FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது => Topic started by: Forum on November 07, 2021, 11:49:31 AM

Title: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 282
Post by: Forum on November 07, 2021, 11:49:31 AM
ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 282

இந்த களத்தின்இந்த  நிழல் படம்  FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

Updated on 26 Oct 2020:

நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும்   அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

(http://friendstamilchat.org/Forummedia/forumimages/OU/282.jpg)
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 282
Post by: Mr Perfect on November 07, 2021, 01:42:38 PM

கொட்டும் மழையே 🌨️

நீ கொட்டும் அழகை ரசிக்க🌨️

ஒரு யுகம் போதுமா 🌨️

மழை துளி இசையால் 🌨️

மனம் மிதக்குமே 🌨️

ஆயிரம் கவலைகள் இருந்தாலும் 🌨️

உடனே மறைந்து செல்லுமே 🌨️

மெல்ல மண்ணில் விழுந்து எழுந்து 🌨️

உயிருடன் கலந்தாய் 🌨️

மழைக்காக சூழ்ந்த மேகங்கள் 🌨️

மழையால் குளிர்ந்த பூ செடிகள் 🌨️

மண் வாசனைக்கு மனம் ஏங்க 🌨️

மழையின் இசையில் மயிலாடா 🌨️

காற்றோடு காற்றாக மரங்களும் 🌨️

ஆடும் இசையோட முத்து போல 🌨️

மழை துளிகள் முத்தாய் விழுந்ததிடுங்கள் 🌨️

வானவில் உன்னிடம் ஏழு வண்ணம் 🌨️

மனதில் பல கோடி எண்ணம் 🌨️

கார்மேக தோட்டத்தில் பூத்த கண்ணாடி பூவே🌨️

உன்னை ரசிக்க தெரிந்த என்னை உரசி பார்க்க வந்தாயா 🌨️

ஆகையால் நீரின்றி அமையாத இவ்வுலகில் இங்கு அந்நீரும் நீ இன்றி அமையாது 🌨️
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 282
Post by: Dear COMRADE on November 07, 2021, 06:40:57 PM
கரும் மேகத் திரள்கள்
கற்றினில் மெல்ல ஆடி
கை கோர்த்து விளையாடுகையில்
இடியின் இன்னிசை ஓசையில்
மின்னல் அது நடனம் ஆட
ஆகாயக் கண்கள் சிந்தும்
ஆனந்தக் கண்ணீர் அல்லோ
கொட்டும் மழையாய்
இந்தப் பூமிப் பந்தினிலே...

பொழியும் சாரல் மழையில்
பொங்கும் மகிழ்ச்சிக்கடலில்
பெற்றவரோடு துள்ளியாடும்
பிள்ளைகள் இருவர் பாரீர்...
ஒட்டி உறவாட தாய் தந்தை
உறங்கி மகிழ ஓர் இல்லம்
ஒதுங்கிக் கொள்ள இடமிருந்தும்
மழையில் நனையும் ஆசை...

மாறாக...
ஒற்றை அடி தூரத்தில்
ஓரமாக நிற்கும்
இன்னோர் குழந்தையும் பாரீர்...

அரவணைக்க யாரும் இல்லை
அடைக்கலம் கொடுப்பாரில்லை
கொட்டும் மழையில் குளிர் தாங்காது
ஒதுங்கிக் கொள்ள ஓர் மணை இல்லை...
ஏக்கங்கள் இருதயம் நொருக்க
அழுகை அவள் விழி பறிக்க
வழிந்தோடும் மழை நீரில்
உவர்நீரும் சேருதே- இவள்
கண்ணீரில் கரைந்து செல்லும்
கனாவில் மட்டுமே அரங்கேறும்
நிறைவேறா ஆசைகளோடு...

