Author Topic: கொடுக்க வேண்டிய கடன்கள்.  (Read 2717 times)

Offline spince

  • Full Member
  • *
  • Posts: 211
  • Total likes: 1
  • Karma: +0/-0
  • Gender: Male
  • Imagine every day to be the last of a life surroun
கொடுக்க வேண்டிய கடன்கள்.

ஹா க்வான்ஷோ இன்ஸி என்ற ஜென் ஞானி ஒரு கிராமத்தில் வசித்து வந்தார். அந்த கிராமத்தில் ஒர்பெண் தவறாக கர்ப்பமாகினாள். அதன் காரணத்தை யார் என்று உறவினர்கள் அதட்டி கேட்ட போது.., அவள் தன் காதலனுக்கு ஆபத்து வந்து விடுமோ என்று கருதி அந்த ஜென் ஞானியை குற்றம் சாட்டினாள். உறவினர்கள் அந்த ஜென் ஞானியை திட்டி அவள் பெற்றெடுத்த குழந்தையை அவரிடம் "இதோ உன் குழந்தை, இதை நீயே வைத்து கொள்..!" என்று கொடுத்தனர். "அவள் சொன்னது உண்மைதான் குழந்தையை கொடுங்கள்..!" என மகழ்ச்சியாக கூறி அந்த குழந்தையை அன்போடு வளர்த்து வந்தார் ஜென் ஞானி.

சிலமாதங்கள் கழிந்ததும் அந்த பெண்ணால் குற்ற உணர்வை தாங்க முடியவில்லை. தனது குழந்தையை பிரிந்ததும், ஒரு நல்லவரை வீண்பழிக்கு ஆழாக்கியதும் மனதை வதைத்ததால் உண்மையை தனது உறவினரிடம் தெரிவித்தாள். உறவினர்கள் அவரிடம் சென்று கால்களில் வீழ்ந்து அழுது மன்னிப்பு கேட்டு, குழந்தையை திருப்பி கேட்டனர். அவள் "அப்படியா சொன்னாள். அப்படியானால் உண்மைதான்..!" என கூறி அந்த குழந்தையை மகிழ்ச்சியுடன் திருப்பி கொடுத்தார்.

(எப்படி இவரால் குழந்தையை மகிழ்ச்சியுடன் வாங்கவும், அதை அதே மனதுடனும் திருப்பி கொடுக்க முடிந்தது..? நாம் உற்பட எவையும் எம்முடையது அல்ல.. இங்கு நாம் பெற்று இருப்பவை யாவும் திருப்பி கொடுக்க வேண்டிய கடன்கள் என்ற உணர்வில் இருப்பவர்கள் ஞானியர்கள் . ஞானியர்கள் எல்லாம் கடந்தவர்கள். அதனாலே இந்த உலகில் அவர்கள் அமைதியான பார்வையாளனாக மட்டும் இருக்க முடிகிறது.