப்பை செய்பவர்.  மேற்க்கண்ட  இந்த  ஐந்து சக்திகளும்  ஒன்றினைந்து  ஒரு செயல்  செய்யும் போது  ஒன்றாகி  சதாசிவமூர்த்தியாகி  விடுகின்றது.  எனவே  சிவன் - சக்தி பிரிக்க முடியாத  ஒன்று. இத்தகைய   சிறப்பு வாய்ந்த   உமா மகேஸ்வர மூர்த்தியை  நாம் தரிசிக்க வேண்டிய தலம் கும்பகோணம் அருகேயுள்ள  கோனேரி ராஜபுரம் தான் செல்ல வேண்டும். இங்கு கோயில் கொண்ட மூர்த்தியே  உமாமகேஸ்வரர் ஆவார்.  இறைவி பெயர்  தேகசௌந்தரி என்பதாகும். இங்குள்ள தீர்த்தத்தில்  நீராடி இறைவி, இறைவனுக்கு  இளநீர், பால், தேன் அபிசேகம் செய்ய  கடுமையான  குஷ்ட நோயும் தீரும். இத்தல இறைவனின்  மற்றொரு திருநாமம்       பூமிநாதர்  என்பதாகும்.  பெயர்க்கேற்றார் போல் எந்த ஒரு தொழில் செய்யும் முன்பும்  இந்த பூமிநாதரை வணங்கி  இங்கிருந்து ஒரு பிடி மண் கொண்டு வந்து தொழில் செய்யும் இடத்தில் வைத்தால்  தொழில்  சிறப்படையும்.  புதன் தோறும்  சிவப்பு அல்லிப்பூவால் அர்ச்சனையும், சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியமும் செய்து வழிபட்டால் குடும்ப வாழ்வில் எந்தவொரு பிரச்சனையும் வராது. இருந்தாலும் விலகும்.இங்குள்ள மண்ணால் வினாயகர் செய்து நம் வீட்டில் வைத்து வழிபட எந்தவொரு காரியத்தடையும்  அகலும்.
Title: Re: 64 சிவ வடிவங்கள்
Post by: Anu on March 22, 2012, 02:35:01 PM
7. சுகாசன மூர்த்தி

வெள்ளிமலையின் மீது கண்களைக் கூசச் செய்யும் ஒளி கொண்ட நவரத்தினங்களால் அலங்காரம் செய்யப்பட்ட  ஆயிரங்கால் மண்டபம் உள்ளது. அதில் ஜோதி மயமான சிவபெருமான் நடுவே நாயகனாக வீற்றிருக்க, அவரைச்  சுற்றிலும்  மும்மூர்த்திகளும் தேவகணங்களும், தேவலோக வாழ் அனைத்துமே அங்கே கூடியிருக்கின்றன. சிவபெருமானிடம் வேண்டிய வரங்களைக் கேட்க அவரும் வேண்டும் வரங்களை தந்தபடியே இருக்கிறார். நேரம் கடந்தது. அனைவரும் தங்களது பணிக்கு, இருப்பிடத்திற்கு திரும்பி விட்டனர்.

சற்றைக்கேல்லாம் உமாதேவியார் அங்கே பிரசன்னமாகி இறைவனின் தால் பணிந்து எம்பெருமானே சிவாகமங்களின்  உண்மைகளை, விளக்கங்களையும் எனக்கு புரியும் படி தாங்கள் கூற வேண்டும் என்று கேட்கிறார். உடன் சிவபெருமான்  சிவாகமங்களின்   உண்மைகளையும் ,  விளக்கங்களையும், ஐவகை  பந்த பாசங்களின்  நிலையையும், அவற்றை நீக்கினால் கிடைக்கும்  நன்மைகளையும், சிவாகமங்கள்  பற்றிய அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கின்றார். அச்சமயம்  அவர்  சுகாசன நிலையில்  அமர்ந்த படி  உறைக்கிறார். அருகே உமாதேவியார் நின்று கொண்டுள்ளார்.  சுகாசன நிலையில் சிவகாமங்களைப் பற்றி உறைத்த காரணத்தால்  இவரை நாம் சுகாசன   மூர்த்தி  என்கிறோம். இவரது கரங்களில் மான், மழு உள்ளது. தேவியார் அருகே இல்லை. 

இத்தகைய  சுகாசன மூர்த்தியை தரிசிக்க நாம் செல்ல வேண்டிய தலம் சீர்காழியாகும். இங்கு  கோயில் கொண்டுள்ள இறைவனது திருநாமம்  பிரம்மபூரிஸ்வரர், சட்டைநாதர், தோணியப்பர் என்று மூன்று திருநாமங்களை உடையவர். இறைவியின் திருநாமம் பெரியநாயகி யாகும். இங்கு   அருள்பாலிக்கும் சுகாசன மூர்த்தியை மனமுருக வேண்டி அர்ச்சிக்க வியாழன் சார்ந்த அனைத்து குறைகளும் தீரும். மேலும் தொழில் துறை நிர்வாகம் நல்ல முறையில்  நடைபெற இவர் நமக்கு அருள்புரிவார். வில்வ அர்ச்சனையும், கற்கண்டு நைவேத்தியமும் சோமவாரங்களில்  செய்தோமானால் நிர்வாகம் செழிப்பாகும். மேலும் இங்குள்ள சிவபெருமானுக்கு  உகந்த அபிசேகம் பலாப்பழத்தால் செய்யப்படுகிறது. இதனால் யோக சித்திகள் கைகூடும் என்பது ஐதீகம்.
Title: Re: 64 சிவ வடிவங்கள்
Post by: Anu on March 22, 2012, 02:36:21 PM
8.உமேச மூர்த்தி

முன்பொருமுறை நான்முகன் படைத்தல் தொழிலுக்கு நான்கு புதல்வர்களை தன்னுடைய தவ சக்தியால் உண்டாக்கினார். அந்த நால்வரும் படைத்தல் தொழிலை  மேற்க்கொள்ளாமல்  தவச்சாலையை நோக்கிச்  சென்றுவிட்டனர். பின்னர் நான்முகன் விஷ்ணுவை கானச்சென்றார். அவர்தம் குறைகளைச் சொன்னார். இக் குறைகளைப் போக்குபவர் சிவபெருமான் ஒருவரே, எனவே அவரைச் சென்று பார்ப்பதே உசிதமென நான்முகன், விஷ்ணு, நான்கு புதல்வர்கள் சகிதம் வெள்ளிமலையை அடைந்தனர். அவர்களை நெற்றிக்கண்ணால் சிவபெருமான் நோக்க, அவர்களனைவரும் எரிந்து சாம்பலானார்கள். அப்பொழுது  தனிமையில் இருந்த சிவபெருமான் தன் தோளைப்பார்க்க  அவரது  சக்தியே உமாதேவியாக  வடிவம் கொண்டு வெளிவந்தது. உடன்  உமாதேவியை தன் இடபுறமாக இருக்க  செய்தார்.  பின்னர் எரிந்து சாம்பலானவர்களை  முன் போலவே படைத்தார்.  அவர்கள் அனைவரும்  இவர்கள்  இருவரையும் வணங்கி நின்றனர்.  இருவரது அகமும் மகிழ்ந்ததால் அவர்கள் அனைவரும் கேட்ட வரத்தினைக் கொடுத்தார்.  உலகமே செழித்தது.   உலகிலுள்ள அனைத்து உயிர்களையும்  படைத்து, காத்து, துயர்துடைத்து அனைத்தையும் வாழவைக்கும் சக்தியை  உமையவளாக  இடது பாகத்தில்  வீற்றிருந்தக் கோலத்தைக் கண்டவர்கள் ஆனந்தப்பட்டனர். ஆகவே சிவபெருமானது பெயர்களில்  உமேச மூர்த்தியும் சேர்ந்துக் கொண்டது. பொதுவாக சிவபெருமான் உமாதேவியோடு கூடியிருக்கும் திருக்கோலமே  உமேசமூர்த்தி யானது என்றும் சொல்லலாம்.  இத்தகைய சிறப்பு பெற்ற உமேசமூர்த்தியை தரிசிக்க  நாம் செல்ல வேண்டியத் தலம் திருஇடைமருதூர் ஆகும். கும்பகோணம் அருகே அமைந்துள்ள இத்தலத்தில்  கோயில் கொண்டுள்ள  உமேசமூர்த்தியை காவிரி நீரால் அபிசேகம் செய்தால் குடும்ப வாழ்வு இன்பமயமானதாக  அமைய அருள்புரிவார்.

இவரை திங்கள் அல்லது புதன் கிழமைகளில் செந்தாமரைப் பூவினால்  அர்ச்சனையும், நெய்யன்னத்தால் நைவேத்தியமும் செய்ய கடனில்ல பெருவாழ்வு வாழலாம். இங்குள்ள சிவபெருமானுக்கு நன்னீர்  அபிசேகம் செய்ய  அகஉடல்  தூய்மையடையும் என்பது திண்ணம். 
Title: Re: 64 சிவ வடிவங்கள்
Post by: Anu on March 22, 2012, 02:37:33 PM
9. சோமாஸ் கந்த மூர்த்தி

சூரபத்மனின்  கொடுமைகள்  எல்லைக்கடந்து போயின. அவனது கொடுமைகளைத் தாள முடியாத விண்ணோர்கள் அனைவரும்  ஈசனிடம் சென்று  முறையிட்டனர்.   வல்லமைபெற்ற தங்கள் மகனால்  அவனது வாழ்வு முடிய வேண்டுமென அவர்கள்  விரும்பினர். சிவபெருமானும் அவர்களுக்காக  மனமிரங்கி தம்முடைய ஆறு திருமுகத்திலுமுள்ள  நெற்றிக் கண்ணிலிருந்து ஜோதிமயமான ஆறு நெருப்புப் பொறிகளை வெளிக்கொண்டு வந்தார். அப்பொறிகள்  அகிலமெல்லாம் பரவின. உடன் பார்வதி தேவியார் அவ்வெப்பம் தாளாமல் தம் கொலுசு மணிகள் ஒன்றோடொன்று  மோதி சிதறும் படி அந்தப்புரம்  நடந்தார்.  இதனால் தேவர்கள் சித்தம் கலங்கி, மனம் வருந்தினர். மகனைக் கேட்டால் இவர் நெருப்பு பொறிகளை கொடுக்கின்றாரென கலங்கினர். உடன் வாயு தேவனையும், அக்னிதேவனையும் அழைத்து அப்பொறிகளைக் கொடுத்து கங்கையில் விடச் சொன்னார்.  கங்கையோ  அப்பொறிகளை சரவணப்பொய்கையில் சேர்த்தது.