யாவர்க்கும் பொழியும் மழை கொடிதா
மழையோடு உறவாடும் அம்மனிதம் கொடிதா
மனிதத்தில் மாறுபடும் மனங்கள் கொடிதா
இயற்கை கொடிதா இறைவன் கொடிதா
இல்லையேல்...
வானவில் ஒன்றாயினும்
வண்ணங்கள் ஏழல்லோ...
இதுவே உலகநியதி என்று
இதையும் கடந்து செல்லும் நம் வாழ்வு கொடிதா....
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 282
Post by: Anbudan Natpu on November 07, 2021, 09:33:37 PM
                        மழை
 மழை மிதமான மழை
மழை மிதமான மழை
மழை நேர மயக்கத்தில்
மழை நேர மயக்கத்தில்
காற்றோடு கவிதை பேசி
காற்றோடு கவிதை பேசி
 மழையிடம் மனதை பறிகொடுத்துவிட்டேன்
மழையிடயம் மனதை பறிகொடுத்துவிட்டேன்
மழையே மழையே மழையே
கரிசல் மண்ணில் பூத்த
 அந்திமலரே உன்னை தொட்டு தழுவிட
 தென்றாலாய் நான் மாறிபோனேன்
,நின் வரவினை வானவிலூம் வரவேற்பு ‌செய்கிறது
காண மயிலின் நடணமும்  ,
உன் பாதகொலுசு ஓசை‌யேன கண்டதோ !
நின் பொன்தூரல் என் தேகம் எங்கும்
வண்ணங்கள் பூசுதடி மழை மகளே
நானும் சிறுபிள்ளையேன மாறிபோனேன்
புல்வெளிதனை மின்ன வைக்க வந்த
வான் மகளே நீ வருக வருக
மழையே மழையே உன் வரவுநாடி
விதையிட்ட உழவனும் அகம் மலர்ந்தான் மழையே
துள்ளி விளையாட வா மழையே
விளையாட வா மழையே
உன் வரவினை இந்த மண்ணும் பூவாசம்தனை
காணிக்கை ஆக்குகிறது
மின்னல் வெட்டும் இடியோசையும் அமுதகானம்
ஒலிக்கிறது என் செவிஏங்கும்
புவி எங்கும் உன் வண்ணபூந்தூரல்
வீசி செல்லடி‌ மழை மகளே
மழையே மழையே மழையே
உன்னுள் நான் துழைந்து போனேன் மழையே
என் காதலி நீயே மழையே
மழை மிதமான மழை மழை நேரமயக்கத்தில்
காற்றோடு கவிதை பேசி
மழையிடம் மனதை பறிகொடுத்துவிட்டேன்
                ‌‌
             என்றும் நட்புடன்
                  ‌‌‌‌உங்கள் அன்புடன் நட்பு
மகிழ்ச்சி யோன்றே சிறந்த மருந்து
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 282
Post by: PreaM on November 07, 2021, 11:08:52 PM


வான் மழையே வருக- மண்ணில்
வறட்சியை போக்க வருக...
பருவ மழையே வருக- மக்கள்
பயிர்செய்ய நீரைத் தருக...

அந்தியில் மழையே வந்துவிடு
மனதிற்கு ஆனந்தம் தந்துவிடு
அடைமழையே இறங்கி வந்துவிடு
விடியும்வரை மழையைப் பொழிந்துவிடு...

அந்தியில் பெய்திடும் மழையில்- என்றும்
ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்
மழைமீது மண்வைத்த பாசம்
மழைத்துளி பட்டதும் மண்மணம் வீசும்...

ஒரு பருவம் முழுதும்  உன்வசமே- மழையே
உன்னால்தான் விவசாயம் சாத்தியமே...
வறட்சியை பூமியில் நீக்கிவிடு
பருவம் தவறாமல் வந்துவிடு...

சின்னச் சின்னத் தூறலிலே
சிறுவர்கள் சேர்ந்து விளையாட
செல்லமாய் மழையே தூறிடுவாய்...
கைகள் நீட்டி வான் நோக்கி
முகத்தில் உன்னை ஏந்திடவே...
செல்லமாய் மழையே தூறிடுவாய்...

