FTC Forum

தமிழ்ப் பூங்கா => பொதுப்பகுதி => Topic started by: எஸ்கே on January 01, 2022, 06:56:16 AM

Title: தினம் ஒரு திருக்குறள்
Post by: எஸ்கே on January 01, 2022, 06:56:16 AM
 
 அறத்துப்பால்

 கடவுள் வாழ்த்து ( அதிகாரம் )

குறள் 1:
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு

மு.வ விளக்கம்:
எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது.
Title: Re: தினம் ஒரு திருக்குறள் - 02
Post by: எஸ்கே on January 02, 2022, 10:09:17 AM

குறள் 2:
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்

மு.வ விளக்கம்:
தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளை தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன?
Title: Re: தினம் ஒரு திருக்குறள் - 03
Post by: எஸ்கே on January 03, 2022, 09:26:58 AM

குறள் 3:
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்

மு.வ விளக்கம்:
அன்பரின் அகமாகிய மலரில் வீற்றிருக்கும் கடவுளின் சிறந்த திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர், இன்ப உலகில் நிலைத்து வாழ்வார்
Title: Re: தினம் ஒரு திருக்குறள் - 04
Post by: எஸ்கே on January 04, 2022, 08:50:53 AM

குறள் 4:
வேண்டுதல்வேண் டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல

மு.வ விளக்கம்:
விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர்க்கு எப்போதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை
Title: Re: தினம் ஒரு திருக்குறள் - 05
Post by: எஸ்கே on January 05, 2022, 07:55:44 AM

குறள் 5:
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு

மு.வ விளக்கம்:
கடவுளின் உண்மைப் புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம் அறியாமையால் விளையும் இருவகை வினையும் சேர்வதில்லை
Title: Re: தினம் ஒரு திருக்குறள் - 06
Post by: எஸ்கே on January 06, 2022, 09:11:58 AM

குறள் 6:
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்

மு.வ விளக்கம்:
ஐம்பொறி வாயிலாக பிறக்கும் வேட்கைகளை அவித்த இறைவனுடைய பொய்யற்ற ஒழுக்க நெறியில் நின்றவர், நிலை பெற்ற நல்வாழ்க்கை வாழ்வர்
Title: Re: தினம் ஒரு திருக்குறள் - 07
Post by: எஸ்கே on January 07, 2022, 08:01:53 AM

குறள் 7:
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது

மு.வ விளக்கம்:
தனக்கு ஒப்புமை இல்லாத தலைவனுடைய திருவடிகளைப்
பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர்க்கு மனக்கவலையை மாற்ற முடியாது
Title: Re: தினம் ஒரு திருக்குறள் - 08
Post by: எஸ்கே on January 08, 2022, 08:56:21 AM

குறள் 8:
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது

மு.வ விளக்கம்:
அறக்கடலாக விளங்கும் கடவுளின் திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர் பொருளும் இன்பமுமாகிய மற்ற கடல்களைக் கடக்க முடியாது
Title: Re: தினம் ஒரு திருக்குறள் - 09
Post by: எஸ்கே on January 09, 2022, 09:12:36 AM

குறள் 9:
கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை

மு.வ விளக்கம்:
கேட்காதசெவி, பார்க்காத கண் போன்ற எண் குணங்களை உடைய கடவுளின் திருவடிகளை வணங்காதவரின் தலைகள் பயனற்றவைகளாம்
Title: Re: தினம் ஒரு திருக்குறள் - 10
Post by: எஸ்கே on January 10, 2022, 08:37:34 AM

குறள் 10:
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்

மு.வ விளக்கம்:
இறைவனுடைய திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும். மற்றவர் கடக்க முடியாது
Title: Re: தினம் ஒரு திருக்குறள் - 11
Post by: எஸ்கே on January 11, 2022, 07:54:42 AM

வான் சிறப்பு (அதிகாரம்)

குறள் 11:
வானின் றுலகம் வழங்கி வருதலால்
தானமிழ்தம் என்றுணரற் பாற்று

மு.வ விளக்கம்
மழை பெய்ய உலகம் வாழ்ந்து வருவதால், மழையானது உலகத்து வாழும் உயிர்களுக்கு அமிழ்தம் என்று உணரத்தக்கதாகும்
Title: Re: தினம் ஒரு திருக்குறள் - 12
Post by: எஸ்கே on January 12, 2022, 08:36:40 AM

குறள் 12:
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉ மழை

மு.வ விளக்கம்
உண்பவர்க்குத் தக்க உணவுப் பொருள்களை விளைவித்துத் தருவதோடு, பருகுவோர்க்குத் தானும் ஓர் உணவாக இருப்பது மழையாகும்
Title: Re: தினம் ஒரு திருக்குறள் - 13
Post by: எஸ்கே on January 13, 2022, 08:50:10 AM

குறள் 13:
விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின் றுடற்றும் பசி

மு.வ விளக்கம்
மழை பெய்யாமல் பொய்படுமானால், கடல் சூழ்ந்த அகன்ற உலகமாக இருந்தும் பசி உள்ளே நிலைத்து நின்று உயிர்களை வருத்தும்
Title: Re: தினம் ஒரு திருக்குறள் - 14
Post by: எஸ்கே on January 14, 2022, 09:10:09 AM

குறள் 14:
ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
வாரி வளங்குன்றிக் கால்

மு.வ விளக்கம்
மழை என்னும் வருவாய் வளம் குன்றி விட்டால், ( உணவுப் பொருள்களை உண்டாக்கும்) உழவரும் ஏர் கொண்டு உழமாட்டார்
Title: Re: தினம் ஒரு திருக்குறள் - 15
Post by: எஸ்கே on January 15, 2022, 08:53:12 AM

குறள் 15:
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை

மு.வ விளக்கம்
பெய்யாமல் வாழ்வைக் கெடுக்க வல்லதும் மழை; மழையில்லாமல் வளம் கெட்டு நொந்தவர்க்கும் துணையாய் அவ்வாறே காக்க வல்லதும் மழையாகும்
Title: Re: தினம் ஒரு திருக்குறள் - 16
Post by: எஸ்கே on January 16, 2022, 08:12:10 AM

குறள் 16:
விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண் பரிது

மு.வ விளக்கம்
வானத்திலிருந்து மழைத்துளி வீழ்ந்தால் அல்லாமல், உலகத்தில் ஓரறிவுயிராகிய பசும்புல்லின் தலையையும் காண முடியாது
Title: Re: தினம் ஒரு திருக்குறள் - 17
Post by: எஸ்கே on January 17, 2022, 01:51:37 PM

குறள் 17:
நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்

மு.வ விளக்கம்
மேகம் கடலிலிருந்து நீரைக் கொண்டு அதனிடத்திலேயே பெய்யாமல் விடுமானால், பெரிய கடலும் தன் வளம் குன்றிப் போகும்
Title: Re: தினம் ஒரு திருக்குறள் - 18
Post by: எஸ்கே on January 18, 2022, 08:57:56 AM

குறள் 18:
சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு

மு.வ விளக்கம்
மழை பெய்யாமல் போகுமானால் இவ்வுலகத்தில் வானோர்க்காக நடைபெறும் திருவிழாவும் நடைபெறாது; நாள் வழிபாடும் நடைபெறாது
Title: Re: தினம் ஒரு திருக்குறள் - 19
Post by: எஸ்கே on January 19, 2022, 01:01:34 PM

குறள் 19:
தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம்
வானம் வழங்கா தெனின்

மு.வ விளக்கம்
மழை பெய்யவில்லையானால், இந்த பெரிய உலகத்தில் பிறர் பொருட்டு செய்யும் தானமும், தம் பொருட்டு செய்யும் தவமும் இல்லையாகும்.
Title: Re: தினம் ஒரு திருக்குறள் - 20
Post by: எஸ்கே on January 20, 2022, 08:40:04 AM

குறள் 20:
நீரின் றமையா துலகெனின் யார்யார்க்கும்
வானின் றமையா தொழுக்கு

மு.வ விளக்கம்
எப்படிப்பட்டவர்க்கும் நீர் இல்லாமல் உலக வாழ்க்கை நடைபெறாது என்றால், மழை இல்லையானால் ஒழுக்கமும் நிலைபெறாமல் போகும்
Title: Re: தினம் ஒரு திருக்குறள் - 21
Post by: எஸ்கே on January 21, 2022, 10:20:48 PM

அதிகாரம் 3 – நீத்தார் பெருமை


குறள் 21:
ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு

மு.வ விளக்கம்:
ஒழுக்கத்தில் நிலைத்து நின்று பற்று விட்டவர்களின் பெருமையைச் சிறந்ததாக போற்றி கூறுவதே நூல்களின் துணிவாகும்
.
Title: Re: தினம் ஒரு திருக்குறள் - 22
Post by: எஸ்கே on January 22, 2022, 08:50:02 AM

குறள் 22:
துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று

மு.வ விளக்கம்:
பற்றுக்களைத் துறந்தவர்களின் பெருமையை அளந்து கூறுதல், உலகத்தில் இதுவரை பிறந்து இறந்தவர்களை கணக்கிடுவதைப்போன்றது.
Title: Re: தினம் ஒரு திருக்குறள் - 23
Post by: எஸ்கே on January 23, 2022, 07:32:00 AM

குறள் 23:
இருமை வகைதெரிந் தீண்டறம் பூண்டார்
பெருமை பிறங்கிற் றுலகு

மு.வ விளக்கம்:
பிறப்பு வீடு என்பன போல் இரண்டிரண்டாக உள்ளவைகளின் கூறுபாடுகளை ஆராய்ந்தறிந்து அறத்தை மேற்கொண்டவரின் பெருமையே உலகத்தில் உயர்ந்தது
Title: Re: தினம் ஒரு திருக்குறள் - 24
Post by: எஸ்கே on January 24, 2022, 08:55:01 AM

குறள் 24:
உரனென்னுந் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து

மு.வ விளக்கம்:
அறிவு என்னும் கருவியினால் ஐம்பொறிகளாகிய யானைகளை அடக்கி காக்க வல்லவன், மேலான வீட்டிற்கு விதை போன்றவன்
Title: Re: தினம் ஒரு திருக்குறள் - 25
Post by: எஸ்கே on January 25, 2022, 08:47:01 AM

குறள் 25:
ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி

மு.வ விளக்கம்:
ஐந்து புலன்களாலாகும் ஆசைகளை ஒழித்தவனுடைய வல்லமைக்கு, வானுலகத்தாரின் தலைவனாகிய இந்திரனே போதுமான சான்று ஆவான்
Title: Re: தினம் ஒரு திருக்குறள் - 26
Post by: எஸ்கே on January 26, 2022, 07:41:12 AM

குறள் 26:
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்

மு.வ விளக்கம்:
செய்வதற்கு அருமையான செயல்களை செய்ய வல்லவரே பெரியோர். செய்வதற்கு அரிய செயல்களைச் செய்யமாட்டாதவர் சிறியோர்.
Title: Re: தினம் ஒரு திருக்குறள் - 27
Post by: எஸ்கே on January 27, 2022, 08:35:36 AM

குறள் 27:
சுவையொளி ஊறோசை நாற்றமென் றைந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு

மு.வ விளக்கம்:
சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்று சொல்லப்படும் ஐந்தின் வகைகளையும் ஆராய்ந்து அறிய வல்லவனுடைய அறிவில் உள்ளது உலகம்.
Title: Re: தினம் ஒரு திருக்குறள் - 28
Post by: எஸ்கே on January 28, 2022, 08:23:20 AM

குறள் 28:
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்

மு.வ விளக்கம்:
பயன் நிறைந்த மொழிகளில் வல்ல சான்றோரின் பெருமையை, உலகத்தில் அழியாமல் விளங்கும் அவர்களுடைய மறைமொழிகளே காட்டிவிடும்.
Title: Re: தினம் ஒரு திருக்குறள் - 29
Post by: எஸ்கே on January 29, 2022, 08:27:10 AM

