Author Topic: அணு உலைகளுக்கு எதிரான மக்களின் ஆர்ப்பரிப்பு!!!  (Read 1312 times)

Offline Yousuf

1945  இரண்டாம் உலகப் போரின் இறுதி நாட்களில் அமெரிக்கா ஜப்பானை பணிய வைக்க எடுத்த முடிவு மிருதனமானது. அதனை இப்பொழுது நினைத்தாலும் அமெரிக்காவின் கொடூர முகம் நம் கண் முன்னால் தெரியும். ஆம், 1945, ஆகஸ்டு-6 அன்று ஜப்பானின் மக்கள் நெருக்கம் மிகுந்த நகரங்களில் ஒன்றான ஹிரோஷிமா மீது அமெரிக்கா போர்  விமானம் அணுகுண்டை வீசியது. அந்த அணுகுண்டுக்கு அமெரிக்கா வைத்த பெயர் 'லிட்டில்பாய்' சின்னபையன் இதில் 1.74 லட்சம் மக்கள் பலியானார்கள். மீண்டும் மூன்று நாள் இடைவெளியில் ஆகஸ்டு-9 அன்று ஜப்பானின் இன்னொரு நகரமான ‘நாகாசாகி' மீது இன்னொரு அணுகுண்டை வீசியது. அதற்கு ஹபேட்மான் என்று குண்டு மனிதன் பெயரிட்டது. இதில் 74,000 மக்கள் மாண்டு போனார்கள். இரண்டு அணுகுண்டுகள் மூலம் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை கொன்று குவித்து ஹிரோஷிமா - நாகசாகி பிணகுவியல்கள் மீது அமெரிக்கா வெற்றிக் கொண்டாட்டம் போட்டது.


அந்த நாளை உலகம் மறந்து விடவில்லை அதனால்தான் ஆகஸ்டு - 6 மற்றும் 9, தேதிகளை உலக முழுவதும் உள்ள மனித மனித உரிமை ஆர்வலர்கள், ஒட்டு மொத்த உலகத்தையும் அழித்தொழிக்கும் அணு ஆயுதத்திற்கு எதிரான மனித நேயர்கள், அந்த நாட்களை அணு ஆயுத எதிர்ப்பு  நாளை கடைபிடித்து வருகிறார்கள்


புகுஷிமா அணுஉலை வெடிப்பு

ஹிரோஷிமா - நாகசாகி தினத்தின் பேரழிவை உள்வாங்கிய அதே ஜப்பான் நாடு இந்த வருடம் இன்னொரு சோகத்தை தாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டது. மார்ச் -11 அன்று பூகம்பத்தால் ஏற்பட்ட ஆழிப்பேரலையில் புகுஷிமா என்ற நகரத்தில் இருந்த அணு உலைகள் வெடித்து சிதறின.

புகுஷிமா அணு உலை விபத்தும் அணு கதிர் வீச்சினால் ஏற்பட்ட பாதிப்பினாலும், ஜப்பான் மீண்டும் நிலைகுலைந்து போயுள்ளது. அணு உலைகளை சுற்றி வாழ்ந்த மக்கள் வெளியேற்றப்பட்டு 3.5 லட்சம் பேர். தனி முகாம்களில் வாழ்ந்து வருகிறார்கள். புகுஷிமாவில் இருந்து 240 கி.மீ. தொலைவில் உள்ள டோக்கியோவில் தாய்பாலில் கதிர் வீச்சு உள்ளதாக உறுதிபடுத்தப்பட்டுள்ளது. தாய்பாலும் விஷமாகியுள்ளது.

சுனாமியோ, பூகம்பமோ வந்தால் அழிவுகளுக்கு பிறகு மீண்டும் அங்கு சென்று மக்கள் வாழ முடியும். ஆனால் அணு உலை விபத்து ஏற்பட்டு மக்கள் ஆயிரக் கணக்கில் உயிரிழந்தும், கதிர்வீச்சின் பாதிப்பால் எதிர்கால தலைமுறை சீர்குலைந்தும் அந்தப் பகுதி மீண்டும் மக்கள் வாழத் தகுதியற்ற பகுதியாக மாறிவிடும். 1986 ரஷ்யாவில் (உக்ரைன்) செர்னோபில்லில் அணு உலை விபத்துக்கு பிறகு அங்கு இந்த நிலைதான் உள்ளது.

