FTC Forum

தமிழ்ப் பூங்கா => இங்கு ஒரு தகவல் => Topic started by: Global Angel on July 14, 2011, 05:36:54 PM

Title: ஒண்ணா இருக்க கத்துக்கணும்
Post by: Global Angel on July 14, 2011, 05:36:54 PM
ஒண்ணா இருக்க கத்துக்கணும்! மனித உறவுகள் பற்றி ஒரு பார்வை

                              (http://i1027.photobucket.com/albums/y338/jimikki/1_1_1.jpg)
வெளியில இருக்குற நடைமுறைகள்ல விழிப்புணர்வு வரணும்னு சொல்றது் சரிதான். உறவுகளை  மேம்படுத்துறது பத்தின ஒரு விழிப்புணர்வு அதிகமா இருக்குற மாதிரி தெரியலை. தெளிவான வாழ்க்கை வாழ மனுசங்கள விட்டுட்டு எங்க போறது நாம? நம்மள சுத்தி சுத்தி இருக்குற மனுசங்ககிட்ட ஒரு சீரான தொடர்புகள் இல்லாம போச்சுன்னா எல்லாமே அபத்தமா போய்டும்ல.?

நாம நிம்மதியா இருக்கணும்னு ஆசைப்படுறோம்;அவனால நிம்மதி போச்சு இவனால நிம்மதி போச்சுன்னு புலம்புறோம். சரி.. எல்லாமே இருக்கட்டும் நம்மால யாரு நிம்மதியாச்சும் போய் இருக்கான்னு யோசிச்சிருக்கோமா? இந்த இடம் நமக்கு நாமே விழிப்புணர்வு கொடுக்குற இடம். மனுசங்க கிட்ட எல்லாம் வயசு வித்தியாசம் இல்லாம ஒரு வித மரியாதை உணர்வோட பழகுறது ஒரு சூத்திரம்ங்க.

கண்டிப்பா எனக்கும் மட்டும்தான் நிறைய தெரிஞ்சிருக்கும்னு நினைக்காம நம்ம எதி்ர்ல இருக்குற மனுசங்களுக்கும் ஒரு விலை வச்சு அவுங்க கிட்ட நமக்குத் தெரியாத விசயங்கள் இருக்கும்னு  ஒரு பவ்யத்தை மனசுல வச்சிகிட்டா போதும். நம்ம எதிர்ல இருக்கிறவங்களுக்கு தன்னிச்சையாவே நாம மரியாதை கொடுப்போம். இங்க ஒரு விசயம் கவனிக்கணும்.. மரியாதை கொடுக்குற மாதிரி நடிக்கிறது வேற, இயல்பாவே மரியாதை இருக்கிறது வேற.

மரியாதைன்றது கை கட்டி, வாய் பொத்தி சார் சார்ன்னு கூப்பிட்டுகிட்டு குனிஞ்சு கிட்டு நிக்கிறதுன்னு பொது புத்தி சொல்லிக் கொடுத்திருக்கு. ஆனா நாம சொல்ற மரியாதைன்ற பரஸ்பரம் மனிதர்களை நேசிக்கிறதுங்க! முதல்ல ஒரு மனுசன் இன்னொரு மனுசன பாத்து கோபப்படுறதுக்கு முன்னால எதுக்கு கோபப்படுறோம்னு தனியா உட்காந்து யோசிக்கணும். பெரும்பாலான நம்ம கோபங்களுக்கு காரணம் நமக்குள்ளே இருக்கிற பிரச்சினைதானுங்க.

மனுசங்க கூடுற இடத்துல சந்தோசமும், மகிழ்ச்சியும் இருக்கணும்னா மனிதர்கள் பற்றிய புரிதலும் வாழ்க்கைப்பற்றிய தெளிவும் வேணும். நமக்கு இருக்குற பொதுவான மனோநிலை என்னனு கேட்டீங்கன்னா, கடந்து போன காலத்தையும் இறந்து போன மனுசங்களையும் நினைச்சு ஏக்கப்படுறது. 


ஒரு வழிப்பாதைதானுங்களே வாழ்க்கை; அது மாதிரிதான் மனித தொடர்புகளும் ஒரு தடவை முறிச்சு பேசினாலோ, சுடு சொல் சொல்லிட்டாலோ ரொம்ப கஷ்டப்படுவாங்கதானுங்களே மனுசங்க.? இதை ஏன் சொல்றேன்னா.. அடாத சொல்ல நம்மள பாத்து யாராச்சும் சொல்லிட்டா நமக்கு மனசு அப்டீ கஷ்டத்த தான் கொடுக்கும்.


