Author Topic: திருக்குறளை கண்டுபிடி  (Read 73774 times)

Offline RemO

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #15 on: October 10, 2011, 03:29:38 AM »
பொருளற்றார் பூப்ப ரொருகால் அருளற்றார்
அற்றார்மற் றாதல் அரிது.


பொருள் இல்லாதவர் ஒரு காலத்தில் வளம் பெற்று விளங்குவர், அருள் இல்லாதவர் வாழ்க்கையின் பயம் அற்றவரே அவர் ஒரு காலத்திலும் சிறந்து விளங்குதல் இல்லை.




தகுதி .......   ....... பகுதியால்
........  ஒழுகப்  .......
.

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #16 on: October 12, 2011, 06:40:01 PM »
தகுதி யெனவொன்று நன்றே பகுதியாற்
பாற்பட் டொழுகப் பெறின்.


அறவழி நின்று பகை , நட்பு ,நொதுமல் (அயலார் ) ஆகிய மூவிடத்திலும் வேறுபாடு இன்றி நடத்தலே நடுவு நிலைமையின் பயனாகும் .

செப்பம் ............... .................... ......................
...................ஏமாப்பு ............
                    

Offline RemO

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #17 on: October 14, 2011, 12:47:03 AM »
செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி
எச்சத்திற் கேமாப்பு உடைத்து.


நடுவுநிலைமை உடையவனின் செல்வவளம் அழிவில்லாமல் அவனுடைய வழியில் உள்ளார்க்கும் உறுதியான நன்மை தருவதாகும்.

நல்லா .....   .......... மேலுலகம்
...... ஈ.தலே ........

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #18 on: October 21, 2011, 03:49:16 AM »
நல்லா றெனினுங்  கொளல்தீது  மேலுலகம்
இல்லெனினும் ஈதலே நன்று .


பிறரிடமிருந்து நல வழியில் பொருளை பெற்றாலும் அது பெருமையல்ல ; சிறுமையே ஆகும் கோடை வழங்குவதால் மேலுலகம் என்று சொல்லபடுவது கிட்டிவிட போவதில்லை எனினும் பிறருக்கு கொடுத்து வாழ்வதே சிறந்த வாழ்க்கையாகும்

பல ---- ------ ------ காண்பர்
----------------லவர்
                    

Offline RemO

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #19 on: October 22, 2011, 10:29:37 AM »
பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர்
அலகுடை நீழ லவர்.

நெல் வளம் உடைய தண்ணளி பொருந்திய உழவர், பல அரசரின் குடை நிழல்களையும் தம் குடையின் கீழ் காணவல்லவர் ஆவர்.

அற்கா ........  ........ அதுபெற்றால்
அற்குப .......   ........


Offline Anu

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #20 on: October 31, 2011, 06:09:02 PM »
அற்கா  இயல்பிற்றுச்  செல்வம் அதுபெற்றால்
அற்குப  ஆங்கே  செயல்.

 
நகுதற்    .....       .........      மிகுதிக்கண்   
      மேற்செனறு ............        பொருட்டு


Offline RemO

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #21 on: October 31, 2011, 08:34:19 PM »
நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்செனறு இடித்தற் பொருட்டு.

நட்புச் செய்தல் ஒருவரோடு ஒருவர் சிரித்து மகிழும் பொருட்டு அன்று, நண்பர் நெறிக்கடந்து செல்லும் போது முற்ப்பட்டுச் சென்று இடித்துரைப்பதற்காகும்.


எண்ணிய ............  கெய்துப .............
...........   ...... பெறின்
.

Offline Anu

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #22 on: November 02, 2011, 05:15:10 PM »
எண்ணிய  எண்ணியாங்  கெய்துப   எண்ணியார்
திண்ணியர் ஆகப்
பெறின்

எண்ணியதைச் செயல்படுத்துவதில் உறுதி உடையவர்களாக இருந்தால் அவர்கள் எண்ணியவாறே வெற்றி பெறுவார்கள்

அன்றறிவாம்      ..............         .......    அறஞ்செய்க
பொன்றுங்கால்  ............. துணை.
« Last Edit: November 06, 2011, 08:48:47 PM by Anu »


Offline RemO

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #23 on: November 03, 2011, 11:20:16 AM »
அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை.

இளைஞராக உள்ளவர், பிற்காலத்தில் பார்த்து கொள்ளலாம் என்று எண்ணாமல் அறம் செய்ய வேண்டும். அதுவே உடல் அழியும் காலத்தில் அழியா துணையாகும்.


குழல்இனிது ....... என்பதம் ......
............ கேளா .........


Offline தாமரை

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #24 on: November 03, 2011, 05:33:00 PM »
குழல் இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்.

தம் மக்களின் மழலைச் சொல்லைக் கேட்டு அதன் இனிமையை நுகராதவரே குழலின் இசை இனியது யாழின் இசை இனியது என்று கூறுவர்.


யான்நோக்கும்----நிலன்நோக்கும் -----
 ------மெல்ல நகும்.
« Last Edit: November 03, 2011, 05:35:14 PM by Thamarai »

Offline RemO

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #25 on: November 04, 2011, 11:42:35 AM »
யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும்.


யான் நோக்கும் போது அவள் நிலத்தை நோக்குவாள், யான் நோக்காத போது அவள் என்னை நோக்கி மெல்லத் தனக்குள் மகிழ்வாள்.

பண்பிலான் .....     ........ நன்பால்
கலந்தீமை ........   ......


Offline Anu

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #26 on: November 06, 2011, 09:01:39 PM »
பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்
கலந்தீமை யால்திரிந் தற்று.

பண்பு இல்லாதவன் பெற்ற பெரிய செல்வம், வைத்த கலத்தின் தீமையால் நல்ல பால் தன் சுவை முதலியன கெட்டாற் போன்றதாகும்.



பிறர்க்கின்னா   .........   ..........   தமக்குஇன்னா   
பிற்பகல்   தாமே   ..............


Offline RemO

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #27 on: November 07, 2011, 12:41:30 AM »
பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா
பிற்பகல் தாமே வரும்.


முற்பகலில் மற்றவருக்கு துன்பமானவற்றைச் செய்தால் அவ்வாறு செய்தவர்க்கே பிற்பகலில் துன்பங்கள் தாமாக வந்து சேரும்

செய்யாமல் ..........   ............ செய்தபின்
உய்யா ........   ........

Offline Karthika

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #28 on: November 07, 2011, 05:04:07 PM »
செய்யாமல்  செற்றர்ர்க்கும்  இன்னாத  செய்தபின்
உய்யா விழுமந் தரும்.


பிறப்பென்னும் ....................... சிறபேன்னும்
.................... காண்பது அறிவு .
« Last Edit: November 07, 2011, 05:19:48 PM by Karthika »

Offline RemO

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #29 on: November 07, 2011, 06:55:21 PM »
பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பது அறிவு.

எப்பொருள் ......    .......   .......
மெய்ப்பொருள் ........  அறிவு.