Author Topic: அழைப்பு மணி - 1  (Read 2132 times)

Offline இளஞ்செழியன்

அழைப்பு மணி - 1
« on: January 08, 2021, 12:29:10 PM »
கதை எழுதுவது எனக்கு நோக்கமும் அல்ல அதற்கு நான் பொருத்தமும் அல்ல,  சட்டுன்னு தோன்றியதை அப்படியே எழுதி விட்டேன், சோ ப்ரெண்ட்ஸ் சாட் எழுத்தாளர்களே என்னை மன்னியுங்கள்!

--------------------------------------------------------------------

அன்றிரவு சுமார் 2 மணி அளவில் ரிங் அடித்துக் கொண்டே இருந்தது, மாறி மாறி வீட்டில் உள்ள எல்லாருடைய மொபைலும் ஏதோவொரு ரிங்டோனின் சப்த்தத்தோடு அமைதி கவ்விய அவ்விரவினை சப்த்தமிட்டு எழுப்பியது, (சில மொபைல் வைப்ரேட் மோட்) ஆனால் வீட்டினுள் மட்டும் யாரும் எழுந்திருக்கவில்லை.

வெளியே பெய்து கொண்டிருந்த பனியின் தூரளின் சாரல், வீட்டினுள் ஜில்லென குளிரை பரவச் செய்து, சுவர்களை கூட தன் அணைப்புக்குள் வைத்திருந்த ரம்யமான நேரமது. உருண்டு, சுருண்டு போர்வைக்குள் ஐக்கியமாகிப் போனதில் யாருக்கும் எளிதில் மொபைலின் அலறலை பார்க்குமளவு தெளிவு இருக்கவில்லை.

ஏனெனில் அன்று பகலும் இரவும் வீட்டில் விருந்தினர் வந்திருந்து சாப்பாடு, என்ஜாய்மன்ண்ட் என இன்பமாய் கடத்தி விட்டு அசதியின் உச்சத்தில் எல்லாம் மறந்து ஹாயாய் தூங்கிய தூக்கமாச்சே? எப்படி திடீர்னு முளிப்பு வரும்? என்பது போல் ஓர் நிலை. (வேலை அலுப்பும் சேர்ந்து) ரிங் சப்த்தம் கேட்டிருக்கு, பட் தூக்கம் மிகைத்துப் போனதில் எதுவும் தெரியல.

ஒரேயொரு குமரிப் பெண் மட்டும் அசதியான தூக்கத்திலிருந்து பாதிக் கண் திறந்தவளாக சோம்பல் முறித்துக் கொண்டே மொபைலின் டச்சை அமுக்குகிறாள், 18 மிஸ்ட் கால் மட்டுமே அத்துமீறி மொபைலை வந்தடைந்திருந்தது, அதுவும் சேவ் செய்யப்படாத சில அன்னவுன் நம்பரில் இருந்து என்பதை அவள் புரியும் போதே நேரத்தையும் ஒரு தடவை பார்த்தாள்.

நேரம்,
அலார்ம் அடிப்பதற்கு இன்னும் சற்று நேரமிருக்கிறது என்பதை உணர்த்திற்று...

சரியாய் ஜாமம் தனது உத்தியோகத்தை நிறுத்திக் கொண்டு காலையின் சிவப்பு வெள்ளை சாலைக்குள் நடை போட ஆரம்பித்திருந்தது.

இந்த ராவ் ஜாமத்தில் யாரிது தெரியாத நம்பரில் இருந்து அழைப்பு விடுத்திருக்கிறார்கள் என்ற சிறு பதட்டத்தோடு போர்வையை அகற்றி விட்டு, கை குளிரில் நடுங்க நடுங்க எழும்பி கட்டிலில் இருந்து இறங்கியவள், நேராய் தனது தாயின் அறைக்குள் நுழைகிறாள்.

தாயோ குறட்டை விட்டுத் தூங்குகிறார், லைட்டின் சுவிட்ச்சை தட்ட கையை கொண்டு போய் விட்டு, ம்ச்ச் வேணாம் தூங்கட்டும் என எண்ணி ரெண்டடி பின் வந்திருப்பாள் அவள், மறுபடி ரிங் அடித்தது, அதே நம்பரிலிருந்தே வருகிறது, என்ன செய்வது? நான் பேசலாமா வேண்டாமா? யாராவது ஆண் குரல் எதிரே கேட்டால்? இந்த டைம்ல அது அவ்வளவு பொறுத்தமானதாய் இருக்காதே?

ஆனால் பேசிக் கேட்டு விடவும் வேண்டும் போல் உள்ளதே? என நினைத்துக் கொண்டே தாயின் அறை பக்கம் திரும்புகையில், முந்தானையை தோலின் ஒரு பக்கம் போட்டுக் கொண்டே இவளின் பெயரைச் சொல்லிக் கொண்டு வெளியே வந்த தாய்..., எல்லா பெற்றாரும் பொதுவாய் கேட்கும் அதே சூனியக் கேள்வியை கேட்கிறாள்.

இந்த நேரத்துல ஏன் எழும்பிக்கிட்டு மொபைல நோண்ட்றாய்? யாரு கால் பண்றது இந்த டைம்ல?

அதுதான் தெரியல..., அதுக்கு தான் உங்க கிட்ட பேச சொல்லி மொபைல தர வந்தேன்..., நிறைய மிஸ்ட் கால் இருக்கு, இந்தாங்க பேசுங்க ன்னு மொபைலை நீட்டுவதோடே... தாய் சட்டென மொபைலை வாங்கி, தூக்க மயக்க குரலில் ஆன்சர் செய்து
''ஹெல்லோ'' யாரு?

என்றது தான் தாமதம்....

(தொடரும்).........
பிழைகளோடு ஆனவன்...