தமிழ்ப் பூங்கா > அகராதி

English - Tamil Dictionary :இருப்புப்பாதை -RAILWAY GLOSSARY

(1/4) > >>

RemO:
ADEQUATE DISTANCE - போதும் தொலைவு - ஒரு இருப்பூர்தி குறிப்பிட்ட வேகத்தில் இயங்கும்போது அதை தடையிட்டு நிறுத்தவைப்பதற்காக தேவைப்படும் பாதுகாப்பான தொலைவு

ADHESION - ஒட்டுமை - இயக்குசக்கரங்கள் தண்டவாளத்தில் ஏற்படுத்தும் பிடிப்பு, குறிப்பாக துவங்கும் நேரத்தில். இயக்குசக்கரங்களின் எடை இதற்கு சாதகமாக அமையும்

AIRCONDITIONED CHAIR CAR - குளிர்சாதன இருக்கை இருப்புப்பெட்டி

AIRCONDITIONED SLEEPER CAR/COACH - குளிர்சாதன படுக்கை இருப்புப்பெட்டி

ALIGNMENT - இருப்புவழி - ஒரு தொடரூர்தி மேற்கொள்ளும் மெய்யான இருப்பாதை வழி

ALL-CLEAR SIGNAL - முழுத்தெளிவுச் சைகை

APRON - ஏற்றிடம் - இருப்புப்பெட்டிகளின் சுமைகள் ஏற்ற அல்லது இறக்க; இருப்புப்பெட்டிகளை பழுதுபார்க்க அல்லது கழுவும் இடம்

ASHPAN - சாம்பல்பிடி - பரணி (grate) அடியில் அமைக்கப்பட்ட சாம்பலை பிடிக்கும் தட்டு

RemO:
BALANCING SPEED - நிலைநிமிர் வேகம் - குறிப்பிட்ட சுமை மற்றும் சரிவிற்கான (gradient) ஒரு தொடரூர்தி உந்திப்பொறியின் பாதுகாப்பான நிலைத்த சீரியங்கு வேகம் (safe stable cruising speed)

BANKER - துணையுந்துப்பொறி - மலை அல்லது சரிவான இடங்களில் பின்புறம் இணைக்கப்பட்ட உந்துபொறி; இது சரிவில் தொடரூர்தியைத் தள்ள உதவு; மேலும் நிறுத்தியாகவும் (brake) மலையிலிருந்து இருப்புப்பெட்டிகள் பிரிவதையும் தடுக்கும்

BERTH - அணைகரை

BOGIE - இருப்புப்பெட்டி

RemO:
CATENARY - சங்கிலியம் - மின்சார கம்பி அமைப்பு

CHAIR CAR - இருக்கை இருப்புப்பெட்டி

RemO:
DEAD-END SIDING - முட்டுப் பக்கப்பாதை - வழித்தடமாகத தொடர்ச்சியில்லாத பக்கப்ப்பாதை (siding)

DOUBLE LINE - இரட்டை இருப்புப்பாதை

DRIVING CAB - இயக்கிருப்புப்பெட்டி - இழு-தள்ளு அமைப்பில் உந்துபொறி கடையிலிருந்தோ நடுவிலிருந்தோ தொரரூர்தியைத் தள்ளும்போது ஓட்டுநர் அமைந்துள்ள முதல் இருப்புப்பெட்டி

RemO:
ENGINE (LOCOMOTIVE) - உந்துபொறி

Navigation

[0] Message Index

[#] Next page

Go to full version