இப்படி பேரழிவையும் பெரும்பாதிப்புகளையும் உருவாக்கும் இந்த அணு உலைகள் ஏன் அமைக்கப்படுகிறது. நாட்டு மக்களின் மின்சார தேவைக்காகத்தான் இந்த அணுமின் நிலையங்கள் அமைப்பதாக அரசுகள் கூறினாலும் உண்மை என்னவெனில் மொத்த மின்சார தேவையில் 3% சதவிகிதம் தான் அணுமின் நிலையங்களிலும் கிடைக்கும் மின்சாரத்தை பூர்த்தி செய்ய முடியும் 97% சதவீத மின்சாரம் அனல்மின் நிலையங்களில் நீர் மின் நிலையங்களில் காற்றாலை மின் உற்பத்தி மூலம் தான் பெறப்படுகிறது. வேறு எதற்காகதான் இந்த அணு உலைகள் என்றால் ஹிரோஷிமா, நாகசாகிகளை உருவாக்கத்தான்.


அணு உலைகளை மூடும் உலக நாடுகள்

புகுஷிமா பேரழிவுக்கு பிறகு உலக நாடுகளில் அணுஉலை பற்றி விழிப்புணர்வு உருவாகியுள்ளது. ஜெர்மனி தனது நாட்டில் உள்ள அணு உலைகளை படிப்படியாக மூடப்போவதாக அறிவித்துள்ளது.

ஜப்பானின் பிரதமார் ஹிரோஷிமா நினைவு தினத்தில் உரையாற்றும் போது               ‘அணு உலை பாதுகாப்பு என்பது உறுதிபடுத்த முடியாத ஒன்று” என்று அணு உலை பாதுகாப்பு குறித்து தனது விரக்தியை வெளியிட்டுள்ளார்.

ஜப்பான் அறிவியல் உலகின் முதன்மையான நாடு மேலும் அந்நாட்டில் பு+கம்பம், சுனாமி, பேரழிவுகள் என்பது சர்வ சாதாரண நிகழ்வுகள். ஏன் 2004-ல் இந்தோனிஷியா சுமத்ரா தீவில் ஏற்பட்ட பூகம்பம் சுனாமி ஆழிபேரலை கடற்கரை நாடுகளை தாக்கிய போது இதற்கு பெயர் சுனாமி என்று நமக்கு தெரியாது கடல் கொந்தளிப்பு, கடல் சீற்றம் என்று சொன்னோம். நான்கு நாட்களுக்கு பிறகு தான் ஜப்பானில் இது போன்று ஏற்பட்டிருப்பது அதற்கு அவர்கள் வைத்த பெயர் ‘சுனாமி” என்றும் நமக்கு தெரிய வந்தது. ஜப்பானிய மொழியில் சு - என்றால் துறைமுகம்,   னாமி - என்றால் பேரலை, சுனாமி என்றால் துறைமுகப் பேரலை என்று அர்த்தம். அதனை நாம் தமிழில் ஆழிப்பேரலை என்கிறோம். 

இப்படியெல்லாம் சுனாமி, பூகம்ப பூமியான ஜப்பானில் அதற்கேற்றாற்போல் வீடுகள் அலுவலகங்கள் ஏன் அணு உலைகளை உருவாக்கியிருந்த புகுஷிமாவிலே இவ்வளவு பெரிய பாதிப்பு என்றால் இந்திய அணு உலைகளின் நிலை என்ன? என்ற அச்சம் மக்கள் மனதிலே உருவாகியுள்ளது. அதன் வெளிபாடகாதான் மகாராஷ்டிரா மாநிலம் ரத்தினகிரி மாவட்டம் ஜெய்த்தாபுரில் 9 அணு உலைகள் உருவாக்க திட்டமிட்டிருந்த நிலையில் மக்கள் வீதிக்கு வந்து மிகப் பெரிய போராட்டங்களில் ஈடுபட்டதன் விளைவாக ஜெய்தாப்புரி அணு உலை திட்டம் கேள்விக் குறியாகி உள்ளது.