குறள் 29:
குணமென்னுங் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயுங் காத்தல் அரிது

மு.வ விளக்கம்:
நல்ல பண்புகளாகிய மலையின்மேல் ஏறி நின்ற பெரியோர், ஒரு கணப்பொழுதே சினம் கொள்வார் ஆயினும் அதிலிருந்து ஒருவரைக் காத்தல் அரிதாகும்.
Title: Re: தினம் ஒரு திருக்குறள் - 30
Post by: எஸ்கே on January 30, 2022, 10:05:49 AM

குறள் 30:
அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்

மு.வ விளக்கம்:
எல்லா உயிர்களிடத்திலும் செம்மையான அருளை மேற்கொண்டு ஒழுகுவதால், அறவோரே அந்தணர் எனப்படுவோர் ஆவர்.
Title: Re: தினம் ஒரு திருக்குறள் - 31
Post by: எஸ்கே on January 31, 2022, 06:45:51 AM

அதிகாரம் 4 – அறன் வலியுறுத்தல்


குறள் 31:
சிறப்பீனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு

மு.வ விளக்கம்:
அறம் சிறப்பையும் அளிக்கும்: செல்வத்தையும் அளிக்கும்: ஆகையால் உயிர்க்கு அத்தகைய அறத்தை விட நன்மையானது வேறு யாது?
Title: Re: தினம் ஒரு திருக்குறள் - 32
Post by: எஸ்கே on February 01, 2022, 08:58:21 AM

குறள் 32:
அறத்தினூஉங் காக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு

மு.வ விளக்கம்:
ஒரு வருடைய வாழ்கைக்கு அறத்தை விட நன்மையானதும் இல்லை: அறத்தை போற்றாமல் மறப்பதை விடக்கொடியதும் இல்லை.
Title: Re: தினம் ஒரு திருக்குறள் - 33
Post by: எஸ்கே on February 02, 2022, 08:50:42 PM

குறள் 33:
ஒல்லும் வகையான அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாஞ் செயல்

மு.வ விளக்கம்:
செய்யக்கூடிய வகையால், எக்காரணத்தாலும் விடாமல் செல்லுமிடமெல்லாம் அறச்செயலைப் போற்றிச் செய்ய வேண்டும்.
Title: Re: தினம் ஒரு திருக்குறள் - 34
Post by: எஸ்கே on February 03, 2022, 07:54:34 AM

குறள் 34:
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற

மு.வ விளக்கம்:
ஒருவன் தன்மனதில் குற்றம் இல்லாதவானாக இருக்க வேண்டும். அறம் அவ்வளவே: மனத்தூய்மை இல்லாத மற்றவை ஆரவாரத் தன்மை உடையவை
Title: Re: தினம் ஒரு திருக்குறள் - 35
Post by: எஸ்கே on February 04, 2022, 07:27:51 AM

குறள் 35:
அழுக்கா றவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்ற தறம்

மு.வ விளக்கம்:
பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல் ஆகிய இந்த நான்கு குற்றங்களுக்கும் இடங்கொடுக்காமல் அவற்றைக் கடித்து ஒழுகுவதே அறமாகும்.
Title: Re: தினம் ஒரு திருக்குறள் - 36
Post by: எஸ்கே on February 05, 2022, 08:31:02 AM

குறள் 36:
அன்றறிவாம் என்னா தறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை

மு.வ விளக்கம்:
இளைஞராக உள்ளவர், பிற்காலத்தில் பார்த்து கொள்ளலாம் என்று எண்ணாமல் அறம் செய்ய வேண்டும். அதுவே உடல் அழியும் காலத்தில் அழியா துணையாகும்.
Title: Re: தினம் ஒரு திருக்குறள் - 37
Post by: எஸ்கே on February 06, 2022, 03:26:27 PM

குறள் 37:
அறத்தா றிதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோ டூர்ந்தான் இடை

மு.வ விளக்கம்:
பல்லக்கை சுமப்பவனும் அதன்மேலிருந்து ஊர்ந்து செல்லுவோனுமாகிய அவர்களிடையே அறத்தின் பயன் இஃது என்று கூறவேண்டா.
Title: Re: தினம் ஒரு திருக்குறள் - 38
Post by: எஸ்கே on February 07, 2022, 08:54:57 AM

குறள் 38:
வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல்

மு.வ விளக்கம்:
ஒருவன் அறம் செய்ய தவறிய நாள் ஏற்படாதவாறு அறத்தை செய்வானானால் அதுவே அவன் உடலோடு வாழும் நாள் வரும் பிறவி வழியை அடைக்கும் கல்லாகும்.
Title: Re: தினம் ஒரு திருக்குறள் - 39
Post by: எஸ்கே on February 08, 2022, 02:35:57 PM

குறள் 39:
அறத்தான் வருவதே இன்பமற் றெல்லாம்
புறத்த புகழும் இல

மு.வ விளக்கம்:
அறநெறியில் வாழ்வதன் பயனாக வருவதே இன்பமாகும். அறத்தோடு பொருந்தாமல் வருவன எல்லாம் இன்பம் இல்லாதவை: புகழும் இல்லாதவை
.
Title: Re: தினம் ஒரு திருக்குறள் - 40
Post by: எஸ்கே on February 09, 2022, 11:00:56 AM

குறள் 40:
செயற்பால தோரும் அறனே ஒருவற்கு
உயற்பால தோரும் பழி

மு.வ விளக்கம்:
ஒருவன் வாழ்நாளில் முயற்சி மேற்கொண்டு செய்யத்தக்கது அறமே. செய்யாமல் காத்து கொள்ளத்தக்கது பழியே.
Title: Re: தினம் ஒரு திருக்குறள் - 41
Post by: எஸ்கே on February 10, 2022, 08:46:36 AM

அதிகாரம் 5 – இல்வாழ்க்கை


குறள் 41:
இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை

மு.வ விளக்க உரை:
இல்லறத்தில் வாழ்பவனாகச் சொல்லப்படுகிறவன் அறத்தின் இயல்பை உடைய மூவருக்கும் நல்வழியில் நிலை பெற்ற துணையாவான்.
Title: Re: தினம் ஒரு திருக்குறள் - 42
Post by: எஸ்கே on February 11, 2022, 05:10:30 AM

குறள் 42:
துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை

மு.வ விளக்க உரை:
துறந்தவர்கும் வறியவர்க்கும் தன்னிடத்தே இறந்தவர்க்கும் இல்லறம் மேற்கொண்டு வாழ்கிறவன் துணையாவான்.
Title: Re: தினம் ஒரு திருக்குறள் - 43
Post by: எஸ்கே on February 12, 2022, 11:12:49 PM

குறள் 43:
தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தா றோம்பல் தலை

மு.வ விளக்க உரை:
தென்புலத்தார், தெய்வம் விருந்தினர், சுற்றத்தார், தான் என்ற ஐவகையிடத்தும் அறநெறி தவறாமல் போற்றுதல் சிறந்த கடமையாகும்.
Title: Re: தினம் ஒரு திருக்குறள் - 44
Post by: எஸ்கே on February 13, 2022, 10:53:54 AM

குறள் 44:
பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல

மு.வ விளக்க உரை:
பொருள் சேர்க்கும் பொது பழிக்கு அஞ்சிச் சேர்த்து, செலவு செய்யும் போது பகுந்து உண்பதை மேற்க்கொண்டால், அவ்வாழ்கையின் ஒழுங்கு எப்போதும் குறைவதில்லை.
Title: Re: தினம் ஒரு திருக்குறள் - 45
Post by: எஸ்கே on February 14, 2022, 09:09:09 AM

குறள் 45:
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது

மு.வ விளக்க உரை:
இல்வாழ்க்கையின் அன்பும் அறமும் உடையதாக விளங்குமானால், அந்த வாழக்கையின் பண்பும் பயனும் அதுவே ஆகும்.
Title: Re: தினம் ஒரு திருக்குறள் - 46
Post by: எஸ்கே on February 15, 2022, 08:49:11 AM

குறள் 46:
அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்
போஒய்ப் பெறுவ தெவன்

மு.வ விளக்க உரை:
ஒருவன் அறநெறியில் இல்வாழ்க்கையைச் செலுத்தி வாழ்வானானால், அத்தகையவன் வேறு நெறியில் சென்று பெறத்தக்கது என்ன?
Title: Re: தினம் ஒரு திருக்குறள் - 47
Post by: எஸ்கே on February 16, 2022, 08:59:51 AM

குறள் 47:
இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை

மு.வ விளக்க உரை:
அறத்தின் இயல்பொடு இல்வாழ்கை வாழ்கிறவன்- வாழ முயல்கிறவன் பல திறத்தாரிலும் மேம்பட்டு விளங்குகிறவன் ஆவான்.
Title: Re: தினம் ஒரு திருக்குறள் - 48
Post by: எஸ்கே on February 17, 2022, 09:05:21 AM

குறள் 48:
ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து

மு.வ விளக்க உரை:
மற்றவரை அறநெறியில் ஒழுகச்செய்து தானும்அறம் தவறாத இல்வாழ்க்கை , தவம் செய்வாரைவிட மிகச்சிறந்த வல்லமை உடைய வாழ்க்கையாகும்.
Title: Re: தினம் ஒரு திருக்குறள் - 49
Post by: எஸ்கே on February 18, 2022, 08:43:07 AM

குறள் 49:
அறன்எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்ப தில்லாயின் நன்று

மு.வ விளக்க உரை:
அறம் என்று சிறப்பித்து சொல்லப்பட்டது இல்வாழ்க்கையே ஆகும். அதுவும் மற்றவன் பழிக்கும் குற்றம் இல்லாமல் விளங்கினால் மேலும் நன்மையாகும்.
Title: Re: தினம் ஒரு திருக்குறள் - 50
Post by: எஸ்கே on February 19, 2022, 05:41:00 AM

குறள் 50:
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்

மு.வ விளக்க உரை:
உலகத்தில் வாழவேண்டிய அறநெறியில் நின்று வாழ்கிறவன், வானுலகத்தில் உள்ள தெய்வ முறையில் வைத்து மதிக்கப்படுவான்.