ஆறுமுகங்களும், பன்னிரு கரங்களுடனும்  பிறந்த இக்குழந்தையை கார்த்திகைப் பெண்கள் பாலூட்டி வளர்த்தனர்.   பார்வதி தேவியின் கொலுசுமணியில்  இருந்து சிதறிய  நவரத்தினங்கள்  நவ வீரர்களாயின. இதற்கிடையே சரவணப்பொய்கையில் வளரும் தங்கள் குமாரனைக் காண சிவனும், பார்வதியும் இடப வாகனத்தில் முன் செல்ல  தேவர்கள் பின் தொடர்ந்தன. அங்கு  ஆறு குழந்தைகளை பார்வதி  ஒன்றாக தூக்குகையில் அவை ஒரேக் குழந்தையாயிற்று. அந்த ஒரேக் குழந்தை ஆறு முகத்துடனும், பன்னிரு கரங்கள் கொண்டதாகவும்  விளங்கியது.  ஆறு முகங்களைக் கொண்டதால்  ஆறுமுகன் என்றும், கந்தன் என்றும்   அழைத்தனர்.  பின்னர் மூவரும் வெள்ளிமலையை  அடைந்தனர்.  அங்கே சிவபெருமானுக்கும் பார்வதி தேவிக்கும் இடையே கந்தன் வீற்றிருந்தார். அந்த தோற்றத்தையே நாம் சோமாஸ் கந்த மூர்த்தி என்கிறோம். சோமாஸ் கந்த மூர்த்தியை தரிசிக்க திருவாரூர் செல்ல வேண்டும். அங்குள்ள ஆயிரம் கால் மண்டபம்  அருகே  சுரக்கும்  அமுத தீர்த்தத்தினால்  சோமாஸ் கந்தரை அபிசேகம் செய்ய உடல் வலிமை, அறிவு விரத்தி, தந்தைக்கே      உபதேசிக்கும் அளவு  புத்தி வலுவடையும்.  மேலும் திங்கள், வியாழக்கிழமைகளில்  வில்வார்ச்சனையும், தயிரன்ன நைவேத்தியமும் கொடுக்க   குரு ஸ்தானம் விரைவில் கைகூடும். எழுத்தாளர்களுக்கு திறமை வளரும். எனவே எழுத்தாளர்கள்  தொழ வேண்டியவர் இவர்.
Title: Re: 64 சிவ வடிவங்கள்
Post by: Anu on March 22, 2012, 02:38:44 PM
10. சந்திரசேகர மூர்த்தி

நான் முகனின் மகன் தட்சன். அவனுக்கு நட்சத்திரங்களே  இருபத்தியேழுப் பெண்களாகப் பிறந்தது. அவர்கள் அனைவரையும் சந்திரனுக்கு  திருமணம் செய்வித்தார்.  சந்திரன் திருமணம் நடைப்பெற்ற சிறிது காலம் வரை அனைத்து மனைவியரிடத்தும் அன்போடு இருந்தார். நாட்கள் செல்ல அவரது அன்பு கார்த்திகை, ரோகிணி இடத்தில் மட்டும் மிகுந்தது. இதனால் மற்றப் பெண்கள் மனம் சகியாது தந்தையாகிய தட்சனிடத்தில் கூறினர். தட்சனும் மருமகனை அழைத்து தம் அனைத்து மகள்களையும் சமமாக நடத்தும் படி, அவர்களுடன் அன்புடன் இருக்கும் படியும் புத்திமதிகள் கூறி அனுப்பி  வைத்தார்.  சிறிது காலத்திற்குப் பின் சந்திரனின் நடவடிக்கையில் எந்த ஒரு மாற்றமும் ஏற்படாமல் இருந்தது.எனவே மறுபடியும் பெண்கள் தன் தந்தை தட்சனிடம் முறையிட்டனர். பெண்களின் துன்பம் சகியாது தட்சன் நாளுக்கொரு கலையாக குறைந்து இறப்பாய் என்று சந்திரனுக்கு சாபம் கொடுத்தார். 

சாபத்தின் வீரியத்தால் நாளொரு கலையாக சந்திரன் தேய்ந்து கொண்டே வந்து இறுதியாக ஒரு கலை மட்டுமே இருக்கும் நிலையில் இந்திரனின் ஆலோசனைப்படி நான்முகனை சந்தித்து தன் குறைகளைச் சொன்னான். நான்முகனோ தன் வேலையில் மகனும்  மகன் வேலையில் தானும் தலையிடுவதில்லை  என்று உறுதிகொண்டுள்ளோம். எனவே  இக் குறைகளை சிவபெருமானால் மட்டுமே தீர்க்க முடியும் எனவே  அவரை  சரணடையிமாறு சொன்னார்.   அதன்படி சந்திரன் சிவபெருமானிடம்  சரணடைய  சிவனும் சந்திரனின்  ஒரு கலையை  எடுத்து தன் சடையில்  வைத்து இனி உன் ஒருக்கலைக்கு  அழிவில்லை  ஆனாலும்  தட்சனின் சாபத்தால்  தினமொரு  கலையாக  அழிந்தும்,  என்னிடம்  உள்ளதால்  தினமொரு கலையாக  வளர்ந்தும்  காணப்படுவாய்  என  அருளாசி கூறினார்.  சந்திரனைத் தன் சடையில் தரித்ததால்          சந்திர   சேகரன் ஆனார்.  அவரது தலம்  திருவாரூர்(புகலூர்) நாகபட்டிணம் அருகே உள்ளது.  இங்கு கோயில் கொண்டுள்ள இறைவனின்  திருநாமம்  கோணபிரான்  மற்றும்  அக்னிபுரீஸ்வரர். இறைவி  கருந்தாழ்குழலி யாகும்.  நல்லவனவற்றை மட்டுமேக்  கொடுக்க கூடியவர்  இங்குள்ள சந்திர சேகர மூர்த்தி. இவரை வழிபட பித்தளையும்  வைரமாகும். மேலும்  வெண்தாமரை அர்ச்சனையும், நெய்யன்ன நைவேத்தியமும் சோமவாரம், பௌர்ணமி தினங்களில் கொடுக்க    அறிவு வளர்ச்சி மிகுவதோடு நினைவாற்றல்  பெருகும்.  மேலும்   இங்குள்ள                           சிவபெருமானுக்கு  குளிர்ந்த   சந்தனத்தால்  அபிசேகம் செய்தால்  நற்புகழ் அடையலாம்.
Title: Re: 64 சிவ வடிவங்கள்
Post by: Anu on March 22, 2012, 02:40:10 PM
10. சந்திரசேகர மூர்த்தி

நான் முகனின் மகன் தட்சன். அவனுக்கு நட்சத்திரங்களே  இருபத்தியேழுப் பெண்களாகப் பிறந்தது. அவர்கள் அனைவரையும் சந்திரனுக்கு  திருமணம் செய்வித்தார்.  சந்திரன் திருமணம் நடைப்பெற்ற சிறிது காலம் வரை அனைத்து மனைவியரிடத்தும் அன்போடு இருந்தார். நாட்கள் செல்ல அவரது அன்பு கார்த்திகை, ரோகிணி இடத்தில் மட்டும் மிகுந்தது. இதனால் மற்றப் பெண்கள் மனம் சகியாது தந்தையாகிய தட்சனிடத்தில் கூறினர். தட்சனும் மருமகனை அழைத்து தம் அனைத்து மகள்களையும் சமமாக நடத்தும் படி, அவர்களுடன் அன்புடன் இருக்கும் படியும் புத்திமதிகள் கூறி அனுப்பி  வைத்தார்.  சிறிது காலத்திற்குப் பின் சந்திரனின் நடவடிக்கையில் எந்த ஒரு மாற்றமும் ஏற்படாமல் இருந்தது.எனவே மறுபடியும் பெண்கள் தன் தந்தை தட்சனிடம் முறையிட்டனர். பெண்களின் துன்பம் சகியாது தட்சன் நாளுக்கொரு கலையாக குறைந்து இறப்பாய் என்று சந்திரனுக்கு சாபம் கொடுத்தார். 

