Author Topic: HAPPY REPUBLIC DAY  (Read 4301 times)

Offline Sumi

Re: HAPPY REPUBLIC DAY
« Reply #15 on: January 26, 2012, 07:16:34 PM »

Offline kanmani

Re: HAPPY REPUBLIC DAY
« Reply #16 on: January 27, 2012, 09:13:15 AM »

Offline செல்வன்

Re: HAPPY REPUBLIC DAY
« Reply #17 on: January 29, 2012, 02:12:16 PM »
இந்த ஜனவரி மாதம் 26 ஆம் தேதி 63வது குடியரசு தினத்தை கொண்டாடும் இந்திய குடிமக்களாகிய இந்த இணைய உறுப்பினர்களுக்கு குடியரசு தின நல்வாழ்த்துக்கள் .


சற்றே சிந்தித்து பார்க்க வேண்டும். உலகின் மிகபெரிய குடியரசு நாடு என்று சொல்லி கொள்ளும் நாம் இன்று எந்த நிலையில் இருக்கிறோம் ?

அரசின் எல்லா துறைகளிலும் லஞ்சம் லாவண்யம் .அரசு அதிகாரிகளின் லஞ்சம் ஆயிரக்கணக்கில் என்றால் , அரசியல்வாதிகளின் ஊழல் பல ஆயிரம் கோடிகளில். எங்கே செல்கிறது நமது நாடு ? பாமர மக்கள் பசி பஞ்சம் வறுமை கோட்டின் கீழே என்று நாற்பது விழுக்காடு.இந்தியாவின் அயல் நாட்டு கடன் 5 லட்சம் கோடிகள். இந்திய செல்வந்தர்களின் கருப்பு பணம் இந்த கடனை விட 10 மடங்கு . உலகின் அதி செல்வந்தர்களும் நம் நாட்டிலே, பரம ஏழைகளும் நம் நாட்டிலே.உண்மைலேயே நாம் குடியரசு நாடக இருக்கிறோமா? இந்திய உண்மையான குடியரசு நாடாக சொல்லி கொள்ள நம்மால் இயன்ற குடிமகனுக்கான கடமைகளை செவ்வனே செய்தல் வேண்டும் .அனைத்து மக்களும் கல்வி அறிவு பெற நம்மால் இயன்ற உதவிகளை செய்வோம்.அரசு இலவச கல்வி அனைவருக்கும் வழங்கிட முனைப்போடு செயல்படுவோம். மடிக் கணினிக்கும் , தொலைக்காட்சி பெட்டிக்கும் ஆசை பட்டு வாக்களிக்காமல் , உறுதியான நேர்மையான மக்களை தேர்ந்தெடுத்து அரசாள வைப்போம் . ஒவ்வொரு குடிமகனும் அவரவர் மனசாட்சிக்கு நேர்மையாக நடப்போம். அரசாங்கத்தை ஏய்க்காது வரிகளை செலுத்துவோம்.எதிலும் நேர்மையோடு இருப்போம் என்ற உறுதி மொழி ஏற்போம் .