Author Topic: பற்ற வைத்த நெருப்பொன்று !  (Read 218 times)

Offline joker

  • Hero Member
  • *
  • Posts: 956
  • Total likes: 3068
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
இனி
என்றுமே பொருந்தாத
இரண்டு உடல்கள்
நாம்

இனி என்றுமே
ஒரே நினைவுகள் கொண்ட
இரு இதயங்கள் அல்ல
நாம்

இருவருக்குமிடையே
அர்த்தங்களில்
வேறுபாடுகள்
முளைக்க துடங்கிவிட்டன

மௌனம் முழுவதுமாய்
ஆக்கிரமித்து கொள்ள
துவங்கிவிட்டன

பிடிக்காதவைகள்
பட்டியலிட்டு
கடை விரிக்க
துவங்கி விட்டன

அன்று
பேசியது
எல்லாம்
பிடித்திருந்தது
இன்று
அவைகள் எல்லாம்
பாவம் அப்படியா
அர்த்தமாக்கிக்கொண்டாய்
என்கிறது

உதிர்ந்து விழும்
இலைகள்
சில நேரம்
கிளைகள்
உதிர்க்கிறதோ?

அன்று
வார்த்தைகள்
முத்துக்களாகின
பார்வைகள்
நட்சத்திரங்களை போல
ஜொலித்தன
இன்றோ
அவையாவும்
பொய்களாய்

என் மனதின்
கேள்விகள் எல்லாம்
எரிந்து கொண்டிருக்கிறது
நாம் நடந்த பாத சுவடுகளில்

சாகாமல்
எரிந்துகொண்டிருக்கிறேன்
மெழுகுவர்த்தி போல
நீ பற்ற வைத்த
நெருப்பொன்றில்


****JOKER****

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "