தமிழ்ப் பூங்கா > அகராதி

English - Tamil Dictionary ( தானுந்து அருஞ்சொற்பொருள்-AUTOMOBILE GLOSSARY)

(1/4) > >>

RemO:
ARM - கவைக்கரம் - சீருந்து சக்கரத்துடன் பிணைக்கும் கவை வடிவ தொங்கல் அமைப்பு

ACCELERATOR - முடுக்கி

AIR-FLOW COOLING SYSTEM - காற்றுக் குளிரலமைப்பு

AIR-FUEL MIXTURE - காற்றெரிபொருள் கலவை

AIR BREAK - காற்று நிறுத்தி

AIR FILTER - காற்று வடிப்பி

AIR INTAKE SYSTEM - காற்றிழுவமைப்பு - ஒரு காற்றுக்கலக்கி விசைப்பொறியில் (carburettor engine) வெளிக்காற்று காற்று வடிப்பி (air-filter) மூலம் காற்றுக்கலக்கிக்குள் (carburettor) நுழையும்; பின்பு அது உள்ளிழு பன்மடிமம் (intake manifold) மூலமாக கலன்களுக்குள் (cylinders) நுழையும்; உட்செலுத்தல் விசைப்பொறியில் (fuel injection engine) காற்று காற்றிழுவி எனப்படும் நீண்ட தூம்பு மூலமாக காற்று வடிப்பிக்குள் நுழைகிறது. பின்பு காற்றுப்பாய்வளவி (air-flow meter) மூலமாக நெரிப்பறைக்குள் (throttle chamber) சென்று, அதன் பின்னர் விசைப்பொறிக்குள் நுழைகிறது.

AIR PUMP - காற்றிறைப்பி

ALL WHEEL DRIVE - அனைத்தியக்க, அனைத்தியக்கூர்தி -

ALTERNATOR - மாறுமின்னாக்கி

ANTI-FREEZE - உறைத்தடுப்பி - குளிர்பொருள் கடும்பனிக்காலத்தில் உறையாமல் இருக்க, அதன் உறைநிலை குறைக்க வைக்கும் சேர்ப்பொருள்

ANTI-LOCK BRAKING SYSTEM (A.B.S.) - வழுக்கா நிறுத்தி (நிறுத்தமைப்பு) - சக்கரம் பூட்டிய நிலையை உணர்ந்து தன்னியக்கமாக விடுவிக்கும் நிறுத்தமைப்பு; இதனால் வழுக்கம் ஏற்படாமல் இருக்கும்

ASSEMBLY-LINE - ஒன்றுகூட்டு வரிசை

AUTOMATIC TRANSMISSION - தன்னியக்கப் பரப்புகை

AUTOMOBILE - தானுந்து

AXLE - அச்சாணி

RemO:
BALL JOINT - பந்துமூட்டு - உந்துவண்டியின் முன்சக்கரங்களை தொங்கலில் (suspension) தாங்கும் கட்டகம்

BELT DRIVE - வாரியக்கி - பற்சக்கரப்பெட்டியிலிருந்து சக்கரங்களை இயக்க கப்பி மற்றும் தோல் அல்லது மீள்ம வார் கொண்ட கட்டகம்

BRAKE - நிறுத்தி

BRAKE DRUM - தேயுருளையம் - வாகனத்தை நிறுத்துவதற்கு நிறுத்துக்கட்டையுடன் உராயும் உருள்வடிவ பரப்பு; உருளைய நிறுத்தமைப்பில் பயனாகிறது; நிறுத்துவதற்காக ஏற்படும் உராய்வு உட்பரப்பில் அமையும்

BRAKE SHOE - நிறுத்துக்கட்டை

BUMPER - அடிதாங்கி

RemO:
CARBURETTOR - காற்றுக்கலக்கி - எரியறைக்குள் உள்ளிழு வெற்றிடத்தால் (intake vacuum) எரிபொருள் உட்செலுத்தப்படும் அமைப்பு

CATALYTIC CONVERTER - வினையூக்க மாசகற்றி - வெளியேறி நச்சு வளிகளை குறைக்கச்செய்யும் சாதனம்

CENTRIFUGE - மையவிலக்கி -

CHASSIS - அடிச்சட்டம்

CLUTCH - விடுபற்றி

COMBUSION CHAMBER - எரியறை

CONNECTING ROD - இணைப்புக் கம்பி - ஆடுதண்டையும் (piston) வளைவச்சையும் (crank) இணைக்கும் கம்பி

COOLANT - குளிர்வி

COOLING SYSTEM - குளிரலமைப்பு

COUPE - பதுங்கறை சீருந்து

COWL - முகப்புத்தாங்கி

CRANK - வளைவச்சு

CRUISE CONTROL - சீர்வேகக்கருவி

CYLINDER - கலன்

CYLINDER BLOCK - கலன்கூறு - விசைப்பொறி மற்றும் கலன்களை கொண்ட கட்டகம்

CYLINDER HEAD - கலன்தலை - தீப்பொறியை மற்றும் ஓரதர்களை (valves) கொண்ட விசைப்பொறியின் பிரிக்கத்தகு பகுதி

RemO:
DAMPER - அதிர்வுதாங்கி

DASHBOARD - முகப்புப்பெட்டி

DELIVERY PIPE - வழங்கு புழம்பு - எரிபொருளை விசைப்பொறியின் உள்ளிழு ஓரதருக்கு (intake valve) கொண்டுவரும் புழம்பு

DISK BRAKE - வட்டு நிறுத்தி - இந்த நிறுத்தமைப்பில் ஒவ்வொரு சக்கரத்திலும் ஒரு நழுவிடுக்கி (caliper) தேய்ப்பஞ்சை (break pad)
சுற்றகத்தின் மீது அமுக்கும்

DOUBLE-WISHBONE SUSPENSION - இரட்டைக் கவைக்கவத் தொங்கல் சீருந்து சக்கரத்துடன் பிணைக்கும் மேல் மற்றும் கீழ்க்
கவைக்கர தொங்கல் அமைப்பு

DRUM BRAKE - உருளைய நிறுத்தி - இந்த நிறுத்தமைப்பில் ஒரு நீரியக்க (hydraulic) உருளையம் (drum) இருந்து நிறுத்துக்
கட்டைகளை தேயுருளையின் (break-drum) உட்பரப்பு மீது அமுக்கும்

RemO:
ELECTRONIC FUEL INJECTION (EFI) SYSTEM - மின்னணு (எரிபொருள்) உட்செலுத்தமைப்பு - இதன் உறுப்புகள் அ)எரிபொருள் வழங்கமைப்பு (fuel delivery system); ஆ)காற்றிழுவமைப்பு (air intake system); இ)மின்னணு கட்டுப்பாடமைப்பு (electronic control system)

ENGINE - விசைப்பொறி

EXHAUST (GAS) - வெளியேறி

EXHAUST (SYSTEM) - வெளியேற்றகம்

EXHAUST MANIFOLD - வெளியேற்று பன்மடிமம்

Navigation

[0] Message Index

[#] Next page

Go to full version