Title: Re: தினம் ஒரு திருக்குறள் - 51
Post by: எஸ்கே on February 20, 2022, 08:49:48 AM

அதிகாரம் 6 / வாழ்க்கைத் துணைநலம்

குறள் 51:
மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை

மு.வ விளக்க உரை:
இல்வாழ்க்கைக்கு ஏற்ற நற்பண்பு உடையவளாகித் தன்கணவனுடைய பொருள் வளத்துக்குத் தக்க வாழ்க்கை நடத்துகிறவளே வாழ்க்கைத்துணை ஆவாள்.
Title: Re: தினம் ஒரு திருக்குறள் - 52
Post by: எஸ்கே on February 21, 2022, 08:43:40 AM

குறள் 52:
மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல்

மு.வ விளக்க உரை:
இல்வாழ்க்கைக்கு தக்க நற்பண்பு மனைவியிடம் இல்லையானால், ஒருவனுடைய வாழ்க்கை வேறு எவ்வளவு சிறப்புடையதானாலும் பயன் இல்லை.
Title: Re: தினம் ஒரு திருக்குறள் - 53
Post by: எஸ்கே on February 22, 2022, 09:20:34 AM

குறள் 53:
இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை

மு.வ விளக்க உரை:
மனைவி நற்பண்பு உடையவளானால் வாழ்க்கையில் இல்லாதது என்ன? அவள் நற்பண்பு இல்லாதவளானால் வாழ்க்கையில் இருப்பது என்ன?
Title: Re: தினம் ஒரு திருக்குறள் - 54
Post by: எஸ்கே on February 23, 2022, 07:18:25 AM

குறள் 54:
பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மைஉண் டாகப் பெறின்

மு.வ விளக்க உரை:
இல்வாழ்க்கையில் கற்பு என்னும் உறுதிநிலை இருக்கப் பெற்றால், பெண்ணைவிட பெருமையுடையவை வேறு என்ன இருக்கின்றன?
Title: Re: தினம் ஒரு திருக்குறள் - 55
Post by: எஸ்கே on February 24, 2022, 08:57:08 AM

குறள் 55:
தெய்வம் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை

மு.வ விளக்க உரை:
வேறு தெய்வம் தொழாதவளாய்த் தன் கணவனையே தெய்வமாகக் கொண்டு தொழுது துயிலெழுகின்றவள் பெய் என்றால் மழை பெய்யும்.
Title: Re: தினம் ஒரு திருக்குறள் - 56
Post by: எஸ்கே on February 25, 2022, 08:34:06 AM

குறள் 56:
தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்

மு.வ விளக்க உரை:
கற்பு நெறியில் தன்னையும் காத்துக்கொண்டு, தன்கணவனையும் காப்பாற்றி, தகுதியமைந்த புகழையும் காத்து உறுதி தளராமல் வாழ்கின்றவளே பெண்.
Title: Re: தினம் ஒரு திருக்குறள் - 57
Post by: எஸ்கே on February 27, 2022, 08:51:38 AM

குறள் 57:
சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை

மு.வ விளக்க உரை:
மகளிரைக் காவல் வைத்துக் காக்கும் காப்பு முறை என்ன பயனை உண்டாக்கும்? அவர்கள் நிறை என்னும் பண்பால் தம்மைத் தான் காக்கும் கற்பே சிறிந்தது.
Title: Re: தினம் ஒரு திருக்குறள் - 58
Post by: எஸ்கே on February 28, 2022, 08:56:10 AM

குறள் 58:
பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு

மு.வ விளக்க உரை:
கணவனைப் போற்றிக் கடமையைச் செய்யப்பெற்றால் மகளிர் பெரிய சிறப்பை உடைய மேலுலகவாழ்வைப் பெறுவர்.
Title: Re: தினம் ஒரு திருக்குறள் - 59
Post by: எஸ்கே on March 01, 2022, 08:30:00 AM

குறள் 59:
புகழ்புரிந் தில்லிலோர்க் கில்லை இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை

மு.வ விளக்க உரை:
புகழைக் காக்க விரும்பும் மனைவி இல்லாதவர்க்கு, இகழ்ந்து பேசும் பகைவர் முன் காளை போல் நடக்கும் பெருமித நடை இல்லை.
Title: Re: தினம் ஒரு திருக்குறள் - 60
Post by: எஸ்கே on March 02, 2022, 09:11:50 AM

குறள் 60:
மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்
நன்கலம் நன்மக்கட் பேறு

மு.வ விளக்க உரை:
மனைவியின் நற்பண்பே இல்வாழ்க்கைக்கு மங்கலம் என்று கூறுவர்: நல்ல மக்களைப் பெறுதலே அதற்கு நல்லணிகலம் என்று கூறுவர்.
Title: Re: தினம் ஒரு திருக்குறள் - 61
Post by: எஸ்கே on March 03, 2022, 09:06:26 AM

அதிகாரம் 7 – மக்கட்பேறு


குறள் 61:
பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த
மக்கட்பே றல்ல பிற

மு.வ விளக்க உரை:
பெறத்தகுந்த பேறுகளில் அறிய வேண்டியவைகளை அறியும் நன்மக்களைப் பெறுவதைத் தவிர, மற்றப்பேறுகளை யாம் மதிப்பதில்லை.
Title: Re: தினம் ஒரு திருக்குறள் - 62
Post by: எஸ்கே on March 04, 2022, 08:55:17 AM

குறள் 62:
எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின்

மு.வ விளக்க உரை:
பழி இல்லாத நல்ல பண்பு உடைய மக்களைப்பெற்றால் ஒருவனுக்கு ஏழு பிறவியிலும் தீவினைப் பயனாகிய துன்பங்கள் சென்று சேரா.
Title: Re: தினம் ஒரு திருக்குறள் - 63
Post by: எஸ்கே on March 05, 2022, 08:53:43 AM

குறள் 63:
தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
தந்தம் வினையான் வரும்

மு.வ விளக்க உரை:
தம்மக்களே தம்முடைய பொருள்கள் என்று அறிஞர் கூறுவர். மக்களாகிய அவர்தம் பொருள்கள் அவரவருடைய வினையின் பயனால் வந்து சேரும்.
Title: Re: தினம் ஒரு திருக்குறள் - 64
Post by: எஸ்கே on March 06, 2022, 08:38:49 AM

குறள் 64:
அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்

மு.வ விளக்க உரை:
தம்முடைய மக்களின் சிறு கைகளால் அளாவப்பெற்ற உணவு, பெற்றோர்க்கு அமிழ்தத்தை விட மிக்க இனிமை உடையதாகும்.
Title: Re: தினம் ஒரு திருக்குறள் - 65
Post by: எஸ்கே on March 07, 2022, 06:03:15 AM

குறள் 65:
மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு

மு.வ விளக்க உரை:
மக்களின் உடம்பைத் தொடுதல் உடம்பிற்கு இன்பம் தருவதாகும்: அம் மக்களின் மழலைச் சொற்களைக் கேட்டால் செவிக்கு இன்பம் தருவதாகும்.
Title: Re: தினம் ஒரு திருக்குறள் - 66
Post by: எஸ்கே on March 08, 2022, 08:38:35 AM

குறள் 66:
குழலினி தியாழினி தென்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்

மு.வ விளக்க உரை:
தம் மக்களின் மழலைச் சொல்லைக் கேட்டு அதன் இனிமையை நுகராதவரே குழலின் இசை இனியது யாழின் இசை இனியது என்று கூறுவர்.
Title: Re: தினம் ஒரு திருக்குறள் - 67
Post by: எஸ்கே on March 09, 2022, 07:41:01 AM

குறள் 67:
தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்

மு.வ விளக்க உரை:
தந்தை தன் மகனுக்குச் செய்யத்தக்க நல்லுதவி, கற்றவர் கூட்டத்தில் தன் மகன் முந்தியிருக்கும்படியாக அவனைக் கல்வியில் மேம்படச் செய்தலாகும்.
Title: Re: தினம் ஒரு திருக்குறள் - 68
Post by: எஸ்கே on March 10, 2022, 07:39:58 AM

குறள் 68:
தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது

மு.வ விளக்க உரை:
தம் மக்களின் அறிவுடைமை தமக்கு இன்பம் பயப்பதை விட உலகத்து உயிர்களுக்கேல்லாம் மிகுந்த இன்பம் பயப்பதாகும்.
Title: Re: தினம் ஒரு திருக்குறள் - 69
Post by: எஸ்கே on March 11, 2022, 08:13:45 AM

குறள் 69:
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்

மு.வ விளக்க உரை:
தன் மகனை நற்பண்பு நிறைந்தவன் என பிறர் சொல்லக் கேள்வியுற்ற தாய், தான் அவனை பெற்றக் காலத்தில் உற்ற மகிழ்ச்சியை விடப் பெரிதும் மகிழ்வாள்.
Title: Re: தினம் ஒரு திருக்குறள் - 70
Post by: எஸ்கே on March 12, 2022, 09:33:25 AM

குறள் 70:
மகன் தந்தைக் காற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்லெனும் சொல்

மு.வ விளக்க உரை:
மகன் தன் தந்தைக்குச் செய்யத் தக்க கைம்மாறு, இவன் தந்தை இவனை மகனாகப் பெற என்ன தவம் செய்தானோ என்று பிறர் புகழ்ந்து சொல்லும் சொல்லாகும்.
Title: Re: தினம் ஒரு திருக்குறள் - 71
Post by: எஸ்கே on March 13, 2022, 08:51:45 AM

அதிகாரம் 8 – அன்புடைமை


குறள் 71:
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புண்கணீர் பூசல் தரும்

மு.வ விளக்க உரை:
அன்புக்கும் அடைத்து வைக்கும் தாழ் உண்டோ? அன்புடையவரின் சிறு கண்ணீரே ( உள்ளே இருக்கும் அன்பைப் ) பலரும் அறிய வெளிப்படுத்திவிடும்
Title: Re: தினம் ஒரு திருக்குறள் - 72
Post by: எஸ்கே on March 14, 2022, 08:31:42 AM

குறள் 72:
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு

மு.வ விளக்க உரை:
அன்பு இல்லாதவர் எல்லாப்பொருள்களையும் தமக்கே உரிமையாகக் கொண்டு வாழ்வார்: அன்பு உடையவர் தம் உடமையும் பிறர்க்கு உரிமையாக்கி வாழ்வர்
Title: Re: தினம் ஒரு திருக்குறள் - 73
Post by: எஸ்கே on March 15, 2022, 08:43:26 AM

குறள் 73:
அன்போ டியைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
என்போ டியைந்த தொடர்பு

மு.வ விளக்க உரை:
அருமையான உயிர்க்கு உடம்போடு பொருந்தி இருக்கின்ற உறவு, அன்போடு பொருந்தி வாழும் வாழ்க்கையின் பயன்என்று கூறுவர்.
Title: Re: தினம் ஒரு திருக்குறள் - 74
Post by: எஸ்கே on March 16, 2022, 08:53:14 AM

குறள் 74:
அன்பீனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்பென்னும் நாடாச் சிறப்பு

மு.வ விளக்க உரை:
அன்பு பிறரிடம் விருப்பம் உடையவராக வாழும் தன்மையைத் தரும்: அஃது எல்லாரிடத்தும் நட்பு என்றுசொல்லப்படும் அளவற்ற சிறப்பைத் தரும்
Title: Re: தினம் ஒரு திருக்குறள் - 75
Post by: எஸ்கே on March 17, 2022, 08:51:07 AM

குறள் 75:
அன்புற் றமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு

மு.வ விளக்க உரை:
உலகத்தில் இன்பம் உற்று வாழ்கின்றவர் அடையும் சிறப்பு, அன்பு உடையவராகிப் பொருந்தி வாழும் வாழ்கையின் பயன் என்று கூறுவர்
Title: Re: தினம் ஒரு திருக்குறள் - 76
Post by: எஸ்கே on March 18, 2022, 08:12:54 AM

குறள் 76:
அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை

மு.வ விளக்க உரை:
அறியாதவர், அறத்திற்கு மட்டுமே அன்பு துணையாகும் என்று கூறுவர்:ஆராய்ந்து பார்த்தால் வீரத்திற்க்கும் அதுவே துணையாக நிற்கின்றது
Title: Re: தினம் ஒரு திருக்குறள் - 77
Post by: எஸ்கே on March 19, 2022, 08:14:06 AM

குறள் 77:
என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம்

மு.வ விளக்க உரை:
எலும்பு இல்லாத உடம்போடு வாழும் புழுவை வெயில் காய்ந்து வருத்துவது போல் அன்பு இல்லாத உயிரை அறம் வருத்தும்.
Title: Re: தினம் ஒரு திருக்குறள் - 78
Post by: எஸ்கே on March 20, 2022, 09:23:39 AM

குறள் 78:
அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று

மு.வ விளக்க உரை:
அகத்தில் அன்பு இல்லாமல் வாழும் உயிர் வாழக்கை வளமற்ற பாலைநிலத்தில் பட்டமரம் தளிர்த்தாற் போன்றது.
Title: Re: தினம் ஒரு திருக்குறள் - 79
Post by: எஸ்கே on March 21, 2022, 08:34:34 AM

குறள் 79:
புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்துறுப் பன்பி லவர்க்கு

