Author Topic: பெண்ணுக்கு பெண்ணே ..  (Read 3399 times)

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
பெண்ணுக்கு பெண்ணே ..
« on: December 04, 2011, 01:23:18 PM »
Paditha Kathai

கடுமையான சாலை நெரிசலில் பேருந்து திணறி திணறி போய்க்கொண்டு இருந்தது. முன் இருக்கையில் இடம் பிடித்த சந்தோசத்தில் இருவர் பேசிக்கொண்டு இருந்தார்கள்.

இருந்தாலும் இந்த ஆம்பிளைகள் எல்லாம் ரொம்ப மோசம் ஜெயா.,

எதை பத்தி சொல்ல வர ... சாந்தி

அதான் இந்த பார்லிமெண்டில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்க எத்தனை பாடு படுத்துறாங்க ...

ம்ம் இது எல்லாம் இந்திராகாந்தி அம்மா இருந்தப்ப செய்திருக்கணும் ... அந்த அம்மா தைரியம் வருமா

அதானே இருந்தாலும் இந்த மருமகள் பரவாயில்லை .... இத்தனை ஆம்பிளைகளை கட்டி ஆளுராங்களே...

ஆமா தலைவி பதவி என்றால் சும்மாவா ....

ஆமாம் நம்ப ஜெயலலிதா கூட பாரு எத்தனை பிரச்சனை வந்தாலும் தைரியமா எதிர்த்து நிக்குறாங்க ...

அது சரி நம்ப அய்யா வீட்டில கூட பாரேன் ரெண்டு பெரும் எத்தனை சாமர்த்தியமா காரியம் சாதிக்கிறாங்க ...

அந்த தைரியம் நமக்கு வரமாட்டிங்குதே ..... அது எல்லாம் தனிக்குடித்தனம் போனால்தான் சாத்தியம் .

ஆமாம் நானும் வீட்டில சாதிச்சு காட்டிருவேன் , இந்த மாமியார் கிழவி நீலி கண்ணீர் வடிச்சி கடைசி நேரத்தில் கதையை மாத்திடும் . எப்பத்தான் மண்டையை போடுமோ ... ஒவ்வொரு அம்மாவாசைக்கும் காலண்டரை பார்த்துக்கிட்டுத்தான் இருக்கேன் ஒன்னும் நடக்க மாடீங்குது என்றவள் " ஆமாம் உனக்கு என்ன உன் மாமியார்தான் கல்யாணம் பண்ண மூணே மாதத்தில போய் சேர்ந்துருச்சே..."

அட மாமியார் இல்லாட்டி என்ன அதான் ரெண்டு பொண்ணுகளை விட்டுட்டு போய் இருக்கே .. எவன் தலையிலாவது கட்டி கரை சேர்க்கலாம் என்று பார்த்தா படிக்கட்டும் படிக்கட்டும் என்று என் காசையும் சேர்த்து கரியாக்கிட்டு இருக்கு எங்க வீட்டு அசடு.இவளுங்க படிச்சி என்னத்தை கிழிக்கப் போறாளுங்க . போன ஜென்மத்தில் செய்த பாவம் இப்படி வந்து தலையில் விடியுது ..என்று அலுத்துக்கொண்டாள் ஜெயா.

அசடுன்னு உன் வீட்டுக்காரரைத்தானே சொல்லுற.... மீண்டும் எடுத்துக்கொடுத்தாள் சாந்தி.

ஆமாம் , பிறகு பக்கத்து வீட்டுக்காரனையா சொல்ல முடியும் ...

ஆமாம்டி நம்ப நிலைமை ரொம்ப கஷ்டம்தான் போ ...ம்ம்ம்

ஆமாம் இது என்ன புதுசா சேலை ... சாந்தி

போனவாரம்தான் வாங்கினேன் , ரெண்டாயிரம் ரூபாய் , வீட்டில சம்பளம் கூடுன விஷயம் கூட சொல்லவே இல்லை ... மாசம் பொறந்தா சத்தம் காட்டமா என் சம்பள பணத்தை என் பேர்ல டெப்பாசிட் பண்ணிடுவேன் . இந்த காலத்தில யாரை நம்ப முடியும் சொல்லு ...