முத்து முத்தாய் மழைத்துளி- எந்தன்
முகத்தை நனைக்கையில் ஆனந்தம்...
சில்லென்று விழும்  மழைத்துளியில்
உடல் சிலிர்த்திடும் நிமிடம் ஆனந்தம்...

வா மழையே வா!!!  வா மழையே வா!!!













Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 282
Post by: Sun FloweR on November 08, 2021, 06:40:11 AM
ஆழியின் மகளும் நானே ,மகனும் நானே,
சில நேரங்களில் அன்னையாய் அரவணைப்பேன்..
சில நேரங்களில் தந்தையாய்
கண்டிப்பேன்...
ஒருவகையில் நானும் அர்த்தநாரி தான் ......

எனது பெருமை உணர்ந்த வள்ளுவன்
கடவுள் வாழ்த்தை முதலில் வைத்து
அடுத்து எனது சிறப்பை உணர்த்த
வான் சிறப்பை இரண்டாவதாய் வைத்தான்..

புரட்சிப் புலவன் இளங்கோவும்
மாமழை போற்றுதும்! மாமழை போற்றுதும்!
என, தனது சிலம்பில் என்னைப்
போற்றியே ஆரம்பித்தான்....

மாரியல்லாது காரியமில்லை
என்றிருந்த என்னை தற்போது
கண்டுகொள்வாருமில்லை
சீண்டுவாருமில்லை.....

மண்ணை நனைத்திருக்கிறேன்
மலையை நனைத்திருக்கிறேன்
மரங்களை நனைத்திருக்கிறேன்
மலர்களை நனைத்திருக்கிறேன்
அப்போதெல்லாம் கிட்டாத மகிழ்ச்சி
இந்தப் பிஞ்சுப் பாதங்களின் தழுவல்களிலும்,
இளந்தளிர் குழந்தைகளின் மேனி
நனைத்தலிலும், கோடிகோடியாய் கிட்டுகிறதே...

பொறுப்பான தகப்பனின் அன்பில்
நனைந்தும், என்னால் ஈரமாகியும்
குதூகலிக்கும் இக்குழந்தைகளின்
வாழ்வில் என்றும் ஆனந்தமும் பூரிப்பும்
தொடரட்டும் ..
ஆனாலும் ஏதோ ஒரு சோகம்
எட்டிப் பார்க்கிறதே என்னுள்?
அதற்குக் காரணம் அந்த
ஒற்றைச் சிறுமி தானோ....?

இப்போது என் ஏக்கமும் தேவையும்
இரண்டு விஷயங்கள் மட்டுமே...

எனக்கான கற்பகத் தருக்களை அழித்து
வனங்களையெல்லாம் வீடுகளாக்கி விட்டு,
நான் வேண்டுமென்று யாகம் வளர்த்தும்,
யாசகம் கேட்டும் திரியும் இந்தப்
பொல்லாத மனிதர்கள் திருந்த வேண்டுமென்று ஒன்று...

மற்றொன்று...
மழை கண்டும் வாடிய பயிராய் நிற்கும்
ஒற்றைச் சிறுமியே உன் கண்ணீரைக்
கரைத்துவிட மட்டுமே முடியும் என்னால்,
அதன் காரணத்தை உன்னால் மட்டுமே
துடைத்தெறியவும் தூக்கிப் போடவும் முடியும்..
உனக்கான தந்தையாய் தாயாய் என்றும்
நானிருப்பேன் வா மகளே வா !!!
என்னோடு கலந்து விளையாடு
கொண்டாடு வா மகளே வா....
                                     
                #இப்படிக்கு மாமழை....
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 282
Post by: எஸ்கே on November 08, 2021, 10:31:07 AM

தவறாமல் வரும் பருவ மழையே !
தவழந்து வரும் பருவ மழையே!

