Author Topic: மாமன்னர் ராஜராஜ சோழனின் - மறுபக்கம்  (Read 3201 times)

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
1000 பெரு உடையார்                                                                     




சோழப் பேரரசன் இராஜராஜன் என்பான் ஆட்சிக்காலத்தில் அரசின் வருமானத்தைப் பெருக்கிட வரிவிதிப்பு முறையை வகுத்துக் கையாண்டு ஆட்சிபுரிந்தான் என்று அண்மையில் ஏட்டில் வந்தது. அவன் கட்டிய கோயிலின் 1000 ஆம் ஆண்டு விழாவையொட்டிப் பார்ப்பனத் திருமகன் ஒருவர் கொடுத்த பேட்டி மவுண்ட்ரோடு மகாவிஷ்ணு ஏட்டில் வந்திருந்தது. படித்ததும் புல்லரித்துப் போனது உடம்பு. ராஜராஜனின் மெய்க்கீர்த்தியைப் படித்ததும் மெய் சிலிர்த்தது.

1. ஊரில் பொதுவாக வைக்கப்பெற்றிருந்த ஓர் எடையைப் பற்றியவரி (ஊர்க்கழஞ்சு), 2. முருகன் கோயிலுக்காகச் செலுத்திட வேண்டியவரி (குமர கச்சாணம்) 3. மீன்பிடி உரிமைக்கான வரி (மீன் பாட்டம்) 4. சிறுவரிகள் (கீழிறைப்பாட்டம்) 5. குளத்து நீரைப் பயன்படுத்துவோருக்கான பாசனவரி (தசபந்தம்) 6. பொன் நாணயம் அரசன் அச்சடிப்பதற்கான வரி (மாடைக்கூலி) 7. நாணயத்தின் பொன்மாற்று அளவை ஆய்வதற்கான வரி (வண்ணக்கக் கூலி) 8. பொருள்களை விற்பனை செய்வதற்கான வரி (முத்தாவணம்) 9. மாதம்தோறும் செலுத்த வேண்டிய வரி (திங்கள் மேரை) 10. நிலத்துக்கான வரி (ஒருவேலிக்கு இவ்வளவு என வேலிக்காசு அல்லது வேலிப் பயறு) 11. நாட்டின் நிருவாகச் செலவுக்கான வரி (நாடாட்சி) 12. கிராம நிருவாகச் செலவுக்கான வரி (ஊராட்சி) 13. நன்செய் நிலத்திற்கான நீர்ப்பாசனவரி (வட்டி நாழி) 14. வீட்டுவாசற்படிக்கான வரி (பிடா நாழி அல்லது புதாநாழி) 15. திருமணம் செய்தால் செலுத்த வேண்டிய வரி (கண்ணாலக்காணம்), 16. துணி துவைக்கும் கல்லுக்கான வரி (வண்ணாரப்பாறை) 17. மண்பாண்டம் செய்வதற்கான வரி (குசக்காணம்) 18. தண்ணீர்வரி (நீர்க்கூலி) 19. நெசவாளர் தறிக்குத் தரவேண்டிய வரி (தறிப்புடவை அல்லது தறிக்கூரை) 20. தரகர்கள் தரவேண்டிய வரி (தரகுபாட்டம்) 21. பொற்கொல்லருக்-கான வரி (தட்டார் பாட்டம்) 22. ஆடுகளுக்கானவரி (ஆட்டுவரி) 23. பசு, எருதுகளுக்கான வரி (நல்லா அல்லது நல்லெருது) 24. நாட்டின் காவலுக்கான வரி (நாடுகாவல்) 25. ஊடு பயிர் சா-குபடி செய்தால் வரி (ஊடுபோக்கு) 26. ஆவணப் பதிவுக்கான வரி (விற்பிடி) 27. வீட்டு மனைக்கான வரி (வாலக்காணம்) 28. சுங்கவரி (உல்கு) 29. ஓடங்களுக்கான வரி (ஓடக்கூலி) 30. நீதிமன்றவரி (மன்றுபாடு) 31. அரசனுக்குச் சேரவேண்டிய தனிவரி (மாவிறை) 32. கோயிலில் வேள்வி நடத்துவதற்கு வரி (தீயெரி) 33. கள் இறக்க வரி (ஈழம் பூட்சி) என்று பட்டியல் நீளும்வகையில் வரிபோட்டவர் இந்த மாமன்னர் என்று கே.கே. பிள்ளை எழுதுகிறார். (படிக்க: தமிழக வரலாறு _ மக்களும் பண்பாடும்). அரசனால் விதிக்கப்-பட்ட வரிகளும் கட்டணங்களும் 400 க்கும் மேற்பட்டவை எனக் கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன.

ஜனவரி, பிப்ரவரி தவிர எல்லா வரிகளும் போட்டுவிட்டவர்கள் ராஜராஜன் பரம்-பரையினர்.

