Author Topic: இன்றைய ராசிபலன் 19.02.19  (Read 3910 times)

Offline regime

இன்றைய ராசிபலன் 19.02.19
« on: February 19, 2019, 09:57:33 AM »
மேஷம்:

புதிய சிந்தனைகள் தோன்றும். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து முக்கியமுடிவு ஒன்று எடுப்பீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நட்புவழியில்நல்ல செய்தி கேட்பீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். அனுபவ அறிவு வெளிபடும் நாள்.

ரிஷபம்:

நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரைசந்திப்பீர்கள். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வந்துப்போகும். மகளுக்கு நல்லவரன் அமையும். புதுவேலை அமையும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.


மிதுனம்

மிதுனம்: கம்பீரமாக பேசிசில காரியங்களை முடிப்பீர்கள். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். வெற்றி பெறும் நாள்.


கடகம்

கடகம்: காலை 10.30 மணி முதல் மனதில் இருந்து வந்த மனக்குழப்பங்கள் நீங்கிதெளிவு பிறக்கும். குடும்பத் தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். அழகு, இளமைக் கூடும். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். வியாபாரத்தில்  பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். நிம்மதி கிட்டும் நாள்.


சிம்மம்

சிம்மம்: காலை 10.30 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் திடீர்திடீரென்று எதையோ இழந்ததைப் போல் இருப்பீர்கள். நீங்கள் ஒன்று பேசப் போய் மற்றவர்கள் அதை வேறுவிதமாகப் புரிந்துக் கொள்வார்கள்.  வியாபாரத்தில் அவசர முடிவுகளை தவிர்க்கவும். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.


கன்னி

கன்னி: மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். உறவினர், நண்பர்களில் சிலர் உதவி கேட்டு நச்சரிப்பார்கள். யாருக்காகவும் ஜாமீன் கையொப்பமிடாதீர்கள். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம்.  வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துப் போங்கள். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.


துலாம்

துலாம்: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.  பழைய கடனில் ஒரு பகுதியை பைசல்செய்வீர்கள். ஆடை, ஆபரணம்சேரும். சபைகளில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள்.  உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். சிறப்பான நாள்.


விருச்சிகம்

விருச்சிகம்: புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். பிள்ளைகள் குடும்பசூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். சிலர் உங்களைநம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் புது  இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். திடீர் திருப்பம் நிறைந்த நாள்.


தனுசு

தனுசு: காலை 10.30 மணிமுதல் தொட்ட காரியம் துலங்கும். கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் நீங்கும்.  வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும்.புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். மகிழ்ச்சியான நாள். 


மகரம்

மகரம்: காலை 10.30 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் சில வேலைகளை உங்கள் பார்வையிலேயே முடிப்பது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் நிறை, குறைகளை எடுத்துச் சொன்னால் கோபப்படாதீர்கள். அவசரப்பட்டு அடுத்தவர்களை விமர்சிக்க வேண்டாம். சாலைகளை கவனமாக கடந்துச் செல்லுங்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் டென்ஷன் ஏற்படும். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.


கும்பம்

கும்பம்: உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிட்டும். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு. உத்யோகத்தில் பெரிய  பொறுப்புகள் தேடி வரும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள். 


மீனம்

மீனம்: கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பழைய உறவினர், நண்பர்கள் தேடி வருவார்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில்  வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். அமோகமான நாள்.