Recent Posts

Pages: 1 [2] 3 4 ... 10
11
[font][size][color]Happy Birthday Cute Roja..!! We have known each other for 13 Year and you haven't changed bit. You inspire me to be kinder, more patient and to always view life as a gift. I hope that this year brings you everything that you desire - love, health, peace, joy, and so much more. You shine so much brightness and joy into the lives of everyone around you. Thanks for being such an amazing person. I hope that on your birthday, that brightness shines right back at you!🎉🎊💐🎈🎁🎀❤️💥🌹
12
GENERAL / Re: Good Morning
« Last post by MysteRy on May 14, 2024, 07:34:46 AM »
13


Happy Birthday dear sissy 🌹🌹🌹🌹🌹
14
 Wish You Happy Birthday Cute Moon.🎂🎉🎉 Always Stay happy , healthy and enjoy your life🎉🎉
 
15
ஆடுகளம்
இந்த மட்டை பந்து ஆடுகளத்தின் ஓவியத்திற்கு உயிர் ஊற்ற வந்துள்ளேன்  நான் ஒன்றும் கவிஞன் அல்ல, சின்னஞ்சிறு பருவத்திலேயே விளையாடிய  11 உயிருள்ள ஓவியங்கள் விளையாடும் களமாம் இந்தக் களம், இக்காலமும்.. எக்காலமும்... மவுசு ஒன்றும் குறையாத பூங்காலம்!  ரன்கள் எடுக்க துள்ளி குதித்து ஓடும் மான்களும் நாங்களே ! தத்தி தாவி பந்தை பிடிக்கும் மந்தியும் நாங்களே, தென்னை மட்டையில் பேட் செய்து விளையாடிய  தருணங்கள் இன்றும் நெஞ்சில் நீங்கா நினைவலைகளாய் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது, பள்ளி பருவத்திலே எப்பொழுது ஞாயிறு வருமென்று காலண்டரின் நாட்களை எண்ணியதும் மறந்திடுமோ, கிரிக்கெட் ஒன்றும் பொழுதுபோக்கு அல்ல எங்களின் உயிரில் ஒன்றாக கலந்து விட்டது, ஒன்று மட்டும்தான் இன்று வரை விளங்கவில்லை பள்ளி தேர்வு கல்லூரி தேர்வுகள் வரும் காலங்களில் மட்டுமே தான் இந்த கிரிக்கெட் போட்டிகளை நடத்துகிறார்கள் போட்டியை பார்த்து விட்டால் எனது பிள்ளை பெயிலாகி விடுவானோ என்று டிவியை ஆப் செய்து விட்டு செல்லும் தந்தையின் செயலை பார்த்து விரோதி போல்பார்த்ததும் உண்டு.
பக்கத்து ஊரில் டோர்னமெண்ட்க்கும் பெயரை கொடுத்தாயிற்று.
வாகனம் ஒன்றும் கடன் வாங்கி சென்றது மறக்குமா,
முதலாக  பெற்ற வெற்றி  ஆனந்தத்தில் துள்ளி குதித்தோம்
திழைத்து வெற்றியின் களிப்பில் மகிழ்ச்சி அடைந்தோம் , அகவைகள் கடந்தாலும் இன்றளவிலும் இந்த மட்டை பந்து விளையாட்டு வீரர் என்ற பெருமிதம் கொள்வதில் நான் ஒன்றும் விதிவிலக்கல்ல, துள்ளித் திரிந்து விளையாட்டு விளையாடிய காலமும்  மறக்கத்தான் முடியுமோ, இளைஞர் முதல் முதியவர்கள் வரை விரும்பும் ஓர் விளையாட்டு தான் இது, குதூகலமாக வெளியில் இருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பவர்கள் கமான் சிக்ஸர் சிக்ஸர் என்று கத்தும் சத்தங்களும் விசில் சத்தங்களும் காதுகளில் இருந்து நீங்காத நினைவலைகளாக தான் தோன்றுகிறது,  விசில் அடித்தும் கைத்தட்டியும் ஆரவாரம் செய்து  ஊக்கப்படுத்தியதை  கண்டு கர்வம் கொண்டு அவுட் ஆனதும்  மறக்க முடியுமா என்ன? எவ்வளவோ விளையாட்டுகள் இருந்தாலும் இந்த கிரிக்கெட்  பிடித்திருக்கிறது அடிக்கும் ரண்களும் எடுக்கும்  விக்கெட்டுகளும்  அடுத்த பந்தில் எப்படி என்ன மாறுமென்று கூற முடியா சுவாரஸ்யம் மிகுந்த ஓர் விளையாட்டு தான்!
ரன் எடுக்க ஓடி ஓடி வெற்றி கழிப்பை  அடையவும் நாம்  நம் பிள்ளைகளுக்கும் விதைகளை விட்டுச் செல்ல வேண்டும், ஆனால் சிறு பிள்ளைகளிடம் கணினியையும் செல்போனையும் கொடுத்துவிட்டு விளையாட்டு மைதானங்களை எல்லாம் பிளாட் போட்டு கட்டி விட்டு!
ஓடி ஆடி  விளையாட வேண்டிய குழந்தைகளை எட்டுக்கு பத்து அறையிலே அடைத்து விடுகிறோம்  நாம்!
ஊர்கள் தோறும் மைதானம் அமைப்போம்   பிள்ளைகளின்  மகிழ்ச்சியும் ,  கேம் சென்டர்களுக்கு அழைத்துச் செல்வதெல்லாம் வெற்று காகிதம் போன்றது தான்,
விளையாட்டு பருவத்தை கெடுத்து விட்டு என்ன சாதிக்கப் போகிறோம்,   இவன்(Symphony) இராஜூ மகிழ்வித்து மகிழ் வாழ்க வளமுடன்
16
 Hiii Terror Moon sis!
Iniya piranthanaal vazhthukkal.
Eppavum pole cute a oh sorry terror a irunga.
U r really one of my good friend in ftc. (Sunday kethinga la, but neenga than namba ille)
Athigam personal pesi irukka mathom. Evalo sad a ftc vanthalum.
Unga kooda pesithu kandippa oru smile odhe than ftc la irunthu log out pannuven.
Never change urself.
Always be happy and healthy sis.
Marakkama birthday cake anupirunga.
With loads of love Ishaa