மு.வ விளக்க உரை:
உடம்பின் அகத்து உறுப்பாகிய அன்பு இல்லாதவர்க்கு உடம்பின் புறத்து உறுப்புக்கள் எல்லாம் என்ன பயன் செய்யும்.
Title: Re: தினம் ஒரு திருக்குறள் - 80
Post by: எஸ்கே on March 22, 2022, 08:34:50 AM

குறள் 80:
அன்பின் வழிய துயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு

மு.வ விளக்க உரை:
அன்பின் வழியில் இயங்கும் உடம்பே உயிர்நின்ற உடம்பாகும்: அன்பு இல்லாதவர்க்கு உள்ள உடம்பு எலும்பைத் தோல்போர்த்த வெற்றுடம்பே ஆகும்
Title: Re: தினம் ஒரு திருக்குறள்
Post by: எஸ்கே on March 23, 2022, 05:56:39 AM

அதிகாரம் 9 – விருந்தோம்பல்


குறள் 81:
இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு

மு.வ விளக்க உரை:
வீட்டில் இருந்து பொருள்களைக் காத்து இல்வாழ்க்கை நடத்துவதெல்லாம் விருந்தினரைப் போற்றி உதவி செய்யும் பொருட்டே ஆகும்
Title: Re: தினம் ஒரு திருக்குறள் - 82
Post by: எஸ்கே on March 24, 2022, 08:25:18 AM

குறள் 82:
விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று

மு.வ விளக்க உரை:
விருந்தினராக வந்தவர் வீட்டின் புறத்தே இருக்கத் தான் மட்டும் உண்பது சாவாமருந்தாகிய அமிழ்தமே ஆனாலும் அது விரும்பத்தக்கது அன்று
Title: Re: தினம் ஒரு திருக்குறள் - 83
Post by: எஸ்கே on March 25, 2022, 08:47:43 AM
குறள் 83:
வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுதல் இன்று

மு.வ விளக்க உரை:
தன்னை நோக்கி வரும் விருந்தினரை நாள் தோறும் போற்றுகின்றவனுடைய வாழ்க்கை, துன்பத்தால் வருந்திக் கெட்டுப் போவதில்லை.
Title: Re: தினம் ஒரு திருக்குறள் - 84
Post by: எஸ்கே on March 26, 2022, 09:03:53 AM

குறள் 84:
அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
நல்விருந் தோம்புவான் இல்

மு.வ விளக்க உரை:
நல்ல விருந்தினராய் வந்தவரை முகமலர்ச்சி கொண்டு போற்றுகின்றவனுடைய வீட்டில் மனமகிழ்ந்து திருமகள் வாழ்வாள்.
Title: Re: தினம் ஒரு திருக்குறள் - 85
Post by: எஸ்கே on March 27, 2022, 09:14:47 AM

குறள் 85:
வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி
மிச்சில் மிசைவான் புலம்

மு.வ விளக்க உரை:
விருந்தினரை முன்னே போற்றி உணவளித்து மிஞ்சிய உணவை உண்டு வாழ்கின்றவனுடைய நிலத்தில் விதையும் விதைக்க வேண்டுமோ?
Title: Re: தினம் ஒரு திருக்குறள் - 86
Post by: எஸ்கே on March 28, 2022, 08:57:12 AM

குறள் 86:
செல்விருந் தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு

மு.வ விளக்க உரை:
வந்த விருந்தினரைப் போற்றி, இனிவரும் விருந்தினரை எதிர் பார்த்திருப்பவன், வானுலகத்தில் உள்ள தேவர்க்கும் நல்ல விருந்தினனாவான்
Title: Re: தினம் ஒரு திருக்குறள் - 87
Post by: எஸ்கே on March 29, 2022, 10:00:37 AM

குறள் 87:
இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்
துணைத்துணை வேள்விப் பயன்

மு.வ விளக்க உரை:
விருந்தோம்புதலாகிய வேள்வியின் பயன் இவ்வளவு என்று அளவு படுத்தி கூறத்தக்கது அன்று, விருந்தினரின் தகுதிக்கு ஏற்ற அளவினதாகும்
Title: Re: தினம் ஒரு திருக்குறள் - 88
Post by: எஸ்கே on March 30, 2022, 08:41:31 AM

குறள் 88:
பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி
வேள்வி தலைப்படா தார்

மு.வ விளக்க உரை:
விருந்தினரை ஓம்பி அந்த வேள்வியில் ஈடுபடாதவர் பொருள்களை வருந்திக்காத்துப் (பின்பு இழந்து) பற்றுக்கொடு இழந்தோமே என்று இரங்குவர்
Title: Re: தினம் ஒரு திருக்குறள் - 89
Post by: எஸ்கே on March 31, 2022, 09:51:19 AM

குறள் 89:
உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா
மடமை மடவார்கண் உண்டு

மு.வ விளக்க உரை:
செல்வநிலையில் உள்ள வறுமை என்பது விருந்தோம்புதலைப் போற்றாத அறியாமையாகும்: அஃது அறிவிலிகளிடம் உள்ளதாகும்.
Title: Re: தினம் ஒரு திருக்குறள் - 90
Post by: எஸ்கே on April 01, 2022, 08:46:45 AM

குறள் 90:
மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து

மு.வ விளக்க உரை:
அனிச்சப்பூ மோந்தவுடன் வாடிவிடும்: அதுபோல் முகம் மலராமல் வேறு பட்டு நோக்கியவுடன் விருந்தினர் வாடி நிற்பார்.
Title: Re: தினம் ஒரு திருக்குறள் - 91
Post by: எஸ்கே on April 02, 2022, 09:04:36 AM

அதிகாரம் 10 – இனியவை கூறல்

குறள் 91:
இன்சொலால் ஈரம் அளைஇப் படிறிலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்

மு.வ விளக்க உரை:
அன்பு கலந்து வஞ்சம் அற்றவைகளாகிய சொற்கள், மெய்ப்பொருள் கண்டவர்களின் வாய்ச்சொற்கள் இன்சொற்களாகும்.
Title: Re: தினம் ஒரு திருக்குறள் - 92
Post by: எஸ்கே on April 03, 2022, 09:13:03 AM

குறள் 92:
அகன்அமர்ந் தீதலின் நன்றே முகனமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின்

மு.வ விளக்க உரை:
முகம் மலர்ந்து இன்சொல் உடையவனாக இருக்கப்பெற்றால், மனம் மகிழ்ந்து பொருள் கொடுக்கும் ஈகையைவிட நல்லதாகும்.
Title: Re: தினம் ஒரு திருக்குறள் - 93
Post by: எஸ்கே on April 04, 2022, 08:47:41 AM

குறள் 93:
முகத்தான் அமர்ந்தின்து நோக்கி அகத்தானாம்
இன்சொ லினதே அறம்

மு.வ விளக்க உரை:
முகத்தால் விரும்பி- இனிமையுடன் நோக்கி- உள்ளம் கலந்து இன்சொற்களைக் கூறும் தன்மையில் உள்ளதே அறமாகும்.
Title: Re: தினம் ஒரு திருக்குறள் - 94
Post by: எஸ்கே on April 05, 2022, 10:08:55 AM

குறள் 94:
துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்
இன்புறூஉம் இன்சொ லவர்க்கு

மு.வ விளக்க உரை:
யாரிடத்திலும் இன்புறத்தக்க இன்சொல் வழங்குவோர்க்குத் துன்பத்தை மிகுதிபடுத்தும் வறுமை என்பது இல்லையாகும்.
Title: Re: தினம் ஒரு திருக்குறள் - 95
Post by: எஸ்கே on April 06, 2022, 09:43:05 AM

குறள் 95:
பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணியல்ல மற்றுப் பிற

மு.வ விளக்க உரை:
வணக்கம் உடையவனாகவும் இன்சொல் வழங்குவோனாகவும் ஆதலே ஒருவனுக்கு அணிகலனாகும் மற்றவை அணிகள் அல்ல.
Title: Re: தினம் ஒரு திருக்குறள் - 96
Post by: எஸ்கே on April 07, 2022, 08:19:54 AM

குறள் 96:
அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்

மு.வ விளக்க உரை:
பிறர்க்கு நன்மையானவற்றை நாடி இனிமை உடையச் சொற்களைச் சொல்லின், பாவங்கள் தேய்ந்து குறைய அறம் வளர்ந்து பெருகும்.
Title: Re: தினம் ஒரு திருக்குறள் - 97
Post by: எஸ்கே on April 08, 2022, 08:37:40 AM

குறள் 97:
நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று
பண்பின் தலைப்பிரியாச் சொல்

மு.வ விளக்க உரை:
பிறர்க்கு நன்மையான பயனைத் தந்து நல்ல பண்பிலிருந்து நீங்காத சொற்கள்,வழங்குவோனுக்கும் இன்பம் தந்து நன்மை பயக்கும்.

Title: Re: தினம் ஒரு திருக்குறள் - 98
Post by: எஸ்கே on April 09, 2022, 08:16:37 AM

குறள் 98:
சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும்
இம்மையும் இன்பம் தரும்

மு.வ விளக்க உரை:
பிறர்க்குத் துன்பம் விளைக்கும் சிறுமையிலிருந்து நீங்கிய இனிய சொற்கள் மறுமைக்கும் இம்மைக்கும் வழங்குவோனுக்கு இன்பம் தரும் .
Title: Re: தினம் ஒரு திருக்குறள் - 99
Post by: எஸ்கே on April 10, 2022, 09:12:16 AM

குறள் 99:
இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ
வன்சொல் வழங்கு வது

மு.வ விளக்க உரை:
இனிய சொற்கள் இன்பம் பயத்தலைக் காண்கின்றவன், அவற்றிற்கு மாறான வன்சொற்களை வழங்குவது என்ன பயன் கருதியோ?
Title: Re: தினம் ஒரு திருக்குறள் -100
Post by: எஸ்கே on April 11, 2022, 08:26:44 AM

குறள் 100:
இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று

மு.வ விளக்க உரை:
இனிய சொற்கள் இருக்கும் போது அவற்றை விட்டுக் கடுமையான சொற்களைக் கூறுதல் கனிகள் இருக்கும் போது அவற்றை விட்டு காய்களைப் பறித்துத் தின்பதைப் போன்றது .
Title: Re: தினம் ஒரு திருக்குறள் - 101
Post by: எஸ்கே on April 12, 2022, 06:14:04 AM

அதிகாரம் 11 – செய்ந்நன்றியறிதல்



குறள் 101:
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது

மு.வ விளக்க உரை:
தான் ஓர் உதவியும் முன் செய்யாதிருக்கப் பிறன் தனக்கு செய்த உதவிக்கு மண்ணுலகத்தையும் விண்ணுலகத்தையும் கைமாறாகக் கொடுத்தாலும் ஈடு ஆக முடியாது.
Title: Re: தினம் ஒரு திருக்குறள் - 102
Post by: எஸ்கே on April 13, 2022, 10:19:28 AM

குறள் 102:
காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது

மு.வ விளக்க உரை:
உற்ற காலத்தில் ஒருவன் செய்த உதவி சிறிதளவாக இருந்தாலும், அதன் தன்மையை அறிந்தால் உலகைவிட மிகப் பெரிதாகும்.
Title: Re: தினம் ஒரு திருக்குறள் - 103
Post by: எஸ்கே on April 14, 2022, 09:34:40 AM

குறள் 103:
பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது

மு.வ விளக்க உரை:
இன்ன பயன் கிடைக்கும் என்றுஆராயாமல் ஒருவன் செய்த உதவியின் அன்புடைமையை ஆராய்ந்தால் அதன் நன்மை கடலைவிட பெரியதாகும் .
Title: Re: தினம் ஒரு திருக்குறள் - 104
Post by: எஸ்கே on April 16, 2022, 01:30:30 PM