பருவங்கள் கடந்து போகும் முன்
மண்ணை நீ நனைத்திட வா மழையே!

மண் வாசனைக்கு ஏங்கும் மக்களின்
துயர் துடைக்க வா மழையே!

விண்ணின் மழைத்துளி!
மண்ணின் உயிர்துளி!

என்ற சொல்லுக்கு உயிர்
தர சோவென கொட்டு மழையே!

மக்கள் மனதில் மகிழ்ச்சி பொங்க
நாடு நலம் பெற வா மழையே!

பெரியவர் முதல் மழலைகள் வரை
உன்னில் நனைய ஏக்கம் வந்ததனவே!

உன்னை காதல் கொள்ளாதவர்
எவரும் உண்டோ என்ன?

கொட்டும் மழையில் நனைந்து
மகிழ்ச்சி கடலில் திளைத்தனரே!

கருமேகம் சூழ்ந்து வெள்ளிக்கீற்றாய்
மனம் மகிழவே மேனியை நனைத்தாயே!

அகிலத்தின் தாகம் தீர்க்கவே நீ
மண்ணில் அவதரித்தாய் மழையே!

அனைவரின் எதிர்பார்ப்பை பூர்த்தி
செய்யவே நீ வா செல்ல மழையே!

தவறாமல் அளவென நீ பெய்தால்?
அளவில்லாமல் மகிழ்ச்சி பொங்கும்!

ஆழி மழையாய் நீ பெய்தால்
நாட்டு மக்களின் நிலை தாங்குமா?

வருணனின் அன்பு கடாட்சமே
மண்ணோடு உறவாட எங்களின் மேனியில் தவழந்து விளையாட வா மழையே வா!!!
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 282
Post by: AK Prakash on November 08, 2021, 12:00:16 PM
கடவுளால் படைக்கப்பட்ட ஓர் அற்புதமான பிறப்பு நீ..
குழந்தையாய் பிறந்து, சிறுவனாய் வளர்ந்து
மனிதனாய் மாறி முதியவனாய் இறப்பது போல,
 மழைத் துளிகளாய் பிறந்து இம்மண்ணுலகம் அடைந்து
 நீராய் கடலில் கலந்து நீராவியாய் மீண்டும்
விண்ணுலகம் செல்லும் ஓர் அற்புத பிறவி நீ....


உன்னோடு கலந்து உறவாடிட
பிடிக்காதவர்கள் இங்கு இருப்பாராயினும்.
ஒரு ஓரமாய் நின்று ஓர் நிமிடம் உன்னை
ரசிக்காதவர்கள் இவ்வுலகில் இல்லை...

உன்னை நேசிப்பவர்களுக்கும்
 உன்னை எதிர்பார்த்து
 காத்துக் கொண்டிருக்கும் விவசாயிகளுக்குமே
உந்தன் அருமை தெரியும்...

பள்ளிப் பருவத்திலும் உன்னைப் பிடிக்கும்
காதல் பருவத்திலும் உன்னைப் பிடிக்கும்
காற்றோடு கலந்து வரும்  மண்வாசனையை
சுவாசிக்க என் மனம் துடிக்கும்...

கால நிலைகளுக்கேற்ப பருவ நிலைகள்
வேண்டுமானால் மாறலாம்
என்றும் மழைத்துளியின் தன்மை
ஒரு போதும் மாறுவது இல்லை..

அந்த மழைத்துளிகள் போல வாழ்ந்திட ஆசை எனக்கு.
 பாகுபாடுகள் ஏதுமின்றி அனைவரையும்
 சமமாய் பார்க்கும் மழைத்துளிகள் போல் வாழ்ந்திட ஆசை எனக்கு
. ஆனால் என்ன செய்வது மனிதனாய் பிறந்து
 திக்கற்று நிற்கிறேன் மழைத்துளிகளை பார்த்து...
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 282
Post by: JsB on November 08, 2021, 01:03:09 PM

மழையே...
நாங்கள் வாழும்  பூமிக்கு...
கடவுள் பரிசாய் கொடுத்த
எங்களின் சந்தோஷ மழையே...
எங்களுக்காக வந்த மழை அழகியே...
நீ வந்தாலே எங்கும் மண் வாசமே...
உன்னால் மனிதனின் மனநிலைமையே...மாரி போகின்றதே...

