FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது => Topic started by: Forum on July 03, 2022, 11:55:36 AM

Title: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 294
Post by: Forum on July 03, 2022, 11:55:36 AM
ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 294

இந்த களத்தின்இந்த  நிழல் படம்  FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

Updated on 26 Oct 2020:

நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும்   அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

(http://friendstamilchat.org/Forummedia/forumimages/OU/294.jpg)
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 294
Post by: AK Prakash on July 03, 2022, 04:26:57 PM
மனதில் பல துன்பங்கள்  கனத்து கொண்டிருக்கும் போது
சிறு சிறு மழைத்துளிகள்
நம்மை வந்து வருடும் போது
அந்த கனத்த துன்பங்கள் கூட
மழைத்துளிகளோடு கரைந்துப் போகிறது..

மண்ணுலகிற்க்கு வரும் மழைத்துளிகளுக்கு தெரிவதில்லை
நாம் அங்கு செல்வதே பல உயிர்களின்
தாகத்தை தணிக்க தான் என்று..

மரங்கள் பறவைகளுக்கு மட்டும் அல்லாமல்
பல மனிதர்களுக்கும்
தாங்கள் வாழும் வீடுகளாய் அமையும் என்று..

குடும்பம் வாழ்விடத்தை தொலைத்த மனிதர்களைப் போல
 தன் இருப்பிடத்தை இழந்து அகதிகளாக அலையும்
பறவைகளுக்கு தான்புரியும்
 மரங்களின் அருமை.


மரத்தடியில் உதிர்ந்துகிடக்கும் மலர்கள்..!
தன்னை வளர்த்து விட்ட வேர்களை மரம் பூப்போட்டு
வணங்குவதற்காக தான் இருக்குமோ என்ன...

இந்த உலகில் வாழும் பல உயிர்களுக்கு
இனிமையை தர காற்றும் வழிகாட்ட
இயற்கையுமே பெற்றோர்களாய் இருப்பதுண்டு.

இயற்கை செழிக்க
வைத்தால் இயற்கை
நம்மை செழிக்க வைக்கும்.
இயற்கையை நாம் அழிக்க
நினைத்தால் இயற்கை
நம்மை அழித்து விடும்.

ஆறாத காயங்களுக்கு
நீண்ட தூர பயணமும்
இயற்கையும் தான்
சிறந்த மருந்தாக
இருக்கின்றது.

காற்றுக்கும் எனக்கு இருந்த ஒற்றுமையை
அதை என்னுள் சுவாசித்த பின்னரே உணர்ந்தேன்
இருவரும் வாழ்நாள் முழுவதும் எதை தேடி அலைகின்றோம்
 என்றே தெரியாமல் அலைவதை.

Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 294
Post by: Charlie on July 03, 2022, 05:03:46 PM
இலைகள் படப்படக்கும் ஓசைக் கேட்டேன்
இமைகள் படப்படக்க நின்றேன்!
பூக்களைத் தேடி வரும் வண்டுகளைக் கண்டேன்,
புன்சிரிப்பு தோன்ற நின்றேன்!
வண்ணக்கிளிகள் பேசுதம்மா,
வர்ணிக்க வார்த்தைகள் இல்லையம்மா!
சோலைக்குயில்கள் பாடுதம்மா,
ஒரு குற்றமும் அங்கே இல்லையம்மா!
பாசப்பறவைகள் எல்லாம் பறக்குதம்மா,
பாவிகள் அங்கே இல்லையம்மா!
காற்றின் சீற்றத்தைப் பார்த்தேன்,
கடலின் அலைகளைக் கண்டேன்!
வாட்டத்தோடு இருந்த எனக்கு,
வசந்தம் தோன்றியதம்மா!
தென்னங்கீற்றின் அழகில்
தென்றல் காற்று வீசுதே!
நெல்லிமரத்தின் நிழலில் குரூவிகள் இலைப்பாறுதே!
புன்னைமர நிழலில் பூக்கள் கோலம் போடுதே!
மலையின் ஆட்சி நடக்குதம்மா!
மழையும் பொழிந்து மகிழுதம்மா!
இறைவன் படைத்த இயற்கையிலே
ஏற்றத் தாழ்வு இல்லையம்மா !!!
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 294
Post by: Orchids on July 06, 2022, 03:46:51 PM
வர்ணங்கள் பலவகை
அதில் பச்சை ஒரு வகை!
கண்களை குளிரச்செய்யும்
மனதை லயிக்கச் செய்யும்

