Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 291  (Read 1433 times)

Offline Forum

ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 291

இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

Updated on 26 Oct 2020:

நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும்   அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.


Offline AK Prakash

  • Newbie
  • *
  • Posts: 20
  • Total likes: 87
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
அமர்ந்து யோசித்தால் உள்ளம் குதுகலிக்கும்
நட்பை பார்த்திட்டால் உற்சாகம் துள்ளிக் குதிக்கும்
மறக்க இயலாத வாழ்வின் கல்வெட்டு
சிறந்த சிற்பமாக   குடியிருக்கும் மனக்கோயிலில் .

நினைத்து பார்த்தால்  கண்களின் ஓரத்தில் கண்ணீர் கசிகிறது
திரும்ப கிடைத்திடாத பொற்காலம் அவை
வாழ்க்கை என்னும் செடியில் பூத்த முதல் பூ அத
 எண்ணி எண்ணி  பார்த்தாலும் கையில் எட்டிடாத நாட்களவை
நம் வாழ்நாள் முழுவதும் நினைவாய்  சுமக்க வைக்கும் பொதிசுமைகள்

வெளியுலகம் தெரியாமல் தான் நினைப்பதே சரி என்றும்
தன் கண் முன்னே வருவது அனைத்தும் நிஜமென்றும்
நினைத்து வாழும் கள்ளம் கபடம் இல்லா தூய மனமனம்

 நான் சிறுவயதில் விளையாடிய விளையாட்டுக்கள்
 நவீன உலகில்  வேண்டுமானால் மறைந்திருக்கலாம் 
அதில் பெற்ற இன்பமும் நினைவுகளும்   
எந்த ஒரு நவ நாகரீகத்தாலோ விஞ்ஞானதாலோ அழிக்க முடியாதவை .

 மழை பெய்யும் முன் வீசும் மண்  வாசனையை நுகர்ந்து
கூட்டம் கூட்டமாய் ஒருசேர  வீழும் மழைத்துளிகள்
உண்டாக்கும்  சத்தத்தை பெரும் இசையாய் கொண்டு
அதற்கேற்ப ஆட்டம் போட்ட கடைசி தலைமுறைகள் நாங்கள்

அம்மழையோடு மனம் ஓருசேரும்  பொழுது
 சிறகில்லாமல் பறந்ததும் , கவலை இருந்தும்  சிரித்ததும்
காகிதக் கப்பல் விட்டு மழையில் ஆடியதும்
சூடான பகோடா காப்பியை  தேடியதும் மறக்கதான்   முடியு,மா ?

இளமை காலம்  வாழ்வின் வண்ணமயமான நாட்கள்
நினைத்து பார்க்கும் ஒவ்வொரு நொடியும் மணக்க வைக்கும் வாடா பூக்கள் அவை
சோகத்தை மறந்து  புன்னகையை தரக்கூடிய வல்லமை படைத்தது .
முதுமை காலத்தில்   சிந்தித்து சந்தோஷத்தில்  ஆழ்த்தும் அவை



« Last Edit: June 08, 2022, 12:48:08 PM by AK Prakash »

Offline Abinesh

மனதில் வைராக்கியம் இல்லை
மனதில் பாரம் இல்லை
தலையில் கணம் இல்லை
விளையாடுங்கள் என்று கூறுபவர்களை
பிடிக்கும் காலம்
படியுங்கள் என்று கூறுபவர்களை
பிடிக்காத காலம்
இந்த குழந்தை பருவத்தில்...!

மழையில் நனைந்து விளையாடிய காலம்
வெயில் அலைந்து திரிந்த காலம்
நண்பர்களின் புது பேனாக்களை பார்த்து
எனக்கும் அதே போன்று பேனா வேண்டும்
என்று அழுது அடம் பிடித்த கனாக்காலம்....!

காலையில் பள்ளிக்கூடம் போகும் போது
ஒரு பயம்...
அதே மாலையில் இறுதி மணி அடித்தால்
ஒரு இனம் புரியாத ஆனந்தம்
எதற்காக அழுகிறோம் ,எதற்காக சிரிக்குறோம் என்று அறியாத
சுட்டித்தனம் நிறைந்த பருவம்...!

சிறுவயதில் தொலைக்காட்சி பெட்டியில்
சக்திமான், ஜீ பூம்பா, மாயா மச்சிந்த்ரா
கண்டு களித்த காலம்...
கிரிக்கெட், கோலி விளையாடும் போது
தன்னை மறந்த தருணம்...

அடம்பிடித்து அழுது விட்ட கண்ணீர்
அதே  மழையாக மாறிய தருணம்
அதே மழையில் குளித்த பருவம்
குடையின்றி வாழ்ந்த குளிர் காலம்...
 
ஒரு பொருள் தொலைந்துவிட்டால் என்னவோ,அதை வாங்கி விடலாம்
ஆனால் பழைய நினைவுகள்
அது நிஜம் ஆகாது,என தெரிந்தும்
மனம் என்னவோ பழைய நினைவுகளை
தேடி செல்கிறது...


