FTC Forum

தமிழ்ப் பூங்கா => வாழ்வியல் கருவூலங்கள் ( நூல் ) => Topic started by: ஸ்ருதி on October 29, 2011, 05:06:11 PM

Title: அறிந்ததும் அறியாததும்
Post by: ஸ்ருதி on October 29, 2011, 05:06:11 PM
    அறிந்ததும் அறியாததும் : -

    குட்டுப் பட்டாலும் மோதிரக் கையால் குட்டுப்படணும்


    அறிந்த விளக்கம்:-


    ஒரேயொரு வார்த்தை மாறினால் எப்படி தம் வசதிப்படி பழமொழிக்கு விளக்கம் அமைத்துக் கொள்ளலாம் என்பதற்கு மேற்கண்ட பழமொழியும் ஒரு சான்று .சிறுமை அடைய நேரிட்டாலும் கூட அதிலும் எதாவது சமாதானத்தை தேடிக் கொள்ளும் மனபாவம் உள்ளவர்களுக்காய் சொல்லப் பட்ட பழமொழியாக இது அறியப்படுகிறது .

    அறியாத விளக்கம்:-

    நியாயமாய் இந்த பழமொழியின் வடிவம் குட்டுப்பட்டாலும் மோதுகிற கையால் குட்டுப்பட வேண்டும் என்று வர வேண்டும்.அதாவது தன்னை குட்டுகிறவன் தன் சக்திக்கு நிகராக மோதுகிற தகுதி உள்ளவனாக இருக்க வேண்டும் என்பதுதான் உண்மையான விளக்கம் . மோதுகிற என்ற சொல்ல காலச்சக்கரத்தில் மோதி மோதி மோதிர என்றாகி விட்டது போலும்.

Title: Re: அறிந்ததும் அறியாததும்
Post by: ஸ்ருதி on October 29, 2011, 05:09:24 PM
அறிந்ததும் அறியாததும் :-

உப்பு தின்னவன் தண்ணி குடிக்கணும் .


அறிந்த விளக்கம்:-

நம்முடைய பேச்சு வழக்கில் அதிகமாய் பயன்படுத்தப் படும் பழமொழிகளில் ஒன்று இது . ஒது எதுகை மோனை நடை என்பதற்க்காக தப்பு செஞ்சவன் தண்டனை அனுபவிக்கணும் என்பதையும் சேர்த்துக் கொள்வார்கள். ஆனால் தற்காலத்திற்கு பொருந்தக் கூடிய அறிவியல் உண்மை ஒன்றை அற்புதமாய் எடுத்துரைக்கும் பழமொழி இது .


அறியாத விளக்கம்:-


ஒரு மனிதனின் இரத்தத்தில் மொத்தம் இருநூறு கிராம்தான் சோடியம் உப்பின் அளவு இருக்க வேண்டும் .அதற்கு மேல் இரத்தத்தில் சேரும் உப்பு வியர்வை,சிறுநீர் மற்றும் மலம் வழியே வெளியேறி விடுகிறது.ஒரு லிட்டர் சிறுநீரில் இரண்டு கிராம் உப்பை வெளியேற்றுகிறது நம்சிறு நீரகம். இப்போது சொல்லுங்கள் நாம் நம் உடலில் சேரும் தேவையில்லாத உப்புகளை வெளியேற்ற எவ்வளவு நீர் அருந்த வேண்டும். இதை தான் பெரியவர்கள் உப்பைத் தின்னவன் தண்ணிகுடிக்கணும் என்று சொல்லி வைத்தார்கள்
Title: Re: அறிந்ததும் அறியாததும்
Post by: ஸ்ருதி on October 29, 2011, 05:28:43 PM
அறிந்ததும் அறியாததும் : -

பகையாளி குடியை உறவாடி கெடு.


