1
கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது / Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 378
« Last post by Sankari on July 15, 2025, 06:47:40 PM »ஒரு தலைமுறைக்கு முதல் பிள்ளை நீ
எல்லோருமே காத்திருந்த ஆண் தேவதை நீ
நான் உன்னை சுமக்கவில்லை என்றாலும்
என் முதல் மகன் நீ
குழந்தைகளைப் பிடிக்காத நிலையில் இருந்தேன்
உன் பின்னே சுற்றி சுற்றி வைக்க செய்த மாயவன் நீ
உன் சின்ன சிறிய பாதத்தில் ஒருவித தாய்மையை அறிய வைத்தவன் நீ
பொறுமை, நிபந்தம் இல்லாத அன்பு, பொறுப்புகள், எல்லாவற்றிக்கும் மேல் பாசம்
இது எல்லாம் என்ன என்று இந்த பூமியில் வந்து
எனக்கு கற்றுக் கொடுத்தவன் நீ
உன் குறும்புகளால்
உன் சேட்டைகளால்
உன் சிரிப்புகளால்
உன் அன்பினால்
உன் அறிவால்
என்னை பாசத்தில் கட்டிப்போட்டவனும் நீ
துன்பம் என்ன தாக்கிய போது
உன் குறும்பு சிரிப்பால் என்னை பார்த்து
என் நெஞ்சத்தை பஞ்சு மெத்தை போல ஆக்கியவனும் நீ
என்னை அணைத்துக் கொள்ளும்போது
எந்த கஷ்டம் இருந்தாலும் அதை காற்றில் பறக்க விட்டவன் நீ
ஒரு சிறு பையன் வெகுளித்தனம்
அவன் கள்ளத்தனம் இல்லாத பாசம்
அதைவிட இந்த உலகத்தில் வேறொன்றும் புனிதமானதில்லை என்று
உணர்த்தியதும் நீ
சின்னம்மா என்று
என்னை முதலில் அழைத்ததும் நீ
இந்த உறவில் எல்லா அர்த்தங்களையும் காட்டியதும் நீ
எந்த வேதனை, கஷ்டம், அச்சம், சோகம், தேவை இருந்தாலும்
அதை தீர்த்து வைக்கும் பொறுப்பு என்னிடம்
அதையும் புரிந்து கொள்வாய் நீ
நான் உன்னை சுமக்க வில்லை என்றாலும்
இந்த வாழ்வில் எல்லை வரை என் நெஞ்சில் சுமப்பேன்
என் தங்கம் நீ !