17
Happy Birthday Dear friend Cute MooN
18
Friends Tamil Chat Team Conveys🎁 Birthday (14-05-2024) wishes🎁 to our lovable friend ⭐ Ms. CUTE MOON ⭐ and wishes her Good Luck.

19
காவல் துறை சாலையில் வைப்பது பேரி கேட்,
காலத்தால் என்றும் அழியாத ஒன்று கிரிக்கெட்.
கிரிக்கெட் என்றால் தமிழில் மட்டை பந்து என்பார்கள்.
அன்றைய காலகட்டத்தில் ஆர்வமாக இளைஞர்கள் விளையாடினார்.
இப்போது எல்லாம் மைதானத்திற்கு வந்தாலே அது ஆச்சரியம் தான்.

கிரிக்கெட் சூதாட்ட மா மாரி பல வருடங்கள் ஆகிவிட்டது.
 சின்ன வயதில் கையில் கிடைத்த உருட்டு கட்டை வைத்து
 கிரிக்கெட் ஆடிய நினைவுகள் எல்லாம் மறக்க முடியாத அனுபவம்.
சாதாரணமாக விளையாடிய விளையாட்டு
ஒரு சில நேரங்களில் பந்தயம் வைத்து விளையாடினார்.

சின்ன வயதில் பள்ளிக்கூடத்தில் இருந்த நேரத்தை விட
மைதானங்களில் இருந்த நேரம் அதிகம்.
நண்பர்களுடன் சிரித்து பேசி ஒன்றாக
விளையாடியது எல்லாம் நமக்கு ஒரு உற்சாகம் நிறைந்தது.
மைதானங்களில் விளையாடிய காலம் போய்
இன்று மொபைலில் விளையாடுகிறனர்.

இப்போது எல்லாம் கிரிக்கெட் கூட
சினிமாவில் தான் அதிகம் பார்க்க வேண்டியது இருக்கு.
கிரிக்கெட் என்றால் ஆண்கள் மட்டுமே விளையாட வேண்டும் என்று இருந்தது,
ஆனால் இப்போது பெண்களும் விளையாடுகின்றனர்.
11 பேர் கொண்ட கிரிக்கெட் டீம்,
அதில் ஆல்ரவுண்டர் ஆக இருக்கும் வீரர் ஆட்டநாயகன் என்று கூறுவர்.

மக்கள் சிலர் பயன் படுத்தும் ஒன்று கோல் கேட்,
சுங்க சாவடிக்கு ஆங்கிலத்தில் டோல்கேட்,
சுறுசுறுப்பாக ஆடும் விளையாட்டு கிரிக்கெட்,
அதில் முக்கியமான எடுக்க வேண்டும் விக்கெட்.
வாழ்க்கையில் வெற்றி பெறவும் ஒடனும்,
கிரிக்கெட்டில் வெற்றி பெறவும் ஒடனும்.

