Author Topic: இந்தியர்களின் சின்சியாரிட்டி  (Read 695 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
இந்தியர்களின் சின்சியாரிட்டி


தனியார் நிறுவன ஊழியராக இருந்தாலும் அரசு ஊழியராக இருந்தாலும் வேலை கிடைக்காமல் வேலைக்காக அலைந்து திரியும் போது ஒரு வேலை கிடைத்து விடாதா என ஏங்கி தவிக்கும் போது இருக்கும் சராசரி இந்தியர்களின் குணா அதிசயங்கள்:

* *வேலை கொடுக்கும் அதிகாரி முதல் நிறுவனத்தின் துப்புரவுத் தொழிலாளி வரையில் காலை வந்தனம் முதலகொண்டு எல்லாவித இந்திய மரியாதைகளும் கொடுப்பார்.

**தன்னிடம் இருக்கும் உடை பழயதாய் இருந்தாலும் அதை சுத்தமாக்கி முடிந்தால் இஸ்திரி போட்டு உடுத்துவார்.

**அதிகாரி எத்தனை மணிக்கு எங்கே வந்து பார்க்க சொல்லுகிறாரோ அங்கே அரைமணிக்கு முன்பே சென்று காத்திருந்து பார்த்துவிடுவார்.

**வேலைகிடைத்தபின் வேலைக்கு மிகச்சரியான நேரத்திற்கு போய்விடுவார். மாலையில் அதிகாரி எவ்வளவு நேரம் அலுவலகத்தில் வேலை செய்ய சொன்னாலும் செய்வார்.

**அனாவசியமாக விடுப்பு எடுக்கமாட்டார்.

**வேலை நிரந்தரமாகியப் பின் மேலே சொன்னதற்கும் அதிகமான எதிர்மறையான ஆளாகி, வேலைக் கொடுத்தவர் தெருவில் நின்றிருந்த இவரை வழிகட்டாயப்படுத்தி வேலையை கொடுத்து செய்யச் சொன்னது போல வேலையை செய்துகொண்டிருப்பார்.

ஒரு நாட்டின் முனேற்றம் என்பதைவிட ஒரு தனிமனிதனின் சுயநலம் நாட்டின் தலையெழுத்தை மாற்றும் சக்தி வாய்ந்தது, செய்யும் தொழிலே தெய்வம் என்று இருக்காவிட்டாலும் வாங்கும் சம்பளத்திற்காவது தனது வேலையை ஒழுங்காக செய்வோரின் எண்ணிக்கை நமது நாட்டில் மிகவும் குறைவு.

சுயலவாதிகள் பெருகுவதாலேயே கள்ளநோட்டு புழக்கம், திருட்டு கொலை, கொள்ளை, இன்னும் பல சமுதாய விரோதிகள் உருவாகவும் காரணமாகி வருகிறது. உழைத்து சம்பாதித்து பசியாற சாப்பிட்டால் போதும் என்ற நிலைமாறி, பகட்டு மற்றும் ஆடம்பர வாழ்க்கை வசதிகளை விரும்பி லஞ்சம் நூதன மோசடி போன்ற புதிய வகை சமுதாய விரோத செய்கைகள் அதிகரித்து வருகின்றது.

காணிநிலம் வேண்டும் என்று பாரதி விரும்பியதைப் போல விரும்பியிருந்தால் பல லட்சகணக்கானோர் அமெரிக்கா மற்றும் பல மேலை நாடுகளுக்கும் வேலைத் தேடி பயணம் செய்திருக்க வேண்டியது இல்லை. வாழ்வாதாரங்களை மோகிப்பது அவசியத்திற்கு மேல் போனால் அது அனாவசியமாகிவிடுகிறது.

மோகிப்பது கிடைத்துவிடும்போது மனம் வேறு ஒன்றின் மீது மோகம் கொள்ள ஆரம்பிக்கிறது, தேடல் என்பதன் விளைவு பாதை மாறி போகவும் செய்கிறது. ஒரு நாட்டில் தீயவர்களின் கூட்டம் அதிகரிக்கும் போது சுபீட்சம் தொலைந்து போகிறது, வளம் குறைந்து விடுகிறது, மழை பொய்த்து விடுகிறது, தெய்வம் மனிதருக்கு கஷ்டத்தை கொடுப்பதில்லை, மாறாக தீயவர்களின் தீயச் செயலாலே பஞ்சமும் பசியும் வறுமையும் மேலோங்கி நாடு தன் செழுமையை இழந்து தவிக்க வேண்டியதாகி விடுகிறது.

'நல்லோர் ஒருவர் பொருட்டு பெய்யும் மழை' என்பதன் எடுத்துகாட்டு தான் வறுமை பஞ்சம் மழையின்மை யாவற்றிற்கும் காரணம்.