Author Topic: ஈவ் டீசிங்.........ராகிங் கொடுமை  (Read 752 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
ஈவ் டீசிங்.........ராகிங் கொடுமை




  முன்னர் கல்லூரியில் படிக்கும்போது 'ஈவ் டீசிங்' என்ற வார்த்தை பிரயோகம் வழக்கில் கிடையாது, யாராவது கிண்டல் பண்ணா வீட்டில் வந்து சொன்னால் போதும் உடன் பிறப்புக்களோ அல்லது நமது ஹீரோ....... அதான் அப்பா.....அவருடன் இரண்டு நாள் போனால் போதும், பிறகு கிண்டல் செய்வதெல்லாம் சரியாகிவிடும்.

எதை எதையோ வெளி நாட்டில் இருந்து கற்று கொள்கிறார்களே அதில் இந்த ஈவ் டீசிங்கும் ஒன்று போல் இருக்கிறது.

ஒரு பெண் தன்னை திரும்பி பார்க்க வேண்டும், அவளது கவனத்தை ஈர்க்க ஏதேனும் செய்து திசை திருப்ப வேண்டும் என்பது தான் இந்த 'ஈவ் டீசிங்' செய்வதற்கான காரணம்.

ஆனால் இன்றைக்கு பார்த்தோமானால் யார் யாரையோ யார் யாரோ 'ஈவ் டீசிங்' செய்கிறார்கள். அர்த்தமற்ற பொழுது போக்காகவும் இந்த 'ஈவ் டீசிங்' பயன் படுத்தப்படுகிறது.

ஒரு வயதானவரை பார்த்தால் ' என்ன பெருசு ' என்பது, தன் அம்மா வயதில் இருக்கும் ஒரு பெண்ணை பார்த்து அனாவசியமான 'ஜோக்குகள்' அடிப்பது. இதையெல்லாம் என்ன[ டீசிங் ] என்று அழைப்பது என்று தெரியவில்லை.

இதுதான் இப்படி என்றால், செய்திகளை கேள்விப்படும்போது, ஒரு மாணவனின் கண் பார்வையே பறி போனது என்பது கொடூரம், இதை ராகிங் என்று சொல்வதை விட, சக மாணவனை கொடூரமாக நடத்தி, கொலைக்கு சற்றே குறைவான, ஒரு குற்றம் செய்யப்பட்டுள்ளது.

பல கல்லூரிகளிலும், ஹாஸ்டல்களிலும் நடக்கும் ஒரு மறைவான குற்றமாகவே இருந்து வருகிறது , பல கல்லூரிகளில் அவர்களது பெயர் கெட்டுவிட கூடாது என்பதற்காக இப்படிப்பட்ட செய்திகளை ஒரு புதை குழியில் போட்டு சமாதியும் கட்டி விடுகின்றனர். பண பலமும் எதிர்க்கும் திறனும் இல்லாமல் பலராலும் இப்படிப்பட்ட கொடூரங்களை வெளி உலகிற்கு சொல்ல முடியாமல் போய்விடுவதும் நிஜம்.

இந்த கொடூரங்களின் பின்னணி பற்றி ஆராய்ந்தால் திடுக்கிடும் தகவல்களும் வெளியாகும், பல காரணங்களுக்காக சம்பந்தப்பட்டவர்களை பழி வாங்குதலும் இந்த ராகிங் என்ற பெயரால் நடந்து வருவதும் நிஜம்.

இப்படி ராகிங் செய்து படித்து பட்டம் பெற்று வெளிவரும் மாணவன் நிச்சயம் ஒரு தேச துரோகியாகவோ சட்டத்திற்கு புறம்பான வேலைகள் செய்வதிலும் கை தேர்ந்தவராக உருவாகவும், தீய செயல்களை செய்து பழகும் ஒரு ட்ரைனிங் சென்டெர் போல கல்லூரி ஒரு களமாக அமையும் என்பதில் சந்தேகமே கிடையாது.

இப்படிப்பட்ட கொடூரங்களை செய்யும் மாணவனோ மாணவியோ பிடிபடும் போது சரியான கொன்சில்லிங் கொடுத்து அவர் அப்படி பட்ட மன நிலையில் இருந்து முற்றிலுமாக வெளியே வந்து விட்டாரா என்ற மருத்துவ சோதனைக்குட்படுத்திய பின்னரே மறுபடியும் கல்லூரிக்குள் படிக்க அனுமதி அளிக்க வேண்டும்.

பண பலம் அல்லது சமுதாயத்தில் மிகவும் முக்கிய பதவிகளில் இருக்கும் பெற்றோருக்காக சம்பந்த பட்ட மாணவன்/மாணவியை ஒரு விதமான நடவடிக்கையும் எடுக்காமல் மறுபடியும் படிக்க அனுமதித்தால், அவர்களால் நிச்சயம் அவர்கள் செய்த தவறு திருத்தபடாமலே போய் ஒரு குற்றவாளியை உருவாக்கும் நிலைமைதான் ஏற்ப்படும்.

குற்றவாளிகள் உருவாக்க படுகிறார்கள், குற்றவாளிகள் பிறப்பதில்லை - அல்லவா ?

கல்லூரிகளும் குற்றவாளிகளை உருவாக்கும் களமாக மாற வேண்டாம் என்பதே என் விருப்பம்.