புவியெங்கும் பச்சை போர்வை
போர்த்திப் பார்க்க தான் தேவை
செழித்த மரஞ்செடிகொடிகள்
இயற்கையோடு சோகம் கூட சுகமாகும்     
அவ்வேர்களும் கூட கதை பேசும்     
வெட்டினாலும் எரித்தாலும் அறுத்தாலும்
இயற்கை வஞ்சம் தீர்ப்பதில்லை
நிலத்தின் மேல் தீராக் காதல் கொண்டதால்


கான்க்ரீட் உலகை பார்த்து சலித்த கண்கள்
இயற்கை மடியில் திளைத்து
மாசற்ற காற்றை சுவாசிக்க
ஏங்கும்


சிலுசிலு வென சிலாகிக்கும் காற்று
சரசர வென இசைக்கும் இலைகள்
படபடவென பொழியும் மழை
குக்கூ என் கூவும் பறவைகள்
சலசல வென பாயும் நதிகள்
உயர்ந்த மலைப் சிகரங்கள்
அடர்ந்த காடுகள்
பச்சைபசேல் புல் வெளிகள்
பிற்காலத்தில்
கனவாக தான்‌ போகும்
மனிதா உன் வாழ்க்கை முறைகளால்!
மரமற்று போனால் மாரியில்லை
மழையற்று போனால் ஜுவனில்லை
மரம் வளர்ப்போம் வையம் காப்போம்!
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 294
Post by: DuskY on July 06, 2022, 07:28:29 PM

வானின் வண்ண நிறம் யாரும் வர்ணங்கள் கொண்டு நிரப்புவதில்லை ....
கடலுக்கு உவர்ப்பு தன்மையை யாரும்
சேர்ப்பதில்லை மாற்ற முயன்ற நவீன கருவியும்
தோற்றேதான் போனது..
நிலத்திற்கு விளைவிக்கவோ நீரினைத்தூய்மை
படுத்தவோ யாரும் கற்றுக் கொடுப்பதில்லை...

அருவியையோ,குளம் , குட்டைகளையோ யாரும்
தனிப்பட்ட முயற்சியால் உருவாக்கவில்லை..
ஏன் மழையைக் கூட உலகின் எந்த அசாதாரண
மனிதனாலும் உருவாக்க முடிவதில்லை.
காற்றுக்கு தென்றலாகவோ மழை புயலாக மாறவோ
யாரும் உதவவில்லை....

நாம் விடும் பிராணவாயுவையோ, மாசுவையோ தூய்மை செய்ய மரத்திற்கு நாம் கற்றுக் கொடுக்கவில்லை..
சூரியனுக்கு வெப்பத்தையும் , அதன் மூலம் தாவரங்களின் ஒளிச்சேர்க்கையையும் உணவையும்
நமக்கு கொடுக்க வேண்டும் என யாரும் கட்டளையிடவில்லை..
இயற்கை இயல்பாக மனிதனுக்கு எல்லா
நன்மையும் தரும்படி அமைக்கப்பட்டருக்கிறது..


இயற்கையை பயிலாமல் செயற்கைக்கு
அடிமை ஆன மனிதனோ
மாடங்கள் கட்ட, சாலைகள் அமைக்க , வீடுகள் கட்ட என
இருக்கும் மரங்களை வெட்டவும்,வெட்டிய
மரங்களக்கூட வியாபரம் செய்யவே விளைகிறான்...

ஒரு நாள் இயற்கை அதன் வேலையை நிறுத்தினால்
நமக்கு சுவாசிக்க காற்று கூட இராது
ஒரே நாள் கடல் தன் நிலையில் இருந்து மாறியபோது
மனிதர்கள் பட்ட துயரத்தை சொல்லில் அடக்கிடமுடியுமா???