அறிந்த விளக்கம்

பழமொழிகள் எவ்வாறு வசதிக்கேற்ப வளைத்து தப்பான பொருளை தந்து பயன்படுத்தப் பட்டு கொண்டிருக்கின்றன என்பதை
உணர்த்தும் மற்றொரு உதாரணம் இது . இதை நேரடியாக பொருள் கொண்டால் நமது எதிரி குடும்பத்தை பழகிக் கொண்டே
அவர்களை நயவஞ்சகமாய் அழித்து விட வேண்டும் என்று அவ்விதமே உலக வழக்காடலிலும் இருந்து வருகிறது .ஆனால்
உண்மையான வடிவம் இது அல்ல.

அறியாத விளக்கம்

இந்த பழமொழியின் சரியான வடிவம் "பகையாளி பகையை உறவாடி கெடு " என்றிருக்க வேண்டும். அதாவது நம்மை பகைமை
பாராட்டுபவனிடம் அன்பாய் நடந்து கொண்டு நல்ல முறையில் அணுகி ,பழகி அவன் கொண்டுள்ள பகைமை உணர்ச்சியை மாற்றி / நீக்கி அந்த உறவை நட்புறவாக்கிக் கொள்ள வேண்டும் என்பது திரிந்து பகை குடியாகி பழமொழியின் வடிவம் இப்படி மாறி போய் விட்டது
Title: Re: அறிந்ததும் அறியாததும்
Post by: Yousuf on October 29, 2011, 05:41:44 PM
நல்ல தகவல் பழமொழிகளின் தவறான விளக்கத்திற்கு சரியான விளக்கம் தந்துள்ளீர்கள்...!!!

நன்றி சுருதி...!!!
Title: Re: அறிந்ததும் அறியாததும்
Post by: Global Angel on October 30, 2011, 04:15:32 AM
uravaadi kedunaa namaalunga kooda irunthe kuli parikanumnu ninachupaanga kekeke
Title: Re: அறிந்ததும் அறியாததும்
Post by: Yousuf on October 30, 2011, 09:34:08 AM
Unaku 1st Oru Kuli ah Parikanumnu nenakiren Un tholla Thangala >:( >:(
Title: Re: அறிந்ததும் அறியாததும்
Post by: RemO on October 30, 2011, 09:42:19 AM
Shurthi very nice
nala pathivu
ithaye inum thodarunga(F)
Title: Re: அறிந்ததும் அறியாததும்
Post by: Global Angel on October 31, 2011, 03:47:22 AM
>:(joeppppppppppppppp
Title: Re: அறிந்ததும் அறியாததும்
Post by: ஸ்ருதி on October 31, 2011, 09:44:41 PM
Thanks all : ;)
Title: Re: அறிந்ததும் அறியாததும்
Post by: ஸ்ருதி on October 31, 2011, 09:48:40 PM
அறிந்ததும் அறியாததும் : -

பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும்.

அறிந்த விளக்கம்

மிகப் பிரபலமான இந்த பழமொழிக்கு அறிந்த விளக்கம் சொல்வது என்பது கைப்புண்ணுக்கு கண்ணாடி தேடுவது போல ( பாருங்கள் எடுத்துக்காட்டுக்கு கூட பழமொழியைத் தான்உபயோகிக்க வேண்டியிருக்கிறது ). பாம்பைக் கண்டால் தனியாக இருக்கும் போது வேண்டுமானால் நடுங்கிப் போவோம். படையோடு இருந்தால் பாம்புக்கு நாம் நடுங்க மாட்டோம். பாம்பை நடுங்கவைப்போம் . முடிந்தால் மோட்சம் கொடுத்து விடுவோம்.. ஆனால் இந்த பழமொழி வந்ததுக்கு மிக முக்கியமானதொரு விளக்கத்தை நிறைய பேர் மூலம் கேள்விப்பட்டேன்

