Author Topic: அர்த்தமுள்ள இந்துமதம்  (Read 11354 times)

Offline எஸ்கே

  • Hero Member
  • *
  • Posts: 609
  • Total likes: 1561
  • Karma: +0/-0
  • Gender: Male
  • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: அர்த்தமுள்ள இந்துமதம் - 91
« Reply #90 on: February 05, 2022, 08:39:15 AM »

உக்ர தேவதைகள் அகோரமாகவும், நாக்கை நீட்டிக் கொண்டும் பயமுறுத்தும் விதத்தில் இருக்கின்றனரே. இதற்கு இந்து மதத்தில் இடம் கொடுத்தது ஏன்?


காளி, துர்க்கை, பைரவர், சரபேஸ்வரர், நரசிம்மர் போன்ற தெய்வங்கள் உக்ரமாகக் காட்சி தருவர். இவர்கள் தீய சக்திகளாகிய அரக்கர்களை அழித்து நம்மைக் காப்பாற்றியவர்கள். உக்கிரமான தீய சக்திகளை அழிக்க தெய்வங்களும் உக்கிரமான வடிவம் எடுக்க வேண்டியதாகிறது. மனிதர்களில் நல்லவர்களும் இருக்கிறார்கள், தீயவர்களும் இருக்கிறார்கள். தீயவர்களை திருத்துவதற்கு என சட்டம் இருக்கிறது. அதைச் செயல்படுத்த காவல் துறை உள்ளது. திருடர்களைக் கண்டிக்கும் பொழுது காவல் துறையினர் கூட கோபப்பட வேண்டியுள்ளதே! இதற்காக அவர்களை நாம் ஒதுக்கி விட முடியுமா! இது போல்தான் இந்து மதமும். விடாப்பிடியாக தவறுசெய்வோரை இரும்புக்கரம் கொண்டு அடக்க உக்ரமான தெய்வங்களை வழிபடும் முறையை வகுத்துள்ளது.



தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline எஸ்கே

  • Hero Member
  • *
  • Posts: 609
  • Total likes: 1561
  • Karma: +0/-0
  • Gender: Male
  • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: அர்த்தமுள்ள இந்துமதம் - 92
« Reply #91 on: February 06, 2022, 03:31:43 PM »

தட்சிணாமூர்த்தியின் காலின் கீழ் இருக்கும் அரக்கன் யார்? மற்றும் உள்ள நால்வர் யார்?


தட்சிணாமூர்த்தி அறிவின் வடிவம். அறியாமையை அழித்து நல்ல நிலை புகட்டுபவர். அறியாமை என்பது ஒரு அரக்கனைப் போன்றது. மனிதனை முன்னேறவிடாமல் தடுத்து அழித்துவிடும். எனவே அறியாமை எனும் அரக்கன் அழிக்கப்பட வேண்டியவன் என்பதை உணர்த்தவே காலின் கீழ் "அபஸ்மாரம்' எனும் அறியாமை வடிவ அரக்கனை மிதித்திருக்கிறார். தட்சிணாமூர்த்தியிடம் சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் எனும் நால்வர், முதலில் பாடம் படித்து இவ்வுலகுக்கு உண்மை அறிவு நூல்களை வழங்கியவர்கள். இவர்களையும் சேர்த்து வணங்கும் நிலையில், நால்வரும் தட்சிணாமூர்த்தியிடமே இருப்பார்கள்.



தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline எஸ்கே

  • Hero Member
  • *
  • Posts: 609
  • Total likes: 1561
  • Karma: +0/-0
  • Gender: Male
  • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: அர்த்தமுள்ள இந்துமதம் - 93
« Reply #92 on: February 07, 2022, 09:01:54 AM »

இவ்வுலகில் எதுதான் நிலையானது? மனிதர்களின் துன்பங்களுக்கு என்ன காரணம்?