குறள் 104:
தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்

மு.வ விளக்க உரை:
ஒருவன் தினையளவாகிய உதவியைச் செய்த போதிலும் அதன் பயனை ஆராய்கின்றவர், அதனையே பனையளவாகக் கொண்டு போற்றுவர்.
Title: Re: தினம் ஒரு திருக்குறள் - 105
Post by: எஸ்கே on April 17, 2022, 11:30:48 AM

குறள் 105:
உதவி வரைத்தன் றுதவி உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து

மு.வ விளக்க உரை:
கைமாறாகச் செய்யும் உதவி முன் செய்த உதவியின் அளவை உடையது அன்று, உதவி செய்யப்பட்டவற்றின் பண்புக்கு ஏற்ற அளவை உடையதாகும்.
Title: Re: தினம் ஒரு திருக்குறள் - 106
Post by: எஸ்கே on April 18, 2022, 09:33:16 AM

குறள் 106:
மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துள் துப்பாயார் நட்பு

மு.வ விளக்க உரை:
குற்றமற்றவரின் உறவை எப்போதும் மறக்கலாகாது: துன்பம் வந்த காலத்தில் உறுதுணையாய் உதவியவர்களின் நட்பை எப்போதும் விடாலாகாது .
Title: Re: தினம் ஒரு திருக்குறள் - 107
Post by: எஸ்கே on April 19, 2022, 08:13:07 PM

குறள் 107:
எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
விழுமந் துடைத்தவர் நட்பு

மு.வ விளக்க உரை:
தம்முடைய துன்பத்தைப் போக்கி உதவியவரின் நட்பைப் பல்வேறு வகையான பிறவியிலும் மறவாமல் போற்றுவர் பெரியோர்.
Title: Re: தினம் ஒரு திருக்குறள் - 108
Post by: எஸ்கே on April 20, 2022, 07:55:04 AM

குறள் 108:
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று

மு.வ விளக்க உரை:
ஒருவரர்முன்செய்த நன்மையை மறப்பது அறம் அன்று; அவர் செய்த தீமையைச் செய்த அப்‌பொழுதே மறந்து விடுவது அறம்.
Title: Re: தினம் ஒரு திருக்குறள் - 109
Post by: எஸ்கே on April 21, 2022, 12:26:49 PM

குறள் 109:
கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன் றுள்ளக் கெடும்

மு.வ விளக்க உரை:
முன் உதவி செய்தவர் பின்பு ‌கொன்றார் போன்ற துன்பத்தைச் செய்தாரானாலும், அவர் முன் செய்த ஒரு நன்மையை நினைத்தாலும் அந்தத் துன்பம் கெடும்.
Title: Re: தினம் ஒரு திருக்குறள் - 110
Post by: எஸ்கே on April 22, 2022, 07:42:57 AM

குறள் 110:
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு

மு.வ விளக்க உரை:
எந்த அறத்தை அழித்தவர்க்கும் தப்பிப் பிழைக்க வழி உண்டாகும்; ஒருவர் செய்த உதவியை மறந்து அழித்தவனுக்கு உய்வு இல்லை.
Title: Re: தினம் ஒரு திருக்குறள் - 111
Post by: எஸ்கே on April 23, 2022, 10:07:15 AM

அதிகாரம் 12 – நடுவு நிலைமை



குறள் 111:
தகுதி யெனவொன்று நன்றே பகுதியாற்
பாற்பட் டொழுகப் பெறின்

மு.வ விளக்க உரை:
அந்தந்தப் பகுதிதோறும் முறையோடு பொருந்தி ஒழுகப்பெற்றால், நடுவுநிலைமை என்று கூறப்படும் அறம் நன்மையாகும்.
Title: Re: தினம் ஒரு திருக்குறள் - 112
Post by: எஸ்கே on April 24, 2022, 10:29:38 AM

குறள் 112:
செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி
எச்சத்திற் கேமாப் புடைத்து

மு.வ விளக்க உரை:
நடுவுநிலைமை உடையவனின் செல்வவளம் அழிவில்லாமல் அவனுடைய வழியில் உள்ளார்க்கும் உறுதியான நன்மை தருவதாகும்.
Title: Re: தினம் ஒரு திருக்குறள் - 113
Post by: எஸ்கே on April 25, 2022, 10:30:50 AM

குறள் 113:
நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை
அன்றே யொழிய விடல்

மு.வ விளக்க உரை:
தீமை பயக்காமல் நன்மையே தருவதானாலும் நடுவு நி‌லைமை தவறி உண்டாகும் ஆக்கத்தை அப்போதே கைவிட வேண்டும்.
Title: Re: தினம் ஒரு திருக்குறள் - 114
Post by: எஸ்கே on April 26, 2022, 06:46:06 AM

குறள் 114:
தக்கார் தகவிலர் என்ப தவரவர்
எச்சத்தாற் காணப் படும்

மு.வ விளக்க உரை:
நடுவுநிலைமை உடையவர் நடுவுநிலை‌மை இல்லாதவர் என்பது அவரவர்க்குப் பின் எஞ்சி நிற்கும் புகழாலும் பழியாலும் காணப்படும்.
Title: Re: தினம் ஒரு திருக்குறள் - 115
Post by: எஸ்கே on April 27, 2022, 11:09:34 AM

குறள் 115:
கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க் கணி

மு.வ விளக்க உரை:
கேடும் ஆக்கமும் வாழ்வில் இல்லாதவை அல்ல; ஆகையால் நெஞ்சில் நடுவுநிலைமை தவறாமல் இருத்தலே சான்றோர்க்கு அழகாகும்.
Title: Re: தினம் ஒரு திருக்குறள் - 116
Post by: எஸ்கே on April 28, 2022, 10:16:51 AM

குறள் 116:
கெடுவல்யான் என்ப தறிகதன் நெஞ்சம்
நடுவொரீஇ அல்ல செயின்

மு.வ விளக்க உரை:
தன் நெஞ்சம் நடுவுநிலை நீங்கித் தவறு செய்ய நினைக்குமாயின், நான் கெடப்போகின்றேன் என்று ஒருவன் அறிய வேண்டும்.
Title: Re: தினம் ஒரு திருக்குறள் - 117
Post by: எஸ்கே on April 29, 2022, 09:36:36 AM

கெடுவாக வையா துலகம் நடுவாக
நன்றிக்கண் தங்கியான் தாழ்வு

மு.வ விளக்க உரை:
நடுவுநிலைமை நின்று அறநெறியில் நிலைத்து வாழகின்றவன் அடைந்த வறுமை நிலையைக் கேடு என கொள்ளாது உலகு.
Title: Re: தினம் ஒரு திருக்குறள் -118
Post by: எஸ்கே on April 30, 2022, 09:58:29 AM

குறள் 118:
சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபாற்
கோடாமை சான்றோர்க் கணி

மு.வ விளக்க உரை:
முன்னே தான் சமமாக இருந்து, பின்பு பொருளைச் சீர்தூக்கும் துலாக்கோல் போல் அமைந்து, ஒரு பக்கமாக சாயாமல் நடுவுநி‌லைமை போற்றுவது சான்றோர்க்கு அழகாகும்.
Title: Re: தினம் ஒரு திருக்குறள் - 119
Post by: எஸ்கே on May 01, 2022, 09:26:43 AM

குறள் 119:
சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா
உட்கோட்டம் இன்மை பெறின்

மு.வ விளக்க உரை:
உள்ளத்தில் கோணுதல் இல்லாத தன்மையை உறுதியாகப் பெற்றால், சொல்லிலும் கோணுதல் இல்லாதிருத்தல் நடுவுநிலைமையாம்.
Title: Re: தினம் ஒரு திருக்குறள் -120
Post by: எஸ்கே on May 02, 2022, 08:39:38 PM

குறள் 120:
வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தமபோல் செயின்

மு.வ விளக்க உரை:
பிறர் பொருளையும் தம் பொருள் போல் போற்றிச் செய்தால், அதுவே வாணிகம் செய்வோர்க்கு உரி‌ய நல்ல வாணிக முறையாகும்.
Title: Re: தினம் ஒரு திருக்குறள் - 121
Post by: எஸ்கே on August 15, 2022, 12:12:42 AM

அதிகாரம் - 13 அடக்கமுடைமை


குறள் 121:
அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்.


மு.வரதராசன் விளக்கம்:
அடக்கம் ஒருவனை உயர்த்தித் தேவருள் சேர்க்கும்; அடக்கம் இல்லாதிருத்தல், பொல்லாத இருள் போன்ற தீய வாழ்க்கையில் செலுத்தி விடும்.
Title: Re: தினம் ஒரு திருக்குறள் - 122
Post by: எஸ்கே on August 16, 2022, 12:30:56 AM

குறள் 122:
காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
அதனினூஉங் கில்லை உயிர்க்கு.


மு.வரதராசன் விளக்கம்:
அடக்கத்தை உறுதிப் பொருளாகக் கொண்டு போற்றிக் ‌காக்க வேண்டும். அந்த அடக்கத்தைவிட மேம்பட்ட ஆக்கம் உயிர்க்கு இல்லை.
Title: Re: தினம் ஒரு திருக்குறள்
Post by: KS Saravanan on December 21, 2022, 03:37:53 PM
குறள் 123:

செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்
தாற்றின் அடங்கப் பெறின்

மு.வ உரை:
அறிய வேண்டியவற்றை அறிந்து, நல்வழியில் அடங்கி ஒழுகப்பெற்றால், அந்த அடக்கம் நல்லோரால் அறியப்பட்டு மேன்மை பயக்கும்.

சாலமன் பாப்பையா உரை:
அடக்கத்துடன் வாழ்வதே அறிவுடைமை என்று அறிந்து, ஒருவன் அடக்கமாக வாழ்ந்தால் அவனது அடக்கம் நல்லவர்களால் அறியப்பட்டு அது அவனுக்குப் பெருமையைக் கொடுக்கும்.

கலைஞர் உரை:
அறிந்து கொள்ள வேண்டியவற்றை அறிந்து அதற்கேற்ப அடக்கத்துடன் நடந்து கொள்பவரின் பண்பை உணர்ந்து பாராட்டுகள் குவியும்
Title: Re: தினம் ஒரு திருக்குறள்
Post by: KS Saravanan on September 17, 2023, 02:17:47 PM
குறள் 184:

கண்ணின்று கண்ணறச் சொல்லினுஞ் சொல்லற்க
முன்னின்று பின்னோக்காச் சொல்

மு.வ விளக்க உரை:
எதிரே நின்று கண்ணோ‌ட்டம் இல்லாமல் கடுமையாகச் சொன்னாலும் சொல்லலாம்; நேரில் இல்லாதபோது பின் விளைவை ஆராயாத சொல்லைச் சொல்லக்கூடாது.


சாலமன் பாப்பையா விளக்க உரை:
ஒருவன் முகத்திற்கு எதிரே முகதாட்சணியம் இல்லாமல் பேசினாலும், அவன் எதிரில் இல்லாமல் இருக்கும்போது பின்விளைவை எண்ணாமல் அவனைப் பற்றிப் பேச வேண்டா.


கலைஞர் விளக்க உரை:
நேருக்கு நேராக ஒருவரது குறைகளைக் கடுமையாகச் சொன்னாலும் சொல்லலாம், ஆனால் பின் விளைவுகளை எண்ணிப் பார்க்காமல் நேரில் இல்லாத ஒருவரைப் பற்றிக் குறை கூறுவது தவறு
Title: Re: தினம் ஒரு திருக்குறள்
Post by: mandakasayam on September 19, 2023, 12:19:41 PM
அதிகாரம் :அடக்கமுடைமை குறள்  : 124

நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது




விளக்கம்:
தன் நேர்மையான வழியில் விட்டு விலகாத அடக்கத்துடன் வாழ்பவன்  பிறர் மனதை காட்டிலும்
மலையை விட பெரியது


Title: Re: தினம் ஒரு திருக்குறள்
Post by: mandakasayam on September 20, 2023, 11:53:41 AM
குறள் :125
  எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து. 