கூடங்குளம் போர்கோளம்

அதே நேரத்தில் தமிழகத்தில் நெல்லை மாவட்ட கூடங்குளம் அணுமின்நிலையம் அனைத்து பணிகளும் நிறைவடைந்து டிசம்பர் மாதம் திறக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில் கூடங்குளம் அணு உலைகளை மூடக் கோடி போர்களப் பூமியாகியுள்ளது. மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை, குழந்தைகள் பள்ளிக்கு செல்லவில்லை, ஊழியர், வேலை புறக்கணிப்பு, உண்ணாவிரதம் என தொடர் போராட்டத்தில் அப்பகுதி மக்கள்.

இயற்கை எழில் சூழ்ந்த தேனி மாவட்டத்தில் தேவாரம் என்ற கிராமத்திற்கு அருகில், அணுவை பிளந்து ஆய்வு செய்யும் நியுட்ரினோ ஆய்வுக்கூடத் திட்டம் மக்கள் எதிர்பினையும் மீறச் செயல்படுத்த மத்திய அரசு முயற்சித்து வருகிறது.


கல்பாக்கத்தில் புதிய இயக்கம்

கல்பாக்கத்தில் முதல் அணு உலை செயல்பட துவங்கி 25 ஆண்டுகள் கடந்து விட்டது. அணு உலையின் மொத்த ஆயுட்காலம் 30 லிருந்து 35 ஆண்டுகள் மட்டும்தான். இப்போது அதே குறுகிய நிலபரப்பில் 500 மெகாவாட்  வேக அணு ஈணு உலைக்கான பணிகள் வேகமாக நடைபெறுகிறது. மேலும் 4 மேற்பட்ட அணு உலைகளை உருவாக்கும் திட்டம் தீட்டப்பட்டு வருகிறது.

இப்பகுதியில் கதிர்வீச்சின் காரணமாக மல்டிபல் மைனமோ எனும் எலும்பு மச்சை புற்றுநோய், தைராய்டு புற்றுநோய், கருச்சிதைவு நோய்களால் பாதிப்போhpன் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் கடந்த வாரத்தில் பெரம்பலூரை மையப்படுத்தி பூகம்பம் வந்தது. ரிக்டர் அளவு கோலில் 3.5 ஆக பதிவானது. லேசான விரிசல்கள்தான். ஆனால் கல்பாக்கமும் பூகம்பம் வர வாய்ப்புள்ள பகுதியாக கண்டறியப்பட்டுள்ளது. கல்பாக்கம் ஜோன் 4ல் உள்ளதால் பூகம்பம் வந்தால் அது ரிக்டர் அளவுகோலில் 8 ஆக பதிவாகும் பேரழிவை உண்டாக்கும் என புவியியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளது. இப்பகுதியில் பெரும் அதிரிச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில்  அமைப்புகள் ஒன்றிணைந்து அணு உலைகள், கதிர்வீச்சு பற்றிய விழிப்புணர்வு மக்களுக்கு உருவாக்க வேண்டும் என்ற நோக்கோடு கல்பாக்கம் பகுதியில் அணுகதிர் வீச்சு பாதுகாப்பிற்கான மக்கள் இயக்கம்’ என்ற பெயரில் ஒரு இயக்கம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

இக்கூட்டத்தில், அணு உலைகளின் பாதுகாப்பை உறுதிபடுத்து! பாதுகாப்பை உறுதிபடுத்த முடியாவிட்டால் அணு உலைகளை இழுத்து மூடு!! புதிய அணு உலைகளை திறக்காதே என்று வலியுறுத்தப்பட்டது. அணு உலைகளுக்கு எதிரான மக்களின் ஆர்பரிப்பு மேலும் வீhpயமாக வேண்டும். தமிழகத்தில் அணு உலைகள் மூடப்பட வேண்டும் என்பதே மனிதம் நேசிப்போரின் எதிர்பார்ப்பு.

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
anu ulaikal ethuku... yen anuma unka veetla rice ckuker ilaya enna.,.. ::) ::)
                    

Offline Yousuf


Arya

  • Guest
nala thakaval
matha naadukal anu ulaikala moodalamnu yosikurapa than nama thirakalanu muyarchikurom :-(


Arya