கொட்டும் மழையே ...
எங்கள்  மீது பொழிந்து வடிந்து ஓடும் மழையே...
உன்னை ரசிப்பதும்...
உன்னை அள்ளிக் கொண்டு விளையாடுவதும்...
நாங்கள் ஒவ்வொரு முறையும்...
உன் வருகையை எதிர்ப் பார்த்து...
ஏங்கிக் காத்துக் கொண்டிருக்கும் நாளை...
வார்த்தையால் சொல்லிட முடியாதே...

எல்லோரும் மழையில் குளித்து...
குதித்து...குதித்து...ஆடி... பாடி...மகிழ்ந்து
உன்னைக் கொண்டாடினால் தான்...
எங்களின் மனமே  நிறைவடையும்.
மீண்டும் எங்களுக்காக வருவாயா
எங்களின் அன்பு மழையே...
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 282
Post by: Evil on November 08, 2021, 03:02:08 PM
அன்று ஒரு நாள்..
அழகிய இரவு..
சாலையோரம் நின்ற
அனைவரின் மீது...  பூவென
சிந்துகிறாள்... மாரி.. 

சின்ன சிறு பிள்ளைகள் என
அனைவரும்  மழையில்
துள்ளி குதிக்க செய்கிறாள்

மெல்லிய மழை துளி
பட்டதும் என் மனதில்
சற்றென்று மாற்றம்..

வனத்தில் இருந்து வலம்
வரும் தேவதை நம்மை
காண பூமி வந்தாளோ 
என்றே நினைத்தது என் மனம்

மாரி  என வந்தவள்
மண்ணின் வாசம் வீச
செய்து பூமி எங்கும்
சிரிக்க செய்கிறாள்

மழை துளிகள் என்று
வந்தவள் மக்களின் மனதை
கொள்ளை அடிக்கிறாள்

மழை மேகங்கள் கண்ட
உடனே முதலில் மகிழ்ச்சியில்
திளைப்பது விவசாயிகள்
 
தன் மாரி  வருவாளா..
மழை தன்னை தருவளா 
என்று எதிர்பார்த்து இருக்கும்
விவசாயிகளுக்கு வந்து விட்டாள்

வான் மழை என்னும்
பொன்மழையை அள்ளி 
தந்து விட்டாள்
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 282
Post by: SweeTie on November 08, 2021, 10:09:40 PM
வானமகள்   அழுகிறாள் 
பூமியவள்  சிரிக்கிறாள்
கானகத்தே  கருங்குயில்கள்
காரிருளை  கண்டதுமே
கானமிசைத்திடுதே
 
பெய்யும்  பெரு மழையின்
பேரின்பம் இவர்களுக்கு
ஆரத்தழுவும்  மழை
கழுவட்டும்  இவர்கள்
தேகத்தின் சோர்வுகளை.

மின்னல் இடியோடு
கூடிவரும் கோடைமழை
அண்ட  சராசரத்தையும்   
அதிர்ந்து நடுங்கவைக்கும்
ஆர்ப்பரிக்கும்  கடலலையும்

மும்மாரி  மழை பெய்தால்
நம்நாடு  செழிப்பாகும்
பஞ்சமும் பட்டினியும்
பிணிகளும்   நோய்களும் 
பறந்தோடும்  துச்சமென

மழையே  மாரி மழையே
மெத்தென பெய்  மழையே
மாந்தர் மனம் குளிரட்டும்
மகிழ்ச்சி நிரம்பட்டும்
இந்த  பூலோகம்