விளக்கம்:

  மு.வரதராசனார்..

பணிவுடையவராக ஒழுகுதல்பொதுவாக எல்லோர்க்கும் நல்லதாகும்; அவர்களுள் சிறப்பாகச் செல்வர்க்கே மற்றொரு செல்வம் போன்றதாகும்.


Title: Re: தினம் ஒரு திருக்குறள்
Post by: mandakasayam on September 21, 2023, 07:44:09 AM
அடக்கமடைமை
குறள் :126]

ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து


விளக்கம்:

சாலமன் பாப்பையா:
ஆமை தன் நான்கு கால், ஒரு தலை ஆகிய ஐந்து உறுப்புகளையும் ஆபத்து வரும்போது ஓட்டுக்குள் மறைத்துக் கொள்வது போல, ஒருவன் தன் ஒரு பிறப்பில் மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்து பொறிகளையும் அறத்திற்கு மாறான தீமை வரும்போது அடக்கும் ஆற்றல் பெறுவான் என்றால், அது அவனுக்குப் பிறவி தோறும் ஏழு பிறப்பிலும் - அரணாக இருந்து உதவும்.   


Title: Re: தினம் ஒரு திருக்குறள்
Post by: mandakasayam on September 22, 2023, 07:18:21 AM
குறள் :127

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு 


விளக்கம் :

[கலைஞர் விளக்கம்:
ஒருவர் எதைக் காத்திட முடியாவிட்டாலும் நாவையாவது அடக்கிக் காத்திட வேண்டும். இல்லையேல் அவர் சொன்ன சொல்லே அவர் துன்பத்துக்குக் காரணமாகி விடும்.     



]

Title: Re: தினம் ஒரு திருக்குறள்
Post by: mandakasayam on September 23, 2023, 07:05:23 AM
குறள்:128
ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்
நன்றாகா தாகி விடும்.   


விளக்கம்:

  கலைஞர் விளக்கம்:
ஒரு குடம் பாலில் துளி நஞ்சுபோல், பேசும் சொற்களில் ஒரு சொல் தீய சொல்லாக இருந்து துன்பம் விளைவிக்குமானாலும், அந்தப் பேச்சில் உள்ள நல்ல சொற்கள் அனைத்தும் தீயவாகிவிடும். 


Title: Re: தினம் ஒரு திருக்குறள்
Post by: mandakasayam on September 24, 2023, 04:18:25 AM
குறள் : 129
தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு 


விளக்கம்

    சாலமன் பாப்பையா விளக்கம்:
ஒருவனை மற்றொருவன் தீயால் சுட்ட புண் உடம்பின்மேல் வடுவாக இருந்தாலும் உள்ளத்துக் காயம் காலத்தில் ஆறிப்போய்விடும். ஆனால் கொடிய வார்த்தைகளால் நெஞ்சைச் சுட்ட வடு அதில் புண்ணாகவே கிடந்து ஒரு நாளும் ஆறாது.   
Title: Re: தினம் ஒரு திருக்குறள்
Post by: mandakasayam on September 25, 2023, 08:19:04 AM
குறள் :130
கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து.


விளக்கம்:

மு.வரதராசன் விளக்கம்:

சினம் தோன்றாமல் காத்து, கல்வி கற்று, அடக்கமுடையவனாக இருக்க வல்லவனுடைய செவ்வியை, அவனுடைய வழியில் சென்று அறம் பார்த்திருக்கும். 
Title: Re: தினம் ஒரு திருக்குறள்
Post by: mandakasayam on September 26, 2023, 07:07:00 AM
குறள் :131
ஒழுக்கமுடைமை:

ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்
விளக்கம்:

கலைஞர் விளக்கம்:

ஒருவர்க்கு உயர்வு தரக் கூடியது ஒழுக்கம் என்பதால், அந்த ஒழுக்கமே உயிரைவிட மேலானதாகப் போற்றப்படுகிறது.   


Title: Re: தினம் ஒரு திருக்குறள்
Post by: mandakasayam on September 27, 2023, 08:42:37 AM
குறள்: 132

பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்
தேரினும் அஃதே துணை.



விளக்கம்:
  சாலமன் பாப்பையா விளக்கம்:
எதனாலும், அழிந்து போகாமல் ஒழுக்கத்தை விரும்பிக் காத்துக்கொள்க; அறங்கள் பலவற்றையும் ஆய்ந்து, இம்மை மறுமைக்குத் துணையாவது எது எனத் தேர்வு செய்தால் ஒழுக்கமே துணையாகும்.   



Title: Re: தினம் ஒரு திருக்குறள்
Post by: mandakasayam on September 28, 2023, 09:45:17 AM
குறள்:133

ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்.


விளக்கம்:

கலைஞர் விளக்கம்:

ஒழுக்கம் உடையவராக வாழ்வதுதான் உயர்ந்த குடிப்பிறப்புக்கு எடுத்துக் காட்டாகும். ஒழுக்கம் தவறுகிறவர்கள் யாராயினும் அவர்கள் இழிந்த குடியில் பிறந்தவர்களாகவே கருதப்படுவர்.


]
Title: Re: தினம் ஒரு திருக்குறள்
Post by: mandakasayam on September 29, 2023, 01:44:42 PM
குறள்:134
  மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்.




விளக்கம்:

       
மு.வரதராசன் விளக்கம்:

கற்ற மறைப் பொருளை மறந்தாலும் மீண்டும் அதனை ஓதிக் கற்றுக் கொள்ள முடியும்; ஆனால் மறை ஓதுவனுடைய குடிப்பிறப்பு, ஒழுக்கம் குன்றினால் கெடு்ம்.


Title: Re: தினம் ஒரு திருக்குறள்
Post by: mandakasayam on September 30, 2023, 08:04:53 PM
குறள் :135

அழுக்கா  றுடையான்கண் ஆக்கம்போன்று இல்லை
ஒழுக்க மிலான்கண் உயர்வு.


விளக்கம்:

  மு.வரதராசன் விளக்கம்:
பொறாமை உடையவனிடத்தில் ஆக்கம் இல்லாதவாறு போல, ஒழுக்கம் இல்லாதவனுடைய வாழ்க்கையில் உயர்வு இல்லையாகும். 


Title: Re: தினம் ஒரு திருக்குறள்
Post by: mandakasayam on October 01, 2023, 11:17:57 AM
குறள் :136

ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்
ஏதம் படுபாக் கறிந்து


விளக்கம் :

கலைஞர் விளக்கம்:

மன உறுதி கொண்டவர்கள் ஒழுக்கம் தவறுவதால் ஏற்படும் இழிவை உணர்ந்திருப்பதால், நல்லொழுக்கம் குன்றிடுமளவிற்கு நடக்க மாட்டார்கள்.


Title: Re: தினம் ஒரு திருக்குறள்
Post by: mandakasayam on October 02, 2023, 01:47:57 PM
குறள்:137
ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப் பழி.   


விளக்கம்:

சாலமன் பாப்பையா விளக்கம்:

ஒழுக்கத்தினால் உயர்வை அடைவர்; ஒழுக்கம் இல்லாதவர் வேண்டாத பழியை அடைவர்.   


Title: Re: தினம் ஒரு திருக்குறள்
Post by: mandakasayam on October 03, 2023, 07:12:13 AM
குறள்:138

நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும்.   


விளக்கம்:

      கலைஞர் விளக்கம்:
நல்லொழுக்கம், வாழ்க்கையில் நன்மைக்கு வித்தாக அமையும். தீயொழுக்கம், தீராத துன்பம் தரும்.   



Title: Re: தினம் ஒரு திருக்குறள்
Post by: mandakasayam on October 04, 2023, 07:48:45 AM
குறள்:139

ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய
வழுக்கியும் வாயாற் சொலல்.   

விளக்கம்:

  கலைஞர் விளக்கம்:

தவறியும்கூடத் தம் வாயால் தகாத சொற்களைச் சொல்வது ஒழுக்கம் உடையவர்களிடம் இல்லாத பண்பாகும். 


Title: Re: தினம் ஒரு திருக்குறள்
Post by: mandakasayam on October 05, 2023, 07:28:57 AM
குறள்:140

உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்.


விளக்கம்:

மு.வரதராசன் விளக்கம்:

உலகத்து உயர்ந்தவரோடு பொருந்த ஒழுகும் முறையைக் கற்காதவர், பல நூல்களைக் கற்றிருந்த போதிலும் அறிவில்லாதவரே ஆவர். 

Title: Re: தினம் ஒரு திருக்குறள்
Post by: mandakasayam on October 07, 2023, 06:31:30 AM
  அதிகாரம்;  பிறனில் விழையாமை
குறள் : 141

பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து
அறம்பொருள் கண்டார்கண் இல். 


விளக்கம்:

சாலமன் பாப்பையா விளக்கம்:

இவ்வுலகில் அறத்தையும், பொருளையும் கற்று அறிந்தவரிடம் அடுத்தவனின் உரிமை ஆகிய மனைவி மீது ஆசைப்பட்டு வாழும் அறியாமை இல்லை.



Title: Re: தினம் ஒரு திருக்குறள்
Post by: mandakasayam on October 08, 2023, 10:20:40 AM
குறள் :142
அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை
நின்றாரின் பேதையார் இல்.


விளக்கம்:

  கலைஞர் விளக்கம்:

பிறன் மனைவியை அடைவதற்குத் துணிந்தவர்கள் அறவழியை விடுத்துத் தீயவழியில் செல்லும் கடைநிலை மனிதர்களைக் காட்டிலும் கீழானவர்கள்.     




Title: Re: தினம் ஒரு திருக்குறள்
Post by: mandakasayam on October 09, 2023, 09:17:34 AM
குறள்:143
விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்
தீமை புரிந்துதொழுகு வார். 


விளக்கம்:

மு.வரதராசன் விளக்கம்:
ஐயமில்லாமல் தெளிந்து நம்பியவருடைய மனைவியிடத்தே விருப்பம் கொண்டு தீமையைச் செய்து நடப்பவர், செத்தவரை விட வேறுபட்டவர் அல்லர்.
 


Title: Re: தினம் ஒரு திருக்குறள்
Post by: mandakasayam on October 12, 2023, 06:36:41 AM
குறள்:144

  எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும்
தேரான் பிறனில் புகல்.

விளக்கம்:

   கலைஞர் விளக்கம்:

பிழை புரிகிறோம் என்பதைத் தினையளவுகூடச் சிந்தித்துப் பாராமல், பிறன் மனைவியிடம் விருப்பம் கொள்வது, எத்துணைப் பெருமையுடையவரையும் மதிப்பிழக்கச் செய்துவிடும்.



Title: Re: தினம் ஒரு திருக்குறள்
Post by: mandakasayam on October 14, 2023, 04:13:56 AM
குறள்:145
எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும்
விளியாது நிற்கும் பழி.


விளக்கம்:

கலைஞர் விளக்கம்:
எளிதாக அடையலாம் என எண்ணிப் பிறனுடைய மனைவியிடம் முறைகேடாக நடப்பவன் என்றும் அழியாத பழிக்கு ஆளாவான்.


Title: Re: தினம் ஒரு திருக்குறள்
Post by: mandakasayam on October 15, 2023, 06:47:58 AM
குறள்:146

பகைபாவம் அச்சம் பழியென நான்கும்
இகவாவாம் இல்லிறப்பான் கண்.


விளக்கம்

கலைஞர் விளக்கம்:
பிறன் மனைவியிடம் முறைகேடாக நடக்க நினைப்பவனிடமிருந்து பகை, தீமை, அச்சம், பழி ஆகிய நான்கும் நீங்குவதில்லை.