வடநாட்டுப் பார்ப்பனர்களை வரவழைத்து ஏற்றம் கொடுத்ததும் இம்மன்னர்களே! அவர்களுக்குப் பெரும் அளவிலான பரப்பில் நிலங்களும் முழு ஊர்களையுமே தானமாக வழங்கினர். இந்நிலங்களுக்கோ, ஊர்களுக்கோ வரியே கிடையாது. இவைதான் அக்கிர(ம) காரம், அகரம், சதுர்வேதிமங்கலம், பிரமதேசம் என வழங்கப்பட்டன. வியர்வை ஆறாகப் பெருக, நித்தம் உழைத்துச் சாப்பிடும் கள் இறக்குவோர், படகோட்டி, குயவர், வண்ணார், நெசவாளர் முதலியோருக்கு மட்டும் ஏராளமான வரிகள். அதனால்தான் நாகசாமி பாராட்டுமழை பொழிகிறார்.

வரிப்புலியைக் கொடியில் கொண்டு ஆண்ட சோழன் பொருத்தமாகத்தான் தேர்வு செய்திருக்கிறான். நல்ல தமிழ்ப் பெயர்களைத் தாங்கியிருந்த மன்னர்கள், தங்களை விஷ்ணுவின் அவதாரங்கள் என்று கூறிக் கொண்டு ராஜராஜன், ராஜேந்திரன், குலோத்-துங்கன், பராந்தகன் என்றெல்லாம் பெயர் சூட்டிக் கொண்டனர். வடமொழி ஆதிக்கத்-திற்குத் தமிழ்மண்ணின் வித்து ஊன்றி, நீர் ஊற்றி, வளர்த்துவிட்ட பெருமை ராஜராஜன், முதலானவர்களைச் சாரும். அப்பேர்ப்பட்ட ராஜராஜன் ஆட்சிக்கு வந்து 20 ஆண்டின் 275 ஆம் நாளில்_இன்றைக்கு 1000 ஆண்டுகளுக்கு முன் கட்டி முடித்துக் கும்பாபிஷேகம் செய்த கோயில்தான் தஞ்சைப் பெருஉடையார் கோயில் எனும் இராஜ ராஜேஸ்வரம் எனும் பிரகதீஸ்வரம் எனும் கோயில் ஆகும்.

செங்கல்லைக் கொண்டு கோயில் கட்டப்பட்ட காலத்தில் கருங்கல் கோயில் கட்டினான் என்பதுதான் சிறப்பே! 500 அடி நீளமும் 200 அடி அகலமும் கொண்ட பரப்பில் கட்டப்பட்டது. இந்தக் கோயிலுக்குத்-தான் 1000 ஆண்டு விழா ஏற்பாடாகியுள்ளது. ராஜராஜன் மகன் ராஜேந்திரன் கங்கை கொண்ட சோழபுரத்தில் இதே மாதிரியிலான கோயிலைக் கட்டினான். பெண் கடவுளுக்கு இடம் தந்து தமிழ்நாட்டில் கட்டப்பட்ட முதல் கோயிலே இதுதான்.

வெட்டிக் குடிகளைக் கொண்டு கட்டப்-பட்ட கோயில்கள்தானே! கூலி எதுவும் கேட்காமல், பெற்றுக் கொள்ளாமல் வேலை செய்துவிட்டுப் போக வேண்டியவர்கள் வெட்டிக் குடிகள் எனப்பட்டனர். உதாரண-மாக ஆடு, மாடுகள் மேய்ப்பதற்காக 100,50 எனக் கால் நடைகளைக் கொடுத்துவிட்டு இந்த அளவு நெய் கொடுக்கவேண்டும் என நிர்ணயம் செய்துவிடுவார்கள். அதனைக் கொடுத்துவிட்டு, எஞ்சியிருப்பதைக் கொண்டு கால் வயிற்றுக் கஞ்சியினைக் குடிக்கவேண்டிய-வர்கள் வெட்டிக் குடிகள். உழுது பயிரிட்டு வரிகளைக் கொட்டிக் கொடுத்துவிட்டு அரைவயிற்றுக் கஞ்சி குடித்தவர்கள் உழுகுடி-கள். இந்த இரண்டுவகைத் தரித்திர நாராயணர்களுக்குள் பகை, சண்டை. நாராயணனும் அதைப்பற்றிக் கவலைப்பட-வில்லை. நாராயணனின் அவதாரம் என்று புருடா விட்டுக் கொண்டிருந்த சோழ மன்னர்களும் கவலைப்படவில்லை. அதன் விளைவாக, கோயில்களுக்கும் வெட்டிக் குடிகளுக்குமான உறவு கெட்டது. கோயிலுக்-கும் உழுகுடிகளுக்குமான உறவும் கெட்டது. இதற்குக் காரணம் முதுகு முறியும் அளவு சுமத்தப்பட்ட வரிச்-சுமை.

விளைவு _ உழுகுடிகள் கோயிலைத் தீ வைத்துக் கொளுத்தினர்

மகேந்திர சதுர்வேதிமங்கலக் கல் வெட்டு இதனை விவரிக்கிறது. அத்தகைய கொடு-மைகளுக்குக் காரணமான கோயிலுக்குத்-தான் 1000 ஆம் ஆண்டு நிறைவு விழா!


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்