சாபத்தின் வீரியத்தால் நாளொரு கலையாக சந்திரன் தேய்ந்து கொண்டே வந்து இறுதியாக ஒரு கலை மட்டுமே இருக்கும் நிலையில் இந்திரனின் ஆலோசனைப்படி நான்முகனை சந்தித்து தன் குறைகளைச் சொன்னான். நான்முகனோ தன் வேலையில் மகனும்  மகன் வேலையில் தானும் தலையிடுவதில்லை  என்று உறுதிகொண்டுள்ளோம். எனவே  இக் குறைகளை சிவபெருமானால் மட்டுமே தீர்க்க முடியும் எனவே  அவரை  சரணடையிமாறு சொன்னார்.   அதன்படி சந்திரன் சிவபெருமானிடம்  சரணடைய  சிவனும் சந்திரனின்  ஒரு கலையை  எடுத்து தன் சடையில்  வைத்து இனி உன் ஒருக்கலைக்கு  அழிவில்லை  ஆனாலும்  தட்சனின் சாபத்தால்  தினமொரு  கலையாக  அழிந்தும்,  என்னிடம்  உள்ளதால்  தினமொரு கலையாக  வளர்ந்தும்  காணப்படுவாய்  என  அருளாசி கூறினார்.  சந்திரனைத் தன் சடையில் தரித்ததால்          சந்திர   சேகரன் ஆனார்.  அவரது தலம்  திருவாரூர்(புகலூர்) நாகபட்டிணம் அருகே உள்ளது.  இங்கு கோயில் கொண்டுள்ள இறைவனின்  திருநாமம்  கோணபிரான்  மற்றும்  அக்னிபுரீஸ்வரர். இறைவி  கருந்தாழ்குழலி யாகும்.  நல்லவனவற்றை மட்டுமேக்  கொடுக்க கூடியவர்  இங்குள்ள சந்திர சேகர மூர்த்தி. இவரை வழிபட பித்தளையும்  வைரமாகும். மேலும்  வெண்தாமரை அர்ச்சனையும், நெய்யன்ன நைவேத்தியமும் சோமவாரம், பௌர்ணமி தினங்களில் கொடுக்க    அறிவு வளர்ச்சி மிகுவதோடு நினைவாற்றல்  பெருகும்.  மேலும்   இங்குள்ள                           சிவபெருமானுக்கு  குளிர்ந்த   சந்தனத்தால்  அபிசேகம் செய்தால்  நற்புகழ் அடையலாம்.
Title: Re: 64 சிவ வடிவங்கள்
Post by: Anu on March 22, 2012, 02:41:28 PM
11. இடபாரூட மூர்த்தி

திரிபுர அசுரர்களின் தொல்லை நாளுக்கு நாள் பெருகிக்கொண்டேயிருந்தது. இனி பொருக்க முடியாத தேவர்கள் கைலாயம் சென்று நந்தி தேவரின் அனுமதியிடன் சிவபெருமானை தரிசித்தனர். சிவனும்  போரிற்கு வேண்டிய ஆயுதங்களை தயார் நிலையில் வைக்கும் படி ஆணை இட்டார். ஆயுதங்கள் தயாரானதும்  சிவபெருமானும், உமாதேவியும்  தருமதேவதையாகிய வெண்ணிற இடப வாகனத்தில் கைலாய மலையை விட்டு இறங்கி வருகின்றனர்.  இதனைக் கண்ட அனைவரும் சிவதுதி சொல்லத் துவங்கினர். பின்னர் தேவர்களால் செய்யப்பட்ட தேரினைக்கண்ட சிவபெருமான்  இடபவாகனத்தை விட்டு இறங்கி மேருமலையை வில்லாகக் கொண்டு தேர் ஏறியவுடன் தேரின் அச்சு முறிந்தது. இதனைக் கண்ணுற்ற விஷ்ணு சிவன் பால் கொண்ட அன்பினால் இடப உருவமாகி சிவனைத் தாங்கினான். இதனால் விஷ்ணுவிற்கு  தலைகனம் ஏற்பட்டது. தன்னைத் தவிர வேறொருவருக்கும் சிவனைத் தாங்கும் சக்தி இல்லை என்ற எண்ணம் வலுப்பெற்றது.

இதனை அறிந்த சிவபெருமான்  விஷ்ணுவிற்கு பாடம் புகட்ட எண்ணி, தன்கனத்தை அதிகப்படுத்தினார். இதனைத் தாங்காத இடப வாகணமாகிய  விஷ்ணு, இரு செவி, இரு கண்கள், மூக்கு போன்றவை பிதுங்கியும், இரத்தம் வடிந்தும் செயலிழந்து தரையில் வீழ்ந்தார். இதனால் தேவர்கள் பயத்துடன் சிவதுதிகளை சொல்லி அவரை சாந்தப்படுத்தினர். விஷ்ணுவும் மனம்  வருந்தி மன்னிப்பு கேட்டார்.  விஷ்ணு தலைகனம் அழிந்தது. மனம் மகிழ்ந்த சிவபெருமான் பூமியில் இறங்கினார். பின்னர் விஷ்ணுவின் வலிமைகளை மறுபடியும் அழித்தார். விஷ்ணுவிடம் என்ன வரம் வேண்டுமென்றுக் கேட்க, விஷ்ணுவும் சிவபெருமான் வாமபாகத்திலிருந்து அவரைத் தாங்கும் சக்தியை தனக்கு கொடுக்க வேண்டும் என வேண்டினார். அதனை நிறைவேற்றிய சிவபெருமான் விஷ்ணுவின் விருப்பப்படி  அரியாகிய இடத்தை வாகனமாகக் கொண்டு அதன்மேல் ஏறியமர்ந்தார். எனவே சிவபெருமானுக்கு  இடபாரூட மூர்த்தி என்று திருநாமம் உண்டாகிற்று.

இடபாரூட மூர்த்தியை சரிசிக்க நாம் செல்ல வேண்டிய தலம் மயிலாடுதுறையருகேயுள்ள திருவாவடுதுறையாகும். இறைவனது திருநாமம்  கோமூத்திஸ்வரர், மாசிலாமணிஸ்வரர்  என்பதாகும். இங்குள்ள கோமூத்தி தீர்த்தத்தால் இடபாரூடரை அபிசேகம் செய்ய உடல் நோய் தீரும், குழந்தை பாக்கியம் உண்டாகும், திருமந்திர பொருள்  விளங்கும். அருகம்புல் அர்ச்சனையும், தாம்பூல நைவேத்தியமும் பிரதோஷ காலங்களில் கொடுக்க நினைத்தது நடைபெறும். உயர்பதவி கிட்டும். இங்குள்ள சிவனை வில்வ நீரால்  அபிசேகம் செய்ய அடுத்த பிறவியிலும் சிவனின்  அருள் பரிபூரணமாய் கிடைக்கும் என்பது ஐதீகம்.
Title: Re: 64 சிவ வடிவங்கள்
Post by: Anu on March 22, 2012, 02:42:38 PM
12.இடபாந்திக மூர்த்தி

சதுர்யுகங்கள் இரண்டாயிரம் நான்முகனுக்கு ஒரு நாளாகும். அது நூறு கொண்டது நான்முகனது ஆயுட்காலமாகும், நான்முகனின் ஆயுட்காலமே விஷ்ணுவிற்கு ஒரு நாள் ஆகும். ஆக விஷ்ணுவிற்கு நூறு வயது கழிந்தால் உலகிலுள்ள அனைத்து உயிர்களும் அழியும் என்பது  கணக்கு, அழியும் ஊழிகாலத்தில்  உமையுடன் சேர்ந்து திருநடனம் புரிவார் சிவபெருமான். இக்கணக்கினால் தர்மதேவதை வேதனை கொண்டது. தானும் அழிய வேண்டி வருமே என்ன செய்வது  சிவபெருமானிடம்  சரணடைவதுத் தவிர தனக்கு வேறு வழியில்லை என்று சிவனை சரணடைந்தது. இடபமாக மாறி தர்மதேவதை  சிவனின் முன்பு நின்றது. ஐயனே நான் இறவாமலிருக்க வேண்டும். எப்பொழுதும் தங்கள் வாகனமாக நானிருக்கவும் ஆசி கூறுங்கள் என்றது.கேட்ட வரம் கொடுக்கும் அருட்கடலான சிவபெருமானும் இடபத்தில் தலை மேல் தனது கை வைத்து  தர்மதேவதையே உன் விருப்பம் நிறைவேற்றப்படும்.

 ஆகவே தருமத்தினை உலகிற்கு  உணர்த்த கிருதயுகத்தில் நான்கு கால்களுடனும், திரேதாயுகத்தில் இரண்டு கால்களுடனும் கடைசியாக  கலியுகத்தில் ஒரு காலுடனும் தோன்றி தர்மத்தினை நிலைநாட்டுவாய். மேலும்  எப்பொழுதும் என்னை நீ பிரியாமல் இருப்பாய் எனது வாகனமாகும் பேற்றையும் நீயேப் பெறுவாய் என்று திருவாய் எழுந்தருளினார்.தனது அடியார்களுக்கு காட்சியளிக்கும் சிவபெருமானின்  இடப வாத்திக தரிசன ரகசியம் இதுவேயாகும், இனி இடப வாத்திக மூர்த்தியை சரிசிக்க நாம் செல்ல வேண்டிய தலம் திருவாவடுதுறையாகும். இத்தலம் மயிலாடுதுறையருகே  அமைந்துள்ளது. இங்குள்ள மாசிலாமணிஸ்வரர்  கோயிலில்  அமைந்துள்ள இடபாந்திக மூர்த்தியை வணங்குவோமானால் ஊழிக்காலத்தில் நம்முடைய ஆன்மா சிவபெருமானை   தஞ்சமடையும்  என்பது  ஐதீகம்.  இவருக்கு திங்கள்,வியாழக்கிழமைகளில் வெண்தாமரை அர்ச்சனையும், பசுவின் பால் நைவேத்தியமும் கொடுக்க குரு தோஷ நிவர்த்தியுண்டாகும். மேலும் சிவபெருமானுக்கு வில்வ நீரால் அபிசேகம் செய்தால் மறுபிறவியிலும் சிவனருள் கிடைக்கும்.
Title: Re: 64 சிவ வடிவங்கள்
Post by: Anu on March 22, 2012, 02:44:31 PM
13. புஜங்கலளித மூர்த்தி

காசிப முனிவரின்  மனைவியரான  கத்துருவிற்கும், வினந்தைக்கும்  தங்களில்  அடிகானவர்  யார் என்றப் போட்டி ஏற்பட்டது. அப்படி அழகானவள்  மற்றவளை சிறையில்  அடைக்க  வேண்டும் என்ற  முடிவுடன்  கணவரான  காசிபரை  நாடினார். கணவரோ கத்துருவே  அழகி  என்றுக்கூறினார், இதன் விளைவாக வினத்தை சிறையில்  அடைக்கப்பட்டார். தன்னை விடுவிக்கும் படி கத்துருவை  வேண்டினாள். கத்துருவோ தனக்கு  அமிர்தம்  கொடுத்தால் மட்டுமே விடுதலை கிடைக்கும் என்றார். உடன்  வினந்தை தன் மகனான கருடனின் வனத்திற்கு இதைக் கொண்டு சென்றார். கருடனும் தேவலோகம் சென்று போரிட்டு  அமிர்தத்துடன் செல்லும் போது திருமால் கருடனுடன் போரிட்டு வெல்ல முடியாமல் பறவை ராஜனே உன் பெருமைகளைப் போற்றினோம், உனக்கு வேண்டும் வரத்தைக் கேள் என்றார். கருடனே பதிலுக்கு திருமாலே உன் வலிமையை கண்டுகளித்தேன் நீ உனக்கு வேண்டிய இரண்டு வரங்களை கேள் என்றார். திருமாலும் இதுதான் சந்தர்ப்பமென  தனக்கு வாகனமாக இருக்க வேண்டியும், அரவங்களுக்கு அமுதம் கொடுக்காதிருக்கவும் வரம் வாங்கினார்.

