அன்பு நண்பனுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்து
அகவைகள் தேய்ந்து போகும்
காலங்கள் கடந்து போகும்
இளமையம் தொலைந்து போகும்
இன்முகம் மாறிப் போகும் -
GAB என்னும் இனிய நண்பர்
இவர் வாழ்வில் எதுவுமே மாறாது
அன்றும் இன்றும் என்றும் இவர்
இன்முகம் மாறாமல்
பொலிவு குன்றாமல்
அனைவரையும் அணைக்கும்
அன்புள்ளம் கொண்ட தாயுமானவன்
என்றென்றும் நீ நீடுழி வாழவேண்டும்
GAB நம் அன்பும் நிலைக்கவேண்டும்
இணையத்தால் ஒரு பாலம் அமைத்த
Engineer நீ நூறாண்டு வாழ்க
பல நாட்டு பறவைகள் பறந்துவர
இங்கு ஒரு கூடாரம் அமைத்தாயே
நண்பர்கள் நாடிவந்த கூடிக்கொள்ள
நல்லதும் கெட்டதும் பேசிக்கொள்ள
அன்புதனைப் பரிமாறி
சண்டையும் சமரசமும் புரிந்துகொள்ள
உருவான ftc இணையமே நீ வாழ்க !!
அன்பும் பண்பும் நிறைந்த நண்பா
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் !
குறைவில்லா செல்வங்கள் பல பெற்று நீ
நோய் நொடியற்று நீடுழி வாழ - நான்
நிறைந்த மனதோடு வாழ்த்துகிறேன் !!