அறியாத விளக்கம்

புராண கால போர்களில் வாள்,அம்பு, வேல் இந்த ஆயுதங்கள் எல்லாம் பயன் படுத்தப்பட்டதற்கு பிறகு போரின் கடைசிகட்டமாக
அல்லது உச்சகட்டமாக பெரிய அழிவைத் தரும் ஆயுதங்களை பயன்படுத்த தொடங்குவார்கள். அதில் ஒன்று நாகாஸ்திரம் என்பது. நாகத்தைப் போல் வடிவமைகப்பட்டிருக்கும் இது ஏவப்பட்ட இடத்திலிருந்து தன் இலக்கை அடையும் போது பெரும் சேதத்தை விளைவித்து நிறைய பேரை அழித்து விடும் . இதை மிக முக்கியமானவர்கள் மட்டுமே பயன் படுத்துவார்கள் என்பதால் இதை எடுப்பதை பார்த்தவுடனே எதிராளியினர் பதறியடித்து பின் வாங்குவார்கள் .என்பதனால் பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் என சொல்லி வைத்தார்கள் .
Title: Re: அறிந்ததும் அறியாததும்
Post by: ஸ்ருதி on November 01, 2011, 11:14:04 PM
அறிந்ததும் அறியாததும்

போக்கத்தவனுக்கு போலீஸ்காரன் வேலை. வாக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை.

அறிந்த விளக்கம் :

நிறைய பேர் இதை அறிந்திருக்க கூடும். உண்மையான விளக்கமும் தெரிந்திருக்கலாம்.சாதாரணமாய் படிக்கையில் போக்கிடம்
இல்லாதவன் அல்லது வெட்டித்தனமாய் சுற்றுபவன் காவல் துறை அதிகாரிக்கும், எந்தவித பின்புலமும் ,செல்வமும் இல்லாதவன் வாத்தியார் வேலைக்கும் ஏற்றவர்கள்/செய்பவர்கள் என்று அர்த்தம் கொள்ளும்படி ஆகி விட்டது.


அறியாத விளக்கம் :

வார்த்தைகளை சற்று பிரித்து பொருள் கொண்டோமேயானால் இந்த உட்பொருளை சொல்ல வந்த விளக்கத்தை எளிதாக விளங்க
கொள்ளலாம். போக்கத்தவன் =போக்கு + கற்றவன் அதாவது ஒழுங்குகளை கற்றுக் கொண்ட மனிதன் போலீஸ் வேலைக்கு
தகுதியானவன். வாக்கத்தவன் = வாக்கு +கற்றவன்.. வாக்கு என்பது சத்தியம்,அறிவு என்றெல்லாம் பொருள் கொள்ளப்படுகிறது,
மொத்தத்தில் படித்தவன், அறிவு பெற்றவன். இந்த தகுதிகளை கொண்டவன் கற்பித்தல் பணிக்கு தகுதியானவன். இதைக் கொண்டே சொல்லப்பட்ட மொழி மறுகி திரிந்து மேற்கண்ட முறையில் வந்துவிட்டது.
Title: Re: அறிந்ததும் அறியாததும்
Post by: Global Angel on November 02, 2011, 02:18:04 AM
shuruthi ipdiyana pathvu niraya irukumaanaal ithai vaalviyal karuvoolankalil Maruviya valakku enra thalaippil pathividalamnu ninaikiren ungal  karuththu enna :)
Title: Re: அறிந்ததும் அறியாததும்
Post by: ஸ்ருதி on November 05, 2011, 01:31:13 AM
அறிந்ததும் அறியாததும் : -

பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும்.

அறிந்த விளக்கம்

மிகப் பிரபலமான இந்த பழமொழிக்கு அறிந்த விளக்கம் சொல்வது என்பது கைப்புண்ணுக்கு கண்ணாடி தேடுவது போல ( பாருங்கள் எடுத்துக்காட்டுக்கு கூட பழமொழியைத் தான்உபயோகிக்க வேண்டியிருக்கிறது ). பாம்பைக் கண்டால் தனியாக இருக்கும் போது வேண்டுமானால் நடுங்கிப் போவோம். படையோடு இருந்தால் பாம்புக்கு நாம் நடுங்க மாட்டோம். பாம்பை நடுங்கவைப்போம் . முடிந்தால் மோட்சம் கொடுத்து விடுவோம்.. ஆனால் இந்த பழமொழி வந்ததுக்கு மிக முக்கியமானதொரு விளக்கத்தை நிறைய பேர் மூலம் கேள்விப்பட்டேன்