குறிப்பு:(சிறு வயதில் அனுபவித்த வாழ்கையை இப்பொழுது அனுபவிக்க முடியவில்லையே என்று ஏங்கும்,உங்களை போல நானும் ஒருவன் உங்கள் தோழன் Abinesh)


« Last Edit: June 09, 2022, 08:07:23 PM by Abinesh »

Offline Sun FloweR

  • Full Member
  • *
  • Posts: 127
  • Total likes: 761
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
கவிதை பாடும் வண்டுகளாய்
காடுமேடு சுற்றித் திரிந்தோம்
கள்ளம் கபடம் ஏதுமற்று ....

காற்றின் போக்கில் ஓடும்
பட்டமாய் வானவெளி எங்கும்
சுற்றித் திரிந்தோம்
சுதந்திரமாய்....

ஆண் பெண் பாகுபாடு பார்த்ததில்லை
ஜாதி மதம் வேறுபாடு அறிந்ததில்லை
களிப்புடனே வாழ்ந்திருந்தோம்
நேரங்காலம் கூறுபாடு காணாமலே ...

பணம் காசும் தேவையில்லை
பகட்டு வாழ்வும் தேவையில்லை
சொந்த பந்தமும் தேவையில்லை
சோறும் கூட தேவையில்லை.....

செப்புச் சாமான்களும்
கோலிகுண்டுகளுமே எங்களுக்கு
விருப்பமானவை...
மழையில் நனைவதும்
மரத்தில் ஏறுவதுமே
எங்களுக்குப் பிடித்தமானவை...
காலையில் காய் விட்டு
மாலையில் பழம் விடும் நட்பே
எங்களுக்குப் போதுமானது....

வண்ணங்கள் மட்டுமே
நிறைந்த வசந்த காலம் அது...
குதூகலம் மட்டுமே
நிறைந்த குழந்தைப்பருவம் அது...

கணினியில் விளையாடும்
கைப்பேசியில் வாழ்வைத்
தொலைத்திடும்
இன்றைய பிள்ளைகளுக்கு
எங்கே தெரியும் எங்களின்
பால்யத்தின் அருமையும் பெருமையும்????

Offline SweeTie

தூற்றல் மழை   நனைக்கிறதே
காற்றும்  சேர்ந்து அடிக்கிறதே
சீக்கிரமாய்  வீடு செல்வோம்
'
காகிதத்தில் கப்பல் செய்து 
மழை நீரில்   ஓட்டிடுவோம்
சந்து பொந்து சகதி எல்லாம்
தண்ணீராய்   பாய்கிறதே   

ஓடி  விழையாடிடுவோம்   
ஒருபோதும்  ஓயமாட்டோம்
கூடி விழையாடிடுவோம்   
குறைவராது    பாதுகாப்போம்

கு ட்டாஞ்சோறு   ஆக்கிடுவோம் 
கூடியிருந்து  அருந்திடுவோம் 
மாமரத்தின்   கிளைகளிலே  , நாம்
மந்திகள் போல்    ஏறிடுவோம் 

சுக்கு சுக்கு  கோச்சி  வண்டி 
பச்சைக்  கொடி  காட்டும்  வண்டி 
நீண்டு வளைந்து  போகும்  வண்டி 
ஸ்டேஷனிலே   நிற்கும் வண்டி 

ஆணுமில்லை  பெண்ணுமில்லை
அனைவருமே  நண்பர்கள் நாம்
ஆலாவட்டம்   சுற்றிடுவோம் 
ஆடிப் பாடிக் கொண்டாடிடுவோம்

ஆட்டம்  பாட்டம்  கொண்டாட்டம்
சண்டையில்  முடிவதும்   சமரசம் ஆவதும்
சிறுவர்கள்   உலகின்  இயற்கை வினோதம்

மழையில்  நனைந்து  விளையாடி
நோய்நொடி இன்றி  வாழ்ந்தோம் அன்று
கணினியோடு  அறைக்குள் அடைந்து
இளமையில்  நோயாளியானோம் இன்று. 






 

Offline PreaM

நிழற்படம் பார்த்ததும்  நினைவுகள் மலருது
சிறுவயது நியாபகம் சிறகடித்து பறக்குது
கவலைகள் கிடையாது காலமும் கிடையாது
காற்றோடு உறவாடி காடெங்கும் விளையாடி
காணங்கள்  பலபாடி சில்வண்டாய் சுற்றினோமே

விடுமுறை வந்தாலே வீட்டிலே தங்காமல்
ஊரைச்சுற்றிய நியாபகங்கள் ஊற்றாக ஊறுது
உள்ளம் மகிழ்ச்சியில் பொங்குது
பழைய நினைவுகள் அலையாய் தொடருது
மனம் கடந்தகாலம் மீண்டும்வர ஏங்குது


விளையாடும் ஆர்வத்திலே உணவுண்ன நேரமில்லை
உற்ச்சாக கூச்சலிட்டு  சட்டையை சுழற்றிவிட்டு
வெயிலோ மழையோ மரமே என் குடையாக
மரக்கிளையிகள் ஊஞ்சலாக மறக்கமுடியா நினைவுகள்
மலர்ந்தது என் மனதிலே நிழற்படம் கண்டதுமே...