 எத்தனை ஏடுகளில் படித்தாலும் எத்தனை அறிஞர்கள்
கற்றுக் கொடுத்தாலும் மனிதருக்கு மட்டும்
ஏன் புரிவதில்லை இயற்கையை அழித்தால் நமக்கு
நாமே வகுக்கும் அழிவும் பாதை அது என்பதை...
முற்றும் உணர்ந்த தனிமனிதர்கள் ஒரு காட்டையே உருவாக்கி இருக்கிறார்கள்..
நாம் காடு உருவாக்க வேண்டியதில்லை..
நம் சந்ததிகள் சுவாசிக்க சில மரங்கள்
வளர்த்தாலே போதுமானது...
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 294
Post by: Aathirai on July 06, 2022, 08:10:49 PM
இயற்கை அன்னை....
நாம் இந்த உலகத்தில் பத்து மாதம்
மற்றுமே அன்னையின் வயிற்றில்!!
மீதி நாட்கள் இயற்கை அன்னையின் இடத்தில்!!!
ஆதலால்
இயற்கை அன்னையை போற்றுவோம்!!!
இயற்கையை நேசிப்போம்! இன்பமாய் சுவாசிப்போம்!!

இயற்கை அன்னை நமக்கு பலவிதமான அன்பளிப்புகளைக் கொடுத்திருக்கிறாள்.
அந்த அன்னை தந்த பொருளை நாம் அன்பாக நேசிக்க வேண்டும்
பண்போடு போற்றி பாதுகாக்க வேண்டும் ..இல்லையேல்  பெரும் சீர் அழிவு  ஏற்ப்படும்..
பஞ்சபூதங்களான நீர், வானம், நிலம், காற்று, நெருப்பு ஆகியவற்றை நாம் பாதுகாத்தால்
நம் அனைவருக்கும் ஜீவன் நலம் தரும் .
"இயற்கையை நீ காத்தால் இயற்கை உன்னைக் காக்கும்" 
இந்த உண்மையை இன்றைய தலைமுறைக்கும்
தெரிவித்தல் ஒரு முக்கியமான விசயமாகும்.
தேவையற்ற குப்பைகளை பூமித்தாய் மேல் கொட்டி
அவளைக் கண்ணீர் சிந்த வைக்க வேண்டாம். நீர்நிலைகளைக் காப்போம்
மரம் வளர்ப்போம்
மழை பெறுவோம்...
வளம் அடைவோம் ..

மரமே ஆழ விருட்சமே! நீயும் ஒரு
பெண்தான்!
பூமித்தாயின் கருவறையில்
உயிர்த்தெழுகிறாய்
விதை ஒன்றினால்…

சின்னஞ்சிறு பெண் போல
பச்சை உடுத்திப் பண்பாடுகிறாய்!
பூப்படைந்த பெண் போல
பூத்து மலர் விடுகிறாய்!
உறவுகளென உன்னைச் சுற்றி
விழுதுகளை உருவாக்குகிறாய்!
இவ்விழுதுகளை தாங்குவதற்கு
 நீ வேரென ஊன்றி நிற்கின்றாய்!

முடி நரைத்து, கண் குழிந்து,
தோல்சுருக்கமென்று வீழ்ந்தாலும்,
ஓயாது உழைத்துத் தாங்கும்
முதிர்பெண் போல
இலைகள் பழுத்து உதிர்ந்து
மண்ணில் வீழ்ந்தாலும்
நீ வீணாகாமல் உரமாய்
உபயோகம் ஆகிறாய்
கண்ணுக்குத் தெரியாம‌லே…
மரமே நீ ஒரு
பெண்ணென்றே நான்
அடித்துக் கூறுவேன்!

பெற்ற அன்னை ஊட்டுவது பாசம்!
இயற்கை அன்னை ஊட்டுவது சுவாசம்!
விண்ணோக்கி மரம் உயர்ந்து நிற்க
மண் நோக்கி மழை பொழிவு தரும்
வாழ்வு மேம்படும் !
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 294
Post by: Sun FloweR on July 06, 2022, 11:55:56 PM
பாட்டனுக்கும் அன்னையவள்..
பூட்டனுக்கும் அன்னையவள்..
நேற்றும் தாயாய் இருந்தவள்
இன்றும் தாயாய் இருப்பவள்
என்றும் இந்த நித்யகன்னி
அன்னையாய் இருந்து நம்மைக் காப்பவள் ..

நேற்றைய வரலாறும் அறிந்தவள்..
இன்றைய குற்றங்களும் தெரிந்தவள்..
நாளைய தீர்ப்புகளையும் உணர்ந்தவள்,
உணர்த்துபவள் ...

