Author Topic: 'பஞ்ச்' சாமிர்தம்.....நிஜமாவே இனிக்கும்..  (Read 671 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
'பஞ்ச்' சாமிர்தம்.....நிஜமாவே இனிக்கும்..




பஞ்ச் 1: விஜயகாந்த சார் தே.மு.தி.கவை அடகு வைக்க மாட்டேன்னு சூளுரைச்சுருக்காரு. சார் வைக்க மாட்டாரு ஆன எவனுக்கோ போற எதிர் ஓட்டுக்கள நடுவுல நின்னு வாங்கிக்கிட்டு... தானும் படுக்காம தள்ளியும் படுக்காம கேப்டன் கொடுக்குற அலும்பு.. முடியலடா சாமி...! என்னதான் சார் உங்க ஸ்டேரேட்டஜி...? இல்ல தெரியாமத்தான் கேக்குறோம்.... தமிழ் நாட்டுல தி.மு.க கூட்டணி பாரளுமன்ற தேர்தல்ல ஜெயிச்சு அதனால இலங்கைல ஒரு மாற்றம் ஏற்பட்டுச்சுன்னு யாராச்சும் சொல்றீங்கன்னா.. கூச்சப்படமா இந்த விசியகாந்த திட்டுங்க எசமான்... ?


முதல்ல உங்க கட்சியோட நோக்கத்த முதல்ல தெளிவா சொல்லுங்க அப்புறம் கேக்கலாம் ஓட்டு...!




பஞ்ச் 2: இலவசங்களை மக்கள் வாங்காமா இருக்கணும் அப்போதான் தேர்தல் நேர்மையா இருக்கும்னு முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி ரொம்ப நேர்மையா சொல்லியிருக்காரு. ஆமா...சார் வாங்காம இருக்கணும்னா கொடுக்காம இருக்கணும். இந்திய ஜனநாயகத்துல ஏன்டா இலவசம் கொடுத்து இன்னும் பிச்சைக்காரங்களா மக்களை வச்சி இருக்கீங்கனு கேக்க துப்பு கெட்ட நாக்கு ஒண்ணுமே இல்லை. இதுல மக்களை வாங்க கூடாதுன்னு சொல்றதுல ரொம்ப நியாயம் இருக்கு சார். தமிழ் நாட்லனு இல்ல இந்தியாவுல இலவசம் அதிகமா கொடுத்த மாநில அரசுகள் மக்களை முன்னேற்ற முடியாத, தெரியாத வக்கற்ற அரசுகள்னு அறிவிக்க ஏதும் வழி இருக்கா குப்தா சார்?




பஞ்ச் 3: ஒவ்வொரு கட்சிக்காரனும் பத்து டி.வி வச்சிக்கிடுவாங்க.. அதுல முழு நீள திரைப்படம் மாதிரி கட்சியோட சாதனைகளைப்போட்டு போட்டு ஏதோ ஒரு தியாக வாழ்க்கை வாழ்ந்த மாதிரி காமிச்சுருவாய்ங்க.... ! மக்களும் கண்ணால் கண்டுட்டு அட...கொடுமையே..இம்புட்டு நல்லதா செஞ்சு இருக்காகன்னு கன்னத்துல கைய வச்சிக்கிட்டு சென்டிமென்ட்டா அழுதுகிட்டு ஓட்டப் போய் போட போறாக? அரசு டி.விகளுக்கு சட்டம் போடுற டெல்லி ஆளுக.. தனியார் டி.விக்கு போட மாட்டீகளாப்பா..? எந்த டி.விலயும் கட்சியோ இல்ல கட்சி சார்ந்த விளம்பரமோ போட்டு வோட்டு கேட்க கூடதுன்னு உடனே ஒரு சட்டம் போடுங்கப்பா.....




என் சனம் எல்லாம் பாவம்.. டொட்ட்டடொய்ங்னு ஒரு நெஞ்ச உருக்குற மீசிக்கும்.. ஒரு அழுத்தமான பாட்டும் போட்டா பாத்துப்புட்டு ஓட்டப்போட்டுட்டு வந்துருதுக...




பஞ்ச் 4: எந்திரன் படம் வந்து 100வது நாளு ஆயிடுச்சு எல்லோருக்கும் சந்தோசம்தானே? சன் குழுமத்துக்கு மறைமுகமா மார்க்கெட்டிங் பண்ணின புண்ணியவான்கள் தமிழ் நாட்ல நிறைய பேரு.. அட நம்மளத்தான் சொல்றேன்..! 400 கோடியோ எம்புட்டோ சம்பாரிச்சிட்டாங்களாம்.. 100 வது நாள் ஆயிடுச்சு...அதை எப்படி அடைஞ்சோம்னு ஒரு நிகழ்ச்சிய ஒரு மாதிரி எடுத்து மறுபடியும் போட்டுக்காட்டி பாத்தவய்ங்கள எல்லாம் மறுக்கா பாக்க வைக்க ஏதாச்சும் சூனியம் வச்சுடப் போறாக...சூதானமா இருங்க மக்கா!




பஞ்ச் 5: அய்யா ஆட்சி அஞ்சு வருசம் முடியபோகுது....கேப்டன நம்பி பிரோயசனம் இல்ல.. ஏன்னா அவரு நைட்லனு இல்ல பகல்லயும் தெளிவா இருக்கிறது இல்ல.. ! மாற்ற இருக்குறது இந்த அம்மா...மட்டும்தான் ஆனா... எப்ப பாத்தாலும் ஓய்வுலயே இருந்துகிட்டு அறிக்கைல மக்களைச் சந்திச்சுகிட்டு...கோவில் கும்பாபிக்ஷேகம், பாலபிஷேகம் பண்ணிகிட்டு.. மக்கள் எதிர்பார்க்கிற ஒரு கட்சிய இப்படி துஷ்பிரோயோகம் பண்ணாம.. ஏறகனவே இருக்குற எம்.ஜி.ஆர். கிரேச மறுபடியும் தட்டிவிட்டு.. தெருத்தெருவா போய்.. மக்களை சந்திச்சு.. இப்போ இருக்குற ஒரு தூரத்தை இந்தம்மா கொறச்சு.. ஏதாச்சும் உருப்படியா செஞ்சா..


தமிழ் நாட்டு மக்களுக்கு ஒரு மாற்று கிடைக்கும்.. இல்லேன்னா... அடுத்த 5 வருசமும் கொடநாட்லயே ரெஸ்ட் எடுக்க வேண்டியாதுதான்....!
                    

Offline RemO

நிஜமாவே இனிக்கும்.. --- இது படிப்பவர்களுக்கு ஆனால் கசக்கும் சம்மந்தப்பட்டவர்களுக்கு

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்