அறியாத விளக்கம்

புராண கால போர்களில் வாள்,அம்பு, வேல் இந்த ஆயுதங்கள் எல்லாம் பயன் படுத்தப்பட்டதற்கு பிறகு போரின் கடைசிகட்டமாக
அல்லது உச்சகட்டமாக பெரிய அழிவைத் தரும் ஆயுதங்களை பயன்படுத்த தொடங்குவார்கள். அதில் ஒன்று நாகாஸ்திரம் என்பது. நாகத்தைப் போல் வடிவமைகப்பட்டிருக்கும் இது ஏவப்பட்ட இடத்திலிருந்து தன் இலக்கை அடையும் போது பெரும் சேதத்தை விளைவித்து நிறைய பேரை அழித்து விடும் . இதை மிக முக்கியமானவர்கள் மட்டுமே பயன் படுத்துவார்கள் என்பதால் இதை எடுப்பதை பார்த்தவுடனே எதிராளியினர் பதறியடித்து பின் வாங்குவார்கள் .என்பதனால் பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் என சொல்லி வைத்தார்கள் .
Title: Re: அறிந்ததும் அறியாததும்
Post by: ஸ்ருதி on November 05, 2011, 06:57:28 PM
    அறிந்ததும் அறியாததும் : -
    ஏறச் சொன்னால் எருது கோபம், இறங்கச் சொன்னால் நொண்டி கோபம்.

    அறிந்த விளக்கம்

    மேற் சொன்ன பழமொழியை நேரடியாக பொருள் கொண்டோமானால் கால் ஊனமான ஒருவன் ஏர் பூட்டி உழவுத்தொழிலை
    மேற்கொள்ளும்போது அவனையும் மாடையும் இணைப்பது ஏர். கால் ஊனமானவனால் ஏரைத் தள்ளிக் கொண்டே நடக்கமுடியாது . அவனை ஏரில் ஏற்றினால் மாடு எடை தாளாமல் தள்ளும். அவனை இறங்கச் சொன்னால் அவன் கோவித்துக் கொள்வான் . இருவருக்கும் இடையில் மாட்டிக்கொண்டு அல்லல் படுவது ஏர்தான் என்பது நமக்கு விளங்கும். ஆக ஏறச் சொன்னால் எருதுக்கு கோபம் . இறங்க சொன்னால் நொண்டிக்கு கோபம் என பழமொழியின் அர்த்தம் விளங்குகிறது


    அறியாத விளக்கம்

    மேலே சொன்ன பழமொழிக்கும் பலவிதமான அர்த்தங்கள் கொடுக்கலாம். ஆனால் அதிகம் பேரால் ஒத்துக் கொள்ளப்பட்ட
    விளக்கமாய் அறிந்ததை தருகிறேன் . ஒரு செயலை செய்யும் போது அது ஒரு சாரருக்கு சந்தோசத்தை கொடுக்கும்
    மற்றவர்களுக்கு வருத்தத்தை கொடுக்கும். இது இயற்கை. உதாரணத்திற்கு மழை பெய்தால் விவசாயிகளுக்கு கொண்டாட்டம், அதே நேரத்தில் உப்பு விற்பவர்கள் , தீப்பெட்டி போன்ற தொழில் செய்பவர்களுக்கு திண்டாட்டம். எருதுவின் மேலே ஏறுவது தான் இங்கே செயல் , ஏறினால் எருதுவுக்கு வலிக்கும், ஏறவில்லை என்றால் நொண்டிக்கு கஷ்டம் என்று நேரிடையாக அர்த்தம் வருகிறது. ஆக மொத்தம் இந்த பழமொழியின் மூலம், நாம் செய்யும் சில காரியங்கள் சிலருக்கு நன்மையும்சிலருக்கு தீமையும் பயக்கும் , ஆக அது மாதிரியான காரியங்களை தவிர்ப்பது நலம்