அன்னையாய் இருந்து ரட்சிப்பவள்..
தந்தையாய் இருந்து கண்டிப்பவள் ...
குருவாய் இருந்து போதிப்பவள் ...
காதலியாய் இருந்து காதலுறச் செய்பவள் ..
பொறுமைக்கும் உதாரணம் அவள்..
கடும்கோபத்திற்கும் எடுத்துக்காட்டு அவள் ..

பசுமை தாங்கும் மரங்களாய்
மயக்கம் ஊட்டிச் செல்பவள் ...
பரந்து விரிந்த வானாய்
பரவசம் கொள்ளச் செய்பவள்..
ஆழமான ஆழியாய்
ஆதிக்கம் என்றும் செய்பவள்..
பச்சை வண்ணச் சேலையில்
பார்ப்பவரை வசியம் செய்பவள்..
நீல வண்ண ஆடையில்
நேசம் நிகழ்த்திக் காட்டுபவள்..
மொத்தத்தில்
"இயற்கை "எனும்
நாமம் கொண்ட
பதின் வயது பருவ மங்கை அவள்..
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 294
Post by: Abinesh on July 07, 2022, 05:35:47 AM
கடல் அலை நீராவியாக மாறி,ஒரு மேகமாக உருவாகி,அந்த மேகம் இழந்த தன் உறவுகளை தேடி மெல்ல மெல்ல நகர்ந்து,
மரங்கள், செடிகள்,கொடிகளை பார்த்து சிரித்து கொண்டே  தூரத்தில் இருக்கும் தன்  காதலனான மலையை பார்த்து, தன் அழகான கருப்பு நிறத்தில் உருமாறி ,ஓடி சென்று அனைத்து முட்டி மோதி கொண்டு,  தன் ஆனந்தக் கண்ணீரை,  மழையாக பொழிகிறது இந்த பூமிக்கு...!

காடுகளை அழித்து வீடுகள் கட்டும் மானிடா.!
காட்டுயானைகள் பசியாற நாட்டு தோட்டத்துக்குள் புகுகின்றன.பறவைகள் குழாயடி ஓரத்திலும்  ,கொல்லைப்புறத்தில் ,
தவம் கிடக்கின்றன தாகம் தீர்க்க...!

தண்ணீர் குடிப்பதற்காக,நன்னீர் மீன்கள்
மல்யுத்தம் போட்டு,மாண்டு போனது.!
வறண்ட குளமது,மீன்களின் மயானமானது...!
ஊருக்கு மைதானமானது. அந்த வறண்ட குளத்தில் வறட்சியை அறியா வாலிபர்கள்
வாலிபால் ஆடுகின்றனர்..!

மரங்களின் ஆக்ஸிஜனை சுவாசித்து
இயற்கை தாயை நேசித்து வாழ வேண்டிய மனிதன்,மரங்களை அழித்தும், கனிம வளங்களை சுரண்டியும்,இறைவன் படைத்த இயற்கையை நாசப்படுத்தி விட்டு
மழைக்கு மன்றாடுகிறான் மனிதன்..!

தண்ணீருக்காக மாநிலங்களுக்கிடையே
பனிப் போர் நடப்பதால்
விவசாயம் செய்வதே பெரும்பாடு..!
இது மூன்றாம் உலகப்போராக மாறுவது கண்கூடு..!

பூமியின் புதல்வர்களே,போருக்கு விதை போடாமல்,நீருக்கு விதை போடு,
நிலத்தடி நீர் அது,பூமியின் ரத்தம்..!அது இல்லையேல்,நின்றுபோகும் மனித சத்தம்..!

இயற்கையுடன் சேர்ந்து வாழ கற்று கொள்..!
இல்லையேல் இயற்கையுடன் சேர்ந்து அழியவும் மனதை தேற்றிக்கொள்..!

மழை வந்தால் குடை தேவைப்படுகிறது,
வெயில் அடித்தால் ஒதுங்குவதற்கு நிழலாக மரம் தேவைப்படுகிறது,எனவே ஆளுக்கொரு மரம் வளர்ப்போம்,நம்மையும் நம்  மண்ணையும் காப்போம்,இயற்கையை நேசிப்போம்...!
               


