FTC Forum

தமிழ்ப் பூங்கா => இங்கு ஒரு தகவல் => Topic started by: Anu on May 29, 2012, 08:44:38 AM

Title: கொட்டாவி ஏன் ஏற்படுகிறது?
Post by: Anu on May 29, 2012, 08:44:38 AM
உடலில் நடைபெறும் ஒருவிதமான அனிச்சை செயல்தான் 'கொட்டாவி'. அதாவது, மூளைக்குத் தேவைப்படும் ஆக்சிஜனின் அளவு குறையும்போது, மூளைச் செல்கள் களைப்படைகின்றன. இதைத்தவிர்க்க, நுரையீரலின் செயலியலைத் துரிதப்படுத்தவே கொட்டாவி என்ற நிகழ்வு ஏற்படுகிறது.

ஒருவர் கொட்டாவி விடுவதைப் பார்த்தால் மற்றவர்களுக்கும் கொட்டாவி வரும் என்பது பொதுவான கருத்தாகும். ஆனால், இது உண்மையல்ல.

ஒரு குறிப்பிட்ட வேலையில் ஒரு குழுவினர் ஈடுபட்டிருக்கும்போது, அந்தக்குழுவில் உள்ள நபர்கள் அனைவருக்கும் புறச்சூழல் மற்றும் பணித்தன்மை ஒரே மாதிரி இருக்கும். எனவே, களைப்பும், சோர்வும் அனைவருக்கும் ஒரே மாதிரி ஏற்பட வாய்ப்புண்டு. அந்தச் சூழலில் அனைவருக்கும் கொட்டாவி வரலாம். மற்றபடி ஒருவரைப் பார்த்து மற்றவர்களுக்கும் கொட்டாவி வரும் என்பதெல்லாம் உண்மை கிடையாது
Title: Re: கொட்டாவி ஏன் ஏற்படுகிறது?
Post by: Yousuf on May 29, 2012, 09:43:13 AM
பயனுள்ள தகவல் அணு அக்கா!

பகிர்விற்கு நன்றி!