சைவ சித்தாந்தம் இவ்வுலகில் நிலையானவையாக மூன்றைக் கூறுகிறது. ஒன்று இறைவன், இரண்டு உயிர், மூன்றாவது இன்ப துன்பத்தின் காரணமாகிய மயக்கம். இறைவன் இன்ப துன்பங்களுக்கு அப்பாற்பட்டு எப்பொழுதும் சாந்தமாக இருப்பவர். உயிர்கள் (அதாவது மனிதன் விலங்குகள் உட்பட எல்லாமே) தாம் விரும்பும் இன்பத்தை அடைவதற்காக துன்பப்படுகின்றனர். நாமும் இறைவனைப் போல் நித்யானந்த மயமாக இருக்கலாம். நாம் நினைத்ததை யெல்லாம் அடைய வேண்டும் என்ற மயக்கத்திலிருந்து விடுபடும் பொழுது.



தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline எஸ்கே

  • Hero Member
  • *
  • Posts: 609
  • Total likes: 1561
  • Karma: +0/-0
  • Gender: Male
  • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: அர்த்தமுள்ள இந்துமதம் - 94
« Reply #93 on: February 08, 2022, 02:44:51 PM »

புரட்டாசி சனிக்கிழமைகளில் பெண்கள் யாசகம் கேட்டு செல்லலாமா?

ஒரு தீவிர பக்தர் இருந்தார். புரட்டாசி சனிக்கிழமையில் பெருமாளுக்குத் திருவமுது படைத்து ஏழைகளுக்கு விநியோகம் செய்து வந்தார். தாம் மிகப் பெரிய தர்மம் செய்வதாக அவருக்கு கர்வம் ஏற்பட்டது. பகவானின் சோதனையும் துவங்கியது. ஒரு சமயத்தில் திருவமுது செய்வதற்கான வசதியே இல்லாத சூழல், கர்வம் இருந்தாலும் பக்தர் அல்லவா? புரட்டாசி சனியன்று, அரிசி மற்றும் பொருட்களை மற்றவர்களிடம் உதவி கேட்டு வாங்கி திருவமுது செய்து பெருமாளுக்குப் படைத்து வழக்கம் போல் விநியோகம் செய்தார். பகவானே நேரில் காட்சி கொடுத்து திருவமுதை வாங்கி உண்டார். மெய் சிலிர்த்து கண்கலங்கிய பக்தர் ""இத்தனை நாள் வாராது, இன்று யாசகம் வாங்கி அமுது செய்திருக்கும் நாளில் காட்சியளித்து அமுது உண்ணும் காரணம் யாது பரந்தாமா?'' என்று கேட்டார். ""இத்தனை நாள் உன்னுடையது எனும் எண்ணத்துடன் அமுது படைத்தாய். அதில் உன் கர்வம் கலந்திருந்தது. இன்று பலரிடம் பெற்று செய்திருக்கிறாய். உனது கர்வம் கலக்காததால் மிக்க சுவையாக உள்ளது. உனக்கும் உனது தர்மத்தில் பங்கு கொண்ட அனைவருக்கும் இன்று மகிழ்ச்சியோடு அருள்பாலிக்கிறேன். தர்மம் பொதுவானது,'' என்றார். பக்தரும் மகிழ்ந்து புரட்டாசி சனிக்கிழமை தோறும் யாசகம் பெற்று திருவமுதும் அன்னதானமும் செய்து மகிழ்வுடன் வாழ்ந்தார். இதன் காரணமாகத்தான் புரட்டாசி சனிக்கிழமைகளில் யாசகம் பெற்று திருவமுது செய்யும் வழக்கம் இன்றும் உள்ளது. மேலான தர்ம காரியத்தில் ஆண் பெண் வித்தியாசமெல்லாம் கிடையாது.



தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline எஸ்கே

  • Hero Member
  • *
  • Posts: 609
  • Total likes: 1561
  • Karma: +0/-0
  • Gender: Male
  • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: அர்த்தமுள்ள இந்துமதம் - 95
« Reply #94 on: February 09, 2022, 11:04:31 AM »

அபிஜித் முகூர்த்தம் என்றால் என்ன?

பகல் 11- 12 மணி வரையுள்ள நேரத்தை அபிஜித் முகூர்த்தம் என்பர். "அபிஜித்' என்றால் "வெற்றியைத் தருவது' என்று பொருள். அபிஜித் நட்சத்திரம் என்று இதனை 28வது நட்சத்திரமாக சேர்த்துக் கொள்பவர்களும் உண்டு. பொதுவாக, எல்லா நாட்களிலும் சூரிய உதய காலம், அபிஜித் வேளை, அஸ்தமான காலம் ஆகிய மூன்று வேளைகளும் தோஷமற்றவை. இந்த மூன்று வேளைகளிலும் திதி, நட்சத்திரம், கிழமை தோஷங்கள் கிடையாது. சுப நிகழ்ச்சிகளைச் செய்யலாம். உதய காலத்திற்கும், அஸ்தமன காலத்திற்கும் கோதூளி லக்னம் என்று பெயர். கோதூளி என்றால் பசு மாட்டின் கால்நடையிலிருந்து கிளம்பும் புழுதி. அதாவது காலையில் பசு மாட்டை மேய்க்க ஓட்டிச் செல்வார்கள். மாலையில் வீட்டுக்கு திரும்ப ஓட்டி வருவார்கள். இது சமயத்தில் கிளம்பும் புழுதி எங்கும் பரவுவதால் எல்லா தோஷங்களும் நீங்குவதாக சாஸ்திரம் கூறுகிறது.



தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline எஸ்கே

  • Hero Member
  • *
  • Posts: 609
  • Total likes: 1561
  • Karma: +0/-0
  • Gender: Male
  • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: அர்த்தமுள்ள இந்துமதம் - 96
« Reply #95 on: February 10, 2022, 08:51:41 AM »

சந்திராஷ்டமத்தில் சுபநிகழ்ச்சி செய்ய வேண்டுமானால் என்ன செய்வது பரிகாரம் எதுவும் உண்டா?


நமது ராசிக்கு எட்டாவது ராசியில் சந்திரன் சஞ்சரிக்கும் காலம் சந்திராஷ்டமம் என்று அழைக்கப்படுகிறது. எட்டாமிடம் என்பது ஆயுளுக்கும், நமது சிந்தனைகளுக்குமான இடம். இந்த இடத்தில் சந்திரன் சஞ்சரிக்கும் பொழுது பெரும்பாலும் கோபமூட்டும் சிந்தனைகளே ஏற்படுகிறது. நாம் சும்மாயிருந்தாலும் வலுவிற்கு ஏதாவது சண்டை வந்து நம் மனநிலை பாதிக்கப்படும். மாதம் ஒருமுறை இரண்டே கால் நாள் சந்திராஷ்டமம் நீடிக்கிறது. முதல் நாள் பதட்டம் அதிகமாக இருக்கும். இரண்டாம் நாள் 25 சதவீதமாகக் குறைந்துவிடும். இரண்டாம் நாளில் சுபநிகழ்ச்சிகள் செய்யலாம். முதல் நாள் செய்தேயாக வேண்டும் என்ற கட்டாயம் இருந்தால் விநாயகருக்குத் தயிர் அபிஷேகம் செய்து அருகம்புல் சாத்தி வழிபட்டு செய்யலாம். கோபப்படாமல் இருந்து ஜெயித்து தான் காட்டுவோமே?



தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline எஸ்கே

  • Hero Member
  • *
  • Posts: 609
  • Total likes: 1561
  • Karma: +0/-0
  • Gender: Male
  • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: அர்த்தமுள்ள இந்துமதம் - 97
« Reply #96 on: February 11, 2022, 05:14:09 AM »

கோயிலில் மூலவரை தரிசித்த பின் வலம் வரவேண்டுமா? வலம் வந்தபின் தரிசிக்க வேண்டுமா?


