Author Topic: இன்றைய ராசிபலன் 22.02.2019  (Read 3942 times)

Offline Evil

இன்றைய ராசிபலன் 22.02.2019
« on: February 22, 2019, 07:16:56 AM »
இன்றைய ராசிபலன்

மேஷம்

மேஷம்: குடும்பத்தினருடன் சுபநிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். புதுப்பொருள்சேரும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களைகற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டுக் கிடைக் கும். அமோகமான நாள்.


ரிஷபம்

ரிஷபம்: புதிய திட்டங்கள் நிறைவேறும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். கனவு நனவாகும் நாள்.


மிதுனம்

மிதுனம்: எதிர்பார்த்த வேலை கள் தடையின்றி முடியும். பால்யநண்பர்கள் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்துப் போகும். புது வேலை அமையும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும்.உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். பழைய நினைவுகளில் மூழ்கும் நாள்.


கடகம்

கடகம்: தன்னிச்சையாக சிலமுடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்களால் பயனடைவீர்கள். அரசால் ஆதாயம் உண்டு.விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்யோ கத்தில் உயரதிகாரிகள் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். தைரியம் கூடும் நாள்.


சிம்மம்

சிம்மம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்யோகத்தில் தேங்கிக் கிடந்த
பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மனசாட்சி படி செயல்படும் நாள்.


கன்னி

கன்னி: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். குடும்பத்தினர் சிலர் உங்கள் மனம் நோகும்படி பேசுவார்கள். ஓய்வின்றி உழைக்க வேண்டி வரும். உதவி செய்வதாக வாக்குக் கொடுத்தவர்கள் சிலர் இழுத்தடிப்பார்கள். வியாபாரத்தில் புதியவர்களை நம்பி ஏமாறவேண்டாம். உத்யோகத்தில் சிறுசிறு அவமானங்கள் வந்து நீங்கும். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள். 


துலாம்

துலாம்: சின்ன சின்ன வேலைகளையும் அலைந்து முடிக்கவேண்டி வரும். பிள்ளைகளிடம் கோபத்தை காட்டாதீர்கள். விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக கையாளுங்கள். கணுக்கால் வலிக்கும். உத்யோகத்தில் மேலதிகாரி
யுடன் விவாதம்  வரக்கூடும். அதிகம் உழைக்கவேண்டிய நாள். 


விருச்சிகம்

விருச்சிகம்: எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் மேலதிகாரி பாராட்டுவார். இனிமையான நாள். 


தனுசு

தனுசு: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உறவினர், நண்பர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். பழைய கடன் பிரச்னை தீரும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். முயற்சிகள் பலிதமாகும் நாள்.


மகரம்

மகரம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். உடல் நிலை சீராகும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் புது முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் திருப்திகரமான சூழ்நிலை உருவாகும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.


கும்பம்

கும்பம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் மறதியால் பிரச்னைகள் வந்து நீங்கும். குடும்பத்தில் சிறு வார்த்தைகள் கூட பெரிய தகராறில் போய் முடியும். தர்மசங்கடமான சூழ்நிலைகளில் அவ்வப்போது சிக்கித் தவிப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களுடன் போராட வேண்டி வரும். உத்யோகத்தில் மறைமுக விமர்சனங்கள் உண்டு. சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.


மீனம்

மீனம்: உங்கள் திறமை களை வெளிப்படுத்த நல்லவாய்ப்புகள் வரும். சகோதரங்களின் அரவணைப்பு அதிகரிக்கும். ஆடை, ஆபரணம் சேரும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமை
யுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவர். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

உன்ன உன்ன பார்த்தேன் சும்மா தேவதை போல உன்ன பத்தி நினச்சா வருது கவிதை தன்னால