Author Topic: குரங்கிலிருந்து பிறந்தவன்  (Read 794 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
குரங்கிலிருந்து பிறந்தவன்


ஆதாம் ஏவாள் என்று யாரும் படைக்கப்படவில்லை, கடவுள் என்ற ஒன்று கிடையவே கிடையாது, மனிதன் குரங்கிலிருந்து பிறந்தான், அல்லது உருவானான் என்போர் சிலர். குரங்கிலிருந்து பிறந்ததாலே குரங்குந்தான் கடவுள் என்றும் சொல்வோரும் உண்டு.

பல கோடி ஆண்டுகளாய் மனித இனம் பூமியில் வாழ்ந்து வருவதாக சொன்னாலும், இன்றுவரை மனிதனின் செய்கைகள் யாவும் குரங்கைபோலத்தான் இருந்து வருகிறது, குரங்கிற்கும் மனிதனுக்கும் உள்ள மிகப் பெரிய வேற்றுமை குரங்குகள் கூட்டம் கூட்டமாக வாழ்ந்தாலும் அடிக்கடி சண்டை போடுவதை பார்க்க முடிவதில்லை.

தனியொரு மனிதனுக்கே தான் அடுத்த நிமிடம் யாரிடம் எப்படி நடந்து கொள்வான் என்பது தெரியாது. பல விதத்தில் குரங்குகள் மனிதனை விட தன்னை சுற்றியுள்ள குரங்குகளிடம் நேயமாக இருப்பதை காணமுடிகிறது. மனிதன் என்னதான் புதுமைகளை கண்டுபிடித்து உயர்ந்தாலும் அடிப்படை குணங்களை ஒருபோதும் மாற்றிக்கொள்வது முடியாத அல்லது இயலாத ஒன்றாகவே இருந்து வருகிறது.

குரங்குக்கு கோபம் வந்தால் செய்யும் அட்டகாசத்தை சகித்துக் கொள்ள முடியும் மனிதனின் அட்டகாசம் சகிப்புத்தன்மையை அழித்துவிடுகிறது. மனிதனின் அட்டகாசங்களை அக்கிரமங்களை கவனிக்கும் போது, என்னதான் பரிணாம வளர்ச்சியில் மாற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும் குரங்கின் வம்சாவளியாக மனிதன் இருந்திருக்க கூடும் என்று தோன்றுவதே இல்லை.