கோயிலுக்குள் சென்றவுடன் கொடிமரம் முன்பு நமஸ்காரம் செய்து, பிறகு உள்ளே சென்று ஒரு முறை வலம் வந்து, மூலவரைத் தரிசிக்க வேண்டும். பிறகு அம்பாள் சந்நிதியை தரிசித்து, இரண்டாம் முறை வலம் வரும் பொழுது மற்ற தெய்வங்களை வணங்க வேண்டும். மூன்றாம் முறை வலம் வந்து, சண்டிகேஸ்வரரை தரிசிக்க வேண்டும். ஒவ்வொரு முறை வலம் வரும் பொழுதும் மூலவரின் எதிரே மட்டும் தான் நமஸ்காரம் செய்ய வேண்டும். மூன்று முறை ப்ரதக்ஷிணமும் (வலம் வருதல்), ஐந்து முறை நமஸ்காரமும் செய்ய வேண்டும்.



தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline எஸ்கே

  • Hero Member
  • *
  • Posts: 609
  • Total likes: 1561
  • Karma: +0/-0
  • Gender: Male
  • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: அர்த்தமுள்ள இந்துமதம் - 98
« Reply #97 on: February 13, 2022, 11:01:07 AM »

தலவிருட்சம் என்ற பெயரில் கோயில்களில் உள்ள மரங்களைப் பற்றி விளக்கவும்.


ஒரு சில கோயில்களை "மஹா ÷க்ஷத்ரம்' என்று கூறுவார்கள். அப்படிப் போற்றப்படும் கோயில்களில், மூலஸ்தான மூர்த்தி சுயம்புவாகவோ (தானாகத் தோன்றியது) தேவர்கள் அல்லது முனிவர்களால் பிரதிஷ்டை செய்து பூஜித்ததாகவோ (காலத்தால் பழமை) வாய்ந்ததாகவோ இருக்க வேண்டும். இப்படிப்பட்ட இறைவனை ஆதிகாலத்தில் ஏதாவது ஒரு மரத்தின் கீழேயே வைத்து பூஜித்திருப்பார்கள். இந்த மரம் தான் தல விருட்சம் என்று போற்றப்படுகிறது. அக்கோயிலில் உள்ள இறைவனுக்கு உரிய சக்தியும் பெருமையும் இதற்கு உண்டு. இதனை வலம் வந்தாலே மூலஸ்தான மூர்த்தியை வழிபட்ட பலன் கிட்டும். ஒரு மகா÷க்ஷத்ரம் என்பது மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற மூவகையாலும் சிறப்புப் பெற்றிருக்கும். இவற்றில் தலம் என்று குறிப்பிடுவது தல விருட்சத்தைத் தான்



தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline எஸ்கே

  • Hero Member
  • *
  • Posts: 609
  • Total likes: 1561
  • Karma: +0/-0
  • Gender: Male
  • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: அர்த்தமுள்ள இந்துமதம் - 99
« Reply #98 on: February 15, 2022, 08:56:05 AM »

பாதக ஸ்தானத்தில் இருந்தால் மட்டுமே சனீஸ்வரரை வழிபடவேண்டும் என்பது உண்மையா?

கிரகங்கள் ஒன்பதும் கடவுளின் அடியவர்களே. அவரவர் பாவபுண்ணிய பலன்களை வழங்குவதற்காக நியமிக்கப்பட்டவர்கள். சனி ராசிக்கு 3,6,11 ஆகிய மூன்று ஸ்தானங்களில் சுப பலன்களை வாரி வழங்குவார். மற்ற ஸ்தானங்களில் நன்மையும் தீமையும் கலந்தே உண்டாகும். எந்த ஸ்தானத்தில் இருந்தாலும் சனியை அனைவரும் வழிபடலாம். ஒருவரின் வாழ்நாளை நிர்ணயிக்கும் ஆயுள்காரகர், தொழிலை நிர்ணயிக்கும் ஜீவனகாரகர் என்னும் இருபெரும் விஷயங்கள் சனீஸ்வரரின் கட்டுப்பாட்டில் உள்ளன. சனி மட்டுமல்ல! கிரகம் ஒன்பதையும் வணங்கவேண்டியது மிக அவசியம்.



தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline எஸ்கே

  • Hero Member
  • *
  • Posts: 609
  • Total likes: 1561
  • Karma: +0/-0
  • Gender: Male
  • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: அர்த்தமுள்ள இந்துமதம் - 💯
« Reply #99 on: February 16, 2022, 08:58:18 AM »

ஓம் என்னும் பிரணவ மந்திரத்தின் மகிமைகள் தெரியுமா?