கிராமத்தில் பிறந்ததாலே சொர்க்கத்தை கண்டுவிட்டேன்
விஞ்ஞான வளர்ச்சியிலே புது உலகம் கண்டுவிட்டேன்
காலம் மாறி போனாலும்  என்கடந்தகாலம் சொர்க்கமே



Offline KoDi

  • Jr. Member
  • *
  • Posts: 70
  • Total likes: 270
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
விளையாட்டே உலகமென நினைத்து
நாள்முழுதும் நண்பர்கள் கூட்டத்தில்
பள்ளிக்குச் செல்ல  மனமில்லாமல்
பாடித்  திரிந்த பசுமைக்காலங்கள்

துள்ளும் மான்களாக  ஓடிப்பிடிச்சி
குறுநேரக் குருடனாக கண்ணாம்பூச்சி
துப்பறிவாளனாக திருடன் போலீஸ்
விளையாடி திரிந்த  அத்தருணங்கள்

ஆனந்தமாய் ஆற்றில் குதித்து
குட்டை நீரில் குதூகுலமாய் நீந்தி
பொழுது  கடந்தாலும்  கரையேற மறந்து 
புளியம் சிம்பால் அடிவாங்கிய அந்நாட்கள்
 
மணிக்கணக்காய் மண்ணில் புரண்டு 
எருமைகள்போலத் தண்ணீரில் ஊறி
கவலைகள் ஏதுமின்றி  கருஞ்சேற்றில் உருண்டு
கறுப்பனாய் பயமுறுத்தி சிரித்த பொழுதுகள்   

ஏற்றத்தாழ்வுகளின்றி எல்லாரும் ஓரினமாய்
குறைநிறைகள் எதுவுமற்ற அப்பாவிகளாய்
அளவளாவிய அந்நாட்கள் பசுமரத்தாணியாய்
என்றும் நீங்கிடாதென் நினைவுகளை விட்டு
« Last Edit: June 16, 2022, 03:09:13 AM by KoDi »

Offline QueeN

  • Newbie
  • *
  • Posts: 6
  • Total likes: 21
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
பள்ளி சென்று வந்தவுடன் சீருடை மாற்றி
அவசரமாக அரை வயிறு உணவருந்தி
நண்பர்களோடு விளையாடும் ஆவலில் 
'அம்ம்மா நான் விளையாட செல்கிறேன்'
என  வாசல்படியில் நின்று உரக்க கூறி
உற்சாகமாய் கிளம்பிய இனிய தருணங்கள்..

நண்பர்களுடன் வயல் வரப்புகளிலும்,
வரத்து கால்வாய்களிலும் உள்ள சேற்றிலும், சகதியிலும்
வேறுபாடுகள் இன்றி விளையாடிய உற்சாகமான,
தூய்மையான மனம் கொண்ட குழந்தை பருவம்.

சூரியன் சுட்டெரித்தாலும் , மழை பொழிந்தாலும்
வீட்டுக்கு செல்ல வேண்டும் என்பதை
மறந்து விளையாடிய உன்னதமான பருவம்.

எவ்வித கவலைகளும் இல்லாமல்
சிறு வயதில் நண்பர்களுடன் ஓடி
விளையாடி கழித்த  பாலாக வயதின்
பசுமையான நாட்களை  எண்ணி பார்க்கிறேன்.
இன்று அதை விவரிக்கும் வார்த்தைகளும் இனிக்கிறதே!

பள்ளி சென்று வந்தவுடன் சீருடை மாற்றி
அவசரமாக அரை வயிறு உணவருந்தி
நண்பர்களோடு விளையாடும் ஆவலில் 
அம்ம்மா நான் விளையாட செல்கிறேன்
என  வாசல்படியில் நின்று உரக்க கூறி
உற்சாகமாய் கிளம்பிய இனிய தருணங்கள்..

இன்றோ கைபேசியே உலகமாய் எண்ணி
சூரியன் உதிப்பதையோ, மறைந்ததையோ அறியாது
இனிமையான தருணங்களை வீணடிக்கிறோம்.

நிலவின் அழகை  ரசிக்காது , அக்கம் பக்கம்
மறந்து  கைபேசியில் வைத்தகண் மாறாமல்
கவிழ்ந்து கிடக்கிறோம்.
மகிழ்ச்சியாய் உணவு உண்பதுமில்லை.
உறவுகளுடன் கலந்துரையாடுவதும் இல்லை.
மனதை பரபரப்புடனேயே வைக்கிறது இந்த நவீன உலகம்.

உறவுகளுடன் உரையாடி , இயற்கையோடு ஒன்றி 
குழந்தை போன்று கவலைகளை ஒதுக்கி வைத்து
மகிழ்வோடு வாழ்வோம்.
கள்ளம் அற்ற,கவலை அற்ற
ஆடிப் பாடும் குழந்தை பருவமே
ஓவ்வொருவர்  வாழ்விலும் இனிமையான தருணம்.