Title: Re: அறிந்ததும் அறியாததும்
Post by: ஸ்ருதி on November 07, 2011, 11:20:47 PM
அறிந்ததும் அறியாததும் : -

        ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமி

        அறிந்த விளக்கம்


        வாய்ச் சொல்லில் வீரனடி, அறுக்கத்தெரியாதவன் கக்கத்தில் ஏழெட்டுக் கருக்கருவாள் போன்ற பதங்களுக்கு என்ன பொருளோ
        அதே பொருள் தருவதுபோல் தான் இந்தப் பழமொழியும் தோற்றமளிக்கிறது . அதாவது பேச்சுபெருசா இருக்கும்,செயல்ல ஒண்ணும் இருக்காது என்று இடித்துரைப்பார்களே அதுபோலதான்இந்த பழமொழியும் உலக வழக்கில் பொருள் கொள்ளப் பட்டு வருகிறது . ஆனால் இதன் பொருளைஆராய்ந்தால் ஒரு அற்புதமான விளக்கம் கிடைக்கிறது.


   அறியாதவிளக்கம்


        ஓட்டைக் கப்பலும் ஒன்பது மாலுமிகளும் யாரென்று தெரிந்தால்ஆச்சரியப்பட்டு போவீர்கள்.. அது நாம்தான்.. என்ன குழப்பமாக
        இருக்கிறதா..? ஒட்டைக் கப்பல் என்பது மனித உடலையும் ஒன்பது மாலுமிகள் என்பது நம் உடலில் உள்ளபல்வேறு துவாரங்களையும் குறிக்கிறது .. கவிஞர் கண்ணதாசன் இறைவனைப் பற்றி எழுதியஅவன் தான் இறைவன் கவிதையில் ஓரிடத்தில் இவ்வாறு குறிப்பிடுவார். ஒன்பது ஓட்டைக்குள்ஒரு துளி காற்றை வைத்து சந்தையில் விற்று விட்டான் ஒருவன் அவன் தடம் தெரிந்தால்அவன் தான் இறைவன் விளக்கம் புரிகிறது தானே நண்பர்களே..?
        எனவேதான் இந்த மனிதவாழ்க்கையில் ஒருவனுக்கு மரணம் நேரும்போது அவனுடைய உயிர் மூச்சு அந்த உடலின் எந்த
        ஓட்டைவழியேனும் வெளியேறலாம் என்பதற்காய் பெரியோர்கள் நிலையற்ற இந்த மனித வாழ்வைகுறிக்கும் போது ஓட்டைக்
        கப்பலுக்கு ஒன்பது மாலுமி போய் ஆக வேண்டியதைப் பாரப்பாஎன்று சொல்லி வைத்தார்கள்
Title: Re: அறிந்ததும் அறியாததும்
Post by: ஸ்ருதி on November 11, 2011, 07:52:56 AM
அறிந்ததும் அறியாததும் : - 

உண்டி சுருங்குதல் பெண்டீர்க்கு அழகு.

அறிந்த விளக்கம்

மிக அழகாக பெண்கள் பக்கம் திருப்பி விடப்பட்ட பழமொழிகளில் இதுவும் ஒன்று. உணவு
நிறைய சாப்பிட்டால் பெண்கள் உடல்
பெருத்து அழகற்றவர்களாகி விடுவார்கள்என்று பயந்தோ என்னவோ பழமொழியையே மாற்றி
விட்டார்கள். சொல்லப் போனால்
இந்தப்பழமொழியின் உண்மையான வடிவமும் சொல்லப்படும் நீதியும் ஆண்களுக்குத் தான்
என அறியும்போது இதில் உள்ள
அறிவியல் தத்துவமும் ஆச்சரியத்தை தருகிறது.