கருடனும் அதற்கிசைந்து கொடுத்து விட்டு  அமுதத்துடன் சிறைக்கு வந்து தாயிடம் கொடுத்தார். பின்னர் சிவபூஜை செய்து சிவபெருமானிடம் பலவரங்களைப் பெற்றுப் பின்னர் அன்று முதல் திருமாலின் வாகனமானார். மேலும் கருடன் திருமாலிடம் பெற்ற வரத்தினால் மற்றொரு தாயான கத்துருவின் கட்செவிகளைக் கொன்று கொடுமைப் படுத்தினார். இதனால் கோபம் கொண்ட நாகங்கள் சிவபூஜை செய்து தங்களுக்கு இறவாபுகழும், கருடனிடமிருந்து பாதுகாப்பும் வேண்டும் வேண்டினர். உடன் சிவபெருமானும் வேண்டிய வரத்தைக் கொடுத்து விட்டு நாகங்களை தன்னுடலில்  ஆபரணமாக  அணிந்து கொண்டார். இதனையே நாம் என்ன கருடா சௌக்கியமா  என நாகங்கள் கூறுவதாக கொள்வோம். அதற்கு என்ன பொருளெனில் சிறியோரை கூடுதலைவிட  பெரியோரைச் சேருதலே சிறந்தது என்பதாகும்.  பாம்புகளுக்கு அபயமளித்ததால் சிவபெருமானுக்கு புஜங்கலளித மூர்த்தி என்னும் பெயர் ஏற்பட்டது. ( புஜங்கம் - நாகம், லளிதம்- அழகு, ஆபரணம்) புஜங்கலளித மூர்த்தியை நாம் தரிசிக்க கல்லனை அருகேயுள்ள திருப்பெரும்புலியூர் செல்ல வேண்டும். சிவபெருமான் நாகங்களின் மீது நடனமாடிய திருக்கோயில் என்பதால் சிறப்பு பெற்றது. ராகுவின் அதிதேவதையான பாம்புவின் தலமென்பதால் இத்தல மூர்த்தியை வழிபட ராகு கிரகத் தொல்லைகள் விலகும், அவரது பார்வை நம்மீது பட்டு நற்பலன்களைக் கொடுக்கும். இவருக்கு நீலமலர் அர்ச்சனையும், பால், பழம், தேன் கொண்டு நைவேத்தியமும் சோமவாரங்களில் கொடுக்க  சர்ப்ப கால தோஷம் விலகும். பாம்பு பயம் நிவாரணம் பெறும்.  இங்குள்ள இறைவன் பெயர் வியாக்கிரபுரிஸ்வரர் இறைவி பெயர் சௌந்திரநாயகி என்பதாகும். இவர்களுக்கு மஞ்சள் நீரால் அபிசேகம் செய்தாலும் சர்ப்பகால, ராகு தோஷம் விலகும் என்பது கண்கூடாகும்.
 
Title: Re: 64 சிவ வடிவங்கள்
Post by: Anu on March 22, 2012, 02:46:00 PM
14. புஜங்கத்ராச மூர்த்தி

தாருவனத்தில் வசித்து வந்த முனிவர்கள் தவமே சிறந்தது என்றும், அவரது துணைவியர்களோ  கற்பே சிறப்புடையது என்றும் வாழ்ந்து வந்தனர். இவர்களை சோதிக்க எண்ணினார் சிவபெருமான். பிட்சாடண கோலத்தில் சிவபெருமானும், மோகிணி கோலத்தில்  திருமாலும் அவ்வனம் சென்று  முனிவர்களின் தவத்தையும், துணைவியரின்  கற்பையும் சோதித்தனர்.  இதனால் கோபம் கொண்ட முனிவர்கள் தவத்தை அழித்தது மோகிணி அவதார மெடுத்த திருமால் என்றும், கற்பை பரிசோதித்தது  பிட்சாடண ரூபம் கொண்ட சிவபெருமான் என்றும்   தங்களது தவ வலிமையால் அறிந்தனர்.  அதனால் கோபம் கொண்டு விஷ மரங்களை குச்சிகளாக்கி  அதை நெய்யில் நனைத்து ஹோமம் வளர்த்து வந்தனர்.  அதிலிருந்து வந்த பல கொடியப் பொருள்களை சிவனின் மீது ஏவினர். சிவனே அவற்றையெல்லாம்  உடை, சிலம்பு, ஆயுதம், சிரோ மாலை, சேனை என்று உருமாற்றி தன்னிடம் வைத்துக்கொண்டார். தாங்கள் ஏவிய பொருள்கள் அனைத்தும் அவருக்கு ஆபரணமாகவும், படையாகவும் மாறியதை அறிந்த  முனிவர்கள்  பெரும் கோபம் கொண்டனர். மேலும் அதிக விஷமுள்ள பாம்புகளை சிவனின் மீது ஏவினர். அந்த பாம்பு  உலகை நாசமாக்கும் பொருட்டு தன்னுடைய  நான்து பற்களில்  கடும் விஷத்துடன்  சிவபெருமானை அடைந்தது  அவரும் அதற்கு சிறிது பயப்படும் படி நடித்து விட்டு தன்னுடலில்   ஏற்கனவே ஆபரணமாக உள்ள பாம்புகளுடன்  சேர்ந்து விடும்படி  கூறி சேர்த்தார். அப்பாம்புகள் அவருடலில் கங்கணம்(கைவளை, காப்பு) காலணி அரைஞான் கயிறு ஆகியவையாக அணிந்து  கொண்டு காட்சிக்  கொடுத்தார்.  தாருவனத்து  முனிவர் ஏவிய பாம்புகள் அவரை அச்சுருத்தியமையால் அவரை புஜங்கத்ராச மூர்த்தி என்றனர். (புஜங்கள் - பாம்பு, திராசம் - பயப்படுதல்)

புஜங்கத்ராச மூர்த்தி யை தரிசிக்க நாம் செல்ல வேண்டி தலம் பெரும்புலியூர் ஆகும். இந்த சிவபெருமான் கோயிலில் தான் சிவன் தன்னுடைய  ஆடையாக  பாம்புகளை அணிந்த படி  காட்சிக் கொடுக்கின்றார். இந்த வடிவத்தையே  நாம் புஜங்கத்ராச மூர்த்தி என்கின்றோம்.  இவரை வணங்கினால்  ராகு தோஷம் நிவர்த்தியடையும்.  இவருக்கு சோமவாரம் அல்லது குருவாரத்தில்  வில்வார்ச்சனையும், சம்பா அன்ன நைவேத்தியமும் கொடுக்க கடன் தொல்லை தீரும். இங்குள்ள சிவபெருமானை மஞ்சள் நீரால் அபிசேகம் செய்ய ராகு கால தோஷம், சர்ப்ப கால தோஷம்  விலகும்.
Title: Re: 64 சிவ வடிவங்கள்
Post by: Anu on March 22, 2012, 02:47:09 PM
15. சந்த்யாந்ருத்த மூர்த்தி

தேவர்கள் சிவபெருமானின் உதவியில்லாமல் பாற்கடலைக் கடைந்தனர். அதில் மந்திரமலையை மத்தாகவும், வாசுகியை கயிறாகவும் கொண்டு கடைந்தனர்.  இதில் வாசுகியின் வாயையும் வாலையும் தேவர்களும், அசுரர்களும்  இழுக்கும் பொருட்டு  வாசுகி கொடிய ஆலகால விஷத்தைத் துப்பியது அவ்விஷம் அனைவரையும் எதிர்த்தது, எதிர்ப்பட்ட திருமாலும் அதன் முன் உடல் கருகினார். இதனைக் கண்ட தேவர்கள் கைலாயம் சென்று சிவபெருமானிடம் முறையிட்டனர்.

சிவபெருமானும் தேவர்களின் துயரைப் போக்க அவ்விஷத்தை உண்டார். அதனால் அவர்க்கு ஒன்றும் நேரவில்லை எனினும் ஒரு விளையாட்டை நிகழ்த்தினார். அவ்விஷம் அவரைத் தாக்கியது போல், மயங்குவது போல் உமா தேவியின் முன்பு மௌனமாய் உறங்குவது போல் இருந்தார்.  இதனைக் கண்ட தேவர்கள் அவரை அர்ச்சித்து அன்று முழுவதும் உறக்கம், உணவின்றி இருந்தனர்.  அந்தத் திதியை நாம் ஏகாதசி என்போம். மறுநாளாகிய துவாதசியில் தேவர்கள் பாராயணஞ் செய்தனர். அதற்கு மேற்ப்பட்ட திதியான திரயோதசியில் சிவயபெருமான் சூலம், உடுக்கை சகிதம் ஒரு சாமகாலம் திருநடனம் செய்தார். அந்த காலத்தை நாம் பிரதோஷம் என்போம். அதாவது பதினைந்து தினங்களுக்கொருமுறை வரும் திரயோதசியை நாம் மாத பிரதோஷம் என்றும், வருடத்திற்கொருமுறை வரும் மகா சிவராத்திரியை வருடப் பிரதோஷம் என்றும், தினசரி மாலை முடிந்து இரவு ஆரம்பிக்கும் நேரத்தையும் நாம் பிரதோஷ காலமாகக கொள்ளலாம்.