நாட்டுக்காக நடக்கும் கிரிக்கெட் என்பது ஐபிஎல்,
 நமக்காக நடக்கும் கிரிக்கெட் என்பது எப்ஃபிஎல்‌.
அன்று முதல் இன்று வரை அனைவரும் ரசிக்கும்
ஒரு விளையாட்டு என்றால் அது கிரிக்கெட் தான்.
சுற்றி அமர்ந்து கொண்டு பார்க்கும் ரசிகர்கள்
விளையாட்டு வீரர்களுக்கு உற்சாகம் தரும் வகையில்
விசில் போட்டு ஆடி பாடி இன்னும் பல கூட இருக்கலாம்.

கிரிக்கெட்டில் போராடி பெரும் தோல்வி கூட
நமக்கு சந்தோஷம் தரும்.
முதுகுக்கு பின்னாடி இருக்க பேருக்காக இல்லாமல்,
நெஞ்சுக்கு முன்னாடி இருக்கும் ஊருக்காக விளையாட வேண்டும்.
20
என்றும் நீ என் அம்மா
அப்பா கட்டிய வீடா இருந்தாலும் அது நமக்கு அம்மா வீடு தான்!
அடுப்படியே அம்மாவின் அலுவலகம் அன்பு மட்டுமே எதிர்பார்க்கும் சம்பளம்! காய்ச்சல்
வந்தால் மருந்து தேவை இல்லை அடிக்கடி வந்து தொட்டுப் பார்க்கும் அம்மாவின் கையே போதுமானது!
இவ்வளவு வயதாகியும் புது சட்டைக்கு மஞ்சள் வைத்து வருபவனை கேலி செய்யும் நண்பர்களே.....
அது அவன் வைத்த மஞ்சள் அல்ல அவன் அம்மா வைத்த மஞ்சள்......!
டைபாய்டு வந்து படுத்து அம்மாவுக்கு சமைக்க முடியவில்லை என்கிற கவலை!
"அம்மா தாயே" என்று முதல் முதலில் பிச்சை கேட்டவன் உளவியல் மேதைக்கெல்லாம் ஆசான் எந்த பொய் சொல்லியும் அம்மாக்களை ஏமாற்றிவிட முடியும் சாப்பிட்டு விட்டேன் என்கிற அந்த ஒரு பொய்யைத் தவிர!
அத்தி பூத்தார் போல் அப்பனும் மகனும் பேசி சிரித்தால் விழாத தூசிக்கு கண்களை தேய்த்துக்கொண்டு நகர்ந்து விடுகிறார்கள் அம்மாக்கள் வெளியூர் செல்லும் பிள்ளைகளின் பயண பைக்குள் பிரியங்களை திணித்து வைப்பவர்களை இந்த அம்மாக்கள் பீஸ் கட்ட பணம் இல்லை என்றால் பிள்ளைகள் அம்மாவை தான் நாடுகின்றன காரணம்,
எப்படியும் வாங்கிக் கொடுத்து விடுவாள் அல்லது எடுத்துக் கொடுத்துவிட்டு திட்டு வாங்கிக் கொள்வாள்!
வீட்டுக்குள் அப்பாவும் இருந்தாலும் அம்மா என்று தான் கதவு தட்டுகிறோம்!
அகில உலக அம்மாக்களின் தேசிய முழக்கம் இதுதான்........
       "எம் புள்ள பசி தாங்காது!"
கண்கள் இல்லாமல் ரசித்தேன் காற்று இல்லாமல் சுவாசித்தேன்! வார்த்தை இல்லாமல் பேசினேன்!
கவலை இல்லாமல் வாழ்ந்தேன் தாயே! உன் கருவறையில் நான் உயர்த்தெழும் முன்
கருவரையிலும் உன்  கருவிழியிலும் என்னை சுமந்தாய்!
 நான் கருவானதிலிருந்து உருவாகும் வரை உன்னை மெழுகாய் கரைத்தாய் உதிர் உன் உதிரம் அளித்து என்னை வளர்த்தால்! நல்லதோர் அன்பின் இலக்கணமும் நீயே! நல்லதோர் நட்பின் இலக்கணமும் நீயே!
    மீண்டும் உன் கருவறையில் எனக்கு ஒரு இடம் தருவாயா தாயே! மீண்டும் உன் மகனாக பிறந்திடும் வரம் வேண்டும் தாயே
அம்மாக்களைப் பற்றி எழுதப்பட்ட எல்லா கவிதைகளிலும் குறைந்தபட்சம் இரண்டு சொட்டு கண்ணீர் ஈரம் உளறாமல் இருக்கும் இருக்கும்...
என்றும் நீயே என் அம்மா!
உன் மகன் அல்ல நண்பன்
"முனைவர். நாகராஜசோழன்" - (symphony)
Pages: 1 [2] 3 4 ... 10