அறியாத விளக்கம்

இந்த பழமொழியின் உண்மையான வடிவம் "உண்டி சுருங்குதல் பண்டிக்கு அழகு " என
வந்திருக்க வேண்டும்.பண்டி என்பது பெண்டீர் என மறுகி பெண்களுக்கு நல்லது என
அறிவுறுத்தலாய் வந்து விட்டது .உடல் பெருத்தலின் ஒரு அதிகபட்ச தீமை 'குடல்
இறக்க  நோய்' ஆங்கிலத்தில் ஹெரணியா என்பார்கள். இது தொண்ணூறு சதவீதம்
ஆண்களுக்குத் தான் வரும் என ஆய்வுக் குறிப்புகள் சொல்கின்றன . இதை தடுக்கத்தான்
நம் முன்னோர்கள் இடுப்பில் அரைஞாண் கயிறு கட்ட அறிவுறுத்தினார்கள். ஆக உண்டி
சுருக்க பொதுவாய் சொல்லித் தரப்பட்ட பழமொழி பெண்களுக்கு மட்டும் என்றாகி
விட்டது .
Title: Re: அறிந்ததும் அறியாததும்
Post by: RemO on November 11, 2011, 01:43:20 PM
// இதை தடுக்கத்தான்
நம் முன்னோர்கள் இடுப்பில் அரைஞாண் கயிறு கட்ட அறிவுறுத்தினார்கள் //


thanks shur ithukana kaaranatha than nan rompa naal thedinen inaiku kidaichuruchu thanks
Title: Re: அறிந்ததும் அறியாததும்
Post by: ஸ்ருதி on November 26, 2011, 09:52:43 AM
அறிந்ததும் அறியாததும் : -
அரசனை நம்பி புருஷனை கை விட்ட மாதிரி.

அறிந்ததும் அறியாததும்

கொஞ்சம் எசகு பிசகான பழமொழி..
அந்த கால சில அரசர்கள் எந்த பெண்ணை விரும்பினாலும் அந்த பெண் அரசனுக்கு உடைமையாகி விடுவாள் . முக்கியமாக
அந்தப்புரத்தில் பணிபுரியும் பெண்களுக்கு அரசன் தான் புருஷன். அரசனுக்கு பின் தான் புருஷன் . எனவே அரசனின் கடைக் கண் பார்வை பட்டால் புருஷனிடம் வாழ்வதை விட வசதியாக இருக்கலாம் . ஆனால் எப்போதும் கிட்டத்தரசியாக இருக்க முடியுமே தவிர பட்டத்தரசியாக முடியாது அதுவும் கொஞ்ச காலத்திற்கு மட்டுமே .
சிலர்சொல்ல வரும் நேரடி உட்பொருளாக தன்னைத் தேடிவரும் வாய்ப்புகளை தவிர்த்து எதிர்பார்த்திருக்கும் வாய்ப்புகளும் கை நழுவிப் போகமொத்தமாக எல்லாவற்றையும் இழந்து நிற்க கூடிய சூழலுக்கு சொல்லப்பட்டதாகவும்அறியப்படுகிறது .



அறியாத விளக்கம்

இங்கு அரசன் என்பது அரச மரத்தை குறிக்கும். அரச மரத்தின் காற்றை சுவாசிக்கும் போது கருவுற்றிருக்கும் பெண்களுக்கு
அவர்களின் கருப்பை தொடர்பான சில வியாதிகள் குணம் பெறுகின்றன என்பதை நம் முன்னோர்கள் கண்டறிந்து உபதேசித்துள்ளனர். தவிர குழந்தைப் பேறுக்கும் நல்லது என்றும் சொல்லப்படுவதுண்டு. அரச மரத்தை அடிக்கடி சுற்றியவள் புருஷனை கவனிப்பதற்கு மறந்து விட்டு பிள்ளைக்கு காத்திருந்தாளாம்
இதையே அரச மரத்தை சுற்றிவிட்டு அடி வயிறை தொட்டு பார்த்துக் கொண்டாளாம் என்றும்பழமொழியாக சொல்வார்கள்.