சிவபெருமான் நிருத்தம்(நிருத்தம் - நடனம்) செய்வதைக் கண்ட தேவர்கள் மனம் மகிழ்ந்தனர். தனது கரங்களை சிரத்திற்கு மேல் தூக்கி சிவசிவ என்று   ஆர்ப்பரித்தனர்.  ஆடினர், பாடினர், தேவர்கள் அவர் நடனத்திற்கு ஏற்றவாறு வாத்தியங்களும், விஷ்ணு மிருதங்கமும் வாசித்தனர். பிரதோஷ காலத்தில் சிவபெருமான் நடனம்  ஆடியதால் அவரது பெயர் சந்த்யாந்ருத்த மூர்த்தி என்றானது. அவரை தரிசிக்க  மதுரை செல்ல வேண்டும்.  சதாசிவமூர்த்தியின் உச்சியில் அமைந்துள்ள ஈசான  முகத்திலிருந்து தோன்றிய வடிவமே நடராஜமூர்த்தி யாவார். அவரது வடிவமே சந்த்யாந்ருத்த மூர்த்தி போன்ற பல வடிவமாகப் பறந்து விரிந்தது. மதுரை வெள்ளியம்பலத்தில் உள்ள இவரை வணங்குவோமானால் நம் தொழில்களை காப்பதுடன் பலகலைகளில் சிறப்பு பெற உதவுவார்.  செந்தாமரையால் அர்ச்சனையும், தேங்காய் சாத நைவேத்தியமும் திங்கள், புதன் கிழமை மாலையில் செய்ய தடங்கள் அகழும், விரோதிகள்  ஒழிவர். நன்மை பாராட்டுவர்.  மதுரை நடராஜ பெருமானுக்கு பன்னீரால் அபிசேகம் செய்தால் கல்வியறிவு  மேன்மையடையும் என்பது ஐதீகம்.
Title: Re: 64 சிவ வடிவங்கள்
Post by: Anu on March 22, 2012, 02:48:08 PM
16. சதா நிருத்த மூர்த்தி

சிவபெருமான் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் எனும் பஞ்சாட்சரத்தையே தன் மேனியாகக் கொண்டு இருப்பவர். அவரது மூன்று கரங்களும், இருபாதங்களும் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்  ஆகிய  ஐந்து  செயல்களை செய்கிறது. அது எப்படியெனில்  டமருகம் தாங்கிய கரத்தினால் படைத்தலும், அமைந்த கரத்தினால் காத்தலும், மழு தாங்கிய கரத்தினால்  அழித்தலும், முயலகன் முதுகில் ஊன்றிய திருப்பாதங்களால்  மறைத்தலும், அனவரத நடனம் புரியும்  அடிப் பாதத்தினால்  அருளலும் புரிகின்றார்.

மேலும் உலக உயிர்கள் அனைத்தும் எங்கும் நிறைந்துள்ள  இறைவனுடன் ஐக்கியமாவதைக் குறிக்கிறது. இந்த நடனத்தை இடது புறமாக நின்று தரிசிக்கும் உமாதேவியாரின்  தோற்றம். சிவபெருமான் திருத்தக் கோலம் கொண்டு நடனம் புரியும் திருவடியில் நகரமும், திருவயிற்றின் மீது  ம கரமும், திருத்தோளின் மீது சி கரமும், திருமுகத்தில் வா கரமும், திருமுடியின் மீது ய கரமும் கொண்டு கருணையால் இயற்றினார். சிவபெருமான் பல காரணங்களால் பல முறை நடனம் புரிந்துள்ளார்.  இருப்பினும்  உமாதேவியார் தரிசிக்கும் நிலையில்  தேவர்கள், சிவகணங்கள்  நத்திதேவர் போன்றவர்களோடும், இசைவாத்தியங்களோடும், பஞ்சாட்சரமேனியோடு எப்பொழுதும் திருநடனம் புரிந்து கொண்டே இருப்பதால் இவரது பெயர்  சதா நிருத்த மூர்த்தி யாகும்.

சிதம்பரத்திலுள்ள பொன்னம்பலத்தில்  சிவபெருமான் எப்பொழுதும் ஆனந்த தாண்டவம்  ஆடிக்கொண்டேயுள்ளார். எங்கெங்கெலாம் நடராஜர் இருப்பினும் அவர்களனைவரும் இரவில் இங்கு வருவதாக ஐதீகம். எனவே இத்தலத்தில்  நடராஜ பெருமானுக்கு செய்ய வேண்டிய பரிகாரங்களை  செய்யலாம். இறைவனைக் கூத்தபிரான் என்றும், இறைவியை சிவகாம சுந்தரி என்றும் அழைப்பர். கவியாற்றுவதற்கும், வாதப் போர்புரிவதற்கும், தடைபெற்ற தேர் திருவிழா மறுபடியும் நடைபெறவும், இவரை வணங்கினால் தடை நீங்கி நடைபெறும் என்பது கண் கூடு.  இவருக்கு  முல்லைப்பூ  அர்ச்சனையும், வெண்பொங்கல் நைவேத்தியமும் திங்கள், வியாழக் கிழமைகளில் செய்ய விரோதியும் நண்பனாவான். மேலும் இங்குள்ள கூத்தப்பிரானுக்கு   அன்ன அபிசேகம் செய்ய கைவிட் அரசுரிமையும்  கிடைக்கும்.
Title: Re: 64 சிவ வடிவங்கள்
Post by: Anu on March 22, 2012, 02:49:13 PM
17. சண்ட தாண்டவ மூர்த்தி

திருவாலங்காட்டில் மகிமையை உணர்ந்த  சுனந்த முனிவர் அங்கு தாண்டவ நடத்தைக் காட்ட வேண்டிய தவமியற்றினார். அப்போது சிவபெருமானின் கைவிரலில்  உள்ள பாம்பு அவரது  திருவிரலில்  விஷம் கக்கியது. இதனைக் கண்ட இடபம் நீ செய்த தீமைக்காக  திருக்கைலையை விட்டு நீங்குமாறு  கார்கோடகனிடம்  கூறியது. கார்கோடகனும் பயந்து சிவனிடம்  முறையிட்டது. உடன் சிவபெருமான்  திருவாலங்காட்டில்  தவமியற்றும் சுனந்தருடன்  சேர்ந்து  சண்டதாண்டவத்தை தரிசித்த உடன் கைலை வருவாயாக என்றார்.  திருவாலங்காடு சென்ற கார்கோடகன் சுனந்தருடன் சேர்ந்து தவமியற்றியது. அப்போது சும்பன், நிசும்பன் எனும் இரு அசுரர்கள்  அனைவரையும் கொடுமைபடுத்தி வந்தார்கள்.  இதனைக் கண்ட தேவர்கள் பார்வதி தேவியிடம் முறையிட்டனர். பார்வதியும்  சப்தமாதர்கள், சிவகணங்களுடன் சாமுண்டி  என்ற சக்தியாக மாறி  அவர்கள் இருவரையும் கொன்றனர்.   அவர்களிருவரின் சகோதரியான குரோதி  என்பவளின்  மகன் இரத்த பீசன்.

அவனது ஒவ்வொரு சொட்டு இரத்தமும் நிலத்தில் விழுந்தால்  அதுவொரு இரத்தபீசனாக மாறீவிடும். இத்தகைய வரம் பெற்ற அவனை அழிக்க வேண்டி பார்வதி காளி தேவியை தோற்றுவித்தாள். காளி அவனது ஒரு சொட்டு இரத்தம் கூட நிலத்தில் சிந்த விடாமல் பருகினாள். போர் நல்லபடியாக முடிந்தது. பார்வதி சண்டியாகிய காளி தேவி சிவபெருமானிடம் நடனம்  செய்து அவருடன் வசிக்கும் வரத்தையும் வழங்கிவிட்டு சென்றார்.  அசுரனின் மாமிசத்தையும், இரத்தத்தையும்  குடித்ததால் காளிதேவி யாருக்கும் அடங்காமல்  வனங்களில்  அரசாட்சி புரிந்து வந்தார்.  அவ்வாறே  திருவாலங்காடு  வந்து சேர்ந்தார். அங்கு வந்த காளி அட்டகாசத்தை ஆரம்பித்தார்.  இச் செய்தி முனிவர் மூலம் நாரதரிடம் தெரிவிக்கப் பட்டது.  நாரதர் மூலம் சிவபெருமானிடம் தெரிவிக்கப்பட்டது. சிவபெருமான் உடன் பைரவராக மாறி போர் புரிந்தார்.  காளி தேவி தோற்றுவிட்டார். தோற்றக் காளி நடனப் போர்புரிய பைரவரை அழைத்தார். பைரவரும் சம்மதித்து தேவர்களின் வாத்திய இசைக்கு ஏற்ப  நடனம் ஆடினார். நவரசங்கள்  ததும்ப இருவரும் சலைக்காமல் ஆடினர்.  இந்த சண்ட தாண்டவம் நடை பெறும் போது சிவனின்  குண்டலம் கீழே விழ, அதைத்தன் காலால் எடுத்துக் காதில் பொருத்தினார் போட்டியாக ஆடிய காளி வெட்கத்துடன் தன் தோல்வியை ஒப்புக்கொண்டார்.