Title: Re: தினம் ஒரு திருக்குறள்
Post by: mandakasayam on October 16, 2023, 07:12:56 AM
குறள்:147
அறனியலான் இல்வாழ்வான் என்பான் பிறனியலாள்
பெண்மை நயவா தவன்.


விளக்கம்:

சாலமன் பாப்பையா விளக்கம்:
அடுத்தவனுக்கு உரிமையானவனின் பெண்மையை விரும்பாதவன் அறத்துடன் குடும்பம் நடத்துபவன் எனப்படுவான்.




Title: Re: தினம் ஒரு திருக்குறள்
Post by: mandakasayam on October 17, 2023, 07:24:43 AM
குறள்:148

பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறனொன்றோ ஆன்ற வொழுக்கு


விளக்கம்

சாலமன் பாப்பையா விளக்கம்:
அடுத்தவன் மனைவியை மனத்துள் எண்ணாத பேராண்மை அறம் மட்டும் அன்று; சான்றோர்க்கு நிறைவான ஒழுக்கமும் ஆகும்.
 


Title: Re: தினம் ஒரு திருக்குறள்
Post by: mandakasayam on October 18, 2023, 06:49:38 AM
குறள்:149
நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின்
பிறர்க்குரியாள் தோள்தோயா தார். 

விளக்கம்:

கலைஞர் விளக்கம்:

பிறன் மனைவியின் தோளைத் தீண்டாதவரே கடல் சூழ் இவ்வுலகின் பெருமைகளை அடைவதற்குத் தகுதியுடையவர். 

Title: Re: தினம் ஒரு திருக்குறள்
Post by: mandakasayam on October 19, 2023, 07:15:56 AM
குறள்:150
அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள்
பெண்மை நயவாமை நன்று.


விளக்கம்:

சாலமன் பாப்பையா விளக்கம்:
அறம் செய்யாமல் பாவத்தையே செய்பவனாக இருந்தாலும் அடுத்தவனின் உரிமை ஆகிய மனைவிமேல் ஆசைப்படாமல் இருப்பது நல்லது.




Title: Re: தினம் ஒரு திருக்குறள்
Post by: mandakasayam on October 21, 2023, 07:01:54 AM
[குறள் :151

அதிகாரம்:
பொறையுடைமை



அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை.


விளக்கம்:
  கலைஞர் விளக்கம்:
தன்மீது குழி பறிப்போரையே தாங்குகின்ற பூமியைப் போல் தம்மை இகழ்ந்து பேசுகிறவர்களின் செயலையும் பொறுத்துக் கொள்வதே தலைசிறந்த பண்பாகும்.   



Title: Re: தினம் ஒரு திருக்குறள்
Post by: mandakasayam on October 22, 2023, 08:09:52 AM
குறள்152:

பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை
மறத்தல் அதனினும் நன்று.


விளக்கம் :
மு.வரதராசன் விளக்கம்:
வரம்பு கடந்து பிறர் செய்யும் தீங்கை எப்போதும் பொறுக்க வேண்டும்; அத் தீங்கை நினைவிலும் கொள்ளாமல் மறந்து விடுதல் பொறுத்தலை விட நல்லது.




Title: Re: தினம் ஒரு திருக்குறள்
Post by: mandakasayam on October 23, 2023, 07:51:05 AM
குறள் :153
இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை.


விளக்கம்:

   சாலமன் பாப்பையா விளக்கம்:
வறுமையுள் வறுமை, வந்த விருந்தினரை உபசரிக்காதது; வலிமையுள் வலிமை அற்றவரின் ஆத்திர மூட்டல்களைப் பொறுத்துக் கொள்வது.


Title: Re: தினம் ஒரு திருக்குறள்
Post by: mandakasayam on October 24, 2023, 08:33:14 AM
குறள்:154

நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொற்யுடைமை
போற்றி யொழுகப் படும்.


விளக்கம்:

  மு.வரதராசன் விளக்கம்:
நிறை உடையவனாக இருக்கும் தன்மை தன்னை விட்டு நீங்காமல் இருக்க வேண்டினால், பொறுமையைப் போற்றி ஒழுக வேண்டும்.


Title: Re: தினம் ஒரு திருக்குறள்
Post by: mandakasayam on October 26, 2023, 07:48:01 AM
குறள்:155

ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து.


விளக்கம்:

கலைஞர் விளக்கம்:
தமக்கு இழைக்கப்படும் தீமையைப் பொறுத்துக் கொள்பவர்களை உலகத்தார் பொன்னாக மதித்துப் போற்றுவார்கள். பொறுத்துக் கொள்ளாமல் தண்டிப்பவர்களை அதற்கு ஒப்பாகக் கருத மாட்டார்கள்.


Title: Re: தினம் ஒரு திருக்குறள்
Post by: mandakasayam on October 27, 2023, 06:48:23 AM
குறள்:156

ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றுந் துணையும் புகழ்.


விளக்கம்:


  கலைஞர் விளக்கம்:
தமக்குக் கேடு செய்தவரை மன்னித்திடாமல் தண்டிப்பவர்க்கு அந்த ஒரு நாள் மட்டுமே இன்பமாக அமையும். மறப்போம் மன்னிப்போம் எனப் பொறுமை கடைப் பிடிப்பபோருக்கோ, வாழ்நாள் முழுதும் புகழ்மிக்கதாக அமையும்.
Title: Re: தினம் ஒரு திருக்குறள்
Post by: mandakasayam on October 28, 2023, 07:33:09 AM
குறள்:157

திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து
அறனல்ல செய்யாமை நன்று.


விளக்கம்:

கலைஞர் விளக்கம்:

பிறர் செய்திடும் இழிவான காரியங்களுக்காகத் துன்பமுற்று வருந்தி, பதிலுக்கு அதே காரியங்களைச் செய்து பழி வாங்காமலிருப்பதுதான் சிறந்த பண்பாகும்.     
Title: Re: தினம் ஒரு திருக்குறள்
Post by: mandakasayam on October 30, 2023, 07:10:32 AM
குறள் :158
மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம்
தகுதியான் வென்று விடல்.


விளக்கம்:

     கலைஞர் விளக்கம்:
ஆணவங் கொண்டு அநீதி விளைவிப்பவர்களை, நாம் நம் பொறுமைக் குணத்தால் வென்று விடலாம்.
Title: Re: தினம் ஒரு திருக்குறள்
Post by: mandakasayam on November 02, 2023, 07:43:12 AM
குறள்:159
துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய்
இன்னாச்சொல் நோற்கிற் பவர்.
[/color]


விளக்கம்:

மு.வரதராசன் விளக்கம்:
வரம்பு கடந்து நடப்பவரின் வாயில் பிறக்கும் கொடுஞ்சொற்களைப் பொறுத்துக் கொள்பவர், துறந்தவரைப் போலத் தூய்மையானவர் ஆவர். 
Title: Re: தினம் ஒரு திருக்குறள்
Post by: mandakasayam on November 04, 2023, 08:18:34 AM
குறள் :160

  உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்
இன்னாச்சொல் நோற்பாரின் பின். 


விளக்கம்:

   சாலமன் பாப்பையா விளக்கம்:
பிறர் சொல்லும் தீய சொற்களைப் பொறுத்துக் கொள்பவருக்கும் பின்புதான் விரதம் காரணமாக உணவைத் தவிர்த்து நோன்பு இருப்பவர் பெரியவர் ஆவார்.

 
Title: Re: தினம் ஒரு திருக்குறள்
Post by: mandakasayam on November 05, 2023, 06:21:19 AM
  குறள்:161

அதிகாரம்: அழுக்காறாமை

ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து
அழுக்காறு இலாத இயல்பு.


விளக்கம்:

மு.வரதராசன் விளக்கம்:
ஒருவன் தன் நெஞ்சில் பொறாமை இல்லாமல் வாழும் இயல்பைத் தனக்கு உரிய ஒழுக்க நெறியாகக் கொண்டு போற்ற வேண்டும்.


Title: Re: தினம் ஒரு திருக்குறள்
Post by: mandakasayam on November 10, 2023, 12:42:31 PM
குறள் :162

விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்
அழுக்காற்றின் அன்மை பெறின்.


விளக்கம்:

  கலைஞர் விளக்கம்:
யாரிடமும் பொறாமை கொள்ளாத பண்பு ஒருவர்க்கு வாய்க்கப் பெறுமேயானால் அதற்கு மேலான பேறு அவருக்கு வேறு எதுவுமில்லை. 
Title: Re: தினம் ஒரு திருக்குறள்
Post by: mandakasayam on November 14, 2023, 08:38:20 AM
குறள்:163

அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்
பேணாது அழுக்கறுப் பான்.

விளக்கம்:
     மு.வரதராசன் விளக்கம்:
தனக்கு அறமும் ஆக்கமும் விரும்பாதவன் என்று கருதத் தக்கவனே, பிறனுடைய ஆக்கத்தைக் கண்டு மகிழாமல் அதற்காகப் பொறாமைப்படுவான்.
Title: Re: தினம் ஒரு திருக்குறள்
Post by: mandakasayam on November 23, 2023, 07:37:01 AM
குறள்:164
அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்
ஏதம் படுபாக்கு அறிந்து.


விளக்கம்
    சாலமன் பாப்பையா விளக்கம்:
பொறாமை கொண்டால் துன்பம் வரும் என்பதை அறிந்து அறிவுடையோர் பொறாமை காரணமாகத் தீமைகளைச் செய்யமாட்டார்.   
Title: Re: தினம் ஒரு திருக்குறள்
Post by: mandakasayam on November 25, 2023, 07:00:17 AM
குறள்:165
  அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்
வழுக்காயும் கேடீன் பது.


விளக்கம்

   கலைஞர் விளக்கம்:
பொறாமைக் குணம் கொண்டவர்களுக்கு அவர்களை வீழ்த்த வேறு பகையே வேண்டா. அந்தக் குணமே அவர்களை வீழ்த்தி விடும். 
Title: Re: தினம் ஒரு திருக்குறள்
Post by: mandakasayam on November 26, 2023, 09:18:45 AM
குறள் :166

கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉம் இன்றிக் கெடும்.


விளக்கம்:

.மு.வரதராசன் விளக்கம்:
பிறர்க்கு உதவியாகக் கொடுக்கப்படும் பொருளைக் கண்டு பொறாமைப்படுகின்றவனுடைய சுற்றம், உடையும் உணவும் இல்லாமல் கெடும். 
Title: Re: தினம் ஒரு திருக்குறள்
Post by: mandakasayam on November 27, 2023, 11:53:52 AM
குறள்: 167

அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும். 


விளக்கம்:

      சாலமன் பாப்பையா விளக்கம்:
பிறர் உயர்வு கண்டு பொறாமைப்படுபவனைப் பார்க்கும் திருமகள் வெறுப்புக் கொண்டு தன் அக்காள் மூதேவிக்கு அவனை அடையாளம் காட்டிவிட்டு விலகிப் போய்விடுவாள்.    [/b
Title: Re: தினம் ஒரு திருக்குறள்
Post by: mandakasayam on November 30, 2023, 07:59:51 AM
குறள்:168

அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்
தீயுழி உய்த்து விடும்.


விளக்கம் :

    கலைஞர் விளக்கம்:
பொறாமை எனும் தீமை ஒருவனுடைய செல்வத்தையும் சிதைத்துத் தீய வழியிலும் அவனை விட்டுவிடும்.   
Title: Re: தினம் ஒரு திருக்குறள்
Post by: mandakasayam on December 03, 2023, 07:10:48 AM
குறள்:169

அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும்.