மத்த படி உறவுகள் பேணப்படுற இடம் அன்பை பகிருற இடம். எனக்கு என்னோட நண்பரோ அல்லது உறவுகளோ நல்ல உணர்வுகளை கொடுக்கணும்னா நான் முதல்ல அவுங்களுக்கு நல்ல உணர்வுகளை கொடுக்கணும். இதுதான் இன்னொரு சூத்திரம். யாரும் யாரப்பாத்தும் பொறாமைப்படாதீங்கன்னு எளிதா நான் சொல்லிட முடியும் ஆனா மனசும் பழக்கப்பட்ட வாழ்க்கை முறையும் அப்படி நம்மள இருக்க விடாது. காரணம் அவுங்க மேல போறாங்கன்ற  கஷ்டத்த விட நாம இப்படி இருக்கோமே என்கிற ஒரு வருத்தம் மேல இருக்கறதுதான் காரணம்.

நமக்குள்ள இருக்குற தாழ்வு மனப்பானமை போச்சுனு வச்சுக்கோங்களே நாம யார் மேலயும் பொறாமையோ கோபமோ பட மாட்டோம். இப்டிதாங்க பெரும்பாலான் விசயங்களுக்குப் பின்னால நம்ம மனோநிலையே காரணமா இருக்கு. ரொம்ப ஈஸியா எல்லாத்தையும் எடுத்துக்கிறதுக்கு பின்னால அமைதியான மனோநிலை கிடைக்கும்,தெளிவான பார்வை கிடைக்கும் நிறைய நட்புகள் கிடைக்கும் ஒரு குளுமையான சூழல் உங்களைச் சுற்றி உருவாகும்.

எப்பவுமே எப்டிங்க ஈஸியா இருக்கறதுன்னு ஒரு கேள்வி வரும். எப்பவுமே இருக்க முடியாதுன்றது உண்மைதானுங்க கோபப்படும் இடம்னு ஒரு இடம் இருக்கு அங்கதான் அந்த ஆயுதம் எடுத்து பயன் படுத்தணும். எல்லா நேரத்திலும் எல்லா விதமான சக்தியையும் பயன்படுத்துறது தப்புங்க.! தேவையும் அவசியமும் இருக்கும் போது நாம சில ஆக்ரோசமான முடிவுகள் எடுத்துதான் ஆகணும். இது எப்டீன்னா நல்லா வேக வைக்கிற பொருட்கள வேக வைக்க அடுப்புல சூடு பண்ணித்தான் ஆகணும், அந்த நேரத்துல சூடு அதிகமா வைக்காம இருந்தா தப்பு. அதே நேரத்துல நாம கம்மியா சூடு வைச்சு சமைக்கிற பதார்த்தங்களுக்கு அதிகமா சூடு வச்சாலும் தப்பு..

தேவையும் அவசியமும் வாழ்க்கையில பாத்து பாத்து நாம பயன்படுத்த வேண்டிய வார்த்தைகள்ங்க. இந்த வார்த்தைகளுக்கு பின்னால மன நிம்மதின்ற ஒரு பெரிய விசயம் ஒளிஞ்சுட்டு இருக்கறத கண்டிப்பா புரிஞ்சுப்பீங்க!

உறவுகள் மேம்பட தெளிவான பார்வைகள் வேண்டும்! தெளிவான பார்வைகள் அழகிய புரிதலைக் கொடுக்கும்! அழகிய புரிதல் மனித நேயம்கொண்ட சமுதாயத்தை சர்வ நிச்சயமாய் ஈன்றெடுக்கும்.....!!!!


தெளிவான சமுதாயத்தின் அங்கமாக-சக மானுடரை நேசிப்போம்...!!!!!

Title: Re: ஒண்ணா இருக்க கத்துக்கணும்
Post by: Dharshini on July 14, 2011, 06:06:15 PM
jimmioo andhula iruka pulla una pola irukudi :)
Title: Re: ஒண்ணா இருக்க கத்துக்கணும்
Post by: Global Angel on July 14, 2011, 06:11:14 PM
unakku vasika theretho illayo nalla padam paarka therethu athu enna polana pakathula nikurathu yaaram...... ;) ;) ;)avangala? illai paiyana?