காளியின் செருக்கும்  அழிந்தது. சுனந்தர், கார்கோடகன், உற்பட அனைத்து தேவர், முனிவர்களும் எல்லாக் காலமும்  காணும்படி  தாண்டவக் கோலத்தை அருளினார்.  இக்காரணத்தால்  அவரை சண்ட தாண்டவ மூர்த்தி என்கிறோம்.  கும்பகோணம் பேருந்து நிலையம் அருகேயுள்ளது கீழ்க் கோட்டம். இறைவன் பெயர்  நாகநாதர், இறைவி பெயர்  பெரியநாயகி  ஆவார். இங்குள்ள நடராஜ மண்டபத்தை நாம் பேரம்பலம்  என்போம்.  இங்கமைந்த மூர்த்தியை வணங்கி சிவ தியானம் செய்தால்  தாண்டவ ஒலியைக் கேட்கலாம்.  முல்லைப்பூ   அர்ச்சனையும், வெண்சாத நைவேத்தியமும் சோமவாரங்களில் கொடுத்தோமானால்  நடனம், பாட்டு, நட்டுவாங்கம், என அனைத்தும்   கைவரும். மேலும் இங்குள்ள மூலவரை கும்பநீரால்  அபிசேகம் செய்து வழிபட்டால்  பிறவிப் பயன்  பெறமுடியும்.
Title: Re: 64 சிவ வடிவங்கள்
Post by: Anu on March 22, 2012, 02:50:12 PM
18. கங்காதர மூர்த்தி

திருக்கைலையிலுள்ள ஓரு தோட்டத்தில் சிவபெருமான் நடைபயின்றுக் கொண்டிருந்தார். பார்வதி தேவி ஓசைப்படாமல் சென்று  அவரது இரு கண்களையும் விளையாட்டாய் பற்றினார். உடன் உலக உயிர்கள் அனைத்திற்கும் அளவிலாத  துன்பம் ஏற்பட்டது. அதனால் உலகம் முழுவதும்  பேரிருள் சூழ்ந்தது. இதனையறிந்த சிவபெருமான்  தனது நெற்றிக்கண்ணைத் திறந்து அனைவரையும் காத்தார். ஒளி வந்ததால் அனைத்து உயிர்களும் துன்பம் நீங்கி இன்பமடைந்தனர்.  அனைவரும் சிவபெருமானைப் போற்றினர். இதனைக் கேள்விப் பட்ட பார்வதி தேவி  அவசரமாக தன் கைகளை நொடிப்பொழுதில் எடுத்தார். இதனால் இவரது பத்து கைவிரலில்  இருந்த  வியர்வைத் துளிகள் பத்தும் கங்கையாக மாறி மூவுலம் முழுவதும் பரவி  பெருத்த சேதத்தையும், அழிவையும்  உண்டாக்கியது.  இதனைக் கண்ட முவுலகத்தினரும் சிவபெருமானிடம் முறையிட்டனர்.

சிவபெருமானும் அவ்வெள்ளத்தை  அடக்கி  அதனை  தனது சிரசில் ஓர் மயிர் முனையில் தரித்தார். இதனைக்கண்ட அனைவரும்  சிவபெருமானைப் போற்றித் துதித்தனர்.  நான்முகன், இந்திரன், திருமால்  ஆகிய  மூவரும் சிவபெருமானிடம் சென்று நாதா பார்வதி தேவியின்  கைவிரல் வியர்வையால்  உண்டான கங்கை பெரும் புனிதமானது, அதை உங்கள் முடியில் தரித்ததால் அது மேலும் புனிதமடைகிறது. அத்தகைய புனிதப் பொருளை  எங்களுக்கும் கொஞ்சம் கொடுத்தருள வேண்டும் என்றனர். அதன்படியே  இந்திரன் தனது அமராவதி நகருக்கும், நான்முகன் தனது மனோவதி நகருக்கும், திருமால் தனது வைகுண்டத்திற்கும் கங்கையைக் கொண்டு சேர்த்தனர்.

கங்கையின் வெள்ளத்தையும், வேகத்தையும் குறைத்து தனது சடைமுடியில்  தாங்கியிருப்பதால்  சிவபெருமானுக்கு  கங்காதர மூர்த்தி  என்ற பெயர் ஏற்பட்டது.  கங்காதர மூர்த்தியை தரிசிக்க இமயத்திற்கு தான் செல்ல வேண்டும். இமயமலையே கங்காதர மூர்த்தியின் இருப்பிடமாகும். அங்கு சென்று கங்காதர மூர்த்தியை மானசீகமாய் வணங்கி அங்கு கிடைக்கும்  கங்கை நீரை வீட்டிற்கு  எடுத்து வந்து தெளிக்க  இடம் புனிதமாகும்.  கங்காதர மூர்த்தியை மல்லிப்பூ  அர்ச்சனையும்,  பாலில் செய்த  இனிப்பு பண்ட நைவேத்தியமும் சோமவாரத்தில் சந்தியா காலத்தில் செய்தோமானால்  செல்வசெழிப்பும் இனியோரு பிறவி இல்லா நிலையும்  ஏற்படும்.  இந்த  கங்கை  நீரை வீட்டில்  கலசத்தில்  வைத்து வழிபட  லஷ்மி கடாட்சம் கிடைக்கும்.   
Title: Re: 64 சிவ வடிவங்கள்
Post by: Anu on March 22, 2012, 02:51:12 PM
19. கங்கா விசர்ஜன மூர்த்தி

சகரன் எனும் அரசன் அயோத்தி நகரை ஆண்டுவந்தான். அவன் அஸ்வமேத யாகம் செய்ய ஒரு  குதிரையைக் கொணர்ந்தான். அக்குதிரை  இருந்தால்  தானே யாகம் நடைபெறும் அதைத் தடுக்க வேண்டி குதிரையை பாதாளத்தில் கபில முனிவர் அருகே கட்டி வைத்தான்.  அயோத்தி மன்னன் குதிரையைத்தேடி கொண்டுவரும் படி தமது அறுபதினாயிரம் மக்களையும் பணிந்தார். பாதாளத்தில் முனிவர் அருகே குதிரைக் கண்ட அவர்கள்  முனிவரே  கள்வன் என முடிவு கட்டினர். உடன் முனிவர்  கண்விழிக்க, அனைவரும் சாம்பலானாகள். இச் செய்தி கேள்விப்பட்ட மன்னன் தன் மகன் அஞ்சுமானை அனுப்பினார். அஞ்சுமானும் கபிலரிடம் சென்று உண்மையைக் கூறி குதிரையை மீட்டு தன் தந்தையின் யாகம் நிøவேற உதவினான்.  அவனது வம்சாவளியிலே வந்தவனே பகிரதன் ஆவான். அவன் தனது முன்னோர்க்கு ஏற்பட்ட நிலையை எண்ணி நான்முகனை நோக்கி தவமிருந்தான். நான்முகன் தோன்றி கங்கையால் உன் முன்னோர்கள்  மோட்சமடைவர் எவனே  சிவனை நோக்கி தவமிக்க சொல்லி மறைந்தார். சிவனை நோக்கி தவமிருந்தான் பகிரதன்.

சிவபெருமான் கேட்ட வரம் கொடுத்தார். பின் கங்கையை நோக்கி தவமிருந்தான். கங்கையோ தன்னை அடக்க சிவபெருமானால் மட்டுமே முடியும் எனவே மறுபடியும் சிவனை நோக்கி தவமியற்றும் படி கூறினார். மறுபடியும் சிவன் கேட்ட வரம் கொடுத்தார், உடன் கங்கை வந்தார். சிவபெருமான் அவரை  அடக்கும் பொருட்டு தனது தலை முடியில்  அணிந்தார். இதனையறியா பகிரதன் பதறினார்.  பின் சிவபெருமான் தன் தலை முடியில் இருந்த கங்கையில் இருந்து சிலதுளிகள் பகிரதன் கைகளில் விட்டார். அந்த சில துளிகளும்  வேகத்துடன் வந்து ஐந்து முனிவர்கள் இயற்றிய யாகத்தை அழித்தது, அதனால் அம்முனிவர்கள்  கங்கையை தம் உள்ளங்கையில் வாங்கி உட்கொண்டனர்.  பகிரதன் கங்கையைக் காணாது திகைத்தான். பின் முனிவர்களை வணங்கி நடந்ததைச் சொல்லி கங்கையைத் திருப்பிதர வேண்டினான். அம்முனிவர்களும் இசைந்து தம் செவி வழியாக விட்டனர். அதனால் கங்கைக்கு ஜானவி என்ற பெயர் ஏற்பட்டது. பகிரதன்  கங்கையை  தம் முன்னோர்களின் சாம்பல் மீது தெளிக்க  அவர்கள் சொர்க்கம் அடைந்தனர்.

பகிரதன் கொண்டு வந்ததால் கங்கைக்கு பகீரதி என்ற பெயர் ஏற்பட்டது. கங்கையை தனது சடையில் ஏற்று வழிபாட்டிற்கே சிறு துளி  கொடுத்து வழி காட்டியதால் சிவபெருமானுக்கு  கங்கா விசர்ஜன மூர்த்தி  என்ற பெயர்  ஏற்பட்டது.  அவரை தரிசிக்க கேதார் நாத் செல்ல வேண்டும். ஆறு மாத காலம் கோயிலில்  வழிபாடுகள் நடைபெறும்.   பனிமழையால்  ஆறுமாதம் மூடப்பட்டிருக்கும்.  உமை  சிவனிடம் இடபாகம் பெற்ற தலமே  கோதார்நாத்  ஆகும்.  இங்கு கோயில் கொண்டுள்ள கோதாரேஸ்வரரை வணங்கி  அங்குள்ள  புனித நீரை வீட்டில் நடைபெறும்  சுபகாரியங்களுக்கு   பயன்படுத்தினால்  சுபமாகும். வெண்தாமரை  அர்ச்சனையும்,  எள்ளோதரை நைவேத்தியமும்  அமாவாசை, திங்கள் கிழமைகளில்  செய்தோமானால்  பிதுர் தோஷம்  சரியாகும். அவர்கள் சொர்க்கம் செல்வர்.  மேலும் இங்கிருந்து கொண்டு செல்லும் நீரை வெள்ளிக்கலசத்தில்  வைத்து பூஜிக்க குபேர சம்பத்து கிட்டும் என்பது ஐதீகம்.
Title: Re: 64 சிவ வடிவங்கள்
Post by: Anu on March 22, 2012, 02:52:25 PM
20. திரிபுராந்தக மூர்த்தி