விளக்கம்:

  கலைஞர் விளக்கம்:
பொறாமைக் குணம் கொண்டவனின் வாழ்க்கை வளமாக இருப்பதும், பொறாமைக் குணம் இல்லாதவனின் வாழ்க்கை வேதனையாக இருப்பதும் வியப்புக்குரிய செய்தியாகும்.   
Title: Re: தினம் ஒரு திருக்குறள்
Post by: mandakasayam on December 03, 2023, 11:20:15 PM
  குறள்: 170
  அழுக்கற்று அகன்றாரும் இல்லை அஃதுஇல்லார்
பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல். 


விளக்கம்
      சாலமன் பாப்பையா விளக்கம்:
பொறாமை கொண்டு உயர்ந்தவரும் இல்லை. அது இல்லாதபோது தாழ்ந்தவரும் இல்லை.   
Title: Re: தினம் ஒரு திருக்குறள்
Post by: mandakasayam on December 05, 2023, 07:44:33 AM
குறள்:171

அதிகாரம் : வெஃகாமை


நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்
குற்றமும் ஆங்கே தரும். 


விளக்கம்:

 மு.வரதராசன் விளக்கம்:
நடுவுநிலைமை இல்லாமல் பிறர்க்குரிய நல்ல பொருளை ஒருவன் கவர விரும்பினால் அவனுடைய குடியும் கெட்டுக் குற்றமும் அப்போழுதே வந்து சேரும். 
Title: Re: தினம் ஒரு திருக்குறள்
Post by: mandakasayam on December 06, 2023, 06:36:12 AM
குறள் :172

படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்
நடுவன்மை நாணு பவர்.


விளக்கம்:

கலைஞர் விளக்கம்:
நடுவுநிலை தவறுவது நாணித் தலைகுனியத் தக்கது என்று நினைப்பவர் தமக்கு ஒரு பயன் கிடைக்கும் என்பதற்காக, பழிக்கப்படும் செயலில் ஈ.டுபடமாட்டார்.   
Title: Re: தினம் ஒரு திருக்குறள்
Post by: mandakasayam on December 07, 2023, 11:51:42 AM
குறள்:173

  சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே
மற்றின்பம் வேண்டு பவர்.


விளக்கம்:

    சாலமன் பாப்பையா விளக்கம்:
அறத்தால் வரும் நிலையான இன்பங்களை விரும்புவோர் நிலையில்லாத இன்பத்தை விரும்பிப் பிறர் பொருளைக் கவரும் அறம் இல்லாத செயல்களைச் செய்ய மாட்டார்   
Title: Re: தினம் ஒரு திருக்குறள்
Post by: mandakasayam on December 09, 2023, 06:52:47 AM
குறள்: 174

  இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற
புன்மையில் காட்சி யவர் 


விளக்கம்;[
    மு.வரதராசன் விளக்கம்:
ஐம்புலன்களையும் வென்ற குற்றமில்லாத அறிவை உடையவர், யாம் வறுமை அடைந்தோம் என்று எண்ணியும் பிறர் பொருளை விரும்பார். 
Title: Re: தினம் ஒரு திருக்குறள்
Post by: mandakasayam on December 12, 2023, 12:35:10 PM
குறள்: 175

அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்
வெஃகி வெறிய செயின்.   


விளக்கம்:

   சாலமன் பாப்பையா விளக்கம்:
பிறர் பொருள் மீது, ஆசை கொண்டு எவரிடத்திலும் அறிவற்ற செயல்களைச் செய்தால் செய்பவரின் கூரிய, பல நூல் பயின்று பரந்த அறிவினால் அவருக்கு ஆகும் பயன்தான் என்ன?.   
Title: Re: தினம் ஒரு திருக்குறள்
Post by: mandakasayam on December 14, 2023, 11:07:29 AM
குறள்:176

  அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப்
பொல்லாத சூழக் கெடும்.


விளக்கம்:

  கலைஞர் விளக்கம்:
அருளை விரும்பி அதனை அடைவதற்கான வழியில் செல்பவன் தவறிப்போய்ப் பிறர் பொருளை விரும்பிப் பொல்லாத செயலில் ஈ.டுபட்டால் கெட்டொழிய நேரிடும்.

   
Title: Re: தினம் ஒரு திருக்குறள்
Post by: mandakasayam on December 18, 2023, 08:44:14 AM
குறள்: 177

வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின்
மாண்டற் கரிதாம் பயன். 


விளக்கம்:

   மு.வரதராசன் விளக்கம்:
பிறர் பொருளைக் கவர விரும்புவதால் ஆகும் ஆக்கத்தை விரும்பாதிருக்க வேண்டும்; அது பயன் விளைவிக்கும்போது அப்பயன் நன்மையாவது அரிதாகும். 
Title: Re: தினம் ஒரு திருக்குறள்
Post by: mandakasayam on December 24, 2023, 06:10:58 AM
குறள்:178
 
அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை
வேண்டும் பிறன்கைப் பொருள்.


விளக்கம்:

  கலைஞர் விளக்கம்:
தன்னுடைய செல்வச் செழிப்பு குறையாமலிருக்க வேண்டுமென்றால் பிறருடைய பொருளையும் தானே அடைய வேண்டுமென்று ஆசைப்படாமலிருக்க வேண்டும்.

 
Title: Re: தினம் ஒரு திருக்குறள்
Post by: mandakasayam on December 26, 2023, 07:48:25 AM
குறள்:179

அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும்
திறன்அறிந் தாங்கே திரு. 


விளக்கம்:

சாலமன் பாப்பையா விளக்கம்:
பிறர் பொருளுக்கு ஆசைப்படாதிருப்பதே அறம் என்னும் அறிவுடையோரின் பெருமையை அறிந்து, திருமகள் தானே அவரிடம் போய் இருப்பாள்.   
Title: Re: தினம் ஒரு திருக்குறள்
Post by: mandakasayam on December 28, 2023, 05:47:08 PM
குறள்:180

      இறலீனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும்
வேண்டாமை என்னுஞ் செருக்கு 



விளக்கம்;
சாலமன் பாப்பையா விளக்கம்:
பின் வி‌ளைவை எண்ணாமல் அடுத்தவர் பொருளை விரும்பிக் கவர்ந்தால், அது நமக்கு அழிவைக் கொடுக்கும்; அதற்கு ஆசைப்படாத செல்வமோ வெற்றியைக் கொடுக்கும்‌.
   
Title: Re: தினம் ஒரு திருக்குறள்
Post by: mandakasayam on January 03, 2024, 07:41:36 AM
குறள்:181

 
அதிகாரம்: புறங்கூறாமை


அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன்
புறங்கூறான் என்றல் இனிது.


விளக்கம்

    கலைஞர் விளக்கம்:
உள்ளத்தில் இருக்கும் அன்பைத் தாழ்ப்பாள் போட்டு அடைத்து வைக்க முடியாது. அன்புக்குரியவரின் துன்பங்காணுமிடத்து, கண்ணீர்த்துளி வாயிலாக அது வெளிப்பட்டுவிடும். 
Title: Re: தினம் ஒரு திருக்குறள்
Post by: mandakasayam on January 06, 2024, 08:17:05 AM
குறள்:182

  அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே
புறனழீஇப் பொய்த்து நகை.


விளக்கம்:

   கலைஞர் விளக்கம்:
ஒருவரை நேரில் பார்க்கும் பொழுது பொய்யாகச் சிரித்துப் பேசிவிட்டு, அவர் இல்லாத இடத்தில் அவரைப் பற்றிப் பொல்லாங்கு பேசுவது அறவழியைப் புறக்கணித்து விட்டு, அதற்கு மாறான காரியங்களைச் செய்வதைவிடக் கொடுமையானது.     
Title: Re: தினம் ஒரு திருக்குறள்
Post by: mandakasayam on January 22, 2024, 08:04:58 AM
குறள்:183

  புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்
அறங்கூற்றும் ஆக்கத் தரும்.


விளக்கம் :

சாலமன் பாப்பையா விளக்கம்:
காணாதபோது ஒருவனைப் பற்றிப் புறம்பேசிக், காணும்போது பொய்யாக அவனுடன் பேசி வாழ்வதைக் காட்டிலும் இறந்து போவது அற நூல்கள் கூறும் உயர்வைத் தரும். 
Title: Re: தினம் ஒரு திருக்குறள்
Post by: mandakasayam on January 27, 2024, 05:58:17 AM
குறள்:184

   கண்ணின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க
முன்னின்று பின்நோக்காச் சொல்.   


விளக்கம்:


       கலைஞர் விளக்கம்:
நேருக்கு நேராக ஒருவரது குறைகளைக் கடுமையாகச் சொன்னாலும் சொல்லலாம், ஆனால் பின் விளைவுகளை எண்ணிப் பார்க்காமல் நேரில் இல்லாத ஒருவரைப் பற்றிக் குறை கூறுவது தவறு.     
Title: Re: தினம் ஒரு திருக்குறள்
Post by: mandakasayam on February 04, 2024, 06:39:54 AM
குறள்: 185

  அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும்
புன்மையாற் காணப் படும். 


விளக்கம்:

     சாலமன் பாப்பையா விளக்கம்:
அறத்தைப் பெரிதாகப் பேசும் ஒருவன் மனத்தால் அறவோன் அல்லன் என்பதை அவன் புறம்பேசும் இழிவினைக் கொண்டு கண்டுகொள்ளலாம்.
 
Title: Re: தினம் ஒரு திருக்குறள்
Post by: mandakasayam on February 18, 2024, 08:36:04 AM
குறள்:186

பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும்
திறன்தெரிந்து கூறப் படும்.

   


விளக்கம்:

        சாலமன் பாப்பையா விளக்கம்:
அடுத்தவன் குறையை அவன் இல்லாத போது எவன் கூறுகிறானோ, அவனது குறை அவன் இல்லாதபோது இன்னொருவனால் கூறப்படும்.   
Title: Re: தினம் ஒரு திருக்குறள்
Post by: mandakasayam on March 03, 2024, 08:52:32 AM
குறள்: 187

பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி
நட்பாடல் தேற்றா தவர். 


விளக்கம்:

   கலைஞர் விளக்கம்:
இனிமையாகப் பழகி நட்புறவைத் தொடரத் தெரியாதவர்கள், நட்புக் கெடுமளவுக்குப் புறங்கூறி நண்பர்களை இழந்து விடுவார்கள்.   
Title: Re: தினம் ஒரு திருக்குறள்
Post by: mandakasayam on March 09, 2024, 07:39:17 AM
குறள்:188
துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்
என்னைகொல் ஏதிலார் மாட்டு.


    விளக்கம்
சாலமன் பாப்பையா விளக்கம்:
தன்னோடு நெருக்கமானவர்களின் குற்றத்தையும் அவர் இல்லாத நேரம் பேசும் இயல்புடையவர்கள், அயலார் காரியத்தில் என்னதான் பேசமாட்டார்கள்!.

 

Title: Re: தினம் ஒரு திருக்குறள்
Post by: mandakasayam on March 10, 2024, 09:56:13 AM
குறள் :189


    அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறன்நோக்கிப்
புன்சொல் உரைப்பான் பொறை.   

   விளக்கம்:

கலைஞர் விளக்கம்:
ஒருவர் நேரில் இல்லாதபோது பழிச்சொல் கூறுவோனுடைய உடலை இவனைச் சுமப்பதும் அறமே என்று கருதித்தான் நிலம் சுமக்கிறது     
   

Title: Re: தினம் ஒரு திருக்குறள்
Post by: mandakasayam on March 11, 2024, 05:23:36 PM
குறள்190

  ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு.


விளக்கம்:

       
மு.வரதராசன் விளக்கம்:
ஒருவன் அறத்தைப் போற்றிக் கூறாதவனாய் அறமல்லாதவற்றைச் செய்தாலும், மற்றவனைப் பற்றிப் புறங்கூறாமல் இருக்கிறான் என்று சொல்லப்படுதல் நல்லது.