ஓம் என்னும் மந்திரத்திற்கு பல விளக்கங்கள் உள்ளன. ஆதிபகவானாகிய இறைவனே! ஜீவனாகிய என்னை சேர்த்துக்கொள், என்பது இதன் பொருள். ஒவ்வொரு தடவையும் ஓம் என்று சொன்ன பிறகு, விஷ்ணுவே, சிவனே, சக்தியே, விநாயகா, ஐயப்பா, முருகா என்றெல்லாம் அவரவர் இஷ்டதெய்வத்தை அழைக்கிறோம்.

ஓம் முருகா, ஓம் விநாயகா, ஓம் விஷ்ணு, ஓம் சிவாயநம என்று சொல்லும் போது, அந்தந்த தெய்வங்களிடம் என்னை உன்னோடு சேர்த்துக்கொள் என்று பொருள் தெரிந்தோ, தெரியாமலோ கெஞ்சுகிறோம். காலம் வரும்போது, இந்த மந்திரம் சொன்னதற்குரிய பலன் உறுதியாகக் கிடைக்கும். பிறப்பற்ற நிலையும் பரமானந்தமும் ஏற்படும்.

ஓம் என்னும் மந்திரத்திற்குள் சிருஷ்டி கர்த்தாவான பிரம்மாவும்,, காக்கும் கடவுளான விஷ்ணுவும்,சம்ஹார மூர்த்தியாகிய ருத்திரனும் அடக்கம். ஓம் என்னும் மந்திரம் ஜபிப்பதன் மூலம் உடலையும் உள்ளத்தையும் சீராக வைத்துக்கொள்ள முடியும்.எடுத்த நியாயமான கோரிக்கைகள் நிறைவேறும். எதிர்ப்பு சக்திகள் நீங்கும்.மன சாந்தி ஏற்படும்.உலகத்தோடு ஒட்டி வாழலாம், வயது முதிர்ந்தோர் இந்த ஏகாட்சரத்தால் ஏகாந்த நிலையை அடையலாம்.

வாய்விட்டு ஜபிக்காமல் மனதிற்குள் “ஒம்”, “ஓம்”, “ஓம்” என ஜபிக்க வேண்டும். இல்லாவிட்டால் ஓ. . . ம் என நீட்டியும் மனதால் ஜபிக்கலாம். கிழக்குப் பார்க்க அமர்ந்து கண்களை மூடி ஜெபிப்பது நன்று. மாடி வீட்டில் இருந்து ஜபித்தால் பலன் கூடும். மலை மேல் இருந்து ஜெபித்தால் பல மடங்கு சக்தி கிடைக்கும்.

எந்த மந்திரம் ஜபிக்க ஆரம்பித்தாலும், குறைந்தது ஒரு லட்சம் உரு ஏற்றியபின் தான் பலன் கிடைக்க ஆரம்பிக்கும். உங்கள் உடலின் மின்சக்தி மற்றும் காந்த சக்தி ஏற்படும். வியாதியஸ்தர் முன் ஜெபித்தால் அவர்களின் நோய் நீங்கும்.

வேப்பங்குச்சியால் குழந்தைகள் நாக்கில் “ஓம்” என எழுத அவர்கள் கல்வி மேம்படும்.

சுத்தமான பசுஞ்சாண விபூதியில் “ஓம்” என எழுதிக்கொடுக்க வயிற்று நோய்கள் நீங்கும்.
ஒரு எலக்ட்ரானிக் எலக்ட்ரோ மீட்டர் மூலமாக சாதாரண மனிதனின் மின் சக்தியை அளக்க வேண்டும். பின் ஒம் ஓம் ஒம் என்று ஒரு லட்சம் முறை ஜபித்தவரின் மின்சக்தியை அளக்க வேண்டும்.அப்போது இருவருக்குமுள்ள வேறுபாடு நன்கு தெரியும்.



தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்