ம்ம் என்னவோ போ உன் சாமர்த்தியம் எனக்கு வரலை.... எனக்கும் வந்து வாச்சு இருக்கே . வாழ்க்கையே அடிமைத்தனமா போயிட்டு இருக்கு. கல்யாணமே செய்துக்காம ஒரு சுதந்திர வாழ்க்கை வாழனும் சாந்தி ....

பாரு இன்னும் பத்து வருசத்தில ஒரு பெண்கள் புரட்சி வரும் ... கல்யாணம், சடங்கு, சம்பிரதாயம் எல்லாத்தையும் தூக்கி அடிச்சி நிக்கப்போறோம் பாரு .

அப்போது பேருந்து பலமாக குலுங்க வரிசையில் நின்று கொண்டிருந்த ஒரு பெண் ஜெயா மேலே விழுந்தாள்.

ஐயோ என் கை போச்சு சாந்தி பாரு ... பிசாசு போல மேல வந்து விழுந்துட்டா ... ஏண்டி கண்ணு தெரியலை...

அப்போதுதான் இருவரும் கவனித்தனர் .. அந்த பெண்ணின் முகத்தை ... கண்கள் இருக்கும் இடத்தில் குழி விழுந்து முகம் எல்லாம் தீக்காயங்களுடன் ......... சொல்லி வைத்தார் போல முகத்தை திருப்பிக்கொண்டனர்.

கண்ணு தெரியலைன்னா கூட யாரையாவது துணைக்கு கூட்டி வரலாம்தானே .. ஜன்னலை பார்த்தவாறே சாந்தி பேசினாள்.

பரவா இல்லைங்க மன்னிச்சுடுங்க ... அந்த பெண் தடுமாறி எழுந்திரிக்க...

கண்டக்டர் சத்தம் போட்டார் ... ஏம்மா உடல் ஊனம் ஆனவங்க சீட்டில உக்காந்து கிட்டு நியாயம் பேசுறீங்க எந்திரிங்க.

ஆமாம் ... இந்த பொண்ணு வரும்ன்னு நாங்க நின்னுகிட்டே வரணுமாக்கும் ... டிக்கெட்டை கொடுத்துட்டு உங்க வேலையே பாருங்க ... ஜெயா பதிலுக்கு இரைந்தாள் .

" எதுக்குமா சத்தம் போடுறீங்க .... நீ இப்படி உக்காருமா " என்று பெரியவர் ஒருவர் எழுந்து வாசல்புறம் போனார்.

தீக்காயம் பட்ட அந்த பெண் தன முகத்தை முக்காடு இட்டு மூடிக்கொண்டு அமர்ந்தாள்

பொம்பளைக்கு பொம்பளை இறக்கப்படமாடீங்குது பாருங்க சார் ... கண்டக்டர் அங்கலாய்த்தார்.

பதிலுக்கு அந்த பெண் சிரித்தாள் ... விடுங்க சார் நாங்க உடலால் ஊனப்பட்டவங்க. அவங்க மனத்தால் ஊனப்பட்டவங்க. அவங்களே அந்த சீட்டில இருக்கட்டும் .

ஒரு பெருமூச்சுக்குப்பின் அந்த பெண் மீண்டும் பேசினாள் ... பெண் சுதந்திரம் கிடைத்தால் கண்டிப்பா இவங்க மாதிரி பொண்ணுங்க கிட்ட அது கிடைக்கக்கூடாது . பின்னாலே அது யாருக்கும் கிடைக்காமலே போய்டும் .

பேருந்து தன இலக்கை நோக்கி சீராக போய்க்கொண்டு இருந்தது ....


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்