 




Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 294
Post by: TiNu on July 07, 2022, 08:07:38 AM


அன்பே,
உன் ஸ்வர்ண அழகில் ஏனடா.
எனை தினம் தினம் கொல்கிறாய்..

என் காலை பொழுதெல்லாம்..
உன் முகம் தேடியே.. மலர்கிறதே..

 உனை தீண்டி சென்ற காற்று..
எனை தழுவ மனம் ஏங்குதே..

நீ ஒருவன் என்னுடன் இருப்பதாலே..
என் சுமையெல்லா.. லேசாகிறதே..

உன் நிழல் என் மீது படர்வதாலே..
என் உடலும் உள்ளமும் குளிருதடா..

உனை எடுத்து என் ஆடையென..
அணிகையில் நானும் தேவதையடா

உன்னை மடியில் சுமக்கும் நிமிடங்களில்..
நானும் மகிழ்ச்சியில் பூரிக்கிறேனடா..

உன்னையும் என்னையும் கைகோர்க்க செய்யுமே..
துள்ளி திரியும்... நிறமில்லா புனலுமே ...

நம் இருவரின் இணைப்பாலே...
வளி மண்டலம் வலிமையாகுமே ..

உன்னால நான் சுவாசிக்கிறேனா ...
இல்லை.. என்னால் நீ வாழ்கிறாயா...

பஞ்ச பூதங்களும் உயிர் பெறுமே
நான் மட்டுமில்லை மன்னவனே...

எல்லா உயிரையும் இயக்கும் .. பச்சை தங்கமே..
உனை கையிலேந்தும்.. நானும் புண்ணியவாதியே....

இப்படிக்கு,
அன்பு நிலமகள் ஆசையுடன் எழுதிய
பாசமிகு மடல்  பசும் மகனுக்கு.... 


Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 294
Post by: SweeTie on July 07, 2022, 06:17:11 PM
இதயத்தை மயக்கும்  இயற்கை  அன்னையே
இன்னல்களை   தீர்க்கும்   அழகின் கடாட்ஷமே
இளமையும்   முதுமையும்    வியக்கும்   ஓவியமே!


நீண்டு  விரிந்த   நீலத்திரை மேல்
நீர்த்திவலைகளாய்    வெண்முகில் கூட்டம்
நீந்தி விளையாடி  கடந்துபோகும்

பாவங்களை  பொறுத்தருளும்  பூமித்தாய்
பாய்விரித்து    படுத்து கிடக்கிறாள்   
கல்லும் முள்ளும்  குத்துவது தெரியாமல்

பனி  நீர்   தெளித்த  புற்தரைகள்  காலையில்
பளிங்கு  போலத்  தெரிவதும்  ...  மாலையில்
மழுங்கி  வாடிப் போவதுமேனோ? 

ஆழம் தெரியாத  கருநீலக்கடல்
கன்னியவள்  நீண்ட கரும் கூந்தல்போல் 
வாராமல்    கலைந்து  கிடக்கிறதே   
 
பச்சைக்கம்பளம்  போர்த்திய     காடுகள்
இச்சையில்  இசைபாடும்  பல்லின பறவைகள்
மெச்சியே வாழும்  கூடாரமல்லவோ !

நூறாண்டு  வாழ்ந்த   நிறைவான வாழ்க்கையின்
அசைக்க முடியாத  ஆணிவேர் கொண்ட மரங்கள்
மிருகங்களின்  சரணாலயம்

காற்றில்   உராயும்    நாணலும்  மூங்கிலும்
தோற்றிடும்  புல்லாங்குழலிசை தனிலே
மயங்காத  மனங்களும்  உண்டோ ?

இயற்கை அன்னையின்   மலைமகள்    அழகு
உச்சியில்   உதித்து  உருண்டோடும்
நீர்வீழ்ச்சிகளுக்குத்தான்  ஈடேது?

எத்தனை  அழகு  இந்த  இயற்கை   அதை
அழிப்பதில்    என்ன  நியாயம்   
மக்களே  உணர்வீர்  இதனை  என்றும்

ஐம்பூதங்களை   படைத்தான்     அதை ரசிக்க
ஐம்புலன்களையும் படைத்தான்   
ஆறாம்  அறிவையும் கொடுத்தான்  -  இவனோ
அறிவை கெடுத்து   ஆண்டியானான்.