FTC Forum

Special Category => வலை செய்திகள் => Topic started by: Global Angel on November 05, 2012, 04:58:48 AM

Title: பீட்சா- திரை விமர்சனம்
Post by: Global Angel on November 05, 2012, 04:58:48 AM
பீட்சா

(http://upload.wikimedia.org/wikipedia/en/1/1e/Pizza%282012%29_Poster.jpg)


Directed by   Karthik Subbaraj
Produced by   C. V. Kumar
Screenplay by   Karthik Subbaraj
Story by   Karthik Subbaraj
Starring   Vijay Sethupathi
Remya Nambeesan
Music by   Santhosh Narayanan


ஏகப்பட்ட பில்டப்போட வந்து மண்ணை கவ்வும் பெரிய படங்களுக்கிடையே, சத்தமே இல்லாமல் வெளியாகி, பட்டையை கிளப்பும் வெற்றி பெற்றிருக்கும் படம் தான் இந்த பீட்சா.

இதுவரை பீட்சா என்ற உணவை சாப்பிட்டு ருசித்தவர்கள், இனி பார்த்தும் ரசிக்கப்போகிறார்கள். இப்படி கூட ஒரு விஷயத்தை, இவ்வளவு சுவாரஸ்யமகாக சொல்ல முடியுமா? என்ற ஆச்சரியத்தை ஏற்படுத்தும் அளவுக்கு திரைக்கதையை செதுக்கியிருக்கிறார் புதுமுக இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்.

திருமணம் ஆகாமலே ஒரே வீட்டில் ஒன்றாக வாழும் (லிவிங் டூ கேதர்) முறைப்படி ஹீரோ விஜய் சேதுபதியும், ஹீரோயின் ரம்யா நம்பீசனும் வாழ்ந்து வருகிறார்கள். பீட்சா டெலிவரி பாயாக விஜய் சேதுபதி வேலை செய்கிறார். திகில் நாவல் எழுதுவதற்காக பேய்களைப் பற்றி ஆராய்ச்சி செய்து வரும் ரம்யா நம்பீசன், எப்போதும் ஆவிகளைப் பற்றியும், பேய்களைப் பற்றியும் பேசி விஜய் சேதுபதியை திகிலடையச் செய்கிறார்.

இந்த நிலையில் ஒரு பங்களா வீட்டில் பீட்சா டெலிவரி செய்யப் போகும் விஜய் சேதுபதிக்கு காத்திருக்கிறது ஒரு பெரிய திகில். பீட்சா டெலிவரி பண்ணும் இடத்தில் பணம் எடுத்துகொண்டு வர மாடிக்கு செல்லும் ஒரு பெண், சிறிது நிமிடத்தில் பிணமாக சுவற்றில் ஒட்டிக்கொண்டு இருக்கிறார். கரண்ட் கட்டாகி அந்த பங்களாவே இருட்டாகி விடுகிறது. பயத்தில் அலறும் விஜய் சேதுபதி வெளியே போக முடியாமல் கதவுகள் பூட்டப்பட்டு விடுகின்றன. அப்படியே அடுத்த நிமிடத்தில் அடுத்த திகில் என்று விஜய் சேதுபதியுடன், படம் பார்க்கும் ரசிர்களையும் திகிலடைய செய்யும் அளவுக்கு படத்தை திகிலுடன் நகர்த்துகிறார் இயக்குநர்.

இது என்ன பேய் படமா? என்று நாம் யோசிக்கும் நேரத்தில், பெரிய மாற்றத்துடன், யாரும் எதிர்ப்பார்க்காத அளவுக்கு வேறு திசையில் திரைக்கதையை பயணிக்க வைக்கும் இயக்குநர் இறுதியில் ரசிகர்களை 100 சதவீத திருப்தியுடன் திரையரங்கை விட்டு வெளியே அனுப்புகிறார்.

விஜய் சேதுபதி, தான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் தனது நடிப்பு திறமையை நிரூபிக்கிறார். கிராமத்து இளைஞனாகவும் சரி, சிட்டி மாடர் இளைஞனாகவும் சரி கச்சிதமாக பொருந்துகிறார். இருட்டு பங்களாவில் மாட்டிகொண்டு தவிக்கும் போதும், ரம்யா நம்பீசனிடம் காதல் கொள்ளும்போது சரி தனது நடிப்பின் மூலம் அசத்துகிறார்.

ரம்யா நம்பீசனுக்கு பெரிய அளவில் நடிக்க வாய்ப்பு இல்லை என்றாலும், வரும் காட்சிகளில் ரசிகர்களின் மனதை நிறைத்திருக்கிறார். இனி ஏகப்பட்ட படங்களின் வாய்ப்பு ரம்யாவின் கதைவை தட்டும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

இசை, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு என்று அனைத்துமே திரைக்கதைக்கு பங்கம் விளைவிக்காமல் பலம் சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது. அதுவும் சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை நடிகர்களையும் மிச்சும் நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.

இதுபோன்ற படத்தை தயாரிக்க முன்வந்த சி.வி.குமாரை மனம் திறந்து பாராட்டலாம்.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜூக்கு இது முதல் படம் என்றாலும், இதற்கு முன்பு அவர் பல குறும்படங்களை இயக்கியிருக்கிறார். குறிப்பிட சில கதாபாத்திரங்களை வைத்துகொண்டு ரசிகர்களை சீட் நுனியில் அமந்து படம் பார்க்க வைத்த இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், சுவாரஸ்யமான திரைக்கதையோடு நச்சுனு ஒரு படத்தை இயக்கியிருக்கிறார்.

(valaithalathil petrathu)