தாரகாசுரனின் மூன்று மகன்களும் நான்முகனை நோக்கி நெடுங்காலம் தவமியற்றி வந்தனர். நான்முகனும் காட்சிக் கொடுத்தார் உடன் அவர்கள் என்றும்  அழியாத வரம் வேண்டும் என்றனர். உடன் நான்முகனோ அது முடியாத காரியம்  அனைவரும் அனைவரும் ஒரு நாள் அழிந்தே  தீருவோம்.  எனவே மோட்சமாவது  கேளுங்கள் கிடைக்கும். இவ்வுலகில் என்றும் அழியாமல் இருப்பவர் சிவபெருமான் மட்டுமே என்றார். உடனே அம்மூவரும்  அப்படியானால்  பொன், வெள்ளி, இரும்பினால்  ஆன சுவருடைய  முப்புரம் வேண்டும். அவை நாங்கள் நினைத்த இடத்திற்கு மாற வேண்டும்.  அவற்றை எங்களையும் சிவபெருமான் தவிர வேறொருவர் அழிக்க முடியாத வரத்தை கேட்டனர்.  நான்முகனும் கொடுத்து விட்டு மறைந்தார். அம்மூவரும் தங்கள் சுயரூபத்தை சிவனிடம் காட்டாமல்  மற்ற அனைவரிடத்திலும்  காட்டினர். தேவர்கள் அவர்களது தொல்லை தாளாமல்  திருமாலிடமும், இந்திரனிடமும் முறையிட, அவர்கள் அசுரர்களிடம்  தோற்று திரும்பினர். பின்னர் சிவனை நோக்கி தவமிருந்தனர். சிவபெருமான் அவர்கள்  தமது அடியார்  எனவேக் கொல்ல முடியாது என்றார்.  மீண்டும் கடுமையான தவத்தை  திருமால், இந்திரன், நரதர் மேற்க்கொண்டனர்.  உடன் சிவபெருமான்  அப்படியானால்  தேர் முதலான பேர் கருவிகளைத் தயார் செய்யும் படி தேவர்களிடம் கூறினார். 

தேவர்களும் அவ்வாறே தயார் செய்தனர்.  தேரில் மந்திர மலையை அச்சாகவும்,  சந்திர, சூரியர் சக்கரமாகவும், நதிகள் தேர்க் கொடியாகவும், அஷ்டபர்வதங்கள் தேரின் தூண்களாகவும், புண்ணிய நதிகள் சாமரம் வீசவும், தேவகணத்தினர் வாத்தியங்கள் இசைத்தப்படி  உடன் வர தேர் தயாரானது. சிவபெருமான்  பார்வதியுடன்  இடபவாகணத்தில்  இருந்து தேரில் கால் எடுத்து வைத்தவுடன்  தேரின் அச்சு முறிந்தது. உடன் இடபமாக மாறி திருமால் தேரைத் தாங்கினார்.  ஆனாலும் தேர் மேலும் சாய அனைவரும்  முதற்கடவுளை வேண்ட,  தேர் பழைய படி சரியானது. பின் தேவகணங்கள்  படைசூழ, இந்திரன், திருமால், முருகன்,  வினாயகன் என அனைவரும் தங்களது வாகனம் ஏறி  முடிவில் அனைவரின்  எண்ணப்படி மேருமலையை வில்லாகக் கொண்டு, வாசுகியை  அம்பாகக் கொண்டு  நாணேற்றினார். பின் திடிரென அவற்றை வைத்து விட்டு முப்புறங்களையும்  பார்த்து ஒரு புன்னகைப் புரிந்தார்.  முப்புறங்களும்  எரிந்து சாம்பலாயின.

உடன் அசுரர்கள் மூவரும் ( தாரகாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி) சிவபெருமானிடம் மன்னிப்புப் கேட்க. அவரும்  அவர்களை மன்னித்து துவார பாலகராக வைத்துக் கொண்டார். தேவர்களின்  துயர்துடைத்து முப்புரங்களையும் எரித்ததால்  சிவபெருமானுக்கு  திரிபு ராந்தக மூர்த்தி  என்னும் பெயர் ஏற்பட்டது.  இவரை தரிசிக்க நாம் செல்ல வேணடிய தலம் கடலூரில் உள்ள  திருஅதிகையாகும். இங்குள்ள  இறைவன் பெயர் திரிபுராந்தக மூர்த்தி, அதிகைநாதர் என்பதும், இறைவி பெயர்  திரிபுரசுந்தரியாகும். இவர்க்கு கெடில  நதியால்     அபிசேகமும்  வில்வார்ச்சனையும் செய்ய பகைவர் பகை ஒழிந்து  நண்பராவார்கள். சூலை நோய் இருப்பின்  இந்த  சுவாமியை  வழிபட  நோய் குறைந்து  உடல் நலம் சீராகும். மேலும் இங்குள்ள  சிவபெருமானுக்கு  திருமஞ்சனத்தூள்  அபிசேகம்  செய்ய  எவ்வகை  நோயும் குணமடையும் என்பது  ஐதீகம்.
Title: Re: 64 சிவ வடிவங்கள்
Post by: Anu on March 22, 2012, 02:53:33 PM
21. கல்யாண சுந்தர மூர்த்தி

திருக்கைலையில்  அனைத்து  தேவர்குழாமுடன்  சிவபெருமான்  வீற்றிருக்கையில்  பார்வதி  தேவியார் எழுந்து இறைமுன்  சென்று  தக்கன்  மகளால்  தாட்சாயிணி  என்ற பெயர்  பெற்றேன். அந்த அவப்பெயரை மாற்ற தங்கள் தயவு வேண்டும் என்றார்.  உடன்  சிவபெருமானும்  பார்வதி பர்வத மன்னன்  உன்னை  மகளாக அடைய  தவம்  இயற்றுகிறான். நீ அவரிடம்  குழந்தையாக  பிறப்பாயாக. பிறகு உன்னை நான் மணமுடிப்பேன் என்றார். அதன்படி பர்வத மன்னரிடம் மூன்று  வயதுள்ள குழந்தையாக  வந்து சேர்ந்தார். அக்குழந்தையை  அவர்கள் சீராட்டி  வளர்த்தனர். பார்வதிதேவி   அருகில் இல்லாததால்  சிவபெருமான்  யோகத்தில்  இருந்தார். அதனால் உலக இயக்கம் ஸ்தம்பித்தது. உடன் தேவர்களின்  ஆலோசனைப்படி  மன்மதன்  சிவபெருமானின் யோகத்தைக் கலைக்க  பாணம் விட்டார். இதனால் கோபமுற்ற  சிவபெருமான்  அவரை நெற்றிக் கண்ணால் எரித்தார். இதனால் கவலையுற்ற  ரதி சிவனிடம்  சரணடைந்தார். அவரும் பொருத்திருக்கச் சொன்னார்.

இதற்கிடையே பர்வத ராஜனிடம் வளரும் பார்வதிதேவி சிவனை மணாளனாக  அடைய வேண்டித் தவமிருந்தார். பார்வதி முன் அந்தணராகத்      தோன்றி  தன்னை மணம் புரியும் படி வேண்டினார். பார்வதி அதை மறுத்து  சிவபெருமானை  மணம் செய்யவே தான் தவமிருப்பதாகக் கூறினார். உடன் அந்தண வேடம் கலைந்து இடபத்துடன் சிவபெருமான் காட்சிக்கொடுத்தார். விரைவில்  வந்து மணம் புரிவேன் என்று கூறி மறைந்தார்.  பார்வதி தேவி தன் தந்தையிடம் நடந்தவற்றைக் கூறினார். அங்கே சிவபெருமான் சப்தரிஷிகளிடம்  தனக்கு மலையரசன் மகளை மணம் பேசச் சொன்னார்.  இருவீட்டாரும் பேசி திருமணத்திற்கு நாள் குறித்தனர். பங்குனி உத்திர தினம் மணநாளாக குறிக்கப்பட்டது. தேவருலகத்தினர் படைசூழ சிவபெருமான் பர்வதம் விரைந்தார். அனைவரும் அங்கே குவிந்ததால் வடதிசை தாழ்ந்தது. உடன் சிவபெருமான்  அகத்திய முனிவரை தென்திசை சென்று நிற்கும் படி வேண்டினார். அவர் தயங்கவும் உமக்கு எம் திருமணக்கோலத்தை காட்டுவோம் எனவே தென்திசை செல்க என்று பணிந்தார். அகத்தியரும் அவ்வாறு சென்றார். உடன் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. அப்பொழுது ரதி தனது கணவனை உயிர்ப்பிக்க வேண்டினார்.

சிவபெருமானும் அவ்வாறே மன்மதனை உயிர்ப்பித்தார். பின் ரதியின் கண்களுக்கு மட்டும் உருவத்துடனும், மற்றொர்க்கு அருபமாகவும்  காட்சியளிக்கும் படி வேண்டினார். பின் அவரவர், அவரவர் இருப்பிடம் திரும்பினர். பார்வதி தேவியை திருமணம் செய்ய சிவபெருமான் எடுத்த கோலமே  கல்யாண சுந்தர மூர்த்தியாகும்.  அவரை தரிசிக்க தாம் செல்ல வேண்டிய தலம் திருவாரூர் அருகேயுள்ள திருவீழிமலையாகும். இங்கு மூலவர் பெயர்  விழியழகர், இறைவி பெயர்  சுந்தர குஜாம்பிகை யாகும். இங்கு உற்சவ மூர்த்தியாக  கல்யாண சுந்தரர் காட்சியளிக்கிறார்.  இங்குள்ள கல்யாண சுந்தரருக்கு அர்ச்சனை செய்த  மாங்கல்யத்தை தானமாகப் பெற, கொடுக்க திருமணம் தங்குதடையின்றி  நடைபெறும்.  மேலும் பிரதோஷ தரிசனமும் சிறப்பானதாகும். மல்லிகைப்பூ  அர்ச்சனையும், சர்க்ககரைப் பொங்கல் நைவேத்தியமும்  திங்கள், குருவாரங்களில் கொடுக்க திருமணத்தடை விலகும். கணவன் மனைவி ஒற்றுமை ஓங்கும். மேலுமொரு சிறப்பாக கல்யாண சுந்தரருக்கு ரோஜாமாலை அணிவித்துப் பூச்செண்டு கொடுத்தால் கல்யாணம் இளம்பெண்களுக்கு கூடி வரும்.  இங்குள்ள மூலவரின் பின் புறம் சிவபெருமான்  உமை திருமணக்கோலம் உள்ளது.
Title: Re: 64 சிவ வடிவங்கள்
Post by: Anu on March 22, 2012, 02:54:40 PM
22. அர்த்த நாரீஸ்வர மூர்த்தி

திருக்கைலையில் சிவபெருமானை தரிசிக்க திருமால், நான்முகன், இந்திரன் என அனைத்தும் தேவருலகத்தினரும் திரண்டிருந்தனர். அவர்களை வரிசைப்படி நந்தி தேவர் அனுப்பிக் கொண்டிருந்தார்.  அனைவரும் பார்வதி தேவியையும், சிவபெருமானையும் தனித்தனியாக வணங்கி வேண்டும் வரங்களைப் பெற்றுச் சென்றனர்.  பின்னர் வந்த முனிகுமாரர்களில்  ஒருவரான பிருங்கி முனிவர் பார்வதி தேவியை சட்டைச் செய்யாமல்   சிவபெருமானை மட்டுமே வணங்கிய படிச் சென்றார். இதனைக் கண்ணுற்ற பார்வதிதேவி  அவரது உடலிலுள்ள சதையை  தனது மூச்சுக் காற்றால்   இழுத்துக் கொண்டார்.  இதனையும் சட்டை செய்யாத பிருங்கி முனிவர் எழும்பும் தோலுமாகவே சிவபெருமானை துதித்தார். சிவபெருமான் தன்னை மட்டும் வணங்கியதால்  பார்வதிதேவியின் திருவிளையாடல் என்பதை புரிந்து மேலும் ஒரு காலை முனிவருக்கு வழங்கினார். முனிவர் அகன்றவுடன் பார்வதி தேவி தான் தவமியற்றப் போவதாகக் கூறி கைலாயத்தை விட்டு நீங்கி வினாயகன், முருகன், சப்த மாதர்கள் படைசூழ ஒரு மலைச்சாரலில் உறுதியான தூண் மீது நின்றவாறு தவம் இயற்றினார். கடுமையான உறுதியான தவத்தால் மகிழ்ந்த சிவபெருமான் தனது படைபரிவாரங்களுடன் தேவி தவமியற்றும் இடத்திற்கு வந்தார்.  உடன் அவர் தேவி  உனக்கு என்ன வேண்டும் கேள் என்றார். உடன் தேவி இறைவா   நான் தனியாகவும் நீங்கள் தனியாகவும் இருப்பதால் தானே இந்தப் பிரச்சனை. எனவே தங்களது இடபாகமாக  நானிருக்கும்படியான வரத்தைத் தாருங்கள் என்றார்.

சிவபெருமானும் அவ்வாறே தந்து தனது இடப்பாகத்தில் தேவியை ஏந்தினார். வலப்பக்கம் சிவனுமாக, இடப்பக்கம் பார்வதியாக உள்ள திருக்கோலமே அர்த்த நாரீஸ்வர மூர்த்தி யாகும்.  அவரை தரிசிக்க நாம் செல்ல வேண்டிய தலம் திருக்கோடாகும். ஈரோடு  அருகேயுள்ள இத்தலம்  சிவபெருமானுடையது என்றாலும் இளைய பிள்ளையாரான முருகனுக்கு உகந்தது ஆகும். இங்குள்ள இறைவன் பெயர்  அர்த்த நாரீஸ்வரர், இறைவி பெயர் பாகம்பிரியாள் என்பதாகும்.  ஆணாகவும், பெண்ணாகவும் இங்குள்ள இறைவன் காட்சியளிக்கிறார். கணவன் - மணைவி இருவரும் ஒருவர்க்கு ஒருவர் விட்டுக்  கொடுத்து வாழவும், குடும்பத்தில் ஒற்றுமை, அமைதி நிலவவும் இந்த மூர்த்தியை வணங்கினால்  கைகூடும். வில்வ, தும்பை, கொன்றை மலர் அர்ச்சனையும், சர்க்கரைப் பொங்கல் (அல்லது) நெய்யன்ன நைவேத்தியமும், திங்கள், பிரதோஷ, பௌர்ணமி தினங்களில் கொடுக்க பிரிந்த தம்பதியர் ஒன்று சேர்வர் என்பது ஐதீகம். மேலும் இங்குள்ள சிவபெருமானுக்கு  பசும்பால்  அபிசேகம் செய்தால்  குடும்பம் ஒற்றுமையுடன் காணப்படும்.
Title: Re: 64 சிவ வடிவங்கள்
Post by: Anu on March 22, 2012, 02:55:54 PM
23. கஜயுக்த மூர்த்தி

கயாசுரன் எனும் அசுரன் காளமேகம் போன்றதொரு யானை உருவம் ஏற்றவன். அவன் மேருமலையின் மேல் நான்முகனை நினைத்து கடும்தவம் மேற்க்கொண்டான்.  உடன் நான்முகன் தோன்றினான் கயாசுரன் யாராலும்  அழிவில்லா  நிலையும் எதிலும்  வெற்றி கிடைக்கவும் வரம் கேட்டான். உடன் கிடைத்தது. ஆனால் சிவனை மட்டும்  எதிர்ப்பாயானால் நீ இறப்பாய்  என்ற கடுமையான தண்டனையும் கிடைத்தது. அவன் தனதுவேலைகளைக் காட்டத் தொடங்கினான். சிவபெருமானை விடுத்து அனைவரிடத்திலும் தன் தொல்லைகளையும், கொடுமைகளையும் தொடர்ந்தான். இந்திரனும் அவனிடம்  போரிட முடியாமல் தோற்றான்.  உடன்  அவனது வாகனமான ஐராவத்தின் வாலைப் பிடித்திழுத்து தூர எறிந்தான். பின் அமராவதி நகரை அழித்தான். அதோடு தன் குலத்தாரையும், இராட்சதக் கூட்டத்தினரையும் உலகமக்கள் அனைவரையும் கொடுமைப் படுத்தினான்.  பாதிக்கப்பட்டோர் சிவபெருமானிடம் சரணடைந்தனர். அவரைத் தேடி காசிக்கு சென்றனர். அங்கே யொரு ஆலயத்தில் சிவபெருமான் பார்வதி தேவியிடன் வீற்றிருந்தார்.  வந்தவர்கள் அனைவரும் சிவபெருமான்  முன்  இறைவா! எங்களைக் காக்க வேண்டும். நான்முகனிடம் அழியாவரம் வாங்கிய தயாசுரன்  இங்கு வந்து கொண்டுள்ளான்.  அவனை அழித்து எங்களைக் காக்க வேண்டும் என்று மன்றாடினர். பின்னாலேயே வந்த கயாசுரன் தான் எதிர்க்கக் கூடாதது சிவபெருமான் என்பதை  அக்கணத்தில்  மறந்தான். ஆலயவாசல் முன் நின்று  அனைவரும் பயப்படும் படியாக  கர்ண கொடுரமாக சத்தமிட்டான்.  இதனைக் கேட்டோர் சிவபெருமானைத் தழுவிக்கொண்டனர். அவர்களுக்கு ஆறுதல் கூறியபடியே  தேவகணத்தினரே பயப்படும் படியாகப் பெரிய வடிவம் எடுத்தார். அனைவரும் பயப்படும் படி கண்களின் வழியே தீ சுவாலைகள் தெரித்தது.

கயாசுரனை தனது திருவடியால் உதைக்க, அவன் கழிந்த கோலத்தில் உலகின் மீது விழுந்தான். மற்றொரு திருவடியால் அவனது  தலையை மிதித்து தொடையில் ஊன்றியவாறே  தனது நகங்களால்  பிளந்து அவனது தோலை கதறக் கதற உரித்திழுத்தார். அச்சமயத்தில் பார்வதி தேவியே அஞ்சினார்.  அவரது தோற்றத்தைக் கண்டோர் கண்ணொளி இழந்தனர். கயாசுரனின் தோலை தன் மீது போர்த்தி சாந்த மடைந்தார். கயாசுரனின் தொல்லை நீக்கப் பெற்றோர் நிம்மதியுடன் தங்களது இருப்பிடம் சென்றனர். கஜாசுரனுடன் சண்டையிட்டு  வென்றதால்  அவரது பெயர்  அவரது பெயர்  கஜயுக்த மூர்த்தி யாகும்.   அவரை தரிசிக்க திருவழுவுர் செல்ல வேண்டும்.  இங்கே  தாரகாபுரத்து  முனிவர்கள்  யாகத்தில் தோன்றிய  யானையைச்  சிவனாரே  அழிக்க ஏவினார். சிவபெருமான் இதனால் அணிமாசித்தி மூலம் யானையின் உடலில் சென்று, பின் உடலைக் கிழித்தப் படி வெளி வந்தார்.  எனவே அவரை  கஜசம்கார மூர்த்தி என்றும்  அழைப்போம். இங்குள்ள கஜசம்ஹார மூர்த்திக்கு  அபிசேக ஆராதனை செய்ய  சனீஸ்வர தோஷம் விலகும். ஏழரை சனியின்  கொடுமையில் இருந்து தப்பிக்கலாம். 12 அமாவாசை  காலையில் விஸ்வ ரூப தரிசனம் பார்த்தால்  குழந்தை  பாக்கியம் கிட்டும். அருகம்புல் அர்ச்சனையும், பாயாச நைவேத்தியமும் சோம வாரங்களில்  கொடுக்க   எதிரி தொல்லை தீரும். கஜசம்கார மூர்த்திக்கு  எழுமிச்சை சாறு அபிசேகம் செய்தால் மரண பயம் தீரும்.